Monday, November 30, 2009

திருக்குறள்:153 (வலிமையுள்ளும் வலிமை பொறுமை...)

அதிகாரம்

: 16

பொறையுடைமை

திருக்குறள் : 153

வலிமையுள்ளும் வலிமை பொறுமை...

In English

இன்மையுள் இன்மை விருந்து ஒரால், வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

பொழிப்புரை :
வறுமையுள்ளும் வறுமை விருந்தினரை வரவேற்க மறுத்தல்; வலிமையுள்ளும் வலிமை அறிவிலாரைப் பொறுத்தல்.

விரிவுரை :
வறுமையுள்ளும் வறுமை என்பது விருந்தினரைப் பேண இயலாமை. அதைப் போன்று வலிமையுள்ளும் வலிமை என்பது அறிவில்லாதவரின் செயல்களைச் சகித்துக் கொள்ளும் பொறுமை.

வறுமை என்னும் தமக்கு இல்லாமை கூட வருந்தத்தக்கதல்ல. அதினிலும் கொடுமையான வறுமையானது அவ்வமயம் வரும் விருந்தினரை வரவேற்று உபசரித்துப் பேண இயலாமையே. இதன் மூலம் ஒப்புமையின் முக்கியத்துவத்தைக் காட்டிலும் விருந்தினரை உபசரிக்க இயலாமையின் அவலத்தையே பெரிய வறுமை என்றாயிற்று.

அதே போலும் பொறுமை என்பதே பொறுத்துக் கொள்ளும் வலிமைதான் என்பது தெளிவு. அதிலும் அறிவிலாரின் பிதற்றலை, அர்த்தமற்ற பேச்சை, முட்டாள்தனமான செயலை ஏளனமின்றி, விருப்பு, வெறுப்பின்றி, வேதனையின்றி, கேவலமாகக் கருதாது கருணையுடன் பொறுத்தல் என்பது மிகப் பெரிய பொறுமை. எனவே அதுவே வலிமையுள்ளும் மிக்க வலிமையாகும் என்கின்றார்.

வறுமையையும், பொறுமையையும், வலிமையையும் ஒரே குறளில் ஒப்பு உவமேயத்திற்காக மட்டும் வள்ளுவர் இங்கே குறிப்பிடவில்லை. அறிவிலியான ஒரு விருந்தினர், நாம் வறுமையில் உள்ள போது வந்தால்... நம் வறுமையையும் பொருட்படுத்தாது அவரை உபசரித்து, நம் இன்மையைப் பொருட்படுத்தாது அவரை உபசரிப்பது போன்றே அவரது அறிவின்மையையும் பொருட்படுத்தாது பொறுமை காட்டுதல் அவசியம் என்பதே மறை பொருள். அத்தகைய பொறுமையும் விருந்தோம்பலும் வலிமையுள் எல்லாம் வலிமை மிக்கது என்பதும் தெளிவு.

விருந்தோம்பலைத் தவிர்க்க நேரும் கொடிய வறுமையை ஒழித்து, வரும் விருந்தினரை உபசரித்து, அவர் அறிவிலியேனும் அவரது செய்கைகளைப் பொறுத்துப் பேணுவதே வறுமைக் காலத்து வலிமையுள்ளும் சிறப்பான வலிமையாகும்.

அறிவிலிகளின் செயல்களைப் பொறுத்துக் கொள்ள, அவரை நாம் வறுமையில் உள்ளபோது நம்மிடம் வந்த விருந்தினராக எண்ணிக் கொண்டால், தாங்கிக் கொள்ளும் சகிப்புத் தன்மை தானாகவே வந்து விடும் என்பதும் மறை பொருள்.

வளரும் குழந்தைகளின் அறிவற்ற செயல்களைக் கண்டு சகித்துப் பொறுமையுடன் அவருக்கு விளக்கி விளங்க வைத்தலே அறிவுடையோரின் செயலாக இருத்தல் வேண்டும் அல்லவா? அதுவே பொறுமையுள் எல்லாம் தலை.

குறிப்புரை :
அறிவிலார் செயலைப் பொறுத்தல் வலிமையுள்ளும் வலிமையாகும்.

அருஞ்சொற் பொருள் :
இன்மை - வறுமை
ஒரால் - பின்வாங்குதல், பின்னடைதல், (receding, withdrawing)
வன்மை - வலிமை, கடுமை, செயலழுத்தம், முனைப்பு, மும்முரம், ஆவேசம், தீவிரம், சினம். உறுதி, திண்மை
மடவார் - பெண்கள், அறிவற்றவர்
பொறை - பொறுமை, சகிப்பு, வலிமை, அமைதி, அடக்கம்.

ஒப்புரை :

திருமந்திரம்: 541..
ஞானம் விளைந்தவர் நம்மிடம் மன்னவர்
சேனை வளைந்து திசைதொரும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே.

திருமந்திரம்: 1165.
தானே இருநிலம் தாங்கிலிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரைத் தண்கடற் கண்ணே.

திருமந்திரம்: 1183.
உள்ளத்தின் உள்ளே உடனிருந்து ஐவர்தம்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே.

திருமந்திரம்: 1184.
புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்து
இருந்த இலக்கில் இனிதிருந் தாளே.

திருமந்திரம்: 1186.
அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
6. நீத்தல் விண்ணப்பம்

பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்
மற்று அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை என்வாழ்முதலே
உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே. 127

மாணிக்கவாசகர். திருவாசகம்:
6. நீத்தல் விண்ணப்பம்

பாடிற்றிலேன் பணியேன் மணிநீயொளித் தாய்க்குப்பச்சூன்
வீடிற்றிலேனை விடுதிகண்டாய் வியற் தாங்கலறித்
தேடிற்றிலேன் சிவனெவ்விடத்தான்எவர் கண்டனரென்று
ஓடிற்றிலேன் கிடந்துள்ளுருகேன் நின்றுழைத்தனனே. 149

ஔவையார். ஆத்திசூடி:
38. கெடுப்ப தொழி.
46. சீர்மை மறவேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

ஔவையார். மூதுரை:
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8

கண்ணதாசன். திரைப்பாடல்:
1. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...
...
பணம்படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்...
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்...
...

2. யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க...
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க...
...
தென்னைய பெத்தா இளநீரு...
பிள்ளைய பெத்தா கண்ணீரு...
பெத்தவன் மனமே பித்தம்மா...
பிள்ளை மனமே கல்லம்மா...
...
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா...
சோதனையைப் பங்கு வைச்சா சொந்தமில்லே பந்தமில்லே...
...
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்...
தேடிவரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடிவரும்... (யாரை)


***

In English:

Chapter : 16

Forbearance

Thirukkural : 153

Mightiest strength is Patience...
In Tamil

inmaiyuL inmai virunthu orAl, vanmaiyuL
vanmai madavArp poRai.

