Friday, October 30, 2009

Announcement: Kural Amutham Free eBook Update

அறிவிப்பு

:

குறள் அமுதம் மென்புத்தகம்

Announcement : Kural Amutham eBook

புதுப்பிக்கப்பட்ட விபரம்.

Updated Details

1. அதிகாரம் 11 - 13 முழுமையாக இணைக்கப் பட்டுள்ளது

1. Chapter 11 - 13 are updated in full.

அன்புடையீர்,

குறள் அமுதம் மென் புத்தகத்தை தரவிறக்கம் செய்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக் கொண்டிருப்பீர்களென நம்புகின்றேன்.

ஆர்குட்டிலும், இணையத்திலும் விமரிசனங்களைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி. ஆர்குட் கமெண்ட்களைப் பதிவு செய்ய முயலுவேன்.

குறள் அமுதம் இணையப்பக்கத்தில் இணைந்து கொண்ட அனைத்து இதயங்களுக்கும் நன்றி. உங்களின் வரவில் பெருமை அடைகின்றேன்.


நன்றி.

உத்தம புத்திரா.


சில கேள்வி பதில்கள்:

1. மென்புத்தகத்தை எவ்வாறு புதுப்பித்துக் கொள்வது?
இலவச மென்புத்தகங்கள் என்னும் இணைப்பைச் சுட்டி தேவையானதைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். முதலில் தரவிறக்கம் செய்த போது செய்த செயல்பாடுகளை இப்போதும் செய்து கொள்ளுங்கள். அடிப்படையில் உங்களின் கணினியில் இருக்கும் பழைய சுவடி, இப்புதிய கோப்பால் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

2.முதன் முதலில் தரவிறக்கம் செய்வது எப்படி?
முதன் முறை தரவிறக்கம் செய்தால் .zip சுட்டியைத் தரவிறக்கம் செய்து, unzip செய்து பயன் படுத்தவும். இம்முறையில் மென்புத்தகத்தின் அகலம், உயரம் போன்றவை ஏற்கனவே நான் அமைத்துள்ளபடி உங்களுக்குக் கிட்டலாம். எனவே இந்தச் சுட்டியைத் தரவிறக்கம் செய்வதையே நான் பரிந்துரைப்பேன்.

3. KuralAmutham.chm சுட்டியைத் தரவிறக்கம் செய்து கொள்வது எப்படி?
இச் சுட்டியைத் தரவிறக்கம் செய்தால், கீழ்க்கண்ட முறைகளை மேலும் கையாள வேண்டும். முதலில் தரவிறக்கம் செய்த பிறகு இக்கோப்பைச் தேர்ந்தெடுத்துக் கொண்டு, வலது மவுஸ் பொத்தானை ஒத்தி, file Properties குச் செல்லவும்.General tab பகுதிக்குச் சென்று Unblock பொத்தானை ஒத்தவும். பிறகு Apply மற்றும் Ok பொத்தான்களை ஒத்தி வெளியேறவும். இவ்வாறு செய்யாவிடின் இவ்விதமாக தரவிறக்கம் செய்யப்பட்ட மென்புத்தகம் பொருளடக்கத்தைக் காண்பிக்காது. எனவே மென்புத்தகத்தில் Unblock அவசியம் செய்து
கொள்ளவும்.

4. எப்படிக் கமெண்ட் செய்வது?
குறள் அமுதம் இணையப் பக்கத்தில் உள்ள கமெண்ட் பாக்ஸைப் பயன் படுத்தி, உங்கள் எண்ணங்களை, பின்னூட்டங்களைப் பதியவும். தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டிலும் இங்குப் பதியலாம்.

5. ”குறள் அமுதம் பக்கத்தில்” ஒரு குறளை எப்படித் தேடுவது?
’Search' எனும் பாக்ஸில் உங்களுக்குத் தேவையான குறளின் ஏதாவது ஒரு வார்த்தை அல்லது குறளின் எண்ணை உள்ளீடு செய்து, ‘Search' பொத்தானை ஒத்தவும். பெரும்பாலும் உங்களின் தேடலுக்கான அட்டவணை அல்லது வாய்ப்புக்கள் ஒன்று மட்டும் இருந்தால் நீங்கள் கேட்ட தகவலுக்கான குறளமுதம் பக்கம் காண்பிக்கப்படும்.

***

In English: (About KuralAmutham eBook)

Dear Friends

I extend my thanks to all who have downloaded the "KuralAmutham" eBook. I am sure you are
using it happily.

Thanks to those who registered their comments on Orkut and in this web site. I will try to post the orkut comments here for others sake.

Thanks to all who have registered in Kural Amutham blog spot. I am proud to welcome you all.

Thanks

UthamaPuthra.


Few Questions and Answers:

1. How to update your KuralAmutham eBook?
Click the link "My Free eBooks" from KuralAmutham.blogspot web site. Choose whichever file you require to update. Just follow the same procedures you followed to install the previous copy. Ensure that the newer copy basically overwrites your old copy at your system.

2. How to download for the first time?
I would recommend going for the KuralAmutham.zip file download because it is very simple. After download just you have unzip it. That is it. You are ready to use by then the KuralAmutham.chm file directly. You would also get the width and height is preset done by me. In the other method you have to do it manually by yourself.

3.How to download 'KuralAmutham.chm' file directly?
You can also download the KuralAmutham.chm file directly from the link given below. But in this method you have to take care to Unblock and adjust the sizes by yourself.

After download, Remember to unblock the file after downloading to your system otherwise you won't get the proper content display. Therefore, Locate the downloaded file and right click at it to get the file Properties. Click on the Unblock button on the General tab and follow it thru Apply and Ok buttons to close the property window. Now you can just double click the file to see the content. You may have to size the window to your convenience.

4. How to comment?
Use the Comment box in the Kural Amutham web site, to register your feedback and thoughts. Please Type in only in English or Tamil.

5. How to search for a particular Thirukkural in the web page?
Use the Search box in the page. Type out any word from the Kural you are looking for either in English or in Tamil. Alternatively you can also type the Kural Number, to fetch the same. You may be given a result of List to pick one or when only single choice you get the direct display of the Kural Amutham.


***

அதிகாரம்: 13. அடக்கமுடைமை - முடிவுரை

அதிகாரம்

: 13

அடக்கமுடைமை

முடிவுரை

Chapter : 13

Self-Control

Summary

அதிகாரத்தில் பெற்றவை

குறள் எண்

Kural No.

