|
| |
| |
பொழிப்புரை : | |
[தான் பொருள் ஏதும்] இலாதவன் என்று [பிறர் பால்] தீயவற்றைச் செய்யாதீர். செய்தால் ஏதும் இலாதவனாகவே ஆக்கப் படுவீர் - மறுபடியும் [இருக்கும்] நிலை விலகி. | |
| |
விரிவுரை : | |
தாம் பொருள் ஏதுமற்றவன் என்று பிறருக்குத் தீயவற்றைச் செய்யாதீர். அவ்வாறு செய்தால் தமது இப்போதைய நிலையும் விலகி அனைத்திலும் இன்னும் ஏதுமிலாதவராகவே ஆக்கப் படுவீர். கேடு செய்வதற்குச் சொல்லப்படும் காரணங்களுள் முக்கியமானவை பொறாமையும் இல்லாமையும். அதாவது தன்னிடம் ஏதுமில்லை என்பதனால் பொல்லாங்கு செய்வது. அத்தகைய “ஏதுமில்லை” என்ற எண்ணத்தோடு ஒருவர் தீங்கு செய்யச் செய்ய அவருக்கு இல்லாமையே மீண்டும் மீண்டும் மேவி வரும். பொருளில் வறியவர் என்கின்ற மாறுபடும் சூழ்நிலை உண்மையை உணராது, வறுமையே தனது நிலை என்று ஆழ்நிலை எண்ணமாக்கிக் கொண்டால் அஃது ஒருவரை எப்போதும் எல்லாவற்றிலும் ஏதுமில்லாதவராகவே ஆக்கி விடும். ஆழ்மன எண்ணங்களுக்கு நல்லவை, கெட்டவை என்று தேர்வு செய்யும் திறமோ, நேர்மறை, எதிர்மறைப் பேதமோ இல்லை. அதில் எண்ணியவையே அடிப்படைக் காரணிகளாகி வாழ்வின் அனைத்துக் கூறுகளிலிலும் பிரதிபலித்து உண்மையில் வாழ்வாகவே ஆக்கி விடும். அதைப் போன்றே காரணங்கள் யாதேயாகினும் பிறருக்குச் செய்தவை தமக்கே பன் மடங்கில் விளையும் என்பதும் இயற்கையின் நிருபிக்கப்பட்ட நடைமுறை விதி. ஆதலின் பிறருக்குச் செய்யும் தீய துன்பம் அவருக்குத் தீமை விளைவிக்கிறதோ இல்லையோ தனக்கு நிச்சயமாகப் பலனை பிற்பாடு மறக்காது பன் மடங்கில் வழங்கிவிடும். வினையை விதைத்தவரே வினையை அறுப்பர். மேலும் பொருள் ஏதுமற்ற அல்லது வறியோன் என்ற நிலையில் செய்யப் பெறும் தீதானது என்பதால் அதற்கு விதி விலக்கு ஏதும் இல்லை. பசிக்குத் திருடினாலும் திருடுதல் பாவமே. அத் தீயவை எப்போதும் நன்றென்று ஆகி விடாது. பிறருக்குச் செய்யும் தீமையால் தமக்கோ பிறருக்கோ எந்தவித நன்மையும் உண்டாகப் போவதும் இல்லை. தீமை செய்வதற்குச் சொல்லப்படும் அல்லது அடிப்படையில் எண்ணப்பட்ட காரணம் எண்ணியவருக்கே பன் மடங்கில் பலனைத் தரும், சார்ந்து நிற்கும் என்பதே இக்குறளின் உட் பொருள். ஆகப் பிறருக்குத் தீமை செய்வதால் இலாபம் என்பது ஏதுமில்லை மாறாகத் தனக்கே பன்மடங்கில் நட்டம் என்பதே உண்மை. ஏதுமற்ற நிலையிலும் எண்ணும் நல் எண்ணங்கள், பிறருக்குச் செய்யும் உதவி, பொது நலனிற்குச் செய்யும் நற் காரியங்கள், ஒருவரின் இல்லாமை எனும் நிலையை நிச்சயமாகப் போக்கி விடும். இதையே அவருக்கு “மனம்போல் வாழ்வு” என்றும் கூறுவதுண்டு. உண்மையில் ஒருவருக்கு நல் எண்ணங்கள் தோன்றத் தோன்ற அவரது எண்ணத்தில் பொருளாதார நிலை ஒரு பொருட்டே ஆகாது. ஒருவர் நற் காரியங்கள் செய்ய எண்ணி ஆழ்மனத்தில் திடப்பட்டு விட்டால் அதை நிறைவேற்ற வழிகளும், வசதிகளும் தாமாகவே தோன்றிவிடும். ஆக எதை ஆழ்ந்து நினைக்கிறோமோ, எண்ணுகின்றோமோ, பிறர்பால் செய்கின்றோமோ அவையே பன்மடங்கில் பெருகி நம்மைச் சாரும். ஆதலின் தீயவற்றை ஏழ்மையின் காரணமாகவோ வேறு எக்காரணம் கொண்டோ செய்தல் ஆகாது என்பது ஒன்று. மற்றது ‘நல்லதை’ எண்ணும் எண்ணத்தினால் ‘இல்லாமை’ என்னும் நிலை பெயர்ந்து நன்மைகள் நிறைக்கப்படும் என்பதும் இக்குறளின் மறை பொருள். | |
| |
குறிப்புரை : | |
வறுமையால் தீங்கு செய்தல் ஆகாது. அவ்வாறு செய்யின் தமது நிலை விலகித் தாழ்ந்து மீண்டும் அனைத்திலும் தீவிர வறுமையே மேவும். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
இலன் - இல்லாதவன், ஏழ்மையன், வறியவன் பெயர்த்து - நிலைவிலகு, திருப்பு, புரட்சி, புரட்டு, மீளுதல், திரும்பல், போதல், வேறுபடல், நகர்த்து, அசைத்து, மேலும், பின்னும் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 463 ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப் பழிபல செய்கின்ற பாசக் கருவைச் சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே திருமந்திரம்: 509 உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனமுடைக் கல்வியி லோரே. திருமந்திரம்: 511 உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக் கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப் பள்ளத்தல் இட்டதோர் பத்துள் ளாமே. திருவாசகம்: 4. போற்றித் திருஅகவல் : (தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா) யானை முதலா எறும்பு ஈறாய ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும் மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20 பட்டினத்தார். பொது: 5 கண்ணுண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப் பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப் பல்பச்சிலையா. எண்ணுண்டு சாத்த எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே மண்ணுண்டு போகுதை யோ! கெடுவீர் இந்த மானுடமே! ஔவையார். ஆத்திசூடி: 57. தீவினை யகற்று. ஔவையார். கொன்றை வேந்தன்: 67. பையச் சென்றால் வையம் தாங்கும் ஔவையார். மூதுரை: மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகி விடும். 12 ஔவையார். நல்வழி: எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல் பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. 7 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Perpetrate not the evil to others due to self poverty. If you do so, you will become poorer yet from your current status. | |
| |
Explanation : | |
Never commit evil deeds to others due to your impoverishment. If you do so then you will become yet poorer from your current status in everything. | |
| |
Message : | |
One shall never do evil deeds due to poverty. If one does so then shall go yet down from the current status into greater impoverishments in everything. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...