Friday, February 19, 2010

அறிவிப்பு: குறள் அமுதம் இலவச மென்புத்தகம் புதுப்பிப்பு

அறிவிப்பு

:

குறள் அமுதம் மென்புத்தகம்

Announcement : Kural Amutham eBook

புதுப்பிக்கப்பட்ட விபரம்.

Updated Details

1. அதிகாரம் 21 முழுமையாக இணைக்கப் பட்டுள்ளது

1. Chapter 21 is updated in full.

அன்புடையீர்,

குறள் அமுதம் மென் புத்தகத்தை தரவிறக்கம் செய்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக் கொண்டிருப்பீர்களென நம்புகின்றேன். மென்புத்தகம் புதுப்பிக்கப் பட்டிருப்பதால் மீண்டும் தரவிறக்கம் செய்து புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்த அதிகார விளக்கத்தின் போது கணிசமான அளவிலே பக்கங்களின் வாசிப்புக் கூடி உள்ளது மற்றும் வாசகர் வட்டமும் கொஞ்சம் விரிவடைந்திருப்பதில் மகிழ்ச்சி.

குறள் அமுதம் இணையப்பக்கத்தில் இணைந்து கொண்ட அனைத்து இதயங்களுக்கும் நன்றி. உங்களின் வரவில் பெருமை அடைகின்றேன்.

நன்றி.

உத்தம புத்திரா.


சில கேள்வி பதில்கள்:

1. மென்புத்தகத்தை எவ்வாறு புதுப்பித்துக் கொள்வது?
இலவச மென்புத்தகங்கள் என்னும் இணைப்பைச் சுட்டி தேவையானதைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். முதலில் தரவிறக்கம் செய்த போது செய்த செயல்பாடுகளை இப்போதும் செய்து கொள்ளுங்கள். அடிப்படையில் உங்களின் கணினியில் இருக்கும் பழைய சுவடி, இப்புதிய கோப்பால் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

2.முதன் முதலில் தரவிறக்கம் செய்வது எப்படி?
முதன் முறை தரவிறக்கம் செய்தால் .zip சுட்டியைத் தரவிறக்கம் செய்து, unzip செய்து பயன் படுத்தவும். இம்முறையில் மென்புத்தகத்தின் அகலம், உயரம் போன்றவை ஏற்கனவே நான் அமைத்துள்ளபடி உங்களுக்குக் கிட்டலாம். எனவே இந்தச் சுட்டியைத் தரவிறக்கம் செய்வதையே நான் பரிந்துரைப்பேன்.

3. KuralAmutham.chm சுட்டியைத் தரவிறக்கம் செய்து கொள்வது எப்படி?
இச் சுட்டியைத் தரவிறக்கம் செய்தால், கீழ்க்கண்ட முறைகளை மேலும் கையாள வேண்டும். முதலில் தரவிறக்கம் செய்த பிறகு இக்கோப்பைச் தேர்ந்தெடுத்துக் கொண்டு, வலது மவுஸ் பொத்தானை ஒத்தி, file Properties குச் செல்லவும்.General tab பகுதிக்குச் சென்று Unblock பொத்தானை ஒத்தவும். பிறகு Apply மற்றும் Ok பொத்தான்களை ஒத்தி வெளியேறவும். இவ்வாறு செய்யாவிடின் இவ்விதமாக தரவிறக்கம் செய்யப்பட்ட மென்புத்தகம் பொருளடக்கத்தைக் காண்பிக்காது. எனவே மென்புத்தகத்தில் Unblock அவசியம் செய்து
கொள்ளவும்.

4. எப்படிக் கமெண்ட் செய்வது?
குறள் அமுதம் இணையப் பக்கத்தில் உள்ள கமெண்ட் பாக்ஸைப் பயன் படுத்தி, உங்கள் எண்ணங்களை, பின்னூட்டங்களைப் பதியவும். தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டிலும் இங்குப் பதியலாம்.

