|
அதிகாரத்தில் பெற்றவை | |
குறள் எண் Kural No. | குறள் குறிப்புரை (Kural Message) |
111 | அறிவுடன் கூடிய நடுநிலைமை எனும் தகுதி மனிதருக்கு நல் நிலைமை தரும். The competence of justice with wisdom yields human the good status. |
112 | நியாயவானின் சொத்துக்கள் நாசமாகாது அவனது சந்ததியைச் சார்ந்து பயனளித்துப் பெருமையும் பாதுகாப்பும் வழங்கி நிற்கும். Properties of the just man pass on un-distortedly to his descendants securing honor and protection to them. |
113 | நல்லதைச் செய்வதைப் போல் தோன்றும் அநியாயத்தையும் தவிர்த்து ஒழுகுதலே எப்போதும் நன்று. It is always better to abolish the act of injustice though it seems to do only good. |
114 | செயலின் பலனைக் கொண்டே நடுநிலையாளரை அடையாளம் காணலாம். Through the deeds by itself a just person can be identified. |
115 | தமது செல்வ அழிவும், பெருக்கமும் கருதாது, உள்ளத்தில் நடுநிலை தவறாமை இருத்தல் சான்றோருக்கு அணி. No think of self loss or profit of wealth and up keeping the justice in the heart are the ornaments for the wise. |
116 | நடுநிலை அழித்து அல்லாததைச் செய்தல் தானே கெடுவதற்கான முதல் படி. Doing unjust by eliminating the just is the first step to get self destruction. |
117 | நடுநிலையாளருக்கு ஏற்படும் துன்பத்தை உலகம் மேலும் கெடாது போக்கிவிடும். World will save and protect the man of just and virtuous from furtherance of his fallen adversity. |
118 | நடுநிலையில் துலாக்கோல்போல் நிற்பதே சான்றோருக்கு அழகு. Showing unbiased impartiality like a weighing scale is the pride for the wise. |
119 | உளத்தே நடுநிலைமையோடு செய்யப்படும் நீதியே சொற் குற்றமற்றுத் திகழும். The judgment made from the unbiased mind will be faultless in words. |
120 | நியாயம் என்பது நீதி மன்றத்தில் மட்டுமல்ல, அனைத்துத் தொழில்களிலும், அன்றாடப் பணிகளிலும் இருத்தல் வேண்டும். The equity must be not only in the courts but also in all the industries and in all business what human do. |
குறிப்புரை |
அறிவுடன் கூடிய நடுநிலைமை எனும் தகுதியோடு செய்யப்படும் நடுநிலைமையால் நல் நிலைமையும், இறவாப் புகழையும், அவர் சொத்துக்களுக்குப் பங்கமில்லாதே அவரது வாரிசைச் சார்ந்து நலனையும், பாதுகாவலையும் அளிக்கும். அவ்வாறு திகழுவதால் நடுநிலைமையாளரை அவரது செயற் பயன்களாலேயே உலகம் கண்டு கொள்ளும். எனவே அத்தகைய சான்றோர், நல்லன போன்றும் தோன்றும் அல்லவற்றையும் அதன் உடனடிப் போலிப் பயனை எண்ணாது தவிர்த்து, தமது தனிப்பட்ட இலாப, நட்டங்களைக் கருதாது, உள்ளத்தில் நடுநிலைமையிலிருந்து வழுவாது, துலாக்கோல்போல் எதையும் சாராது, சொற்குற்றமற்று ஒழுகுவர். அத்தகைய சான்றோருக்கு அவரது முன்வினைப் பயனால், இகவாழ்வில் ஏதேனும் துன்பம் ஏற்பட்ட போதும் உலகம் அதைத் தொடரா வண்ணம் போக்கிக் காக்கும். நடுநிலைமை அழித்துச் செயல் படுதல் தனக்குத்தானே கெடுதலைச் செய்து கொள்ளும் முதல் படி ஆகும். எனவே நியாயம் தவறாத நடுநிலைமையை நீதிமன்றங்களில் மாத்திரம் அல்ல அன்றாட வாழ்வின் அனைத்துச் செயல்களிலும், தொழில்களிலும், பணிகளிலும் கடைப்பிடித்தல் வேண்டும். |
Message |
With the competence of impartiality made justice yield good status, undying fame and their properties pass on un-distortedly to their descendants giving honor and protection. Due to such state they are easily identified by the world. Therefore such noble wises will not heed to fake things and avoid it's immediate benefits, and also won't consider self profit and loss but maintain the impartiality inner in their heart and behave like a weighing scale in not taking any sides; utter flawless words of justice. For such wise, if at all adversity falls on them due their earlier sins of previous births, world will come forward to remove it and save and protect them from furtherance of adversity. |
பத்துக் குறள்களின் கருத்துக்களையும், அழகுறத் தொகுத்து ‘குறிப்புரை'யாகத் தந்திருப்பது மிகவும் சிறந்த முயற்சி.
ReplyDeleteகுறள்களையும் அப்படியே கொடுத்திருக்கலாமே! ஏன் அய்யா விட்டிவிட்டீர்கள்?
-ஹரன்
நண்பர் ஹரன் அவர்களுக்கும், முதலில் உங்களின் வருகைக்கும், கமெண்டிற்கும் நன்றி.
ReplyDeleteஇந்தப் பக்கத்தின் தலைப்பு ‘அதிகாரத்தில் பெற்றவை’. அதில் அத்தியாயத்தின் ஒவ்வொரு குறளுக்கும் கொடுக்கப்பட்டிருந்த குறிப்புரையையும், அவற்றிலிருந்து அதிகாரத்திற்கான குறிப்புரையையும் எழுதித் தொகுத்துள்ளேன். இதில் குறளையும், மற்றைய உரைகளையும் தொகுத்த பக்கத்தை, அதாவது முகப்புப் பக்கத்தை குறளின் மென்புத்தகத்தில் பார்க்கலாம்.
குறளின் மென்புத்தகத்தை ”விளக்கிய குறள்கள்” 10% ஆகும்போது வெளியிடலாம் என பல மாற்றங்களைச் செய்து கொண்டு இருந்தமையால் வெளியிடாது இருந்தேன். இப்போது உங்களின் ஆர்வத்திற்காக, 9.02% இருக்கும்போதே, இப்போது அதாவது சற்றுமுன் புதுப்பித்துள்ளேன். தரவிறக்கத்திற்கு
http://kuralamutham.blogspot.com/2009/09/announcement-kural-amutham-free-ebook_18.html
பக்கத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
மென்புத்தகத்தில் ‘அத்தியாயத்தில் பெற்றவை’ கடைசியாக இருக்கும். மென்புத்தக அமைப்பைப் பாராட்டுவீர்களென நினைக்கிறேன்.
மென் புத்தகத்தைப் போன்றதொரு குறளமுதம் பக்கத்தை வெளியிடவும் எண்ணமுண்டு, பின்னர் முடிந்தால் பார்ப்போம்.
நன்றி.