|
| |
| |
பொழிப்புரை : | |
மறந்தும் [கூட] பிறன் கேடு அடையச் சூழ்ச்சி செய்யாதீர்! [அவ்வாறு] சூழ்ச்சி செய்தால், [நல்] அறம் சூழ்ச்சி செய்து விடும்; சூழ்ச்சி செய்தவன் கேடு பெற. | |
| |
விரிவுரை : | |
மறந்தும் பிறர் கேடு அடையச் சூட்சி செய்யாதீர். அவ்வாறு சூட்சி செய்தால், சூட்சி செய்தவன் கேடு அடைய நல் அறம் சூட்சி செய்து விடும். நல் அறம் என்பது மறைப் பொருளாக, தெய்வீக சக்தியாக, நம்பிக்கைகளின் உருவகமாக, இயற்கையின் இயக்கச் சக்தியாக இங்கே உருவகிக்கப் பட்டுள்ளது. ஆதலின் அத்தகைய நல் அறச் சக்தி, ‘கேடு நினைப்பவன் கெட்டுப் போகும்படி’ செய்து விடும். ஒருவனுக்குக் கெட்ட எண்ணமானது பீடித்த உடனேயே நல்லறம் அவனை விட்டு நீங்கி விடுவதோடு மட்டுமல்லாது அவனெண்ணும் கெட்ட எண்ணங்களை அவனுக்கே முதலில் நல்கும் படி சூட்சியைத் துவங்கி விடுகின்றதாம். உயிர்களாகிய நாம் இயற்கை எனும் மாபெரும் சக்தியின், பரம் பொருளின் அங்கங்களே. அம் மாபெரும் காந்த சக்தியின் சிறு துகள்களே. எனவே அத்தகைய துகள்களாகிய நாம் ஒருங்கிணைந்து, நல் எண்ணம் எனும் ஒரு முகத்தோடு ஒன்றிப் பயணித்தால் மாத்திரமே இயற்கையின் மொத்த ஆற்றலின் பலன்களிலும் பங்கு பெற இயலும். அவ்வாறு நல்லெண்ணத்தோடும், நல் ஒழுக்கத்தோடும் திகழ்ந்தால்தான் அனைத்து வழிகளிலும் சாத்தியங்கள் நிகழும். எதிர்வினையாற்றுவதும், எதிர் மறை எண்ணங்களும் இயற்கைச் சக்தியின் இயல்பான ஈர்ப்புக்கு எதிரானவை. எனவே அவை நல்ல பலன்களையும், இசைவுச் சக்தியைத் தராமலிருப்பது மாத்திரமல்ல, எதிர் சக்தியையும், தடங்கலையும், எதிர் விளைவுகளையும் மாத்திரமே விளைவிக்கும். கேடு செய்ய நினைக்கும் எண்ணங்களும், திட்டங்களும், சூட்சிகளும், செயல்களும் எதிர் மறையானவை. எனவே அஃது கெட்ட பலன்களையே பன் மடங்கில் விளைவிக்கும். எண்ணிய எண்ணியாங்கு எய்துப - எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின். (குறள்:666 ) என்பது கெட்ட எண்ணத்திற்கும் தான். மனிதர்கள் எண்ணும் எண்ணங்கள் ஆழ்மனத்தில் நல்லவை, கெட்டவை என்ற பாகு பாடின்றி விதைக்கப் பெற்று அவையே வாழ்வாகின்றது. மனிதர்கள் அவரவர் எண்ணியதையே பெறுகின்றார்கள் என்பது உளவியல் உண்மை. வினை விதைத்தவனே வினையை அறுப்பான். ஆதலாலும் பிறர் கெட எண்ணுகின்றவன் தானே கெட்டொழிவான் என்பதே இயற்கை விதி. எனவே மறந்தும் பிறருக்குக் கெடுதல் விளைவிக்க எண்ணுதல் கூடாது என்பது இக் குறளின் கருத்து. நல்லெண்ணங்களே நன்மைகளை விளைவித்து ஒருவரை முன்னுக்கு எடுத்துச் செல்லும். ஆகவேதான் எப்போதும் நேர்மறை மற்றும் நல்லெண்ணங்களே கொண்டு திகழ வேண்டும் என்பது அவசியம் என்று நன்னூல்களும், பெரியோர்களும், சாதனையாளர்களும் வலியுறுத்திக் கூறுகின்றார்கள். ஆக நல் வாழ்வு வேண்டுமாயின் வாழ்வில் மறந்தும் பிறருக்குக் கேட்டை எண்ணாதீர். | |
| |
குறிப்புரை : | |
தலையாய அறிவென்பது தமக்குத் தீயவை செய்தவருக்கும் கூடத் தீமை செய்யாது இருத்தலே. | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
சூழ் - சூழ்ச்சி செய், கூடிச் சதி செய், ஆராய், கலந்தாராய், எண்ணு, உருவாக்கு, செய், வரை, திட்டமிடு, ஆலோசனை, கலந்தாய்வு, ஆராய்ச்சி, சுற்று, போர்த்து, உறையிடு, சுற்றி மொய், சுற்றியமை, மூடு, கவி | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 313 கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன் கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின் வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள் கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே. திருமந்திரம்: 314 நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார் கல்லா மனித்தர் கயவர் உலகினில் பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. திருமந்திரம்: 430 தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனை மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு காயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர் ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே திருவாசகம்: 1. சிவபுராணம் : போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 பட்டினத்தார். கைலாயம்: 3 சினந்தனை யற்றுப் பிரியமும் தான் அற்றுச் செய்கையற்று நினைந்ததும் அற்று, நினையா மையுமற்று, நிர்சிந்தனாய்த் தனந்தனி யேயிருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற அனந்தலில் என்றிருப்பேன் அத்தனே! கயிலாயத்தனே! ஔவையார். ஆத்திசூடி: 42. கோதாட் டொழி. (பாவத்தை) ஔவையார். கொன்றை வேந்தன்: 63. புலையும் கொலையும் களவும் தவிர் ஔவையார். மூதுரை: நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. 10 ஔவையார். நல்வழி: உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம் கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக் கடல் ஓடி மீண்டு கரையேறினால் என் உடலோடு வாழும் உயிர்க்கு. 6 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Even by mistake plot not the ruin for another. Thus If plotted so the Good virtue will plot the ruin for the plotter. | |
| |
Explanation : | |
Even by mistake never plot on another to get ruined. If plotted so, the good virtue plots on the plotter to get ruined. | |
| |
Message : | |
Never plot ruin for others; Aware that If plotted so the ruin is only for the self. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...