Showing posts with label serukku. Show all posts
Showing posts with label serukku. Show all posts

Thursday, February 4, 2010

திருக்குறள்: 201 (சீரியோர் அஞ்சும் தீவினைச் செருக்கு...)

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

திருக்குறள் : 201

சீரியோர் அஞ்சும் தீவினைச் செருக்கு...

In English

தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்,
தீவினை என்னும் செருக்கு.

பொழிப்புரை :
தீவினையார் அஞ்ச மாட்டார்; சீரியோர் அஞ்சுவார், தீவினை என்னும் துய்ப்பிற்கு.

விரிவுரை :
தீவினை என்னும் தீச்செயலைச் செய்து துய்ப்பதற்கு எப்போதும் தீவினை செய்து கிடப்போர் அஞ்ச மாட்டார்; ஆனால் மேன்மைக்குரிய சீரியோர் அஞ்சுவார்கள்.

தீவினையை எப்போதும் செய்து பழக்கப்பட்டு அதன் பால் ஊறிக் கிடப்போர் இன்னொரு தீவினையைச் செய்ய அஞ்ச மாட்டார்கள். உண்மையில் அதனைச் செய்து, துய்த்துப் போலிக் களிப்பும் மயக்கமும் பெருமையும் கொள்ளுவர். அவர்களைப் போலிக் கவர்ச்சியும் மயக்கமும் அதன்பால் வரும் மகிழ்ச்சியும் செல்வமும் வெறி கொள்ளச் செய்து தீவினையை மேன்மேலும் செய்யவே தூண்டி நிற்கும். பழி, பாவத்தைக் கண்டு அச்சமற்றுத் திரிவதும், எள்ளி நகையாடுவதும், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்னும் மனோ பாவமும், தீவினையால் வரும் துரித மற்றும் குறுகிய கால சுக போகங்களும் அவர்களைத் தன்னிலை மறக்கச் செய்து செயலாற்றித் திளைக்கச் செய்யும். தீவினைகளின் பால் கொள்ளும் இறுமாப்பும் அவர்களை அச்சமிலாதே திகழச் செய்யும்.

ஆனால் பழி, பாவத்திற்கு அஞ்சும் நல் ஒழுக்க சீலர்கள், சீரியோர், மேன்மையுற்றோர் மனச் சாட்ச்சிக்கு ஒப்பாத தீய வினையைச் செய்ய அஞ்சுவர். அதனைத் துய்க்கவோ அதன்பால் பெருமிதமோ, செருக்கோ கொள்ளப் பயந்து அதனை முற்றிலும் தவிர்ப்பர். அவர்களுக்கு அதன் பால் வரும் போலிக் களிப்பின் மயக்கம் எண்ணும்போதே பயத்தைத்தான் கொடுக்கும். அவர்கள் தம் குலத்தின், குடும்பத்தின் மான பங்கத்திற்கான பயமும், இத்தனைக் காலமும் கட்டிக் காத்த நன்னெறி வாழ்க்கையை இத் தீச்செயல் இழுக்குச் செய்துவிடுமே என்னும் பயமும் அவர்களை அச்சுறுத்தி நின்று காக்கும். ஆதலின் அவர்கள் தீய செயல்களைச் செய்யாது வழக்கம்போல் அவர்களின் நன்னிலையையே தொடருவர்.

தீவினையால் வரும் போலிச் செருக்கிற்கு அஞ்சி நல்லோர் தீவினையைச் செய்யார் என்பதும் குறளின் மறை பொருள்.

ஆதலின் தீவினையைச் செய்ய அஞ்சிச் செய்யாது இருத்தலே ஒவ்வொருவரும் சீரியோராய் நன்னெறியில் திகழும் வழி ஆகும் என்பது குறளின் உட் கருத்து.

குறிப்புரை :
தீவினை செய்யத் தீவினையாளர் அஞ்ச மாட்டார்; மேன்மையோர் அஞ்சுவர்.

அருஞ்சொற் பொருள் :
விழுமியார் - மேன்மையோர், உயர்வுடையோர், சிறப்புடையோர், பெருமையுடையோர், நன்னிலையுடையோர், சீரியோர்,
செருக்கு - அகந்தை, இறுமாப்பு, கருவம், பெருமிதம், பெருமை உணர்வு, மிகுதிப்படுத்து, துய், அனுபவி, களிப்பு, மகிழ்ச்சி, துணிவு, மனத்திண்மை, உறுதி, மயக்கம், செல்வம்.

ஒப்புரை :

திருமந்திரம்: 143
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.

திருமந்திரம்: 147
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக் குப்பலி காட்டிய வாறே.

திருமந்திரம்: 184
கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.

திருவாசகம்:
1. சிவபுராணம் :

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

பட்டினத்தார். திரு ஏகம்ப மாலை: 39
கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக் குண்டரைக் காமுகரைக்
கொடும்பவ மேசெய்யும் நிர்மூடர் தம்மைக் குவலயத்துள்
நெடும்பனை போல வளர்ந்துநல் லோர்தம் நெறியறியா
இடும்பரை ஏன்வகுத் தாய்? இறைவா! கச்சி ஏகம்பனே!

