|
| |
| |
பொழிப்புரை : | |
தன்னைத் தான் காதலிப்பவன் என்றால் தீவினைச் செயலின் பால் எதை ஒன்றையும் பொருந்தி நிற்காதீர். | |
| |
விரிவுரை : | |
ஒருவன் தன்னைத் தான் காதலிப்பது உண்மை ஆனால், எவ்வளவுதான் சிறியதாயினும் பிறருக்குத் தீவினை செய்வதன் பால் ஒன்றிச் சார்ந்து நிற்கக் கூடாது. அன்பு என்பதைத் தனக்கே உணரத் தெரிந்தவன் எவனோ, பிறர் பால் சிறிதளவேனும் தீங்கு செய்ய ஒப்பலாமா? பிறர் பொருட்டுச் செய்யும் துன்பம் தனக்கே நிகழ்வது போலும் அல்லவா? மேலும் பிறர்பால் செய்விப்பவைத் தம்மைத் தானே பிறகு தாக்கும். இதை அறிந்து தன்னைக் காதலித்துப் போற்றுபவன் ஒருபோதும் தீவினை செய்தல் தகாது என்பது பொருள். பொது நலத்தைக் கருதாதே போயினும், பிறர் துன்பத்தைக் கருதாதவரே ஆயினும், தன்னைத் தானே காதலிக்கும் சுய நலத்திற்காகவாது பிறருக்குத் தீங்கினை அஃது எவ்வளவு சிறிய அளவினதாயினும் செய்யாதீர் என்பது உட் பொருள். தன்னை உண்மையில் காதலிப்பவன், பிறரையும் உலகையும் காதலிக்காமல், நல்லனவற்றையே அனைவருக்கும் விரும்பாமல் தாம் முழுமை அடைவதில்லை. | |
| |
குறிப்புரை : | |
நல்லவற்றைத் தனக்கு விரும்புபவன் தீங்கினை யார் மாட்டும் கிஞ்சிற்றும் செய்தல் தகாது. | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
எனைத்து ஒன்றும் - எதை ஒன்றையும் துன்னற்க - பொருந்தாதீர், சேராதீர், செறிந்து நிற்காதீர் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 754 சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான் தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற் கழல்கண்ட போம்வழி காணவல் லார்க்குக் குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே திருமந்திரம்: 755 கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர் சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள் பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில் ஆத்தனு மாகி யலர்ந்திரு மொன்றே திருமந்திரம்: 756 ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ் சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற் குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே திருவாசகம்: 5. திருச்சதகம் (திருப்பெருந்துறையில் அருளியது) 1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை) உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணுவிண்ணும் இழிதரு காலமெக் காலம் வருவது வந்ததற்பின் உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையக் கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பேவனே. 12 பட்டினத்தார். பொது: 34 சுரப்பற்று வல்வினை சுற்றமும் அற்றுத் தொழில்களற்று கரப்பற்று மங்கையர் கையிணக் கற்றுக் கவலையற்று வரப்பற்று நாதனை வாயார வாழ்த்தி மனமடங்கப் பரப்பற்றி ருப்பதன் றோ? பர மா! பரமானந்தமே! ஔவையார். ஆத்திசூடி: 87. மனந்தடு மாறேல். ஔவையார். கொன்றை வேந்தன்: 68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர் ஔவையார். மூதுரை: நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும் அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர். 25 ஔவையார். நல்வழி: பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால் இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது உயிர் விடுகை சால உறும். 14 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
That who loves thyself, let not stand support on any evil deed however small it is. | |
| |
Explanation : | |
If one loving one's own self is true then one shall not endorse and support to commit evil deed on others however small it is. | |
| |
Message : | |
That who loves goodness for the self should never commit even smallest evil deed on others. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...