|
| |
| |
பொழிப்புரை : | |
தீவினையார் அஞ்ச மாட்டார்; சீரியோர் அஞ்சுவார், தீவினை என்னும் துய்ப்பிற்கு. | |
| |
விரிவுரை : | |
தீவினை என்னும் தீச்செயலைச் செய்து துய்ப்பதற்கு எப்போதும் தீவினை செய்து கிடப்போர் அஞ்ச மாட்டார்; ஆனால் மேன்மைக்குரிய சீரியோர் அஞ்சுவார்கள். தீவினையை எப்போதும் செய்து பழக்கப்பட்டு அதன் பால் ஊறிக் கிடப்போர் இன்னொரு தீவினையைச் செய்ய அஞ்ச மாட்டார்கள். உண்மையில் அதனைச் செய்து, துய்த்துப் போலிக் களிப்பும் மயக்கமும் பெருமையும் கொள்ளுவர். அவர்களைப் போலிக் கவர்ச்சியும் மயக்கமும் அதன்பால் வரும் மகிழ்ச்சியும் செல்வமும் வெறி கொள்ளச் செய்து தீவினையை மேன்மேலும் செய்யவே தூண்டி நிற்கும். பழி, பாவத்தைக் கண்டு அச்சமற்றுத் திரிவதும், எள்ளி நகையாடுவதும், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்னும் மனோ பாவமும், தீவினையால் வரும் துரித மற்றும் குறுகிய கால சுக போகங்களும் அவர்களைத் தன்னிலை மறக்கச் செய்து செயலாற்றித் திளைக்கச் செய்யும். தீவினைகளின் பால் கொள்ளும் இறுமாப்பும் அவர்களை அச்சமிலாதே திகழச் செய்யும். ஆனால் பழி, பாவத்திற்கு அஞ்சும் நல் ஒழுக்க சீலர்கள், சீரியோர், மேன்மையுற்றோர் மனச் சாட்ச்சிக்கு ஒப்பாத தீய வினையைச் செய்ய அஞ்சுவர். அதனைத் துய்க்கவோ அதன்பால் பெருமிதமோ, செருக்கோ கொள்ளப் பயந்து அதனை முற்றிலும் தவிர்ப்பர். அவர்களுக்கு அதன் பால் வரும் போலிக் களிப்பின் மயக்கம் எண்ணும்போதே பயத்தைத்தான் கொடுக்கும். அவர்கள் தம் குலத்தின், குடும்பத்தின் மான பங்கத்திற்கான பயமும், இத்தனைக் காலமும் கட்டிக் காத்த நன்னெறி வாழ்க்கையை இத் தீச்செயல் இழுக்குச் செய்துவிடுமே என்னும் பயமும் அவர்களை அச்சுறுத்தி நின்று காக்கும். ஆதலின் அவர்கள் தீய செயல்களைச் செய்யாது வழக்கம்போல் அவர்களின் நன்னிலையையே தொடருவர். தீவினையால் வரும் போலிச் செருக்கிற்கு அஞ்சி நல்லோர் தீவினையைச் செய்யார் என்பதும் குறளின் மறை பொருள். ஆதலின் தீவினையைச் செய்ய அஞ்சிச் செய்யாது இருத்தலே ஒவ்வொருவரும் சீரியோராய் நன்னெறியில் திகழும் வழி ஆகும் என்பது குறளின் உட் கருத்து. | |
| |
குறிப்புரை : | |
தீவினை செய்யத் தீவினையாளர் அஞ்ச மாட்டார்; மேன்மையோர் அஞ்சுவர். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
விழுமியார் - மேன்மையோர், உயர்வுடையோர், சிறப்புடையோர், பெருமையுடையோர், நன்னிலையுடையோர், சீரியோர், செருக்கு - அகந்தை, இறுமாப்பு, கருவம், பெருமிதம், பெருமை உணர்வு, மிகுதிப்படுத்து, துய், அனுபவி, களிப்பு, மகிழ்ச்சி, துணிவு, மனத்திண்மை, உறுதி, மயக்கம், செல்வம். | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 143 மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே. திருமந்திரம்: 147 சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க் காக்கைக் குப்பலி காட்டிய வாறே. திருமந்திரம்: 184 கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார் விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும் எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. திருவாசகம்: 1. சிவபுராணம் : சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20 பட்டினத்தார். திரு ஏகம்ப மாலை: 39 கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக் குண்டரைக் காமுகரைக் கொடும்பவ மேசெய்யும் நிர்மூடர் தம்மைக் குவலயத்துள் நெடும்பனை போல வளர்ந்துநல் லோர்தம் நெறியறியா இடும்பரை ஏன்வகுத் தாய்? இறைவா! கச்சி ஏகம்பனே! ஔவையார். ஆத்திசூடி: 28. அழகலா தனசெயேல். ஔவையார். கொன்றை வேந்தன்: 20. கெடுவது செய்யின் விடுவது கருமம் ஔவையார். மூதுரை: அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா. 5 ஔவையார். நல்வழி: புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும் தீதொழிய நன்மை செயல். 1 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
The sinners will not fear to experience the evil deeds and pride, but the noble will dread. | |
| |
Explanation : | |
Those sinners who always cherish the sinful doings will not fear to do the evil deeds but the noble and eminent dread to do so. | |
| |
Message : | |
Sinners don't fear to do evil deeds but the noble dread. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...