|
| |
| |
பொழிப்புரை : | |
தீயவை செய்தாருக்கான கெடுதல், தன் காலடிக் கீழ் மறையாது தங்கித் தொடரும் நிழலைப் போன்றது. | |
| |
விரிவுரை : | |
தீயவற்றைச் செய்தவருக்கான கெடுதல் என்பது அவர்தம் காலடியின் கீழ் அழியாது தொடரும் நிழலைப் போன்றது. ஒளியிருக்கும் வரையில் நிழலும் தோன்றும். அதைப் போன்றே வாழ்வு இருக்கும் வரையிலும் செய்த தீவினைப் பாவம் அழியாதே தொடர்ந்து வருமாம். மனிதருக்கு வாழ்க்கை முழுவதும் காசில்லாமல் இயற்கையாகவே இலவசமாகக் கூடவே வருவது நிழலும், கவலையும் தான். அவை சில நேரங்களில் மறைந்தாலும் மீண்டும் ஒளியில் இருளாகத் தோன்றத்தானே செய்கின்றன. உன்னை விட்டுப் போகமாட்டேன் எனக் காலுக்கடியில் அடம்பிடித்துச் சுற்றிக் கொண்டு நிற்கும் நிழலைப் போல, கர்மா எனும் பாவ வினைகள் வாழ்வைச் சுற்றிக் கொண்டு வெளிச்சம் பெறும் போதெல்லாம் கூடவே அவ்வப்போது இருளாய் வெளிப்பட்டு இடராய், நினைவாய், எதிர் வினையாற்றும் துயராய்த் துன்பமாய் தோன்றி நிற்கும். இவை ஒருவர் மரிக்கின்ற வரையிலும் பூரணமாய் ஒரு போதும் மறைவதே இல்லை. ஆதலின் ஒருவர் தீவினையைச் செய்யாதே ஒழுகி நடந்தால் இவ்விதமான தொடர் இடர் வாராது என்பது இக்குறளின் மறை பொருள். முன் செய்த வினைகள் நம்மைத் தொடருவதை நாம் ஒன்றும் செய்ய இயலாது. ஏனென்றால் அவை ஏற்கனவே செய்துவிட்ட நிகழ்ந்து முடிந்த, இனித் திருத்த முடியாத நிகழ்வுகள். ஆனால் நடக்கும் நிகழ்வுகளை நாம் சரிவரச் செய்யலாமே. எனவே பிற்பாடு பாதகம் தாரா வகையில் தீவினைகளை அகற்றி நல்ல வினைகளை மேற் கொண்டு வாழுதலே அறிவுடைமை. எனவே எப்போதும் நல்லவற்றையே எண்ணுவோம்; நல்லவற்றையே செய்வோமாக. | |
| |
குறிப்புரை : | |
தீவினையால் வரும் கெடுதல் என்பது அடங்காது வரும் அவர் தம் நிழலைப் போன்றே ஒருவரை எப்போதும் தொடர்ந்து பற்றி நிற்கும். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
வீயாது - அழியாது, நீங்காது, இறக்காது, மாறாது, ஓயாது, ஒழியாது அடி - பாதம், மூலம், அடிப்பீடம், காலடி உறை - தங்கு, தேங்கு | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 751 ஓவிய மான வுணர்வை அறிமின்கள் பாவிக ளித்தின் பயனறி வாரில்லை தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும் பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே திருமந்திரம்: 752 தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு மண்டல மூன்று மகிழ்ந்துடல் ஒத்திடுங் கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன் பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே திருமந்திரம்: 753 பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ அணங்குட னாதித்த னாறு விரியின் வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே திருவாசகம்: 5. திருச்சதகம் (திருப்பெருந்துறையில் அருளியது) 1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை) தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன் அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம் சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே. 9 பட்டினத்தார். பொது: 33 ஏதப்பட்டாய் இனி மேற்படும் பாட்டைஇ தென்றறிந்து போதப்பட்டாயில்லை நல்லோரிடம் சென்று; புல் லறிவால் வாதைப்பட்டாய்; மட மானார் கலவி மயக்கத்திலே பேதப்பட்டாய்; நெஞ்சமே! உனைப்போல் இல்லை பித்தருமே! ஔவையார். ஆத்திசூடி: 72. நேர்பட வொழுகு. ஔவையார். கொன்றை வேந்தன்: 73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது (மாலுமி) ஔவையார். நல்வழி: ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம் உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர் பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு. 12 ஔவையார். நல்வழி: ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்? மெய் அம்புவி அதன் மேல். 13 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
The evil for the sinners is like their own shadow resting at their foot, stays and continues for ever. | |
| |
Explanation : | |
The evil and affliction for those who have committed evil deeds is like their own shadow dwelling at their own foot, never leaves but persists forever. | |
| |
Message : | |
The evil which comes for one for the evil deeds made is like one's shadow persists at one's own foot, remains and continues perpetually. | |
| |
*** |
1 comments:
Lucky Club Lucky Club Casino site for players of skill - Live
Lucky Club is a virtual gaming website that provides sports betting tips for luckyclub.live virtual sports. The site is the most popular place in the industry with over
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...