|
அகம்பாவமின்றி, அகந்தையின்றி, ஆடம்பரமின்றி, சமூகக் கட்டுப்பாடுகளுக்கும், நல் ஒழுக்கத்திற்கும் கட்டுப்பட்டு நடக்கும் தன்மை. தன்னைவிட மூத்தோருக்கும், கற்றோருக்கும், சான்றோருக்கும் பணிந்து நடக்கும் பாங்கு அன்றில் ஒழுக்கம். இதில் இல்லறத்திற்குரிய மனவடக்கம், நாவடக்கம், சபையடக்கம் மற்றும் புலனடக்கம் போன்றவை அனைத்தும் அடங்கும். | |
பணிவு என்பது மற்றோரின் திறத்தையும் அங்கீகரித்து மதித்து நடக்கும் ஒழுக்கமாகும். அவையும், நல் நகைச் சுவையும் தன் நம்பிக்கை உள்ளவர் பால் மட்டுமே திகழக் கூடியவை. பணிவு உள்ள இடத்தில் அனைத்தும் வந்து நிறையும் என்பது இயற்கை விதி. அதைப் போன்றே பணிவு கொள்ளும் மனிதரிடம் நல்லறம் யாவும் அடைக்கலம் பெறும். | |
| |
ஒப்புரை (Reference) | |
| |
திருமந்திரம்: 124. வெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவ சித்தர் தாமே. திருமந்திரம்: 136. அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல் செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே. திருமந்திரம்: 137. அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில் திடம்பெற நின்றான் திருவடி தானே. திருமந்திரம்: 138. திருவடி யேசிவ மாவது தோல் திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில் திருவடி யேசெல் கதியது செப்பில் திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே. திருமந்திரம்: 251. தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர் தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர் தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள் தாமறி வார்க்குத் தமர்பர னாமே. திருமந்திரம்: 416.. அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும் இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும் முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும் அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே திருமந்திரம்: 2715 சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச் சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள் சிவசிவ ஆகும் திருவருள் ஆமே. திருமந்திரம்: 2718 சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே. 1 திருமந்திரம்: 2768 இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம் அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே. 47 பட்டினத்தார்: முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளொரும் முடிவுலொரு பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னும் இந்தப் படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால் பொன்னின் அம்பலவர் அடிசார்ந்து நாம் உய்ய வேண்டுமென்றே அறி வாரில்லையே! (7) சிவவாக்கியர்: நாடிநாடி நம்முளே நயந்து காண வல்லிரேல் ஓடிஓடி மீளுவார் உம்முளே அடங்கிடும் தேடிவ்ந்த காலனும் திகைத்திருந்து போய்விடும் கோடிகால மும் உகந்து இருந்தவாறது எங்ஙனே. (152) ஔவையார். ஆத்திச்சூடி: 19. இணக்கம் அறிந்து இணங்கு. ஔவையார். கொன்றைவேந்தன்: 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் ஔவையார். மூதுரை: வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. | |
| |
*** | |
| |
In English: | |
| |
It is the human state of behavior without arrogance, haughtiness, pomp and ostentation but with obedience towards good virtues. Humility is the practice or good behavior giving respect to elders and respect and recognition to others for their talents. It will be there with only persons of self-confidence to have such behavior and good humor. Where there is lowliness all will come and get filled in is the nature's law. Same way with the people of humility and submissiveness, all good virtues will get asylum. Humility and self-control is not fearfulness or slavery. On the other hand it is self-confidence and daring in addressing anyone and giving due respect to them with humbleness and obedience. Self-control, humility and obedience all are of the characteristics of good virtue; therefore, it is continued after the impartiality chapter. | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...