அதிகாரம் | : | 10 | இனியவை கூறல் | திருக்குறள் | : | 97 | Chapter | : | 10 | Amiability | Thirukkural | : | 97 | |
நயன் ஈன்று நன்றி பயக்கும்-பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். | |
|
பொழிப்புரை : |
உறவைப் பெற்றுத் தந்து நன்மை பயக்கும்; பயன் தரும் பண்பின் சிறப்பு நீங்காத சொல்லால். |
|
| புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன. |
|
விரிவுரை : |
ஒருவர் பிறரிடம் பயன் தரும், பண்புச் சிறப்பு நீங்காத இனிய சொற்களைச் சொல்லுவதால், அது அவரிடம் உறவைப் பெற்றுக் கொடுத்து நன்மை பயக்கும்.
இதுவும் ஓர் உளவியல் மற்றும் சமூகவியல் தத்துவம். நேர்மறைக் கோட்பாடு. அதாவது பிறரிடம் பயன் தருகின்ற, நற் பண்போடு கூடிய இனிய வார்த்தைகளைப் பேசுவதினால், அது அவருக்கு புதிய உறவை உண்டாக்கி அல்லது இருக்கின்ற உறவைப் பலப்படுத்தவும், மேலும் நன்மைகளையே தரும்.
நற் பண்புகளோடு கூடிய இனிய பேச்சு நட்பெனும் உறவைத் தானே தரும். அங்கே பகை உண்டாகவோ, வேறு கெடுதல் உண்டாகவோ இடம் இருக்காதே. பயன் தரும் சொல்லை, இன்புறப் பேசுபவரைக் கண்டு யாரும் பொறாமை கொள்வதும் இல்லையே. மாறாக அவரிடம் மீண்டும் பேசும் ஆவலை, அவர் பேசக் கேட்கும் ஆவலைத்தானே அது உண்டாக்கும்.
இனியவையும், நல்லவையுமான பயனுடைச் சொற்கள் நட்பையும் நன்மையையும் தான் உண்டாக்கும். |
|
குறிப்புரை : |
நற் பண்பு மிக்க, பயனுடைய, இனிய சொற்கள் உறவையும் நன்மையையும் விளைவிக்கும். |
|
அருஞ்சொற் பொருள் : |
நயன் - உறவு, சிறப்பு, நன்மை தலை - நல்ல, சிறந்த |
|
ஒப்புரை : |
|
திருமூலர். திருமந்திரம்: இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக் கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் வல்லது ஆக வழிசெய்த அப்பொருள் சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே. 383
கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய் அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம் பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம் இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே. 1018
நல்லொளி யாக நடந்துல கெங்கும் கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும் சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம் கல்லொளி கண்ணுள மாகிநின் றாளே. 1028
மாணிக்கவாசகர். திருவாசகம். 27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் : நீண்டமாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை ஆண்டுகொண்ட என் ஆரமுதை அள்ளுறுள்ளத் தடியார்முன் வேண்டுந் தனையும் வாய்விட்டலறி விரையார் மலர் தூவிப் பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 440
அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர்கோனுஞ் சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையைப் புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 441
திகழத் திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும் அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும் திகழப் பணிகொண்டென்னை ஆட்கொண்டு ஆ ஆ என்ற நீர்மையெலாம் புகழப் பெறுவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 442
இராமலிங்க சுவாமிகள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.
ஔவையார். ஆத்திச்சூடி: வாதுமுற் கூறேல். 99 |
|
*** |
In English: (Thirukkural: 97)
nayan InRu nanRi payakkum-payan InRu paNpin thalaippiriyAch chol. | |
|
Meaning : |
A useful and undeviating courteous word yields relationship and goodness. |
|
| These explanations contain newer and exclusive messages. |
|
Explanation : |
By talking useful and undeviating courteous words to others, one can yield relationship followed with goodness.
This is also another psychological theory, a positive concept. That is by talking only useful things in courteous and sweet words to others, it brings new relationship with them or strengthens the existing relationship with them and also yields only goodness.
Good ethical pleasant talks can only yield friendships. It won't have any chance to create enmity or any bad things. When useful things are spoken vividly no one is going to get jealous as well. Instead it creates only desires to listen again and to start or continue the conversation with him.
Pleasant and useful good words create only good friendships and goodness. |
|
Message : |
Courteous, Useful and sweet words yields good relations and goodness. |
|
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...