5. ”குறள் அமுதம் பக்கத்தில்” ஒரு குறளை எப்படித் தேடுவது?
’Search' எனும் பாக்ஸில் உங்களுக்குத் தேவையான குறளின் ஏதாவது ஒரு வார்த்தை அல்லது குறளின் எண்ணை உள்ளீடு செய்து, ‘Search' பொத்தானை ஒத்தவும். பெரும்பாலும் உங்களின் தேடலுக்கான அட்டவணை அல்லது வாய்ப்புக்கள் ஒன்று மட்டும் இருந்தால் நீங்கள் கேட்ட தகவலுக்கான குறளமுதம் பக்கம் காண்பிக்கப்படும்.

***

In English: (About KuralAmutham eBook)

Dear Friends

I extend my thanks to all who have downloaded the "KuralAmutham" eBook. I am sure you are using it happily. Please download once again as the eBook is updated now.

I am happy to note that during this chapter's explanation considerable amount of page reading is increased and also the visitors.

Thanks to all who have registered in Kural Amutham blog spot. I am proud to welcome you all.

Thanks

UthamaPuthra.


Few Questions and Answers:

1. How to update your KuralAmutham eBook?
Click the link "My Free eBooks" from KuralAmutham.blogspot web site. Choose whichever file you require to update. Just follow the same procedures you followed to install the previous copy. Ensure that the newer copy basically overwrites your old copy at your system.

2. How to download for the first time?
I would recommend going for the KuralAmutham.zip file download because it is very simple. After download just you have unzip it. That is it. You are ready to use by then the KuralAmutham.chm file directly. You would also get the width and height is preset done by me. In the other method you have to do it manually by yourself.

3.How to download 'KuralAmutham.chm' file directly?
You can also download the KuralAmutham.chm file directly from the link given below. But in this method you have to take care to Unblock and adjust the sizes by yourself.

After download, Remember to unblock the file after downloading to your system otherwise you won't get the proper content display. Therefore, Locate the downloaded file and right click at it to get the file Properties. Click on the Unblock button on the General tab and follow it thru Apply and Ok buttons to close the property window. Now you can just double click the file to see the content. You may have to size the window to your convenience.

4. How to comment?
Use the Comment box in the Kural Amutham web site, to register your feedback and thoughts. Please Type in only in English or Tamil.

5. How to search for a particular Thirukkural in the web page?
Use the Search box in the page. Type out any word from the Kural you are looking for either in English or in Tamil. Alternatively you can also type the Kural Number, to fetch the same. You may be given a result of List to pick one or when only single choice you get the direct display of the Kural Amutham.


***

Wednesday, February 17, 2010

அதிகாரம்: 21. தீவினையச்சம் - முடிவுரை

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

முடிவுரை

Chapter : 21

Fear for Evil Deeds

Summary

அதிகாரத்தில் பெற்றவை

குறள் எண்

Kural No.

குறள் குறிப்புரை (Kural Message)

201 தீவினை செய்யத் தீவினையாளர் அஞ்ச மாட்டார்; மேன்மையோர் அஞ்சுவர்.

Sinners don't fear to do evil deeds but the noble dread.
202 தீயப் பயன்களை விளைவிக்கும் தீயவற்றைக் கண்டு, தீக்கு அஞ்சுவதைக் காட்டிலும் அஞ்சித் தவிர்க்க வேண்டும்.

By looking at the evils that produces evil results one should fear more than the fire and avoid doing it.
203 தலையாய அறிவென்பது தமக்குத் தீயவை செய்தவருக்கும் கூடத் தீமை செய்யாது இருத்தலே.

The primary wisdom is nothing but not doing evil things even to those who do evil deeds to the self.

204 மறந்தும் பிறருக்குக் கேட்டை எண்ணாதீர்; எண்ணினால் முதலில் அக்கேடு தமக்கே விளையும் என்பதை அறிவீர்களாக.

Never plot ruin for others; Aware that If plotted so the ruin is only for the self.

205 வறுமையால் தீங்கு செய்தல் ஆகாது. அவ்வாறு செய்யின் தமது நிலை விலகித் தாழ்ந்து மீண்டும் அனைத்திலும் தீவிர வறுமையே மேவும்.