குறள் குறிப்புரை (Kural Message)

121 ஒருவரை அடக்கம் மேம்படுத்தும்; அடங்காமை கீழ்ப்படுத்தும்.

Self-control progresses; Indulgence subdues.
122 அடக்கத்தைக் காட்டிலும் உயர்வான செல்வம் உயிருக்கு ஒன்றில்லை, எனவே அதைப் பேணிக் காக்கவும்.

No greater wealth than the self-control for the soul, therefore foster and protect the same.
123 அறிவாலும், செயலாலும் பேணப்படும் அடக்கம் சீரிய சிறப்பை நிச்சயம் நல்கும்.

Self-control adopted by sense and deed will certainly yield distinguished glory.

124 மாறா அடக்கம் மலையினும் பெரியது.

The steadfast self-control is greater than a mountain.
125 மனிதருக்குச் செல்வம் கூடினால் அடக்கம் இன்னும் அத்தியாவசியமாகிறது.

When the wealth increases for one, humility, the self-control becomes more essential.
126 புலன்களை அடக்கி ஒருமுகப்பட்டு ஆற்றப்படும் செயல் காலங்களை விஞ்சி நின்று நன்மை பயக்கும்.

Actions of focused mind with controlled senses will stand beyond ages providing goodness.
127 குறைந்த பட்ச நாவடக்கத்தையாவது ஒருவர் மேற்கொள்ளத் தவறினால் சொற் குற்றத்தால் துன்புறுவர்.

Failing to control the tongue at the least will suffer for uttering offensive words.
128 தீய வார்த்தை ஒன்றே சொலினும் பகர்ந்தவை அனைத்தும் பாழாகிவிடும்.

Entire discourse turns bad though only single word is ill.

129 தீரா வலியை, ஆறா உளக் காயத்தை நா அடக்கமற்ற சொல் ஏற்படுத்திவிடும்.

Abuse of uncontrolled tongue induces incurable internal pain and scar.
130 அடக்கம், பொறுமை, அறிவுடன் செயப்படும் செயல் உயரிய ஒழுக்கத்துடன் திகழும்.

Performance with self-control, patience and wisdom shall yield the high degree actions of the virtue.

குறிப்புரை

ஒருவருக்கு அறிவாலும், செயலாலும், மாறாது பேணப்படும் அடக்கம் மேன்மையையும், சிறப்பையும் நல்கும். அடக்கமே பேணிக்காக்கப்பட வேண்டிய உயிரின் உயர்வான செல்வம் ஆகும். மனிதரின் நிலை உயரும்பொழுது அடக்கம் மிக அத்தியாவசியமாகின்றது. புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்திச் செயல்பட்டால் காலங்களை விஞ்சி நிற்கும் வெற்றியும், நன்மையும் பயக்கும். ஒருவர் குறைந்த பட்சமாக நாவினை அடக்கியாவது வாழ்ந்தால் சொற் குற்றத்தின் துன்பமிலாது வாழலாம். சொல்லும் வார்த்தைகளில் ஒன்றும் தீதிலாதே, யாருக்கும் தீரா உளக் காயத்தை ஏற்படுத்தும் அடக்கமற்ற, பண்பற்ற வார்த்தையை பேசாது திகழுதல் வேண்டும். அறிவு, அடக்கம், பொறுமை இவற்றுடன் செயல் பட்டால் செய்யும் செயல் உயரிய தரத்துடன் விழங்கும்.

அடங்காமை ஒருவரைக் கீழ்ப்படுத்தும். அடங்கா நாவினால் ஏற்படுத்தும் தீச் சொற்கள் பேசுவதை அனைத்தையும் பாழாக்குவதோடு மட்டுமல்லாமல், தீராக் காயத்தை ஏற்படுத்தி வெறுப்பையும், எதிரிகளையும், துன்பத்தையும் நல்கும். ஒருவரால் அடக்கமிலாதே எந்த நல்ல காரியத்தையும் ஆற்றவோ, ஒழுங்கான உருவாக்கத்தை இயற்றவோ இயலாது.

Message

Unchanged self-control and the humility adopted by sense and deed yields progress and glory. Self-control is the greatest virtue and wealth of the soul and hence to be preserved. When a man grows in social status, the self-control becomes inevitable and more essential. When an action is made with focused mind with controlled senses, it will stand beyond the ages as success and yield eternal glory and goodness. One should at least control the tongue from ill and offensive usage to avoid any afflictions. Uttering words must be pure without any ill notions and controlled not to create any incurable internal hurts to anyone. Deeds performed with self-control, wisdom and patience will excel.

Insubordination, indulgence and haughtiness will make one to subdue. The offensive words uttered by the uncontrolled tongue not only spoils everything delivered but also damages through incurable hurts by which earns only hate, enemies and sufferings. One cannot do any good or create any worthy thing without discipline of self-control.

Thursday, October 29, 2009

திருக்குறள்:130 (அறம் விரும்பும் பொறுமை அழகு...)

அதிகாரம்

: 13

அடக்கமுடைமை

திருக்குறள் : 130

அறம் விரும்பும் பொறுமை அழகு...

In English

கதம் காத்து, கற்று, அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும், ஆற்றின் நுழைந்து.

பொழிப்புரை :
சினம் வாராமற் காத்து, பொறுமையைக் கற்று, அடக்கத்துடன் காரியம் ஆற்றுவான் அழகை, அறமாகிய நல்வொழுக்கம் பார்க்கும், அவனது செயலாற்றலின் [வழி] நுழைந்து.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
சினம் தவிர்த்து, பொறுமை கற்று, அடக்கத்துடன் காரியம் ஆற்றுவானின் எழிலை, அழகை, அறமாகிய நல்லொழுக்கம் அவனது செயலாற்றலின் வழியே நுழைந்து பார்த்து நிற்கும்.

