|
அத்தியாயத்தில் பெற்றவை | |
குறள் எண் Kural No. | குறள் குறிப்புரை (Kural Message) |
61 | அறிவிற் சிறந்த பிள்ளைகளைக் காட்டிலும் சிறந்த பேறு இல்லறத்தானுக்கு வேறு ஏதும் இல்லை. Wise children are the greatest blessings family men can get. |
62 | உத்தம புத்திரர்களை உருவாக்கினால் ஏழ் வகைப் பிறவிக்கும் நலனே. Beget blameless children to benefit the good for ever. |
63 | மனிதருக்கு அமையும் பெற்றோரும், மக்களும் அவரவர் செய்த வினைகளின் பயனே. Men's parents and children are made according to their deeds alone. |
64 | பெற்றோருக்கு அவர்தம் குழந்தைகளே இன்பத்தின் ஊற்றுக்கள். Own children are the happiest things for the Parents. |
65 | பெற்றோருக்குக் குழந்தைகளின் பால் முழுக்கவனம் குறைவிலா இன்பம் தரும். More joy to Parents is by giving the fullest attention to their own kids. |
66 | குழந்தையின் மழலை கேட்பன எல்லாவற்றிலும் மிக இனிமையானது. Children's babble is the sweetest music to hear than all. |
67 | தமது மக்கள் கல்விச் செல்வத்தைப் பெறுமாறு செய்தலே தந்தையின் கடமை. Father's boon to the children is to provide the best education. |
68 | தம்மைத் தாண்டித் தம் மக்கள் உயர்வடைவதே எல்லா உயிர்க்கும் இன்பம். Every living thing rejoices the advancement of its offspring. |
69 | பிள்ளைகளின் வளர்ச்சியும் அவர்தம் புகழுமே பெற்ற அன்னையர்க்கு உண்மையான மகிழ்ச்சி. Growth and fame of her child is the true joy for mothers. |
70 | தந்தைக்கு மகன் செய்ய வேண்டியது எல்லாம் நல்ல பிள்ளை என்று பெயர் எடுப்பதே. All a son has to do for his father is just to get good name for himself. |
குறிப்புரை (Message) |
இல்லறம் நல்கும் பெற்றோருக்கு அவர் முன்வினைப் பயனாகக் கிட்டும் பெறற்கரிய பெரும் பேறு மக்கட் பேறு. பெற்ற மக்கட் செல்வத்திற்கு அன்பையும், கல்வியையும் வழங்கி அவர்களை அறிவிற் சிறந்தவராக, உத்தமர்களாக வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு. மக்களின் மொழியே, நலனே, கவனிப்பே, வளர்ச்சியே பெற்றோருக்கு இன்பம் தரும். ஒழுங்காய் கல்வி பயின்று, நல்ல பிள்ளைகள் என்றும், சான்றோர் என்றும் உலகம் சொல்லும்படி செய்து பெற்றோருக்கு நல்ல பெயர் ஈட்டித் தருவதே மக்களின் கடமை. Parents, who are in the virtuous order of domestic life, were bestowed with their children based by their prior deeds. It is their responsibility for the parents to provide love, education and make their children wise and noble. Children's praise, health, care and growth are the things of happiness to the parents. It is their duty for the children to study well, to get good names and fames, making the world to call them as wise by which to make good names to the parents. |
I need this app
ReplyDelete