One shall never do evil deeds due to poverty. If one does so then shall go yet down from the current status into greater impoverishments in everything.
206 தீயவை தன்னை வருத்த வேண்டாதவன் முதலில் தாம் பிறர்பால் தீயவற்றை எண்ணவோ, செய்யவோ கூடாது.

That who desires not any suffering to the self firstly should not think or do any evil deeds to others.
207 ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அஃது அழியாது நின்று அவரைப் பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும்.

One can never escape from the sin of evil deed committed. That would ever stay undying to afflict and suffer later.
208 தீவினையால் வரும் கெடுதல் என்பது அடங்காது வரும் அவர் தம் நிழலைப் போன்றே ஒருவரை எப்போதும் தொடர்ந்து பற்றி நிற்கும்.

The evil which comes for one for the evil deeds made is like one's shadow persists at one's own foot, remains and continues perpetually.

209 நல்லவற்றைத் தனக்கு விரும்புபவன் தீங்கினை யார் மாட்டும் கிஞ்சிற்றும் செய்தல் தகாது.

That who loves goodness for the self should never commit even smallest evil deed on others.
210 நல் வழித் தவறிப் பிறருக்குத் தீங்கு செய்யாதவனிற்குக் கேடு ஏதும் இல்லை என்று அறிக.

Know that there is no any disaster for that which does not slip from the virtuous path and does not do any evils to others.

குறிப்புரை

தீவினையைத் தீமைதரும் தீயைக் காட்டிலும் அஞ்சித் தவிர்க்க வேண்டும்.ஆதலின் தீவினை செய்ய மேன்மையோர் அஞ்சுவர்; தீவினையாளரே அஞ்சமாட்டார்.

தன்னைத் தீயவை வருத்தாது நன்மையை மாத்திரம் விரும்புவன் பிறர்பால் தீயவற்றைக் கிஞ்சிற்றும் எண்ணவோ, செய்யவோ கூடாது. மறந்தும் கூடப் பிறர்பால் தீமை செய்ய எண்ணினால் அக்கேடு தமக்கே முதலில் விளையும். வறுமையால் பிறர்பால் தீமை செய்தால் இருக்கும் நிலை தாழ்ந்து தீவிர வறுமையே மேவும்.
பிறர் பால் செய்த தீவினைப் பலனிலிருந்து ஒருவர் தப்பிக்கவே முடியாது. அத்தகைய கெடுதல் மறையாது நிழலைப் போல் நின்று செய்தவரைப் பிற்பாடு வருத்தித் துன்புறுத்தும்.

நல் வழித் தவறாது, பிறருக்குத் தீங்கு செய்யாதவனிற்குக் கேடு ஏதும் இல்லை என்பதே அறிவு. அதிலும் தலையாய அறிவு என்பது தமக்குத் தீயவை செய்தோருக்கும் தீமை செய்யாது இருத்தலே.

Message

One should fear for evil deed worst than the dreadful fire and should avoid as it can produce only evils. Therefore the noble dread for it and never commit it but not the sinners.

That who desires no sufferings to the self but only loves goodness should not think or commit even the smallest evil deed on others. If one plots by mistake to do evil on others, the ruin is primarily only for the self. If one does evil deeds due to poverty then the result would lead to still worst in the current status and greater impoverishments in everything to the self. One can never escape from the sins of evil deeds committed. Such sins would stay undying like the ever persisting self shadow and afflicts perpetually the self forever later.

Therefore the wisdom thus to avoid any disaster is not to slip from the good virtues and not to commit any evils to others. And the primary wisdom is not to retaliate and commit evils even to those who inflict on the self.

திருக்குறள்: 210 (கெடான், கேடு செய்யான்...)

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

திருக்குறள் : 210

கெடான், கேடு செய்யான்...

In English

அருங் கேடன் என்பது அறிக - மருங்கு ஓடித்
தீவினை செய்யான் எனின்!

பொழிப்புரை :
கேடு அற்றவன் என்பது அறிக - [ஒருவன்] தடம் வழுவித் தீவினை செய்யாதவன் என்றால்.

