|
| |
| |
பொழிப்புரை : | |
தம்மை அணுகிச் சேர்ந்து நிற்பாரின் குற்றத்தையும் தூற்றும் வழக்கமுடையோர், என் செய்வாரோ அன்னியரிடத்து? | |
| |
விரிவுரை : | |
தம்மைச் சார்ந்து இசைந்திருப்போரின் குற்றத்தைக் கூடத் தூற்றும் வழக்கமுடையோர், அண்மையற்ற அயலாரிடத்துக் காண்பவற்றை என்ன செய்வாரோ? குற்றங்களை உரியவரிடம் மாத்திரம் சுட்டிக் காட்டித் திருத்திக் கொள்ளச் சொல்லுவது ஓர் உதவி, சில சமயங்களில் கடமையும் கூட. ஆனால் தமது நண்பர்கள், உறவுகள், குடும்ப அங்கத்தினர், பணி செய்வோர், அலுவலக சக ஊழியர் இவர்களின் குற்றத்தை பிறரிடம் தூற்றிக் கூறுவதே புறங்கூறுவது ஆகும். அதாவது நெருங்கியவர்களின் குறையைக் கூட நாளை அவர் என்ன எண்ணுவாரோ என்று எண்ணாது புறம் கூறும் பழக்கமுடையோர், சம்பந்தமில்லாதவரின் விடயம் கிடைத்து விட்டால் சும்மா இருப்பாரா? மெல்லுவதற்குப் புதிய விடயம் கிடைத்ததென்று புறங்கூறிக் கொண்டாடித் திளைப்பார் அன்றோ? ஆயின் இஃது முழுவதுமே தவறு என்பது கூறாப் பொருள். செய்கின்ற தவறான புறங்கூறும் தூற்றலில் தமது நெருங்கியவரைக் கூட விடாத மனிதரின் பழக்கம் தான் எத்தனை கெட்டது என்பது பொருள். பழகிய கெட்ட பழங்கங்களை பிற்பாடு ஒழித்தல் என்பது மிகவும் சிரமமான செயல், ஆனால் முயற்சித்து நிறுத்த வேண்டும். ஒருவர் நெருங்கியவரைப் பற்றிப் புறங்கூறித் தூற்றியதைப் பிற்பாடு தெரியவருகின்ற போழ்து போகட்டும் அவர் எப்போதுமே அத்தகைய இயல்புடையவர் என்று சம்பந்தப்பட்டவர் ஒருவேளை விட்டுக் கொடுக்கலாம். ஆனால் அன்னியர் அவரைப் பற்றி இவர் தூற்றியதை அறிந்தால் சும்மா விடுவாரா? பகைதான் பன்மடங்கில் வளரும். ஆக இவர் இன்னாரென்று பாகுபாடு தெரியாமல் செய்யும் புறங்கூறும் பழக்கம் என்பது பல இன்னல்களுக்கு வழிவகுக்கும். மொத்தத்தில் யார் மீது புறங்கூறித் தூற்றினாலும் அஃது கெட்ட பழக்கமே. | |
| |
குறிப்புரை : | |
நெருங்கியவரையே தூற்றும் வழக்குடையோர் அயலாரை என் செய்ய மாட்டாரோ? | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
மரபு - நியதி, வழக்கு, இயல்பு துன்னு - அணுகு, நாடி வா, மேற்கொள், கைக்கொள், செய், அடை, பெறு, கருது, மனத்தில்கொள், பொருந்து, இயைந்து சேர், அடர்ந்திரு, செறிந்திரு, தை ஏதிலார் - பிறர், அன்னியர், பகைவர், பரத்தையர், அயலார் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 819 ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங் கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும் வழிகின்ற காலத்து வட்டக் கழலைப் பழிக்கின்ற காலத்துப் பையகற் றீரே திருமந்திரம்: 868 கதிரவன் சந்திரன் காலம் அளக்கும் பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும் அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப எதிரவ நீச நிடமது தானே திருமந்திரம்: 2385 கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில் வருசமயப் புற மாயைமா மாயை உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே. திருமந்திரம்: 2522 நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண் மூடிக்கண் டேனுல கேழுங்கண் டேனே. 11 மாணிக்க வாசகர். திருவாசகம். 8. திரு அம்மானை: (திருவண்ணாமலையில் அருளியது - தரவு கொச்சகக் கலிப்பா / ஆனந்தக் களிப்பு ) துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான் கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான் கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான் அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம் பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும் அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய். 183 ஔவையார். ஆத்திசூடி: 94. மேன்மக்கள் சொற்கேள். 96. மொழிவ தறமொழி. ஔவையார். கொன்றை வேந்தன்: 74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் பட்டினத்தார். பொது: வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப் போதுற்ற போது புகலுநெஞ்சே! இந்தப் பூதலத்தில் தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்? காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே! 10 எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூட ரெல்லாம் கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர், கருத்தில் வையார் பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே. 30 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Those who have the habit of slandering even on the mistakes of their dear & close ones, what will they do with others? | |
| |
Explanation : | |
Those who have the habit to disgrace and slander even the closest ones for their errors, what would they do when they see faults with others? | |
| |
Message : | |
Those who have the habit of slandering the closest too, what won’t they do to others? | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...