|
| |
பொழிப்புரை : | |
புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன செய்யும், உடம்பின் அகத்து உறுப்பாகிய இதயத்திலே, உள்ளத்திலே, மனதிலே அன்பு இல்லாதவற்கு? | |
விரிவுரை : | |
யாக்கையாகிய உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன செய்யும்? அகத்து உறுப்பாகிய இதயத்திலே அன்பு இல்லாதவர்களுக்கு? அகத்தே அன்பிலாது, புறத்தே இருக்கும் உடலின் வெறும் வெளி அழகு பயனற்றதே. அந்த அன்பற்ற அழகினால் செய்ய முடிவதுதான் என்ன? மற்றும் அவர்தம் அன்பிலா அழகு வாழ்க்கைத் துணைவரின் மனதைக் கவராது, இல்லற இன்பம் தாராது, மொத்தத்தில் எந்தப் பயனும் இராது. அன்பிலாதவரை எவரும் விரும்புவரோ? எனவே அகத்திலே அன்பிலாதவற்கு அவரது புறக் கருவிகளினால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதும், உள்ளத்திலே அன்புசுரக்காது செய்யும் எந்தப் பணியும் துலங்கப் போவதுமில்லை, விளங்கப் போவதுமில்லை என்பதும் உட்கருத்துக்கள். ஆக உண்மையில் ஒருவருக்கு அவர் அகத்தே கொள்ளும் அன்பே அழகு என்பதும், அதுவே செய்யும் காரியங்களில் கை கூடும் என்பதாலும், புறத்தே இருப்பதை அழகென்று கூட வள்ளுவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதே அவர் புற உறுப்பு என்று சொல்லுவதிலேயே விளங்கும். அகத்திலே அன்பிருந்தால், புறத்தே செய்யும் செயலிலும் தெளிவும் அழகும் திருத்தமும் வரும். அன்பற்றவரின் புறக் கருவிகள் எத்தனை அழகானதாய் இருப்பினும், யாரையும் வசீகரிக்க இயலாது; அவை பயன் தராது. ஆக அன்பற்ற இதயத்தால் என்ன பலன்? அவர்தம் அன்பற்ற செய்கையினால்தான் என்ன பயன்? | |
| |
குறிப்புரை : | |
அன்பிலாதவரின் வெளி அழகு பயனற்றது. | |
அருஞ்சொற் பொருள் : | |
யாக்கை - மனித உடல், யாக்கப்பட்ட உடம்பு அகம் - உள்ளே | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 276 முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார் வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில் அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே. திருமந்திரம்: 288 ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத் தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில் ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே. ஔவையார். ஆத்திச்சூடி: 28 | |
| |
*** |
In English: (Thirukkural: 79)
| |
| |
Meaning : | |
What good can their external features do for those who have no Love in their internal part? | |
| |
Explanation : | |
What good can their body external features do, for those who have no Love in their heart, the internal part? | |
| |
Message : | |
The external beauty of the Loveless is waste. | |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...