|
| |
| |
பொழிப்புரை : | |
அடக்கம் ஒருவரை அமரராகிய தேவர் பெருமக்களுள் புகழோடு வாழும் நிலைக்கு மேம்படுத்தும்; அடக்கமின்மை ஆழ்ந்த இருளுக்குள் ஆழ்த்தி விடும். | |
| |
விரிவுரை : | |
அடக்கமாகிய பணிவு ஒருவரை அமரர்களுள்ள உலகினுள் செலுத்தி மேம்படுத்தும்; அடங்காத தன்மை ஒருவரை ஆழ்ந்த இருளாகிய அறியாமையெனும் நரகத்திடை ஆட்படுத்தி விடும். அடக்கமாகிய பணிவு அறிஞர் சபையில், சமூகத்தில் இடம் பெற்றுத்தரும். அதனால் அறிவிற் சிறக்க வாய்ப்புக் கிட்டி அவருருள்ளும் மேம்பட்ட நிலைக்குக் கூட கொண்டு செல்லும். அடங்காமை எனும் செருக்கினால் கருத்துப் பார்வை குன்றி அறியாமை பெருகும். அவ் அறியாமையினால் மூடத்தனமும், மூர்க்கத்தனமுமே பெருகி நல்லவர்கள் யாவரின் அண்மையும் கிட்டாது, வாழ்வின் நற் பாதைகள் தட்டுப்படாது, மட்டுப்படாது வாழ்க்கை நரகமாகிவிடும். பணிவு நல்மனிதர்களின் சகவாசத்தை மட்டுமா தரும்? கால காலங்களுக்குக் குன்றாத புகழுடன் திகழும் வாழ்க்கையை, சிறப்புக்களை அள்ளி வழங்கும். உதாரணத்திற்கு ஆசிரியரிடம் காட்டும் பணிவில், தாழ்மையில் நிறைவது அறிவுதானே. அகங்காரத்தால், ஆணவத்தால் எல்லாம் எனக்குத் தெரியும் எனும் மனோபாவம் தோன்றி அறிவுக் கண்ணை மறைத்து விடும். அப்புறமென்ன? தோல்விகளே தொடரும். முட்டாள்களோடு சேருவதை யாரேனும் விரும்புவார்களா? அடக்கம் ஆரவாரமற்ற மன அமைதியையும், ஒழுங்கையும், கவனிப்பையும், சிந்தனையையும், பொறுமையையும் அதன்பால் திட்டமிடலையும், நேர்மறை ஊக்கத்தையும், விடா முயற்சியையும், ஆக்கத்தையும் ஏற்படுத்தி அதன்பால் கவனிப்புக்களையும், பரிசில்களையும், பாராட்டுக்களையும், உயர் மதிப்பையும் பெற்றுத் தருவதோடு நல்லாரின் நட்பையும், அவரோடு இணங்கி வாழும் சூழலையும், நலனையும், நற்பணியையும் அதன்பால் சமூகத்திற்குத் தொண்டையும், மங்காப் பேரையும், புகழையும் நல்கி நிற்கும். அடங்காமை ஆர்ப்பரிக்கும், எக்காளமிடும், கொக்கரிக்கும்; கூடவே நக்கலையும், இடை மறிப்பையும் வழங்கி அதுவே கெட்டிக்காரத்தனம் எனும் மாயை ஏற்படுத்தி, குறிக்கோளை மறந்து குதர்க்கத்திலும், மதர்ப்பிலும் மூழ்கடித்து அதன்பால் ஆணவத்தையும், அகந்தையையும் அள்ளி வழங்கி சிந்தனையற்றுச் செயலாற்ற வைத்து அதற்குக் காரணங்கள் கற்பித்து அறியாமைக்கு அரியாசனம் ஏற்படுத்தி அறிவிலிகள் புடை சூழ, சூதையும், வாதையும் தொழில் படுத்தி எதிர்மறை எண்ணங்களையும், சோம்பலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி நல்லோரும், சமூகமும் வெறுக்கும்படிச் செய்து அதன் பால் சமுதாயத்திற்குக்க் கெடுதல் தருவதையும், அதில் ஆனந்திக்கவும் செய்து அழிவுப் பாதையில் ராஜ நடை போட்டு மீள முடியாத நரக வாழ்வை நல்கி நிற்கும். எனவே வாழ்வு சிறந்து, மேன் மக்களாகத் திகழ வேண்டுவோருக்கு அடிப்படையில் பணிவு என்பதும் மன அடக்கம், நா அடக்கம், சபை அடக்கம் எனும் அனைத்தும் அவசியமான குண நலன்கள் ஆகும். | |
| |
குறிப்புரை : | |
ஒருவரை அடக்கம் மேம்படுத்தும்; அடங்காமை கீழ்ப்படுத்தும். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
அடக்கம் - பொறுமை, பணிவு, தாழ்மை, உள் அடங்கல், செறிவு, அடிப்படை விலை, பிணத்தைப் புதைத்தல் (humility, modesty, submisiveness, patience, inclusiveness, compactness, cost price, burial) ஆர் இருள் - நிறைந்த இருள் அமரர் - தேவர், இறந்தும் என்றும் நினைவில் வாழுபவர் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 429. பாழே முதலா எழும்பயிர் அப்பயிர் பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம் பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே திருமந்திரம்: 554. கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன் நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இயமத் திடையில்நின் றானே திருமந்திரம்: 569. வளியினை வாங்கி .(1). வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந் தௌiயக் குருவின் திருவருள் பெற்றால் வளியினும் வேட்டு வளியனு மாமே .(1). வயிற்றில் திருமந்திரம்: 588.. கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வீணாத்தண் டூடே வௌiயுறத் தானோக்கிக் காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு வாணாள் அடைக்கும் வழியது வாமே திருமந்திரம்: 605.. நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட் டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித் துயரற நாடியே தூங்கவல் லார்க்குப் பயனிது காயம் பயமில்லை தானே திருமந்திரம்: 606.. மணிகடல் யானை .(1). வார்குழல் மேகம் அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ் தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே .(1). வளர்க்குழல் திருமந்திரம்: 2034 முழக்கி எழுவன மும்மத வேழம் அடக்க அறிவென்றும் கோட்டையை வைத்தேன் பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக் கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே. திருமந்திரம்: 2035 ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே. திருமந்திரம்: 2036 பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென் விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம் பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம் அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே. திருமந்திரம்: 2037 இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்த கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன் தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத் துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே. திருமந்திரம்: 2038 பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில் வேய்ந்துகொள் மேலை விதியது தானே. திருமந்திரம்: 2039 நடக்கின்ற நந்தியை நாடோ றும் உன்னில் படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக் குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே. திருமந்திரம்: 2040 சென்றன நாழிகை நாள்கள் சிலபல நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள் குன்று விழவதில் தாங்கலும் ஆமே. 10 மாணிக்கவாசகர். திருவாசகம்: 5. திருச்சதகம்: 9. ஆனந்த பரவரசம் (கலிநிலைத்துறை) விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு இனை வைத்தாய் இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம் மிச்சைத் தேவா என் நான் செய்தேன் பேசாயே. 85 பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே பூசப்பட்டேன் பூதரால் உன் அடியான் என்று ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது அமையாதால் ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே. 86 அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை ஆட்கொண்டு இலை கொல்லோ அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் செடிசேர் உடலம் இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே. 87 காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும் பாணே பேசி என் தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன் ஏண் நாண் இல்லா நாயினேன் என்கொண்டு எழுகேன் எம்மானே. 88 மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையானே தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மாநகர் குறுகப் போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே. 89 புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தான் சேர்ந்தாரே. 90 தாராய் உடையாய் அடியேற்கு உன்தான் இணை அன்பு போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான் ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆமிலைத்து இங்கு உன்தான் இணை அன்புக்கு ஆராய் அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே. 91 அழுகேன் நின்பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த மெழுகே அன்னார் மின்ஆர் பொன் ஆர் கழல் கண்டு தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னைப் பணிகேனே. 92 பணிவார் பிணி தீர்ந்து அருளிப் பழைய அடியார்க்கு உன் அணி ஆர் பாதம் கொடுக்கி அதுவும் அரிது என்றால் திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித் தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. 93 யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே. 94 கடுவெளிச் சித்தர் பாடல்: ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு முந்தி வருந்திநீ தேடு; அந்த மூலம் அறிந்திட வாமுத்தி வீடு (13) உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை; கள்ளப் புலனென்னுங் காட்டை வெட்டிக் கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை (14) பட்டினத்தார்: மாத்தா னவத்தையும் மாயா புரியின் மயக்கத்தையும் நீத்தார் தம்க்கொரு நிட்டையுண்டோ? நித்தன் அன்பு கொண்டு வேர்த்தால் குளித்துப் பசித்தால் புசித்து, விழி துயின்று பார்த்தால் உலகத் தவர்போல் இருப்ப பற்று அற்றவரே! (19) சிவவாக்கியர்: உதிக்குகின்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம் கதிக்குகின்றது எவ்விடம் கன்றுறக்கம் எவ்விடம் மதிக்கநின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம் விதிக்கவல்ல ஞானிகாள் விரிந்த்துரைக்க வேணுமே. (173) ஔவையார். ஆத்திச்சூடி: 36. குணமது கைவிடேல். ஔவையார். கொன்றைவேந்தன்: 8. ஏவா மக்கள் மூவா மருந்து ஔவையார். நல்வழி: வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும். 33 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Self-control leads to excel and extol in realms of the immortals while indulgence leads to gloomy Hades. | |
| |
Explanation : | |
Self-Control, the humility, leads one into the domain of immortals to excel where as indulgence leads to the darkness of ignorance, the gloomy Hades. | |
| |
Message : | |
Self-control progresses; Indulgence subdues. | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...