Meaning :
The poverty amongst poverty is inability to treat the guest; The mightiest might is to bear with ignorant.

Explanation :
The poverty among poorness is receding to treat the guest. The might among the might is bearing the ignorant.

The poorness of having little or nothing is not that much regrettable. But the sever poverty is that the inability in such a situation to welcome and treat the guests. Through this not truly the comparison but the pathos of inability in treating the guest is considered as the gross of poverty.

Similarly the patience is nothing but the bearing capacity or the strength is very obvious. In that too, considering the ignorant blabbers, meaningless speeches and foolish works without ridicule, like or dislike and humiliation but with compassionately bearing is the greater patience. Therefore Valluvar says that as the mightiest among all the might.

Valluvar has mentioned about the poverty, patience and strength in the same Kural just not for comparison. If an ignorant guest visits us in our destitution... we should treat him ignoring our destitution. It is necessary that as we treat him ignoring our destitution, we should also ignore his ignorance and show our forbearance is the implied meaning here. Such patience and hospitality is the mightiest among all the might is very obvious.

By destroying the poverty of avoiding the hospitality, welcoming the guest, though they are ignorant bearing with their deeds and treating them is what the greatest might among all the might though in impoverishment.

To bear with the deeds of ignorant, if we think them that as if they have visited us during our poverty, we will get the required patience automatically is also the implied meaning here.

Bearing with the growing kids' ignorant activities but teach and explain them to enlighten should be the deed of the wise. Is it not? That is what the height of all patience.

Message :
Mightiest among the might is to bear with the ignorant acts.

***

Sunday, November 29, 2009

திருக்குறள்:152 (தீங்கினைப் பொறுத்தலினும் மறத்தல் நன்று...)

அதிகாரம்

: 16

பொறையுடைமை

திருக்குறள் : 152

தீங்கினைப் பொறுத்தலினும் மறத்தல் நன்று...

In English

பொறுத்தல், இறப்பினை என்றும்; அதனை
மறத்தல் அதனினும் நன்று.

பொழிப்புரை :
பிறர் செய்த எல்லை மீறிய தீங்கினைப் பொறுத்தல் எப்போதும் நன்று; அத்தீங்கை மறத்தல் பொறுத்தலினும் நன்று.

விரிவுரை :
பிறர் அத்துமீறிச் செய்யும் செயலைப் பொறுத்தல் என்றைக்கும் நன்று; அச்செயலை மறத்தல் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும் நன்று.

மற்றவர் அத்துமீறிச் செய்யும் தீவினைக்கு, நாமும் எதிர்வினையாக தீங்கினை இழைத்தோமானால் அவரும் தீவினையைத் தொடருவார். இதனால் எதிர்ப்பும், தீவினைக் குற்றங்களுமே தொடரும். என்றும் பகையும், தீராத் துயருமே மிஞ்சும்.

மாறாக அறிந்தோ, அறியாமலோ மற்றவர் ஆற்றும் எல்லை மீறிய தவறைச் சுட்டிக் காட்டி, அதனை மன்னித்துப் பொறுத்துக் கொண்டால் அவர் திருத்திக் கொள்ளவும், திருந்தவும் அஃது வாய்ப்பாகும். உடனடியாக உணராதார் கூட காலம் கடந்து தம் தவறுக்கு நாணி வருந்தும் நாளும் கூடவே விரைவில் வரும். மேலும் இச் செய்கையை நாம் பொறுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் உடனடியாக மறந்துவிட்டால், அதனால் ஏற்படும் எத் துயரும் நம்மை அண்டாது நன்மை பயக்கும். தீயவற்றை மறத்தலே அறிவுடைமை அல்லவா?

”இறப்பினை” யே அதாவது மரணத்தையே, மரணத்தின் வலியையே நமக்குக் கொடுத்தவராயினும் பொறுத்தல் நன்று. அதாவது நமக்கு உரியவரைக் கொலை செய்திருப்பினும் கூட மன்னித்துப் பொறுத்துக் கொள்ளுதல் நல்லது. அதனினும் நல்லது அச் செயலை அடியோடு மறத்தல் மிகவும் நல்லது என்பது இங்குள்ள மறை பொருள்.

எனவே எக்காலத்திலும் தீங்கிழைத்தவரைத் தண்டிக்கும் சிறந்த வழி அவரின் தீங்கைப் பொறுத்துக் கொண்டு ஒதுக்கித் தள்ளுவதே. அதனினும் சிறந்த செயல், அத் தீங்கை அக்கணமே மறந்து விடுதல்.

குறிப்புரை :
அத்து மீறலைப் பொறுத்தல் எப்போதும் நன்று; அதனை மறத்தல் அதனினும் நன்று.

அருஞ்சொற் பொருள் :
இறப்பினை - எல்லை மீறுதல், வரம்பு கடத்தல், அத்து மீறல், மிகுதி, மரணம்.

ஒப்புரை :

திருமந்திரம்: 540
ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன்.
ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே

திருமந்திரம்: 1118.
கன்னியுங் கன்னி அழிந்தனள் காதலி
துன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குள
என்னேஇம் மாயை இருளது தானே.

திருமந்திரம்: 1119.
இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வம்என்று எண்ணில்
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.

திருமந்திரம்: 1120.
ஆதி அனாதியும் ஆய பராசக்தி
பாதிபராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதும்என் உள்ளத்து உடன்முகிழ்த் தாளே.

திருமந்திரம்: 1121.
ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமே யாம்என்று அறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பன்
ஆதியென்று ஓதினள் ஆவின் கிழத்தியே.

திருமந்திரம்: 1122.
ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
மேவும் கிழத்தி வினைகடிந் தாளே.

திருமந்திரம்: 1123.
வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித்
தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனைஅடிமை கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியும் ஆமே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
10. திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம் :

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளந்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
6. நீத்தல் விண்ணப்பம்
(திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை)

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல்
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105

ஔவையார். ஆத்திசூடி:
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
16. கிட்டாதாயின் வெட்டென மற.

ஔவையார். மூதுரை:
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. 5

***

In English:

Chapter : 16

Forbearance

Thirukkural : 152

Forgetting harm is better than forgiving it...
In Tamil

poRuththal, iRappinai enRum; athanai
maRaththal athaninum nanRu.

Meaning :
Forgiving the trespasser's evildoing is good at always. Forgetting that evildoing is still better than that of forgiving.

Explanation :
Forgiveness for others trespassed evildoing is good always. Forgetting such act is much better than just forgiving it.

For others overstepped evil deed, if we retaliate through another evil act, they will continue their evil doings. Because of that only sinful offenses will continue. Only enmity and never ending sorrow will remain.