எனவே நல்லறமே வந்து நுழைந்து பார்க்கின்ற அவனது செயலாற்றலால், அவனது செய்கைகள், ஆக்கங்கள் உயரிய தரத்தோடு பரிமளிக்கும். சினம் வாராது, பொறுமையோடு, அடக்கத்தோடு ஆற்றும் காரியம் சிதறாது, பதறாது, நல்லறமே உள்நின்று ஒழுக்கத்தின் மேன்மையோடு நற்செயலாய், நல்வினைப் பொருளாய் வெளிப்படும். எனவே அஃது ஒப்பற்ற திறத்தோடும், நுணுக்கத்தோடும், கலையோடும், அழகோடும், ஆழத்தோடும், ஒழுங்கோடும் திகழும் என்பது உட் பொருள்.

இயலாமைக்கான கோபமன்றி, ஏமாற்றத்திற்கான ஆத்திரமின்றி, விடாது தொடரச் சலிப்பின்றி, திறமைக்கான அகம்பாவமின்றி அடக்கத்துடன் ஆற்றப்படும் நற் காரியத்தை நல்லொழுக்கமாகிய அறமே செயலின் வடிவாய் நுழைந்து கண்டு களிப்புற்று நிற்கும் என்பது செயல் திறனை அத்தகைய ஒப்பற்றதாக இருக்கும் என்று உயர்வுநவிச்சியோடு, கவிதை நயத்தோடு விளக்குகின்றார் வள்ளுவர். திருமகள் நிறைந்து நிற்கும் இல்லம் என்பதேபோல், அறமே வந்து ஆற்றலின் வழி நுழைந்து, கண்டு களிக்கும் உன்னதச் செயல்பாடு என்பது பொருள்.

இக்குறளுக்கு ”தக்க தருணம் பார்த்து அறக்கடவுள் காத்து நிற்கும்” என்பது போன்ற பொருள் அவ்வளவு ஏற்புடையதன்று. சினமற்று, கல்விகற்று, அடக்கத்துடன் பணியாற்றுவானைச் சேர இனி வேறுவொரு ’தக்க தருணம்’ எதுவென்பது ஒருபுறமிருக்க, அறக்கடவுள் அதற்குக் காத்திருப்பார் என்பவையெல்லாம் முற்றிலும் பொருந்தாதவை என்பது எனது தாழ்மையான கருத்து.

குறிப்புரை :
அடக்கம், பொறுமை, அறிவுடன் செயப்படும் செயல் உயரிய ஒழுக்கத்துடன் திகழும்.

அருஞ்சொற் பொருள் :
கதம் - சினம்
செவ்வி - பொருந்திய நேரம், தருணம், அழகு

ஒப்புரை :

திருமந்திரம்: 1880
அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயமது ஆமே.

திருமந்திரம்: 1883
மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன்
மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன்
மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள்
மேலுணுர் வார்சிவன் மெய்யடி யார்களே.

திருமந்திரம்: 1893
துரியங்கள் மூன்று சொருகுஇட னாகி
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே.

திருமந்திரம்: 1913
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.

திருமந்திரம்: 1957
விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.

திருமந்திரம்: 1986
ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்த
னோடே அடங்குகின் றாரே.

திருமந்திரம்: 1987
உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.

திருமந்திரம்: 1988
எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்
எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி
ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே.

திருமந்திரம்: 1989
சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே.

திருமந்திரம்: 2008
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

திருமந்திரம்: 2010
அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே.

திருமந்திரம்: 2316
ஆனைகள் ஐந்தம் அடங்கி அறிவென்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாமே.

திருமந்திரம்: 2318
முன்னை அறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே.

திருமந்திரம்: 2506
முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.

இடைக்காட்டுச் சித்தர் பாடல்:
சித்தத்தோடு கிளத்தல்:
அஞ்ஞானம் போயிற்றுஎன்று தும்பீபற - பர
மானந்தம் கண்டோம் என்று தும்பீபற!
மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற! - மலை
மேலேறிக் கொண்டோம் என்று தும்பீபற!

அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை
ஆணவங்கள் அற்றோமென்றே தும்பீபற!
தொல்லைவினை நீங்கிற்று என்றே தும்பீபற - பரஞ்
சோதியைக் கண்டோம் எனத் தும்பீபற!

ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
அருவே பொருளாமெனத் தும்பீபற!
செம்பொருள்கள் வாய்த்தவனவே தும்பீபற - ஒரு
தெய்வீகங் கண்டோமென்றே தும்பீபற!

மூவாசை விட்டோம் என்றே தும்பீபற - பர
முத்திநிலை சித்தியென்றே தும்பீபற!
தேவாசை வைத்தோம் என்று தும்பீபற - இந்தச்
செகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற!

பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்
பற்றற்றோம் என்றேநீ தும்பீபற!
வாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற - நிறை
வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற!

எப்பொருங் கனவென்றே தும்பீபற - உல
கெல்லாம் அழியுமென்றே த்ம்பீபற!
அப்பிலெழுத் துடல் என்றே தும்பீபற - என்றும்
அழிவில்லாதது ஆதியென்று தும்பீபற!

ஔவையார். ஆத்திச்சூடி:
98. மோகத்தை முனி.

ஔவையார். கொன்றைவேந்தன்:
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

ஔவையார். நல்வழி:
பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு. 35

ஔவையார். மூதுரை:
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30

***

In English:

Chapter : 13

Self-Control

Thirukkural : 130

The virtue loving gracefulness...
In Tamil

katham kAththu, kaRRu, adangal ARRuvAn sevvi
aRam pArkkum, ARRin nuzhainthu.

Meaning :
The virtue peek the gracefulness and seek through the actions of whom that executes with no wrath but learnt patience and self-control.

These explanations contain newer and exclusive messages.

Explanation :
The good virtue peek the gracefulness seeking through the deeds of that who accomplishes them with no anger but with learnt obedience, patience and self-control.

As the good virtue by itself witnesses the actions, his works, performance and accomplishments will be in good quality and outstanding. The action performed with no anger but with patience and self-control does not go scattered and agitated. Instead through the good virtue underneath, it emerges as the good work and useful product. Therefore that can stand out with incomparable quality, class, detail, sharpness, ingenuity, art, grace, depth, neatness and order is the implied meaning.

With no anger for the helplessness; no impatience for chagrin or disappointment; no any frustration and weariness for the perseverance; no haughtiness for the abilities but with self-control and humbleness when the good deed is executed, the good virtue itself enters through and delights by it. Such that is poetically described so by Valluvar to emphasize as incomparable excellent deed. It is just like the wealth of God residing home, the good virtue by itself enters through to enchant the excelling deed is the meaning.