விரிவுரை :
ஒருவன் நன்னெறித் தடம் வழுவித் தீவினை செய்யாதவன் என்றால், அவன் கேடு ஏதும் அற்றவன் என்று அறிவில் தெளியலாம்.

நல்வழித் தவறி பிறர் பால் தீவினை செய்யாதவனிற்குக் கேடு ஏதும் இல்லை என்பது உட்பொருள்.

தீவினை செய்யாது நன்னெறிகளில் நடப்போரே மக்களால் மகான்களாக, புனிதர்களாகப் போற்றிக் கொண்டாடப் படுகின்றார்கள். பிறருக்கு இன்னல் விளைவிக்காதவரையே பிற உயிர்களும் நாடிச் செல்லும். அன்பும், ஆதரவும் தரும் இதயங்களின் அரவணைப்பில் தான் உயிர்கள் இன்பம் பெறுகின்றன. கேடு இல்லா மனிதர்கள் நன்மையே செய்யாது போயினும் அவர் தம் இயல்பால் நன்மை செய்தவர்களாகவே ஆவார்கள். அத்தகையோரால் தான் இவ்வுலகம் நிலைத்து நிற்கின்றது.

நன்மக்கள் நிறைந்த இடத்தில் வாழும் வாழ்க்கை என்பதே கூட ஒருவருக்கு முன் செய்த நல் வினைப் பயனால் விளைவதே ஆகும்.

தீவினை செய்யாதே நன்னெறி நின்று கேடு அற்றவர்களாக உய்வோமாக.

குறிப்புரை :
நல் வழித் தவறிப் பிறருக்குத் தீங்கு செய்யாதவனிற்குக் கேடு ஏதும் இல்லை என்று அறிக.

அருஞ்சொற் பொருள் :
அருமை - அரியது, இல்லாமை, இன்மை
மருங்கு - வடிவம், எல்லை, சுவடு, தடம், செல்வம், நூல், இடை, விலாப்பகுதி, பக்கம்

ஒப்புரை :

திருமந்திரம்: 785
மனையிலஒன் றாகும் மாதமு மூன்றுஞ்f
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற வோங்கி வௌiச்செய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே

திருமந்திரம்: 798
தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே

திருமந்திரம்: 806
நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வௌiயாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே

திருவாசகம்:
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24

பட்டினத்தார். பொது: 36
விடக்கே! பருந்தின் விருந்தே கமண்டல வீண நிட்ட
முடக்கே! புழுவந்து உறையிடமே! நலம் முற்றும் இலாச்
சடக்கே! கருவி தளர்ந்துவிட்டால் பெற்ற தாயுந்தொடாத்
தொடக்கே! உனைச் சுமந்தேன் நின்னின் ஏது சுகமெனக்கே?

ஔவையார். ஆத்திசூடி:
101. வீடு பெறநில்.
105. வேண்டி வினைசெயேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

ஔவையார். மூதுரை:
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30

ஔவையார். நல்வழி:
நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான். 21

***

In English:

Chapter : 21

Fear for Evil Deeds

Thirukkural : 210

Doer of no evil will go un-ruined...




In Tamil

arung kEdan enpathu aRika - marungku Odith
thIvinai seyyAn enin!

Meaning :
That who slips not the virtuous path and commits no evil is to be known as the one free from ruins.

Explanation :

When one does not slip from the good virtuous path and carry out not any evils, then can be comprehended that such is free from ravages.

The implied meaning is that one who does not slip from good virtues and commit not any evils to others will not get ruined.

Those who live in the good virtues and do not commit any evil deeds are only considered by the people as the great souls and divine beings and thus get celebrated. All the livings only go to those who do not do any harm to others. Living beings enjoy only through the love and supporting hearts. Those who considered as free from ruins even if they do not any good deeds, still they are considered only as good and harmless due to their basic nature and character. This world stands stable still only due to such noble and great souls.

Even living with the community of good people is perhaps possible to one only through one's previous good deeds,

Let us prosper through the path of good virtues and not do any evil deeds to anyone.


Message :
Know that there is no any disaster for that which does not slip from the virtuous path and does not do any evils to others.

***