On the other hand, when you forgive other's ignorant or known intruded evil act by pointing the mistake and bearing it, it gives opportunity for them to correct themselves. Even if they do not get rectified immediately, for them to feel shame and realize the days will come soon. Also when we not only bear up with their evil acts but forget it, then we shall be in goodness without affecting by its grievances. Forgetting the bad thing is the intelligence, is it not?

Though they shown us the "death" that is though they inflict the pain like death, it is good to bear with it. That is though they have committed murder on our dear ones too, forgiving and forbearing is only good. Even better is to forget the same is implicit meaning here.

Therefore, always the best way to punish the offenders is to bear their evil act and ignore the same. Still better deed is to forget their evil act instantly at that moment.

Message :
Forgiving trespasses is good always; Forgetting them is still better though.

***

திருக்குறள்: 151 (இகழ்வாரைப் பொறுக்கும் பெருந்தன்மை...)

அதிகாரம்

: 16

பொறையுடைமை

திருக்குறள் : 151

இகழ்வாரைப் பொறுக்கும் பெருந்தன்மை...

In English

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.

பொழிப்புரை :
[தன் மேல் குழி வெட்டித்] தோண்டுபவரையும் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்பவரைப் பொறுப்பது தலையாய பண்பு.

விரிவுரை :
தன்னை அகழ்ந்து பிளப்பவரையும் தாங்கிக் கொண்டிருக்கும் நிலம்போல, தம்மை இகழ்ந்து தூற்றுபவரையும் பொறுத்துக் கொள்வது மனிதருக்குத் தலையாய பண்பாகும்.

தம்மை இகழ்பவரையும், துன்புறுத்துவோர் நிகழ்த்தும் இன்னல்களையும் பொறுத்துக் கொள்ளுவதால் பண்படப் போவது தாமே என்ற நல்லெண்ணம் கொண்டால், அவர்களையும் மதித்து, அவர்தம் இகழ்ச்சியையும் தாங்கும் தன்மை வந்து விடும். தாழ்த்தினாலும், வீழ்த்தினாலும், தட்டினாலும், குட்டினாலும், பிட்டாலும், சுட்டாலும், சுருக்கினாலும், விரித்தாலும் புடம்போடப்படும் தங்கங்கள் பொறுமை இழப்பதில்லை. அழுத்தங்களைத் தாங்கிய ஆன்மாக்களே நல் வைரங்களாகி மின்னுகின்றன.

எனவே இகழ்பவரை நோவதால் விரிசல்களே பெருகும். ஆக்கபூர்வ எண்ணம்போய் தாக்கும் தன்மை வந்து பாழே மிஞ்சும். இவை பொறுமை அற்ற சிறியோர் மேற்கொள்ளும் வழி. மாறாக பொறுமை கொண்டு, காரியத்திற்குதவாத வாதத்தைத் தள்ளி, தேவையற்ற வசவுகளைப் புறந்தள்ளி, உண்மைகளை மட்டும் உய்த்துணர்வதே மேம்பட எண்ணும் மேலோர் கொள்ளும் வழியாகும். அறியாமையால் தூற்றுவோரையும், பிதற்றுவோரையும், அறிவற்று உளருவோரையும் பொருட்படுத்தாது அன்பும், கருணையும் கொண்டு விட்டுவிடுவதால், நேரமும் காப்பாற்றப்பட்டு, நேரிய சிந்தனைப் பாழ்படாது செயலாற்ற இயலும்.

பொறுமை, அமைதி, அஹிம்சை என்பவை தோற்கும் செயற்பாடுகள் அல்ல. அவையே உண்மையில் வெற்றிகள், வெற்றியின் படிக்கட்டுக்க்கள்.

வெற்றிகள் குவிந்து, உங்களின் செயற்பாடுகள் சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் நாளில், அவதூறு பேசியவர்களெல்லாம் நாணித் தலை குனிவர். பொறுமையின் பெருமை அன்று உங்களையே சாரும்.

எனவே இகழ்பவரைத் தாங்கும் நற்குணமாகிய பொறுமையைக் கொள்ள, எதையும் தாங்கும் பூமியைப் போன்ற பெருந்தன்மை வேண்டும் என்பதே இங்கு மறை பொருள்.

குறிப்புரை :
தம்மை இகழ்பவரைப் பொறுத்தல் தலையாய அறம்.

அருஞ்சொற் பொருள் :
வரையான் - வரையறுத்தவன், வரைமுறைக்குள் இருப்பவன்.
நயவாமை - விரும்பாமை

ஒப்புரை :

பழமொழி:
பொறுத்தார் பூமி ஆழ்வார்.

திருமந்திரம்: 539..
பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் . நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.

திருமந்திரம்: 1109.
அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே. 35

திருமந்திரம்: 1116.
பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முற்றி அருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே. 42

திருமந்திரம்: 1117.
உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள்
பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது
வள்ளல் திருவின் வயிற்றுனுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே. 43

மாணிக்கவாசகர். திருவாசகம்:
6. நீத்தல் விண்ணப்பம் :

மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே
பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே. 110

ஔவையார். ஆத்திசூடி:
24. இயல்பலா தனசெயேல்.
30. அறனை மறவேல்.
35. கீழ்மை யகற்று.

ஔவையார். கொன்றை வேந்தன்:
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

ஔவையார். மூதுரை:
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4

***

In English:

Chapter : 16

Forbearance

Thirukkural : 151

Scorn bearing magnanimity...
In Tamil

akazvAraith thAngkum nilam pOla, thammai
ikazhvAraip poRuththal thalai.

Meaning :
Like the earth which bears those who digs on her, bearing those who scorn on our self is the prime of virtues.

Explanation :
Like the earth bearing those dig on her, forbearing those scorn on our self is the primary of virtues.

When you take it in good sense and think that bearing with those who despises you and their ill treatments is only going to refine yourself, you automatically get the quality to respect them too and forbearance to with stand their scorns. Though lowered or laid, stroked or pocked, split or burnt, shortened or extended the purifying gold ones never lose their endurance or disposition. The souls which withstood the pressures only shine ever as diamonds.

Therefore, by hurting the scorners only the split widens and differences grow. The positive sense goes away but offending sense comes and only ruins remain. These are the methods adopted by small and petty minded who do not have patience. Instead with the patience, avoiding the useless arguments, rejecting the unnecessary slanders and perceiving only the truths are the ways adopted by the wise who wish to get improved. Considering with love, kind and compassion and by ignoring those slandering and blabbering ignorant, those non-sense uttering idiots, one can save the time and also without affecting the positive mind can continue the work as well.

Forbearance, peace and non-violence are not the deeds of failure. These are the real winnings and steps to the victory.