For this Kural, "awaiting for suitable time to enter by the Good virtue" kind of interpretation is not much acceptable one. Apart from the point which would be 'suitable time' to join the anger less, learnt and obediently with self-controlled, the God of good virtue would be waiting is not at all relevant, is my sincere opinion.

Message :
Performance with self-control, patience and wisdom shall yield the high degree actions of the virtue.

***

Wednesday, October 28, 2009

திருக்குறள்: 129 (அடக்கா நா தரும் ஆறாத் தழும்பு...)

அதிகாரம்

: 13

அடக்கமுடைமை

திருக்குறள் : 129

அடக்கா நா தரும் ஆறாத் தழும்பு...

In English

தீயினால் சுட்ட புண் உள் ஆறும்; ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

பொழிப்புரை :
தீயினாற் சுட்ட புண் [வெளியே வடுத் தோன்றினும்] உள்ளே ஆறிவிடும்; [வெளியில் வடுவை உண்டாக்காவிடினும்] உள்ளே ஆறாதே நாவினால் சுட்ட வடு.

விரிவுரை :
தீயினால் உண்டாகிய புண் வெளியில் வடுவைத் தோற்றுவித்தாலும் உள்ளே ஆறிவிடும் தன்மையானது. ஆனால் உடலின் வெளியில் எத்தகைய வடுவையும் உண்டாக்காத நாவினால் சுட்ட வடு, உள்ளே ஆறவே ஆறாது.

நெருப்பால் சுட்டுக் குணப்படுத்தும் நோய்களும் இருத்தலால் அதை நன்மைக்குப் பயன் படுத்திய போழ்தினில் தழும்பை உண்டாக்கிய போழ்திலும் உள்ளே குணப்படுத்தி விடும் என்பதை ஒப்பீடு செய்கின்றார் வள்ளுவர்.

காயத்தை உண்டாக்கிக் காலத்தில் குணமாகிவிடும் தீயினால் சுடுவதைக் காட்டிலும் தீதானது எக்காலத்திலும் ஆறாத காயத்தை உண்டாக்கிவிடும் நாவினால் சுடுவது. நாவினால் சுடுவது மிக எளிது ஆனால் அதன் தீதோ குணப்படுத்த இயலாக் கொடியது. உடல் வலியைக் காட்டிலும், ஆறாத உள வலியைத் தரத்தக்கது. ஆதலினால் நாவை அடக்கி அத்தகைய தீமையைச் செய்யத் தகாது என்பதே இங்குள்ள உட்பொருள்.

எனவே என்றைக்கும் அழியாத உள வலியைத் தரும் நாவால் சுடுவதான பழித்தல், திட்டுதல், வைதல், ஏளனம் செய்தல், வசை பாடுதல், இழியன பகர்தல் என்பவற்றை யார்மேலும் பயன் படுத்தாத நல்லறத்தை ஒழுகுவோமாக.

நா அடக்கம் நல்லதை மட்டுமே பேசும். எனவே தீயினால் சுடவா என்று கேட்கவோ, செய்யவோ முயற்சிக்காதீர்கள். மாறாக எதிரியை, நமக்குத் தீமை செய்தவரை மன்னிக்கவும், மறக்கவும் அவரிடமும் நாவடக்கி இனிய சொல் பேசவும் முயற்சிப்போமாக.

குறிப்புரை :
தீரா வலியை, ஆறா உளக் காயத்தை நா அடக்கமற்ற சொல் ஏற்படுத்திவிடும்.

அருஞ்சொற் பொருள் :
வடு - தழும்பு

ஒப்புரை :

திருமந்திரம்: 1817
உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்
பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி
அத்தனை நீயென்று அடிவைத்தேன் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.

திருமந்திரம்: 1836
பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்குஅரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே.

திருமந்திரம்: 1837
ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று
ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன்
மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே.

திருமந்திரம்: 1862
ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.

திருமந்திரம்: 1864
அழிதகவு இல்லா அரன்அடி யாரைத்
தொழுகை ஞாலத்துத் தூfங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே.

திருமந்திரம்: 1865
பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி
அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே

திருமந்திரம்: 1867
தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே.

திருமந்திரம்: 1874
அகம்படி கின்றநம் ஐயனை ஒரும்
அகம்படி கண்டவர் அல்லலில் சேரார்
அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே.

திருமந்திரம்: 1877
துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே.

திருமந்திரம்: 2130
மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.

திருமந்திரம்: 2194
உடல்இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக்
கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே.

திருமந்திரம்: 2239
ஐஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கியும்
மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபாகத் தேகாண
எய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே.

இடைக்காட்டுச் சித்தர் பாடல்:
அறிவொடு கிளத்தல்:
கட்புலனுக்கு எவ்வளவுங் காணாது இருந்தெங்கும்
உட்புலனாய் நின்றவொன்றை உய்த்தறிநீ புல்லறிவே! (68)

விழித்திலங்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும்
செழித்திலங்கும் ஆன்மாவை தேர்ந்தறிநீ புல்லறிவே (69)

ஔவையார். ஆத்திச்சூடி:
93. மூர்க்கரோடு இணங்கேல்.

ஔவையார். கொன்றைவேந்தன்:
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்

***

In English:

Chapter : 13

Self-Control

Thirukkural : 129

Uncontrolled tongue's incurable scar...
In Tamil

thIyinAl sutta puN uL ARum; ARAthE
nAvinAl sutta vadu.

Meaning :
Fire-burnt sore might get cured internally; but the scar of tongue-burnt never heals.

Explanation :
Though the fire burnt sore might leave scar out but gets healed internally. But the tongue-burnt sore may not create any scar at all but never gets healed internally.

Since there are healing methods by burns for few illnesses, they might leave visible scars but heals internally, therefore Valluvar uses them to compare.

Burning through tongue which never gets cured anytime is worse than that of burning through fire which heals over period of time. It is very easy to burn through tongue but its harsh impact is incurable cruel one. It induces unbearable and incurable pain to the mind than the bodily pains. Therefore one should control the tongue and not fire such evil and a cruel word is the implicit meaning here.

Therefore let us practice the good virtue by not using such tongue burning words of abuses, imprecation, mockery, slander, blame, degrade and improper on any one which otherwise would cause incurable and unbearable scars on them internally.

