|
| |
| |
பொழிப்புரை : | |
வாணிகம் செய்வாருக்கு [உண்மையான] நடுநிலையான வாணிபத் தொழில் எனப்படுவது - பிறர் பொருளையும் பேணித் தமதே போல் செய்தல் ஆகும். | |
| |
விரிவுரை : | |
பிறர் பொருளையும் தமதே போல் பேணிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வாருக்கு நடுநிலை தவறாத வாணிபப் பணி ஆகும். துலாக்கோலைப் பயன் படுத்தும் அடுத்த நபர்களான வியாபாரிகளுக்கும் நடுநிலைமை தவறாதே, பிறழாதே அவர்தம் கடமையைச் செய்தல் வேண்டும் என்பதை இக்குறளில் தெளிவுறுத்துகின்றார். இந்த வியாபாரிகள் என்பதின் கீழ் அனைத்துத் தொழில்களும் அடங்கி விடுகின்றன. எனவே நடுநிலை என்பது அனைத்துத் தொழிலுக்கும் பொதுவானதே. வள்ளுவர் காலத்தில் வியாபாரம் பண்ட மாற்று முறை. எனவே கொள்முதல் செய்தல் எனும்போது பிறர் பொருளென அதிகமும், மாற்றுப் பொருளைக் குறைத்துக் கொடுப்பதை அநியாய இலாபமாகக் கருதி அது கூடாதென இக்குறள் செய்யப்பட்டுள்ளது. இப்போது நியாயமான ‘வியாபாரம்’ எனப்படுவது பொருட்களை இன்னாரது என்றுக் கொள்ளாமல், அனைத்தையும் தனதாகவே தராசில் சமமாகப் பார்க்க வேண்டிய அவசியம் விளங்கும். பண்ட மாற்று முறையில் வியாபாரி தனது பொருளுக்கு மாத்திரம் அல்ல பிறர் பொருளை வாங்கவும், விற்கவும் செய்வார். எனவே அவரது நடவடிக்’கை’ துலாக்கோல் போலவே செயல்பட வேண்டியுள்ளது. எடைக்கற்களும் வந்திராத காலமாக இருந்திருத்தல் வேண்டும். வள்ளுவர் காலத்தில் இலாபம், நட்டம் என்னும் வார்த்தைகளும் கிடையாது. எனவேதான் அவர் அவற்றைப் பெருக்கம், கேடு எனும் வார்த்தைகளால் குறள் 115ல் சொன்னார். பண வர்த்தகம், எடைக்கற்கள் என்பவையெல்லாம் பிறகு வந்தாலும் அடிப்படையில் கொள்முதல் செய்வதும், விற்பதும், தேக்குவதும், தர உயற்ச்சி செய்வதும், தயாரிப்பதும் எல்லாம் என்றைக்கும் வியாபரத்தில் உள்ள நடவடிக்கைகளே. இலாபம் என்பது வியாபாரத்தின் தொழில் சம்பந்தப்பட்ட பணிக்கும், காலத்திற்கும், உழைப்பிற்கும், தேக்கத்தின், உயர்ச்சி, போக்குவரத்து, மற்றும் இதரச் செலவுகளுக்கும், ஆராய்ச்சிக்கும், கண்டுபிடிப்பிற்கும், பண மதிப்பு விரையத்திற்கும் ஆன ஒரு பங்கீட்டு விலை ஈடே. அவை தவிர வேறு எதுவும் அநியாயமான இலாபம் கொள்ளும் செயலாகும். குறைந்த விலையில் கொள்முதல் செய்து, அதிக விலைக்கு விற்று இலாபம் பெறுதலே வியாபாரம் என்னும் நிலையோடு, சமூகக் கட்டுப்பாடும், பணியும் அதில் இணைந்திருந்தால் வியாபாரம் எனப்படும் தொழிலும் சிறந்த நல் அறமாகும். சமூகம் இனிதே செயல்பட, நிதி நிலைமைச் சீராகச் செயல்பட நியாயமான வியாபாரம் அவசியமாகின்றது. அதில் பொருளைத் தேக்குதல் (பதுக்கல்), கலப்படம் செய்வித்தல், போலிகளை உருவாக்குதல், அதிக இலாபத்திற்காக மறைவு விலைகளைக் கூட்டி நிர்ணயித்தல், பிறர் பொருள் எனில் அடிமட்ட விலைக்குக் கேட்டல், தமது பொருள் எனில் யானை விலை கூறுதல், ஆளுக்கொரு விலை நிர்ணையித்தல் என்பனவெல்லாம் நடுநிலை தவறிய, நாணயமற்ற, நியாயமற்ற வாணிபமாகும். ஆக ‘இலாபம்’ பெறும் வாணிபத்தில் நேர்மையும், நியாயமும், நாணயமும், ஒழுங்கும் அவசியமாகின்றது. அவை ஒவ்வொரு பொருளையும் தமதேபோல் பேணிக் காத்து, ஒழுங்கு, அழகு, ஒப்பனை, தர உயற்சி , மேம்படுத்தல் செய்து சந்தைப் படுத்துதல், உண்மையான நடுநிலை தவறாத வாணிபம் ஆகும். அவற்றிற்கான நியாயமான ஈட்டுத் தொகையை மாத்திரம் விற்பனை விலையில் சேர்த்து நியாயமான இலாபத்திற்கு விற்றல் நடுநிலை தவறாத வாணிபமாகும். பெரும்பாலும் ஒரு பொருளைத் தயாரிப்பவர்கள் அதை நேரடியாகச் சந்தைப் படுத்தும் போழ்து, பிற தயாரிப்பாளர்களின் பொருட்களுடன் வியாபராம் செய்வார்கள். அவ்வமயம் பிறர் பொருளை மட்டப்படுத்தி, தமது தயாரிப்பை உயர்த்திக் கூறுதல் வியாபாரத்தில் அன்றாடம் காணும் மனித இயல்பு. அதிலும் பிறர் பொருளைத் தமதாக எண்ணி, அவற்றின் சாதக, பாதகங்களை நடுநிலையாக ஆய்ந்து நுகர்வோருக்குச் சொல்லி, மேலும் அவருக்கு அனைத்துப் பொருட்களின் தன்மையையும் நியாயத்துடன் கூறிச் செய்தலே நடுநிலையான வாணிபம் ஆகும. எனவே செய் தொழில் எத்திறத்ததாயினும் அதில் நடுநிலை வகிப்பதே அறம். | |
| |
குறிப்புரை : | |
நியாயம் என்பது நீதி மன்றத்தில் மட்டுமல்ல, அனைத்துத் தொழில்களிலும், அன்றாடப் பணிகளிலும் இருத்தல் வேண்டும். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
வாணிகம் - வியாபாரம், இலாபம், ஊதியம், பலன், வேலை, தொழில், பணி, கடமை | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 394 நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர் ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற முன்துய ராக்கும் உடற்குந் துணையதா நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே திருமந்திரம்: 554 கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன் நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இயமத் திடையில்நின் றானே திருமந்திரம்: 976 நகார மகார சிகார நடுவாய் வகாரம் இரண்டும் வளியுடன் கூடி ஓகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்க மகார முதல்வன் மனத்தகத் தானே. | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
The virtuous business for the traders is to deal other's interests too as their own. | |
| |
Explanation : | |
Consider and maintain others goods as their own is the virtuous business duty for the business people. | |
| |
Message : | |
The equity must be not only in the courts but also in all the industries and in all business what human do. | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...