When you have gathered winnings and your triumph is acknowledged by the society, those who scorned will stand in shame with bowing their head. The greatness of forbearance will be yours on that day.

Therefore to have the good bearing with the scorners, one should have the greatness like the earth which withstands anything is the implicit meaning here.

Message :
To bear the scornful men is the prime virtue.

***

Saturday, November 28, 2009

அதிகாரம்:16. பொறையுடைமை - முகவுரை

அதிகாரம்

: 16

பொறையுடைமை

முகவுரை

Chapter : 16

Forbearance

Preface

இகழ்ச்சியை, ஏச்சுக்களை, ஏளனத்தை, வலியை, ரணத்தைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை. அழுத்தங்களையும், ஆத்திரங்களையும் அமைதியாகத் தாங்கிக் கொள்ளும் தன்மை. வெற்றிப் பயணத்தில் ஏற்படும் துன்பத்தை, சோகத்தை, சோதனைகளை, தோல்வியைச் சகித்துக் கொள்ளும் தன்மை.

அறியாதவர், புரியாதவர் செய்யும் இன்னலையும், இடரையும் கண்டு கொதிக்காது விட்டுக் கொடுக்கும் மனப் பாங்கு. அறிவிலிகள் இளைத்த கொடுமைக்கு, தீங்கிற்குப் பழிவாங்காது புறந்தள்ளி, மன்னிக்கும் பெருங்குணம். எடுத்த காரியத்தின் குறிக்கோளில் சிதறாது பிறவற்றை ஒதுக்கும் கெட்டிக்காரத் தனம்.

காலத்தை ஊன்றிக் கவனித்து ஏதுவான சமயத்தில் பயன் படுத்தி வெற்றி நோக்கிச் செல்லத் தேவைப்படும் அடக்கம், மன வலிமை. எதாலும் வெல்ல இயலாத கால இடைவெளியைக் கருத்துச் சிதறாது, பிஞ்சிலே பழுத்து வெம்பிவிடாது, வெற்றிக் கனியைத் தொட்டுவிடக் காட்டும் முன்னோக்கு, முற்போக்குத் தன்மை, வளர்நிலை அமைதி. சூலாகிய கரு, உருவாகி, உறுப்பட்டு வெளிப்பட்டு நிலைப்பட இயற்கையுடன் ஒன்றிச் செயல்படும் நல்லெண்ணத் தவம். தற் பெருமைகளையும், அரைகுறை அறிவையும் உளரலையும், குளரலையும் மேதமையெனத் தம்பட்டம் அடித்து சுய இலாபம் தேடாது, உண்மையான அறிவுத் தேடலை, மனித குல மேம்பாட்டை, உயர்வினைத் தேடும் உன்னத மனோ நிலை. ஆர்ப்பரிக்கும் கூப்பாடுகளையும், ஆர்ப்பாட்டங்களையும், கும்மாளங்களையும் தவிர்த்து அமைதியுடன் ஆனந்த மயமாய் இருக்கும் மனோ நிலை.

காலச் சக்கரத்தின் சுழற்சியில் ஏற்படும் மேன்மைக்கும், சிறுமைக்கும் நிலைதவறாது நின்று காட்டும் எதையும் தாங்கு இதயம். தோல்வியிலும் துவளாமை காட்டும் மேல் அறிவுத் திண்மை. எளியவருக்கு இரங்குவது மட்டுமன்று அவரையும் இணைத்துக் கொண்டு வலியோராய் மாற்றும் திறம். உணர்வுகளை, உரிமைகளைத் திணிக்காது, அழிக்காது, அவசரப்படாது உரிய நேரத்தில் வெளிப்படுத்தக் காட்டும் கால தாமதம். இடைப் படும் காலத்தில் சோம்பிச் சுருளாது, முன்னேற்றத்தையும், முயற்சியையும் விட்டுவிடாது தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் தன்மை. அடை காக்கும் பேராற்றல்.

இன்று தனக்கும் கிட்டும் எனும் நிலையறியா நிலையில் தவிக்கும் மனத்துடன் வரிசையில் நிற்போர் காட்டும் அவசர ஆத்திரம், உந்து வண்டியில் அமர்ந்திருந்தாலும் தன் வாய்ப்புக் கிட்டுவதற்கு முன்னரே காட்டும் ஆத்திரத்தில் அடங்காது காட்ட எழுப்பும் ஒலி, தெய்வச் சிலைக்குக் காட்டும் தீபாராதனை பார்க்கக் கூட முட்டி மோதிப் போராடிக் காண வேண்டிய தீப ஒளி இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் சகிப்புத் தன்மையும், பொறுமையும் இல்லாததே.

தீர்வு காண வேண்டிய தருணத்தில், தோல்வியுற்ற களைப்பில் துவண்டுச் சுருங்கி முடங்கிப் போவதல்ல பொறுமை. மூல காரணத்தை உய்த்துணர்ந்து, வெற்றியை நெஞ்சில் தேக்கி முயற்சியைத் தவறாது அமைதியுடன் தொடருதலே பொறுமையின் பெருமை. அனைத்தையும் புரிந்து கொண்டு உறுதியுடன், நம்பிக்கையுடன் காலம் கனியக் காத்திருக்கும் பெருந்தன்மை. காரியம் கை கூடப் பதறாது காத்திருக்கும் பொறுப்பு உணர்வுக் குணமே பொறுமை. அத்தகைய பொறுமையை உடையவராய் இருத்தல், பொறையுடைமை.

தீநெறி நின்று தீமை செய்தாரையும் பொறுத்தல் பொருட்டு, ”பிறன் இல் விழையாமை” அதிகாரத்தைத் தொடர்ந்து “பொறையுடைமை” பற்றி வள்ளுவர் இங்கே தொடருகின்றார்.


ஒப்புரை (Reference)

பழமொழிகள்:
பொறுமை கடலினும் பெரிது.
பொறுத்தவர் பூமி ஆழ்வார்.
கெட்டுப்போகின்றவர் விட்டுக் கொடுப்பதில்லை; விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை.

திருமந்திரம்: 1005.
அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்புட னேவந்து எய்திடும் முத்தியே. 3

திருமந்திரம்: 1050.
குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே. 6

திருமந்திரம்: 1085.
கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசக்தி
அண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுள் பூசனை யாளே. 11

திருமந்திரம்: 1103.
தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே. 29

மாணிக்கவாசகர். திருவாசகம்:
7. காருணியத்து இரங்கல் (அறுசீர் ஆசிரிய விருத்தம்)

இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி
பழித்தனன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடில் வாழ்வு போற்றி உம்பர்நாட டெம்பி ரானே. 70

மாணிக்கவாசகர். திருவாசகம்:
9. ஆனந்த பரவரசம் (கலிநிலைத்துறை) :

மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையானே
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மாநகர் குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே. 89

ஔவையார். ஆத்திசூடி:
2. ஆறுவது சினம்.
10. ஒப்புர வொழுகு.
19. இணக்கமறிந் திணங்கு.