Controlled tongue will speak only goodness. Therefore please don't ever ask or attempt whether to burn through the fire. Instead learn to forgive and forget the opponent who has done ill to you and try use only pleasant words even to them.

Message :
Abuse of uncontrolled tongue induces incurable internal pain and scar.

***

Tuesday, October 27, 2009

திருக்குறள்: 128 (தீச்சொல் எனும் நஞ்சு...)

அதிகாரம்

: 13

அடக்கமுடைமை

திருக்குறள் : 128

தீச்சொல் எனும் நஞ்சு...

In English

ஒன்றானும் தீச்சொற் பொருட் பயன் உண்டாயின்,
நன்று ஆகாது ஆகிவிடும்.

பொழிப்புரை :
[சொல்லியவற்றுள்] ஒன்றேனும் தீச்சொற்பொருளின் பயனை உண்டாக்கிவிட்டால், [பகன்ற நல்லவை] அனைத்தும் நன்று அல்லது ஆகிவிடும்.

விரிவுரை :
சொல்லிய வார்த்தைகளுள் ஒன்றே ஒன்றாயினும் தீச்சொல்லின் பொருளாகப் பயனை உண்டாக்குமானால், அவர் எவ்வளவுதான் நல்லவை பகன்றிருப்பினும் அனைத்தும் நன்று அல்லதாய் ஆகிவிடும்.

ஆக ஒருவரின் பேச்சு தீச்சொல் ஒன்று கூட இல்லாததாக மட்டுமல்லாமல், சொல்லிய சொற்களுள் ஒன்று கூட மறைமுகமாகத் தீய பொருளையோ, பயனையோ தரத்தக்கதாக இல்லாமல் இருத்தல் அவசியம் என்பது கருத்து.

ஒரு துளி விடம் ஒரு குடத்துப் பாலையும் முறித்துவிடும் என்பதே போல், ஒரு தீய சொல் சொன்னவை அனைத்தையும் நலனற்றதாய் அதாவது தீயதாய் ஆக்கிவிடும்.

தீய சொல் என்பது முழுவதும் கெட்ட வார்த்தை என்பது மட்டுமல்லாமல், தீய பொருளைத் தரும், பயனைத் தரும் என்று அதில் பல பொருட்களைத் ’தீச் சொற் பொருளெனப்’ பொதிய வைத்துள்ளார் வள்ளுவர். அதாவது எதிர்மறையான, நேர்மையற்ற, இணக்கமற்ற, பலவீனப்படுத்தும், பயனற்ற, சுவையற்ற, அமங்கலமான, இனிமையற்ற, ஓசை நயமற்ற, நலனற்ற, பொருளற்ற, குணமற்ற, தெளிவற்ற, அழகற்ற, நளினமற்ற எந்த வார்த்தையும் தீய பொருளையோ, பயனையோ தருவதாகக் கொண்டு அவையும் தீதென்றே கொள்ளப்பட வேண்டுமாம். எனவே அத்தகைய தீயவை ஒரு வார்த்தையும் கலக்காதே பேச்சும், எழுத்தும் அமைதல் வேண்டும் அன்றில் அனைத்தும் தீயதாய்ப் போகிவிடும்.

எனவே சொல்லும் சொற்களில் ஒரு சொல்லும் திரிவுபடாதே, நயமாய், அமைதியாய், நா அடக்க ஒழுக்கத்துடன் திகழ வேண்டும் என்பதே இங்குள்ள மறை பொருள்.

குறிப்புரை :
தீய வார்த்தை ஒன்றே சொலினும் பகர்ந்தவை அனைத்தும் பாழாகிவிடும்.

அருஞ்சொற் பொருள் :


ஒப்புரை :

திருமந்திரம்: 1704
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே.

திருமந்திரம்: 1775
ஒன்றெனக் கண்டோ ம் ஈசன் ஒருவனை
நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ
வென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புற
அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே.

திருமந்திரம்: 1777
மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
ஆவி எழும்அள வன்றே உடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கிற் பரகதி தானே.

திருமந்திரம்: 1778
உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி
கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.

திருமந்திரம்: 1783
கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு
நாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால்
பாடல் உடலினில் பற்றற நீக்கியே
கூடிய தானவ னாம்குளிக் கொண்டே.

திருமந்திரம்: 1784
கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக்
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக்
கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் எனஒன்றும் கூறகி லானே.

திருமந்திரம்: 1799
அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு
அறிவது ஆக்கி அடியருள் நல்கும்
செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே.

திருமந்திரம்: 1800
அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு
அருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.

திருமந்திரம்: 1804
அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலே
அகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு
அகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய்
அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே.

திருமந்திரம்: 1812
நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு
ஆயக் குடிலைகள் நாதம் அடைந்திட்டுப்
போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
வீயத் தகாவிந்து வாக விளையுமே.

திருமந்திரம்: 2109
கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப்
பாடியுளே நின்று பாதம் பணிமின்கள்
ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது ஆமே.

திருமந்திரம்: 2128
உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியாகப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றது ஆரறி வாறே.

இடைக்காட்டுச் சித்தர் பாடல்:
தாண்டவக் கோனார் கூற்று:

மெய்வாய்க்கண் மூக்குச் செவியெனும் ஐந்தாட்டை
வீறுஞ் சுவையொளி யூறோசை யாங்காட்டை
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே (27)

பற்றிரண் டும் அறப் பண்புற்றேன் நண்புற்றேன்
பாலையும் உட்கொண்டேன் மேலயாங் கட்கண்டேன்
சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்
சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன் (28)

ஔவையார். ஆத்திச்சூடி:
83. பெரியாரைத் துணைக் கொள்.

ஔவையார். கொன்றைவேந்தன்:
67. பையச் சென்றால் வையம் தாங்கும்

***

In English:

Chapter : 13

Self-Control

Thirukkural : 128

Ill word, the poison...
In Tamil

onRAnum thIchchoR porut payan uNdAyin,
nanRu AkAthu Akividum.

Meaning :
Though only single word in the utterance is of ill, it makes the entire discourse bad.

Explanation :
Though only single word gives ill meaning in one's uttered good words, all the words whatever be the good they are will turn as bad only.

Therefore speech must be without even a single ill word and also none of the words of speech shall indirectly be mean or ill or offensive in meaning is the point here.

