|
| |
| |
பொழிப்புரை : | |
அறிவினுள் எல்லாம் தலையானது என்பது, [தமக்குத்] தீயவை செய்வார்க்கும் [தாம் தீமை] செய்யாது இருந்து விடல். | |
| |
விரிவுரை : | |
பெற்ற அறிவினுள் எல்லாம் தலையாயது என்பது, தமக்குத் தீயவை செய்வாருக்கும் கூட தாம் தீமை செய்யாது இருந்து விடுதலே. தமக்குத் தீயவை செய்தவரைப் பழி வாங்கினால் ஆறறிவு படைத்த மனிதருக்கு அதில் அறிவின் சிறப்பு என்பது ஏதுமில்லை. தீமை செய்யாது இருத்தலே நன்மக்களுக்கான நன்னெறி என்று இதுகாறும் முன்னர் குறள்களில் கண்டோம். அதிலும் தமக்குத் தீமை பயத்தவருக்கும் கூட பதிலுக்குத் தீமை செய்யாது விட்டு விடுதல் என்பது நன்னெறி மாத்திரமல்ல, சிறந்த அறிவின் வெளிப்பாடு என்கிறார் இக்குறளில். அதாவது தீமைகளை ஒருவருக்கொருவர் செய்து கொண்டு தொடருவதைக் காட்டிலும் அதை தாம் முதலில் நிறுத்துவதால் தொடரும் பெரும் தீங்குகளைத் தடுக்கும் செயல்பாடு அஃது என்கின்றார். ஆம், அதற்கு தீமை செய்யாமை என்னும் நன்னெறியோடு தீர்க்க தரிசனமும், பொறுமையும், மன்னிக்கும் குணமும், விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையும் அதிகம் தேவை அல்லவா? அறிவின் முதிர்ச்சி அல்லது உச்சம் என்பது தொடரும் தீமைகளைத் தீமை செய்யாதே தடுக்கும் கெட்டிக் காரத்தனமே அல்லவா? இன்னல் விளைவிப்போரைத் தீர்த்துக் கட்டுவதால் தீமையை ஒழிக்கவே முடியாது. ஏனென்றால் மனிதம் என்பதும் மனங்களால், உறவுகளால், மனிதர்களால் ஆனது. பழிக்குப் பழி வாங்கும் குணம் என்பது பக்குவப் படாத மனிதனின், ஐந்தறிவு படைத்த மிருகத்தின் குணம். ஆதலின் பக்குவப் படாத உறவுகளால், மனிதர்களால் துன்பங்கள் தொடரவே செய்யும். எனவே தீமைகளை நிறுத்தச் சிறந்த வழி என்பது அது தோன்றும் மனிதர்களை, மனங்களைத் திருத்துவதே. மானிடரைத் திருத்துவதற்கு அன்பும், அவர் தமக்குத் தீமை செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் பொறுமையும், தொலை நோக்குப் பார்வையின் பால் தற்காலிகமாக வெற்றியை விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும், மனித நேயமும், மனிதர்களைத் திருத்த முடியும் எனும் அசையாத நம்பிக்கையும், விலை மதிப்பற்ற உயிர்களைப் போற்றும் குணமும், உலகை உய்விக்கும் உயர்ந்த நோக்கமும், சுய கட்டுப்பாடும் தேவை. இவற்றிற்கெல்லாம் அடிப்படையில் அத்தகைய நன்னெறிகளைக் கடைப்பிடிக்க, நல்லவை கெட்டவை அறிந்து தெளிந்து ஒழுக, ஒருவருக்கு நல் அறிவின் முதிர்ச்சியே தேவை. தீயவை செய்யாத, தீமைகள் அற்ற நல் எண்ணங்களுக்கு, நல் மனத்திற்கு வெற்றிகள் எப்போதும் நிச்சயம். ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தைக் காட்டு என்று ஏசுபிரான் கூறுவதற்கு முன்பே வள்ளுவர் அதையும் தாண்டிய பார்வையில், தீமை இழைத்தவனையும் மன்னித்து தீமை இழைக்காதிருக்கும் அறிவே சிறந்த அறிவு மற்றும் தலையாயது என்று இங்கே கூறி இருக்கின்றார். பின்னர் இதே கருத்தின் நீட்சியாய், மேம்பட்ட நிலையை இன்னும் அழகாக “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” (குறள்: 314) என்று இன்னா செய்யாமை என்னும் அதிகாரத்தில் பின்னர் கூறுவார். ஆக மனிதர்கள் பெற்ற அறிவிலேயே தலையாயது என்பது தமக்குத் தீமை செய்தவருக்கும் கூட தீமை செய்யாது இருக்கும் மனக் கட்டுப்பாடே. | |
| |
குறிப்புரை : | |
தலையாய அறிவென்பது தமக்குத் தீயவை செய்தவருக்கும் கூடத் தீமை செய்யாது இருத்தலே. | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
செறு - அடக்கு, தணிவி, தடு, சின, வெறு, வருத்து, வெல், அழி, கொல், மாறு, பிறழ், தூர் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 222 ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன் வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல் கோமத்துள் அங்கி குரைகடல் தானே. திருமந்திரம்: 258 திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு கிளைக்கும் தனக்கும் அக் கேடில் புகழோன் விளைக்கும் தவமறம் மேற்றுணை யாமே. திருமந்திரம்: 265 வழிநடப் பாரின்றி வானோர் உலகம் கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும் மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே. திருவாசகம்: 1. சிவபுராணம் : கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 பட்டினாத்தார். திருவொற்றியூர்: 2 சுடப்படு வார் அறி யார், புரம் மூண்றையுஞ் சுட்டபிரான் திடப்படு மாமதில் தென்ஒற்றி யூரன் தெருப்பரப்பில் நடப்பர் பொற்பதம் நந்தலை மேற்பட நன்குருண்டு கிடப்பது காண்மன மே விதி ஏட்டைக் கிழிப்பதுவே! ஔவையார். ஆத்திசூடி: 38. கெடுப்ப தொழி. ஔவையார். கொன்றை வேந்தன்: 52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி ஔவையார். மூதுரை: தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. 9 ஔவையார். நல்வழி: வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து துஞ்சுவதே மாந்தர் தொழில். 5 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
The foremost among the wisdom is not to do evil things but to only ignore even those who do evil deeds to the self. | |
| |
Explanation : | |
The principal among the wisdom obtained is the one that which ignores the evil doings even if done to the self by others and not doing any evil things. | |
| |
Message : | |
The primary wisdom is nothing but not doing evil things even to those who do evil deeds to the self. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...