ஔவையார். கொன்றை வேந்தன்:
67. பையச் சென்றால் வையம் தாங்கும்

ஔவையார். மூதுரை:
கடவுள் வாழ்த்து:

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

ஔவையார். நல்வழி:
வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். 33

***


In English:

The quality of good natured tolerance for any abuses, despises, insults, pains and wounds. It is the trait to bear the pressure and anger politely. It is the patience in the journey towards victory to tolerate any suffering, sorrow, grief, trial and adversity.

It is the mental state to bear with and to be considerate for the disturbances and blocks created by the innocent and ignorant. It is the great trait to forgive and ignore without revenging the ill doings by the ignorant. It is the intelligence and wisdom to avoid other things to achieve the determined goal.

It is the self-control and mind power to observe meticulously the time and utilizing it towards the success. It is the forwardness and the advancement for the fruitful attainment of success without deviating from the goal or dropping out in the middle in challenging the unbeatable time duration, the patience of growth. It is good thinking penance along with the nature to deliver the conceived in full form and completely developed. It is the pure mind state which seeks for the true knowledge, development for the humanity, ever growing excellence without self boasting and blabbering to claim the geniuses for the half baked knowledge or for the faked wisdom. It is the happy mind set to be in peace without any roar, shouts, showoffs and jumps.

It is state of the heart or mind to be judicious and in justice for all ups and downs whatever be the changes caused and stamped by the time. It is the mind power to be bold even in defeat or loss. It is not only the kindness to the poor but it is the ability to make them also strong. It is the time delay to show appropriately without haste, emotions and thrusts. It is the nature to retain the perseverance and progress without idleness in the intermediary duration. It is the great power of hatching.

The people in the queue showing hasty and anger due to the doubt whether they would get their turn or not, though sitting in a car in the traffic signal even before getting their turn showing their haste and urgency by honking, the crowd showing fist fight even in temple to take a view of the deepa, the light shown around the God, the reason behind for all these are nothing but the impatience and intolerance.

Patience is not to become limp or withering lethargically for the failures at the time when the solution is to be sought. Understanding the root causes, keeping the victory in the mind, persistency continuing the trying peacefully is the greatness of patience. It is the greatness of waiting for the reaping time with strong comprehensions and trusts. It is the characteristic of responsibility to stay for the successful completion of the work. Forbearance is containing such patience in one self.

For the sake of bearing with even the non virtuous offenders, after the chapter 'Non-adultery" Valluvar is continuing here with "Forbearance" chapter.

***

Friday, November 27, 2009

Announcement: Kural Amutham Free eBook Update

அறிவிப்பு

:

குறள் அமுதம் மென்புத்தகம்

Announcement : Kural Amutham eBook

புதுப்பிக்கப்பட்ட விபரம்.

Updated Details

1. அதிகாரம் 15 முழுமையாக இணைக்கப் பட்டுள்ளது

1. Chapter 15 is updated in full.

அன்புடையீர்,

குறள் அமுதம் மென் புத்தகத்தை தரவிறக்கம் செய்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். மகிழ்ச்சியுடன் பயன்படுட்திக் கொண்டிருப்பீர்களென நம்புகின்றேன்.

இந்த அதிகாரத்திற்கு கமெண்ட்டுகள் பதிவாகவில்லை எனினும், பார்வையாளர்கள் அதிகரித்திருப்பது மகிழ்சி தருகின்றது.

குறள் அமுதம் இணையப்பக்கத்தில் இணைந்து கொண்ட அனைத்து இதயங்களுக்கும் நன்றி. உங்களின் வரவில் பெருமை அடைகின்றேன்.


நன்றி.

உத்தம புத்திரா.


சில கேள்வி பதில்கள்:

1. மென்புத்தகத்தை எவ்வாறு புதுப்பித்துக் கொள்வது?
இலவச மென்புத்தகங்கள் என்னும் இணைப்பைச் சுட்டி தேவையானதைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். முதலில் தரவிறக்கம் செய்த போது செய்த செயல்பாடுகளை இப்போதும் செய்து கொள்ளுங்கள். அடிப்படையில் உங்களின் கணினியில் இருக்கும் பழைய சுவடி, இப்புதிய கோப்பால் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

2.முதன் முதலில் தரவிறக்கம் செய்வது எப்படி?
முதன் முறை தரவிறக்கம் செய்தால் .zip சுட்டியைத் தரவிறக்கம் செய்து, unzip செய்து பயன் படுத்தவும். இம்முறையில் மென்புத்தகத்தின் அகலம், உயரம் போன்றவை ஏற்கனவே நான் அமைத்துள்ளபடி உங்களுக்குக் கிட்டலாம். எனவே இந்தச் சுட்டியைத் தரவிறக்கம் செய்வதையே நான் பரிந்துரைப்பேன்.

3. KuralAmutham.chm சுட்டியைத் தரவிறக்கம் செய்து கொள்வது எப்படி?
இச் சுட்டியைத் தரவிறக்கம் செய்தால், கீழ்க்கண்ட முறைகளை மேலும் கையாள வேண்டும். முதலில் தரவிறக்கம் செய்த பிறகு இக்கோப்பைச் தேர்ந்தெடுத்துக் கொண்டு, வலது மவுஸ் பொத்தானை ஒத்தி, file Properties குச் செல்லவும்.General tab பகுதிக்குச் சென்று Unblock பொத்தானை ஒத்தவும். பிறகு Apply மற்றும் Ok பொத்தான்களை ஒத்தி வெளியேறவும். இவ்வாறு செய்யாவிடின் இவ்விதமாக தரவிறக்கம் செய்யப்பட்ட மென்புத்தகம் பொருளடக்கத்தைக் காண்பிக்காது. எனவே மென்புத்தகத்தில் Unblock அவசியம் செய்து
கொள்ளவும்.

4. எப்படிக் கமெண்ட் செய்வது?
குறள் அமுதம் இணையப் பக்கத்தில் உள்ள கமெண்ட் பாக்ஸைப் பயன் படுத்தி, உங்கள் எண்ணங்களை, பின்னூட்டங்களைப் பதியவும். தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டிலும் இங்குப் பதியலாம்.

5. ”குறள் அமுதம் பக்கத்தில்” ஒரு குறளை எப்படித் தேடுவது?
’Search' எனும் பாக்ஸில் உங்களுக்குத் தேவையான குறளின் ஏதாவது ஒரு வார்த்தை அல்லது குறளின் எண்ணை உள்ளீடு செய்து, ‘Search' பொத்தானை ஒத்தவும். பெரும்பாலும் உங்களின் தேடலுக்கான அட்டவணை அல்லது வாய்ப்புக்கள் ஒன்று மட்டும் இருந்தால் நீங்கள் கேட்ட தகவலுக்கான குறளமுதம் பக்கம் காண்பிக்கப்படும்.