Like one drop of poison can spoil the entire pot of milk, one ill word can spoil the entire speech as useless.

Ill word is not only completely bad but also will yield wrong meaning and usage; that is why Valluvar has used in combining both 'Ill word and meaning' here. That is any words of negative, unethical, incompatible, weakening, useless, tasteless, inauspicious, unpropitious, unpleasing, sweet less, un-rhythmic, worthless, meaningless, quality less, unclear, beauty less and crude will lead to ill meaning, ill usage and therefore to be considered as offensive and ill. Therefore such ill word not being used even once should be the speech and writing; otherwise all will go waste as ill.

Therefore whatever words uttered must be of ethical, pleasant and peaceful, worthy and tongue controlled is the implicit meaning here.

Message :
Entire discourse turns bad though only single word is ill.

***

திருக்குறள்: 127 (அடக்கா நாவால் தொடரும் இடர்கள்...)

அதிகாரம்

: 13

அடக்கமுடைமை

திருக்குறள் : 127

அடக்கா நாவால் தொடரும் இடர்கள்...

In English

யா காவார் ஆயினும், நா காக்க; காவாக்கால்,
சோகாப்பர், சொல் இழுக்குப் பட்டு.

பொழிப்புரை :
எவற்றை [அடக்கிக்] காக்காவிட்டாலும், நாவை [அடக்கிக்] காக்கவும்; [அவ்வாறு அதை அடக்கிக்] காக்காதுவிட்டால், சொல் குற்றத்தில் வயப்பட்டுச் சிறைக்காவல் தண்டனை பெறுவர்.

விரிவுரை :
அடக்கிக் காக்கவேண்டிய ஐம்புலன்களுள் எதை அடக்கிக் காக்காவிட்டாலும் நாவையாவது அவசியம் அடக்கிக் காக்கவும். அவ்வாறு காக்காது போய்விடின் சொற் குற்றம்பட்டுச் சிறைக் காவல்தண்டனை பெறுவர்.

‘சோ’ காப்பர் என்பதற்கு அரணைக் காப்பர் என்பது சரியான பொருள். அதாவது நாவைக் காக்காது சொற்குற்றம் இழைத்தோர், தண்டனைக்குரியவராகிப் பிறகு அரணை அதாவது சிறையில் காப்பர் என்பது பொருள்.

நா அடக்கம் என்பது இங்கே உட்கொள்ளும் உணவுக்கான கட்டுப்பாடைப் பற்றியதல்ல நாவால் பேசும் பேச்சிற்குச் சொல்லப்பட்டது. வாய்க்கு வந்தபடி, நிதானமின்றி, எடுத்தேன் கவிழ்தேன் என்று எதையும் பேசிவிடுதல் கூடாது என்பது உட்பொருள். ஆணவச் சொற்களும், அகந்தைச் சொற்களும் எடுத்தெறிந்து பேசும் தன்மையயும், கேவலப் படுத்தும் தன்மையை வெளிப்படுத்தி இன்னலை விளைவிக்கும். ஒருவரை இழிவு படுத்துவதோ, நக்கல் செய்வதோ, புண்படுத்திப் பேசுவதோ, ஓரம் பேசுவதோ, வஞ்சகம் பேசுவதோ போன்ற சொற்களைப் பயன்படுத்தாது நாவை அடக்கி நல்லனவற்றை மட்டுமே அன்றில் பேசாதிருக்கவோ பழகுதல் வேண்டும்.

ஓட்ட வாயால் தனது நாட்டின் அல்லது தொழிலின், நிறுவனத்தின் ரகசியங்களைப் பேசுதல் போன்ற தேவையற்ற வரம்பற்ற பேச்சால் எதிரிக்கு அன்றில் போட்டியாளருக்கு உதவி அதன் பயனாய்ச் சிறை போலும் கடும் தண்டனை அனுபவிக்க வேண்டியும் வரலாம். எனவே நாவினைக் காக்க.

எப்போதும் நிதானித்துச் சிந்தித்து அளவோடு தேவையானதை மட்டுமே பேசுக. வார்த்தைகளை அரு மருந்தே போலும், செலாவணியைப் போலும் எண்ணிச் செலவு செய்தல் வேண்டும். பேசாத பேச்சிற்கு நாம் எஜமானர்கள். பேசிய பேச்சு நமக்கு எஜமானர்கள். காரியவாதிகள் பெரும்பாலும் அதிகம் பேசுவதில்லை என்பதைக் கவனியுங்கள்.

எனவே தேவையான இடத்தில், தேவையான அளவில் மட்டுமே பேசும்பழக்கத்தையும், நாவை அடக்கி நல்லவற்றையும், பயனுள்ளவற்றை மட்டுமே பேசவும் பழகுவோமாக.

குறிப்புரை :
குறைந்த பட்ச நாவடக்கத்தையாவது ஒருவர் மேற்கொள்ளத் தவறினால் சொற் குற்றத்தால் துன்புறுவர்.

அருஞ்சொற் பொருள் :
யா - எவற்றையும், எதையும்
நா - நாவினை
சோ - அரண், கோட்டை

ஒப்புரை :

திருமந்திரம்: 1697
சத்தும் அசத்துமெவ் வாறெனத் தானுன்னிச்
சித்தை யுருக்கிக் சிவனருள் கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச்
சத்தியில் இச்சை தகுவோன்சற் சீடனே.

திருமந்திரம்: 1723
அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
உகலிட மாய்நின்ற ஊனதன் உள்ளே
பகலிட மாம்முனம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் தானே.

திருமந்திரம்: 1729
கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே.

திருமந்திரம்: 1735
நடுவு கிழக்குத் தெற்குஉத் தரமேற்கு
நடுவு படிகநற் குங்குமவன்னம்
அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே.

திருமந்திரம்: 1736
அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள
அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள
அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.

திருமந்திரம்: 1740
இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனே.

திருமந்திரம்: 1748
உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே.

திருமந்திரம்: 1767
ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.

திருமந்திரம்: 1768
சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபதம் தோயாத தூவொளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்
ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே.

திருமந்திரம்: 2091
ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத்
தீர வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.

திருமந்திரம்: 2094
நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர்
நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும்
துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில்
அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே.

திருமந்திரம்: 2014
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.

