|
| |
| |
பொழிப்புரை : | |
தீதானவை தீய பயன்களைத் தருதலால், அத் தீதானவை தீயைக் காட்டிலும் அஞ்சப்படும். | |
| |
விரிவுரை : | |
தீதானவை தீயவற்றையே பயனாகத் தருவதால், அத் தீதானவை பாழ்படுத்தும் தீயைக் காட்டிலும் அதிகமாக அஞ்சப்படும். தீயவற்றை விளைவிப்பதாலேயே தீயவை தீதானவை என்று அடையாளப் படுத்தப்பட்டிருக்கும் போழ்து இதில் என்ன குழுப்பம்? அதாவது ஏதேனும் ஒரு தீதாவது நன்மையைத் தருமேயானால் அதற்கு அஞ்சத் தேவையில்லை என்பது பொருள். அன்றில் தீதானவை அஃது எண்ணமாயினும், செயலாகினும் அஞ்சப் பட வேண்டியதே. தீமை விளைவிப்பதில் தீயைக் காட்டிலும் தீவிரத் தன்மை கொண்டவை தீதான எண்ணம் எனக் கருதி அவற்றை அஞ்சி ஒதுக்க வேண்டுமாம். தீப்பற்றிக் கொள்ளக் கூட நேரம் ஆகலாம் ஆனால் தீதான எண்ணம் பற்றிக் கொள்ள கால இடைவெளியோ, அவகாசமோ ஒரு பொருட்டா? அஃது பற்றிக் கொண்டால் படருவதும், தொடருவதும், பாழாக்குவதும் தீயைக் காட்டிலும் வெகு விரைவில், மிகுதியான அளவில் நடந்தேறிவிடும். ஆதலின் தீயவற்றை எண்ணுதலே தவறு. தவறி எண்ணிவிட்டால் அவற்றைச் செயல் படுத்துவது அதனினும் தவறு. இத் தவறுகளின் விளைவுகளை மனக்கண்ணால் எண்ணி அஞ்சுதலும் அதைத் தவிர்த்தலுமே அறிவுடைய செயல். தீயினால் நன்மையும் உண்டு சயமங்களில் அத்தியாவசியமும் கூட. ஆனால் தீயவற்றால் நன்மை ஏதும் உண்டோ? அதால் தீதை மட்டுமே விளைவிக்க முடியும் எனும் பட்சத்தில் அதை அஞ்சி ஒதுக்கி விடுவது தானே நல் வாழ்விற்கான சரியான முறையாக இருக்க முடியும்? | |
| |
குறிப்புரை : | |
தீயப் பயன்களை விளைவிக்கும் தீயவற்றைக் கண்டு, தீக்கு அஞ்சுவதைக் காட்டிலும் அஞ்சித் தவிர்க்க வேண்டும். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
பயத்தல் - பயன் தருதல், விளைவித்தல், தருதல், பலன் தருதல் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 212 தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித் தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலு ம் ஆமே. திருமந்திரம்: 213 அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம் ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே. திருமந்திரம்: 219 பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு ஊழி அகலும் உறுவினை நோய்பல வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும் வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே. திருவாசகம்: 1. சிவபுராணம் : கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25 பட்டினத்தார். திருத்தில்லை: 14 உடுப்பானும் பாலன்னம் உண்பானும் உய்வித் தொருவர் தம்மைக் கெடுப்பானும் ஏதென்று கேள்விசெய் வானும் கதியடங்கக் கொடுப்பானும் தேகிஎன்று ஏற்பானும் ஏற்கக் கொடாமல் நின்று தடுப்பானும் நீயல்லை யோ தில்லை ஆனந்தத் தாண்டவனே! ஔவையார். ஆத்திசூடி: 35. கீழ்மை யகற்று. ஔவையார். கொன்றை வேந்தன்: 36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் ஔவையார். மூதுரை: நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று. 8 ஔவையார். நல்வழி: எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது புண்ணியம் வந்து எய்த போது அல்லால் - கண் இல்லான் மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Since the evilness only results in evils, such evilness must be dreaded more than the fire. | |
| |
Explanation : | |
As the evils produce only evil results, such evils should be feared more than the ravaging fire. | |
| |
Message : | |
By looking at the evils that produces evil results one should fear more than the fire and avoid doing it. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...