***

In English: (About KuralAmutham eBook)

Dear Friends

I extend my thanks to all who have downloaded the "KuralAmutham" eBook. I am sure you are using it happily.

Though no comments got registered for this chapter, I am happy that visitors have increased considerably .

Thanks to all who have registered in Kural Amutham blog spot. I am proud to welcome you all.

Thanks

UthamaPuthra.


Few Questions and Answers:

1. How to update your KuralAmutham eBook?
Click the link "My Free eBooks" from KuralAmutham.blogspot web site. Choose whichever file you require to update. Just follow the same procedures you followed to install the previous copy. Ensure that the newer copy basically overwrites your old copy at your system.

2. How to download for the first time?
I would recommend going for the KuralAmutham.zip file download because it is very simple. After download just you have unzip it. That is it. You are ready to use by then the KuralAmutham.chm file directly. You would also get the width and height is preset done by me. In the other method you have to do it manually by yourself.

3.How to download 'KuralAmutham.chm' file directly?
You can also download the KuralAmutham.chm file directly from the link given below. But in this method you have to take care to Unblock and adjust the sizes by yourself.

After download, Remember to unblock the file after downloading to your system otherwise you won't get the proper content display. Therefore, Locate the downloaded file and right click at it to get the file Properties. Click on the Unblock button on the General tab and follow it thru Apply and Ok buttons to close the property window. Now you can just double click the file to see the content. You may have to size the window to your convenience.

4. How to comment?
Use the Comment box in the Kural Amutham web site, to register your feedback and thoughts. Please Type in only in English or Tamil.

5. How to search for a particular Thirukkural in the web page?
Use the Search box in the page. Type out any word from the Kural you are looking for either in English or in Tamil. Alternatively you can also type the Kural Number, to fetch the same. You may be given a result of List to pick one or when only single choice you get the direct display of the Kural Amutham.


***

Wednesday, November 25, 2009

அதிகாரம்:15. பிறனில் விழையாமை - முடிவுரை

அதிகாரம்

: 15

பிறனில் விழையாமை

முடிவுரை

Chapter : 15

Non-adultery

Summary

அதிகாரத்தில் பெற்றவை

குறள் எண்

Kural No.

குறள் குறிப்புரை (Kural Message)

141 நன்னெறி அறிந்தோர் பிறத்தியானின் மனைவியை தீதாய் மனத்தாலும் எண்ணார்.

Those who know the virtues will never even think of others wife in bad intentions.
142 அறமற்ற அறிவீனத்தில் பிறன் மனவியை மோகிப்பதே பெரிய அறிவீனம்.

Among the stupidity of non virtuousness, having lust for others wife is the greatest one.
143 நம்பிய நல்லவரின் இல்லாளைத் துரோகமாய்த் தீதுசெய்த இழிந்த நண்பர் இறந்தவரே.

The ill friend who did treacherous adultery with the wife of the most trusted is the dead only.

144 பிறன் மனைவியை பெண்டாள நினைப்பவன் தனது பதவியை, மதிப்பை, மரியாதையை இழப்பான்.

That who indulges in adultery with other's wife will go disgraced by losing his status, position and respect.
145 எளிதெனத் துய்க்கும் பிறன் மனை இன்பம் அழியாப் பழியைத் தவறாது கொடுக்கும்.

The adultery considered easy with other's wife shall certainly result in imperishable disgrace.
146 பிறன் மனை விழைபவனிடத்தே பகை, பாவம், அச்சம், பழி எனும் நான்கும் விடாது குடியிருக்கும்.

With the adulterers of other's wife, hatred, sin, fear and disgrace - these four will dwell for ever without leaving.
147 நல்லறத்தை ஒழுகுபவர் பிறன் மனைவியை மோகிப்பதை விரும்பமாட்டார்.

That who lives ever virtuously will never desire the womanhood of the other's wife.
148 சான்றோரின் பிறன் மனையாளை எண்ணாது திகழும் ஆழ்ந்த ஒழுக்கமே அவரது பேராண்மை எனும் சிறப்பு.

The propriety of not adulterous look on other's wife by the wise is their significance of noble manliness.

149 அச்சுறுத்தும் பிணிகள் நிறைந்த உலகில் நோயற்ற உடல் நலம் விரும்புவோர் பிறன் மனையாளைத் தழுவார்.

Those who want no ill but the health in this dreadful disease filled world will not do adultery with other's mate.
150 நல் ஒழுக்கம் தவற நேரினும் பிறன் மனையாளை விரும்பாமை நன்று.

Though may arise a need to slip from virtuous path, it is good not to desire on other's wife.

குறிப்புரை

நல்லறமற்ற ஒழுக்கத்தின் அறிவீனங்களில் பிறன் மனைவியை மோகிப்பதே பெரிய அறிவீனம். அத்தகைய அறிவீனத்தால் பதவியை, மதிப்பை, மரியாதையை இழக்க நேரும். மேலும் எளிதென எண்ணி பிறன் மனைவியை அடைய நேர்ந்தால் அழியாப் பழியே மிஞ்சும். பிறன் மனை விரும்புபவனிடம் பகை, பாவம், அச்சம், பழி எனும் நான்கு குற்றங்களும் விடாது குடியிருக்கும். நம்பிய நல்லவரின் மனைவியைத் துரோகமாய்த் தீதுசெய்த இழிந்த நண்பர் உயிர் இருப்பினும் இறந்தவரே.

நன்னெறியை அறிந்தோர், ஒழுகுவோர் பிறத்தியானின் மனைவியை தீதாய் மனத்தாலும் எண்ணார். அவ்வாறு திகழும் ஆழ்ந்த ஒழுக்கமே அவரது பேராண்மை எனும் சிறப்பு. அச்சுறுத்தும் பால்வினைப் பிணிகள் நிறைந்த உலகில் நோயற்ற உடல் நலம் விரும்புவோர் பிறன் மனைவியை விரும்பார். நன்னெறியின் பால் இருப்பார் நல் ஒழுக்கம் தவற நேரினும் பிறன் மனையாளை விரும்பாமையே நன்று.

Message

Lust for others wife is the stupidest indiscipline in non virtuousness. Due to such adultery one has to lose his status, position and respect. Also the easily assumed adultery will result only in never dying disgrace for sure. The adulterers of others wife will have hatred, sin, fear and disgrace living with them forever. The ill friend who committed treacherous adultery with the most trusted is considered dead though he survives.