இடைக்காட்டுச் சித்தர் பாடல்:
மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக் கோனே! முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக் கோனே! (13)

சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக் கோனே! யாவுஞ்
சித்தியென்றே நினையேடா தாண்டவக் கோனே! (14)

ஓசையுள் அடங்கு முன்னம் தாண்டவக் கோனே! மூல
ஓங்காரங் கண்டறி நீ தாண்டவக் கோனே! (16)

பத்திரகிரியார். மெய்ஞானப் புலம்பல்:
ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகாமுன்
காணுதலால் இன்பமற்றுக் கண்டறிவது எக்காலம்? (106)

மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை
நிர்மலமாய்க் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம் (107)

நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம்
தான் என்ரு நீ இருந்ததனை அறிவது எக்காலம்? (118)

சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்? (137)

பொன்னில் பல விதமாம் பூஷணம் உண்டானதுபோல்
உன்னில் பிறந்து உன்னில் ஒடுங்குவதும் எக்காலம் (169)

மின் எழுந்து மின் ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்
என்னுள் நின்றது என்னுள்ளே யான் அறிவது எக்காலம் (176)

தான் என்ற ஆணவமும் தத்துஅமும் கெட்டொழிந்தே
ஏன் என்ற பேச்சும் இலாது இலங்குவதும் எக்காலம்? (219)

நான் அவனாய்க் காண்பதெல்லாம் ஞானவி ழியால் அறிந்து
தான் அவனாய் நின்று சரண் அடைவது எக்காலம்? (220)

தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவில்
ஆனந்தம் கண்டே அமர்ந்திருப்பது எக்காலம்? (221)

சிவவாக்கியர்:
நீங்குமைம் புலன்களும் நிறைந்த வல் வினைகளும்
ஆங்காரமாம் ஆசையும் அருந்தடர்ந்த பாவமும்
ஓங்காரத்தின் உள்ளிருந்த ஒன்பதொழிந் தொன்றிலத்
தூங்கஈசர் சொற்படி துணிண்டிருக்க சுத்தமே. (452)

ஔவையார். ஆத்திச்சூடி:
75. நொய்ய உரையேல்.

ஔவையார். கொன்றைவேந்தன்:
80. மோனம் என்பது ஞான வரம்பு

ஔவையார். மூதுரை:
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால். 18

***

In English:

Chapter : 13

Self-Control

Thirukkural : 127

Uncontrolled tongue yields distress...
In Tamil

yA kAvAr Ayinum, nA kAkka; kAvAkkAl,
sOkAppar, sol izhukkup pattu.

Meaning :
Control the tongue at the least in senses; otherwise one shall end up in distress for offensive utterances.

Explanation :
Though not controlling any one of the senses which have got to be controlled, control at the least the tongue. If it is not controlled, by offensive utterances one has to undergo and serve in prison.

The correct meaning of word 'so' in Tamil is guard in protection. That means when one not controlling the tongue abuses or uses impropriety words, will get punished and has to serve in prison.

Controlling the tongue here means not of controlling the intake of food but is about its delivery. Therefore here the implied meaning is that not to talk loosely or improperly or recklessly. The words spoken in harsh, arrogance, haughtiness, insolent and mockery will lead to troubles. One should learn and practice to control the tongue not to ridicule, mock, hurt, corner or wily at others but to speak only goodness; or not to speak at all.

By loose talk, one may speak unnecessarily and uncontrollably on the secrets of the country or business or organization helping the opponent and thus end up in punishments such as serving in jail. Therefore control the tongue.

Always think in composure and speak only the necessary within the limits. Spend the words cautiously like a medicine or the currency. We are the bosses for the unspoken words; spoken words are the bosses for us. Note that all successful people speak only less.

Therefore let us learn to control our tongue and speak only the good and useful; and learn to speak only the necessary and befitting at the right place.

Message :
Failing to control the tongue at the least will suffer for uttering offensive words.

***

Sunday, October 25, 2009

திருக்குறள்: 126 (ஒருமுகப் படுத்தும் அடக்கம்...)

அதிகாரம்

: 13

அடக்கமுடைமை

திருக்குறள் : 126

ஒருமுகப் படுத்தும் அடக்கம்...

In English

ஒருமையுள், ஆமைபோல், ஐந்து அடக்கல் ஆற்றின்,
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

பொழிப்புரை :
ஒருமுகப்பட்ட நிலையில், ஐந்து உறுப்புக்களை ஓட்டினுள் அடக்கும் ஆமை போன்று, ஐம்புலன்களை அடக்கிச் செயலாற்றினால், [அஃது] ஏழ் பிறவிக்கும் அரணாய்க் காத்து நிற்கும் தன்மை உடைத்து.

விரிவுரை :
தனது ஓட்டினுள் கால்கள், மற்றும் தலை ஆகிய ஐந்து உறுப்புக்களையும் அடக்கும் ஆமையைப் போன்று, தனது ஐம்புலன்களையும் ஒருமுகப்பட்ட மனத்தினுள் அடக்கிச் செயலாற்றின், அஃது ஏழ் பிறவிக்கும் அரணாய்க் காத்து நிற்கும் தன்மை கொண்டது.

ஐம்புலன் உணர்வுகளை தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு ஒருமுகப்பட்ட நிலையைக் கொண்டு தமது செயலாற்றினால் எதிலும் வெற்றி என்பது நிச்சயமே. ஆகவே அடக்கம் என்பதன் முக்கிய நோக்கம் மற்றும் பயன் என்பது மனம் ஒருமுகப்பட்டுச் செயல்பட வேண்டுமென்பதே இக்குறளின் முக்கிய உட்கருத்து.

மன அடக்கத்தோடு, புலன் அடகத்தோடு, ஒருமுகப்பட்டுச் செய்யும் செயலின் வெற்றி காலா காலத்திற்கும் காத்து நிற்கும் தன்மை உடையது என்பதற்கு ‘திருக்குறளைக்’ காட்டிலும் வேறு உதாரணம் தேவையா? திருக்குறளின் வெற்றி, திருவள்ளுவரின் பெயருக்கும், புகழுக்கும் என்றென்றும் கட்டியம் கூறிக் காத்து நிற்பது அவர் அடக்கத்துடன் செயலாற்றிச் செய்வித்ததன் பயன் தானே?