Those who know or practice the virtuousness will never even think of others wife with any bad intentions. Such good practices and virtues only termed as their noble manliness and gains significance and praises. In this dreadful venereal disease filled world, those who want good health will not do adultery with others wife. That who is with good virtues though may slip from virtuous path for some reason; it is good not to do adultery, the sin of desiring someone else's wife.

Tuesday, November 24, 2009

திருக்குறள்:150 (தவறினும் பிறன் மனையாளை நயவாதே...)

அதிகாரம்

: 15

பிறனில் விழையாமை

திருக்குறள் : 150

தவறினும் பிறன் மனையாளை நயவாதே...

In English

அறன் வரையான், அல்ல செயினும், பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

பொழிப்புரை :
அறம் வரைமுறையில் உள்ளோன் நல்லன அல்லவற்றைச் செயினும், பிறன் வரை முறைக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமை நன்று.

விரிவுரை :
அறத்தின் வரைமுறைக்குள் இருக்கின்றவன் நல்லன அல்லவற்றைச் செய்தாலும், பிறன் வரைமுறைக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் இருத்தல் நன்று.

நன்நெறியின் பால் இருப்போன் ஒழுக்கம் தவறி நல்லன அல்லவற்றைச் செய்ய நேர்ந்தாலும் கூடப் பரவாயில்லை, பிறனுக்கு உரியவளைப் பெண்டாள விரும்பாமை நல்லது. ஏனென்றால் அது அறமற்ற செயல்களிலும் தலையாயது என்பது மறை பொருள்.

மேலும் முன்னர் கூறியது போல், பிற அறமற்ற செயல்கள் இன்னொருவரைப் பாதிக்காமல் இருக்கலாம். ஆனால் பிறன் மனையாளைத் தழுவும் இழி செயல் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதித்து அழியாப் பழியையும் துன்பத்தையும் வழங்கும் ஆதலால் என்பதும் மறை பொருள்.

உதாரணத்திற்கு அறநெறி நிற்கும் பெரியோர் ஒருவர் யாரையோ காப்பாற்றுவதற்காகப் பொய் சொல்லும் நிலை ஏற்படலாம். அவர் அச்சமயத்தில் ஒழுக்கம் தவறிச் செயலாற்றினும் அதன் நன்மை காரணமாக அவ்விதம் நடக்க வேண்டி ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அதைப் போன்ற வரைமுறை தவறிய ஒழுங்கீனத்தைப் பழக்கப் படுத்திக் கொண்டு அவர் ‘பிறன் மனை விழைவதை’ செய்யாமல் இருத்தல் வேண்டும் என்பதே இக்குறளின் நோக்கம்.

ஆக நன்னெறியாளன் ஒழுக்கம் தவற நேர்ந்தாலும் பிறன் மனையாளை விரும்பாமை நன்று.

குறிப்புரை :
நல் ஒழுக்கம் தவற நேரினும் பிறன் மனையாளை விரும்பாமை நன்று.

அருஞ்சொற் பொருள் :
வரையான் - வரையறுத்தவன், வரைமுறைக்குள் இருப்பவன்.
நயவாமை - விரும்பாமை

ஒப்புரை :

திருமந்திரம்: 2656
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

ஔவையார். நல்வழி:
தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றல்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. 16

பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை: 18
வாதுக்குச் சண்டைக்குப் போவார்; வழக்குரைப்பார்
தீதுக்கு உதவியும் செய்திடு வார், தினந் தேடிஒன்றும்
மாதுக் களித்து மயங்கிடு வார்விதி மாளுமட்டும்
ஏதுக் கிவர்பிறந்தார்? இறைவா! கச்சி ஏகம்பனே!

சிவவாக்கியர்: 46
கறந்தபால் முலைப்புகா கடந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.

***

In English:

Chapter : 15

Non-adultery

Thirukkural : 150

Desire not adultery even on slip...
In Tamil

aRan varaiyAn, alla seyinum, piRan varaiyAL
peNmai nayavAmai nanRu.

Meaning :
Though one slips on the virtuous bounds for an evil act, it is good at least not to desire on other's wife.

Explanation :
Though the one who is within the limits of virtuousness slips for an evil deed, it is good not to desire the womanhood of she which belongs to other's bounds.

That who is in the good virtuousness, it is bearable even if he goes undisciplined but not doing the adultery. Because adultery is the worst of indiscipline is the implicit meaning.

As described somewhere earlier in this chapter, the other indiscipline deeds may not implicate or impact others largely. But the adultery with other's wife is the worst act which yields undying disgrace and sufferings to everyone related directly or indirectly in both families, are also the reason in the implied meaning here.

For example, the elderly man of the good, great virtuousness may have lied, slipping from the disciplines, to save someone. Though he may have slipped discipline from the propriety it might have been for the good cause. But taking such indiscipline as granted and as habit one should not get on to the impropriety of adultery is the purpose of this Kural.

Therefore the good virtuous though slips in his propriety, it is good not indulge in adultery.

Message :
Though may arise a need to slip from virtuous path, it is good not to desire on other's wife.

***

Monday, November 23, 2009

திருக்குறள்:149 (நோயற்ற நலத்திற்கான ஒழுக்கம்...)

அதிகாரம்

: 15

பிறனில் விழையாமை

திருக்குறள் : 149

நோயற்ற நலத்திற்கான ஒழுக்கம்...

In English

"நலக்கு உரியார் யார்?" எனின், நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதார்.

பொழிப்புரை :
[உடல்] நலத்திற்கு உரியவர் யார்? என்றால், [நலக்குறை] அச்சம் தரும் தன்மை நிறைந்த உலகின் கண், பிறருக்கு உரியவளின் தோளை அணையாதாரே.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
அச்சுறுத்தும் குணநலனகள் நிறைந்த உலகில், உடல் நலத்திற்கு உரியவர் யார் என்றால், பிறருக்கு உரியவள் தோளைப் பொருந்தாதவரே.

வியாதி அச்சம் இயல்பான; சூழ்ந்த; நிறைந்த உலகில், உடல் நலத்தோடு திகழக் கூடியவர் யார் என்றால், பிறன் மனைவியைச் சேராதவரே. காம லீலைகளால், அழுக்கு நீரும், வியாதியும் நிறைந்து கிடந்து அச்சப்படுத்தும் உலகில், ஒருவனுக்கு ஒருத்தி என்பதே உடல் நலத்திற்கான ஒழுங்கு. ஒருவனுக்கு ஒருத்தி எனும் ஒழுக்கம் இல்லாது போயின் மனித குலம் தழைக்காது. மனிதர்கள் இவ்வொழுக்கத்தை மீறினால் அனைத்து வகை நலக் கேடும் உண்டாகும் என்பது கண்கூடு.