அடக்கமின்றி, ஆரவாரங்களோடு செய்யப்படும் செயல் எதிலும் ஆழம் இருப்பதில்லை; வெறும் மேல் பூச்சாக மட்டுமே அவற்றால் விளங்க இயலும். அடக்கம் தரும் மன அமைதியிலேயே ஆழப்படுதல் சாத்தியம். அத்தகைய நிலையில் மன ஒருமைப் பட்டுச் செயலாற்றும் போது, செயலின் ஆழமும் வீரியமும் வெற்றியும் காலங்களை விஞ்சி நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இது அனைத்து உளவியலாளர்களும் கூறும் உண்மைதானே. எனவே வள்ளுவர் ஓர் தலை சிறந்த உளவியலாளர் என்பதற்கு இக்குறளும் உதாரணம்.

குறிப்புரை :
புலன்களை அடக்கி ஒருமுகப்பட்டு ஆற்றப்படும் செயல் காலங்களை விஞ்சி நின்று நன்மை பயக்கும்.

அருஞ்சொற் பொருள் :
ஒருமை - ஒருமுகப்பட்ட நிலை
ஏமாப்பு - பாதுகாவல், அரண், ஆதரவு, செருக்கு, இறுமாப்பு

ஒப்புரை :

திருமந்திரம்: 133.
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே.

திருமந்திரம்: 2158
ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும்
ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம்அறி யோமே.

திருமந்திரம்: 1581
குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே. 9

திருமந்திரம்: 1602
வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே. 13

திருமந்திரம்: 1603
அடிசார லாம்அண்ண ல்பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே. 14

திருமந்திரம்: 1604
மந்திரமாவதும் மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே. 15

திருமந்திரம்: 1639
ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் னெனும்பதஞ்
சத்தான செய்வது தான்தவந் தானே. 7

திருமந்திரம்: 1672
அடியா ரவரே யடியா ரலாதார்
அடியாரு மாகார்அவ் வேடமு மாகார்
அடியார் சிவஞான மானது பெற்றோர்
அடியா ரலாதார் அடியார்கள் அன்றே. 5

திருமந்திரம்: 1674
ஞானத்தின் னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்த தனியால யத்தனாம்
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே. 7

திருமந்திரம்: 1675
தானன்ற தன்மையுந் தானவ னாதலும்
ஏனைய வச்சிவ மான இயற்கையுந்
தானுறு சாதக முத்திரை சாத்தலு
மேனமும் நந்தி பதமுத்தி பெற்றதே. 8

திருமந்திரம்: 2088
நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்
என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவுஎன்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே. 5

திருமந்திரம்: 2090
பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. 7

பத்திரகிரியார். மெய்ஞானப் புலம்பல்:
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? (1)
...
வரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்? (19)
...

பாம்பாட்டி சித்தர் பாடல்:
எள்ளில் எண்ணெய் போலவுயிர் எங்கும் நிறைந்த
ஈசன்பத வாசமலர் எண்ணி யெண்ணியே
உள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவே
ஒடுங்கி யடங்கித் தெளிந்து ஆடுபாம்பே (4)
...
அங்கையிற் கண்ணாடிபோல் ஆதி வந்துவை
அறிவிக்கும் எங்கள் உயிரான குருவைச்
சங்கையறச் சந்ததமும் தாழ்ந்து பணிந்தே
தமனியப் படம் எடுத்து ஆடு பாம்பே (14)
...
அட்ட திக்கும் அண்ட வெளியான விடமும்
அடக்கிய குளிகையோடு ஆடி விரைவாய்
வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின்
மலரடி தஞ்சம் என்று ஆடு பாம்பே (17)
...
தாமரையின் இலையிலே தண்ணீர் தங்காத
தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும்
தூமணியாய் விளங்கிய சோதி பதத்தைத்
தொழுது தொழுது தொழுது ஆடு பாம்பே (70)
...
ஆசையென்னுஞ் செருப்பின் மேல் அடியை வைத்தே
ஆங்கார முட்காட்டை அறவே மித்தித்தே
காசையெனுந் துர்க்குணத்தில் கனலைக் கொளுத்திக்
காலாகாலங் கடந்தோம் என்று ஆடு பாம்பே (79)
...
தன்னையறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்;
தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்;
பின்னை யொரு கடவுளைப் பேண நினையார்;
பேரொளியைப் பேணுவார் என்று ஆடு பாம்பே (95)

சிவவாக்கியர்:
ஓடுகின்ற ஐம்புலன் ஒடுஙாஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற கண்டித குணங்கள்மூன் றெழுத்துளே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே. (319)

ஔவையார். ஆத்திச்சூடி:
67. நாடு ஒப்பன செய்.

ஔவையார். கொன்றைவேந்தன்:
63. புலையும் கொலையும் களவும் தவிர்

ஔவையார். மூதுரை:
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். 24

***

In English:

Chapter : 13

Self-Control

Thirukkural : 126

Focused self-control...
In Tamil

orumaiyuL, AmaipOl, ainthu adakkal ARRin,
ezhumaiyum EmAppu udaiththu.

Meaning :
The actions by one who focuses single mindedly, like the tortoise which controls its five body parts within its shell, controlling all five senses within oneself, shall stand as the protection for seven births.

Explanation :
Like the tortoise which controls its head and legs into its shell, that who controls all his five senses within the focused single minded self and works that will stand as the glory of guard for seven births.

When senses are controlled within self and work with single minded focus, the success is certain in anything. Therefore the purpose and importance of the self-control is to focus single mindedly is the implied meaning here.

For the success of focused single minded work, having controlled the mind and senses, which is standing as the outstanding guard for all the ages, do we require any example beyond 'Thirukkural' itself? The success of Thirukkural, guarding the fame and name of Thiruvalluvar panegyric forever, is it not because of his self-controlled dedicated accomplishment?

Any work done with indulgence, clamor and pomp will not be a deep one; that can only be just superficial. It is possible to deepen only by the peace achieved through the self mind-control. Such state of working with focused mind only can produce the accomplishments with the vigor, depth and success which can with stand any period of time is of no doubt. This is the truth uttered and assured by all psychologists as well. Hence this Kural is one of the examples to say Valluvar is a great psychologist.

Message :
Actions of focused mind with controlled senses will stand beyond ages providing goodness.

***