எனவே அச்சுறுத்தும் பிணிகள் நிறைந்த உலகில், பிறன் மனையாளைத் தழுவாதவரே, உடல் நலத்தோடு திகழுவார் என்பதே சரியான பொருள்.

இக் குறளுக்கு, ”நாம நீர் வைப்பு” என்பதற்கான பொருளை, விளக்கவுரை ஆசிரியர்கள் யாரும் சரியாகப் பொருள் கொண்டு பயன் படுத்தவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். ”அச்சம் தரும் கடல் சூழ்ந்த உலகில்”, நன்மைக்கு உரியவர்; சிறப்பை; பெருமை பெறுபவர் யார் என்றால் என்றே அனைவரும் கூறி உள்ளனர். இதில் ஏன் அச்சம் தரும் கடல் வருகிறது என்று யாரும் முயற்சிக்கவில்லை என்றே எண்ணுகின்றேன். நலம் என்பதை ‘உடல் நலம்’ என்று யாரும் நேரடிப் பொருளுக்கும் வரவில்லை. அருஞ்சொற் பொருளில் கொடுத்துள்ள வார்த்தைகளின் அர்த்தங்களை உற்று நோக்கினால் எவ்வாறு நான் மேற்படி பொருள் கொண்டேன் என்பது விளங்கும்.

மேலும் உலகில் இன்று நாம் காணும் பால்வினை நோய்களையும், அது பரவுவதற்கான காரணங்களையும் ஆராயத்தலைப் பட்டால், இதன் உண்மையான பொருள் விளங்கும். எனவே உடல் நலத்திற்கான அச்சப் படக்கூடிய தீங்கை, பிறன் மனை விழைவதால் உண்டாவதை வள்ளுவர் அன்றே உணர்த்தி இருக்கிறார் என்பதையே இக்குறள் காட்டுகின்றது. வள்ளுவர் மருத்துவமும் அறிந்தவர் என்பதற்குச் சான்றாக பல குறள்கள் பின்னர் இருப்பினும் இக்குறளே முதற் சான்று.

எனவே, பயமுறுத்தும் பால்வினை நோய்கள் காம நீர்மைகளால் மண்டிக்கிடக்கும் பரந்த உலகில், தனது மனையாளைத் தவிர்த்துப் பிறர் உறவுக்குரிய பெண்டிரைத் தழுவாதவரே, உடல் நலத்துக்கு உரியவராக இருப்பார் என்பதே இங்குள்ள மறைபொருள்.

குறிப்புரை :
அச்சுறுத்தும் பிணிகள் நிறைந்த உலகில் நோயற்ற உடல் நலம் விரும்புவோர் பிறன் மனையாளைத் தழுவார்.

அருஞ்சொற் பொருள் :
நலக்கு - நலத்திற்கு என்பது சுருக்கப்பட்டூள்ளது.
நலம் - நோயற்ற நிலை, நன்மை, பயன், இன்பம், அன்பு, புகழ், உயர்வு
நாமநீர் - அச்சம் தரும் கடல்
நாமம் - அச்சம்
நீர் - நீர்மை, குணம், கடல், சாறு, புனல்
நீர்மை - குளிர்ச்சி, இயல்பு, தன்மை, இயற்கை, நிலைமை, குணம்
வைப்பு - சேமிப்பு, நிலப்பகுதி, உலகம், வைப்பாட்டி
தோயாதார் - தழுவாதார், பொருந்தார், அணையார்
தோய்தல் - நனைதல், மூழ்குதல், பொருந்துதல், அணைத்தல்

ஒப்புரை :

திருமந்திரம்: 2619
உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்
பெண்மயற் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
வண்மை யருள்தான் அடைந்தபின் ஆறுமே.

ஔவையார். நல்வழி:
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1

பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை: 30
பிறந்துமண் மீதில் பிணியே குடுகொண்டு பேரின்பத்தை
மறந்துசிற் றின்பத்தின் மேல்மய லாகிப்புன் மாதருக்குள்
பறந்துழன் றேதடு மாறிப்பொன் தேடிஅப் பாவையர்க்கீந்து
இறந்திட வோபணித் தாய் இறைவா! கச்சி ஏகம்பனே!

சிவவாக்கியர்: 404
வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீர்
அருள்கொள்சீவ ராருடம்பு உடைமையாகத் தோர்வீர்காள்
விளங்குஞானம் மேவியே மிக்கோர் சொல்லைக் கேட்பிரேல்
களங்கமற்று நெஞ்சுளே கருத்துவந்து புக்குமே.

***

In English:

Chapter : 15

Non-adultery

Thirukkural : 149

The propriety for no venereal disease...
In Tamil

"nalakku uriyAr yAr?" enin, nAma nIr vaippil
piRaRku uriyAL thOL thOyAthAr.

Meaning :
Who is the healthy in the dreadful diseases filled world means, it is that those who do not indulge in adultery with other's wife.

These explanations contain newer and exclusive messages.

Explanation :
In this dreadful diseases filled word, when asked who the healthy means is that who do not join the shoulder of a women who belongs to the other.

The dreadful diseases or characteristics abundantly filled or encircled world, if you ask who is really healthy means, that who do not indulge in adultery with other's wife. One male to one female is the right method for the clean and healthy life in the dreadful world of diseases which got filled through improper sexual interactions, mal practices and contaminated water and contacts. If there is no relationship between a male and female, the human beings will not continue to exist. When human beings become indiscipline in this regard and go for illicit relations all kind of diseases start cropping is more evident through HIV, AIDS etc.

Therefore in the world filled with scaring ills those who do not indulge in sexual activities with other's wife only will be healthy is the correct meaning for this Kural.

I would like to point that, for this Kural, for the term "nAma nIr vaippu" all the interpreters have used in incorrect meaning only. "Fearful sea surrounded world", "who shall obtain the good or glory" such are the explanations. I think all of them have not explored for the following, why the sea should be fearful? And why should it be terror producing? Because of this incorrect meaning in the first place all have missed the point. Actually "Nalam" the word is not directly taken into its primary and direct meaning as "the good health" by anyone. If you look at the synonyms section for the etymology of the words which I have summarized, one may understand how I have interpreted the whole thing as explained above.

Also if we try to see the sexual diseases in the world today and try to research the reasons for it to spread across the globe, one can understand the true meaning of this Kural. Therefore the dreadful disease which creates the ill health is through the sexual contact of adultery is what Valluvar tries to explain here in those days itself. Valluvar knows medicine also is more evident in the Kurals yet to follow; however, this Kural stands out as the first one to vouch the same.

So, in the vast world that is engulfed with terrible venereal diseases due to secretive liquids, those who do not indulge in sexual activity with other than their own mates will only be healthy, is the implicit meaning here.

Message :
Those who want no ill but the health in this dreadful disease filled world will not do adultery with other's mate.

***