ஔவையார். ஆத்திசூடி:
28. அழகலா தனசெயேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்

ஔவையார். மூதுரை:
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. 5

ஔவையார். நல்வழி:
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1

***

In English:

Chapter : 21

Fear for Evil Deeds

Thirukkural : 201

The dreading evil deed's pride for the wise...




In Tamil

thIvinaiyAr anjsAr; vizhumiyAr anjsuvar,
thIvinai ennum serukku.

Meaning :
The sinners will not fear to experience the evil deeds and pride, but the noble will dread.

Explanation :

Those sinners who always cherish the sinful doings will not fear to do the evil deeds but the noble and eminent dread to do so.

For those who have the sinful actions as their habit of the day to day or way of life will not dread to do another evil deed again. In fact they get joy and pride in carrying it out and enjoying it. The fake attraction, delusion, pleasure and the ill wealth captivates them to possess passion towards evil deeds and makes them to do it more and more again. With no fear but laughing to blemish and sin, the reckless attitude to enjoy everything and the quick and short joys the evil deed brings make them to carry on with it but with no any self consciousness at all. The pride on the evil deeds also makes them to behave fearless.

However on the other hand, those noble, eminent and wise who dread the blemish and the sin will dread to do any evil deeds against their own consciousness. Fearing to enjoy or to feel pride or great on evil deeds they will totally avoid it. Thinking on the fake joy and the pleasure itself makes them to feel uneasy and brings fear in them. The idea of disgrace to their lineage, family and for the good will earned so long all will cause them to develop fear in their mind and that will dread and protect them. Therefore they will abandon and not carry out the evil deeds but continue their good stature as usual as ever before.

Dreading the evil deeds and its pride the noble will not do them is the implied meaning here.

Therefore it is necessary trait for everyone to develop dread or aversion to the evil deeds and to abolish its execution so that to lead a good virtuous life and become thus the eminent and nobles is the message of this Kural.


Message :
Sinners don't fear to do evil deeds but the noble dread.

***

Sunday, January 3, 2010

திருக்குறள்:180 (வேட்காமை வெற்றி தரும்...)

அதிகாரம்

: 18

வெஃகாமை

திருக்குறள் : 180

வேட்காமை வெற்றி தரும்...

In English

இறல் ஈனும், எண்ணாது வெஃகின்; விறல் ஈனும்,
வேண்டாமை என்னும் செருக்கு.

பொழிப்புரை :
[பின் விளைவை] எண்ணாது பிறர் பொருளை அபகரிக்க வேட்கை உற்றால் அஃது அழிவைப் பெற்றுத் தரும். அதனை வேண்டாமை எனும் மனத் திண்மை பெற்றால் அஃது வெற்றியைப் பெற்றுத் தரும்.

விரிவுரை :
பின் விளைவைச் சிந்தியாது பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டால் அஃது இறுதியை அதாவது முற்றிலுமான அழிவைக் கொடுத்து விடும். ஆனால் பிறர் பொருள் வேண்டாமை எனும் திடமனது பெற்றால் அஃது வாழ்க்கை வெற்றியைப் பெற்றுத் தரும்.

இக வாழ்வின் நோக்கம் வெற்றியும் இறுதியில் முக்தியை வேண்டும் இயற்கை மரணமுமே.

பிறரின் பொருளை அபகரிப்போர், அதனால் பிறர் கோபத்திற்கும் பகைக்கும் ஆட்பட்டு இடருற்று இறுதியில் இறக்கவும் கூட நேரலாம். ஏன் அபகரித்த பொருளாலோ, வஞ்சிக்கப்பட்டவராலோ கூட மரணம் ஏற்படலாம். பேராசை பெரு நட்டத்தையே உண்டாக்கும். அதிலும் முறையற்ற பிறன் பொருள் வேட்கை தீதைத்தானே நல்கும்.

அதே சமயத்தில் பிறர் பொருள் வேண்டாமை எனும் உறுதிப்பாடு உடையோருக்கும், ஆசை அற்றோருக்கும் அவரது கொள்கைப் பிடிப்பு வெற்றியைப் பெற்றுத் தரும். அவரது நல் ஒழுக்கம் உழைப்பையே நம்பும். அவரது தேவைகளுக்காக உழைக்கத் தூண்டும். ஆசைக் குறைவு மன ஆட்டத்தைக் குறைத்து, தமது முக்கிய நோக்கங்களில் திறம்படத் திகழ உதவும். குறைந்த அளவு நோக்கங்களும், உள உறுதியும், ஒருமுகப்பட்ட முன் முனைப்பும், நேரிய சிந்தனையும் நிச்சயமாக வெற்றியைத் தான் பெற்றுத் தரும்.

ஆகவே வாழ்வில் வெற்றியையும், இயற்கை மரணத்தையும் பெற்று வாழ்க்கை நோக்கமாகிய முக்தியைப் பெற பிறர் பொருளை வேட்காமை எனும் மன உறுதியே மனிதருக்கு வேண்டும்.

குறிப்புரை :
பிறன் பொருள் வேட்கை அழிவையும், வேண்டாமை வெற்றியையும் நல்கும்.

அருஞ்சொற் பொருள் :
இறல் - இறுதி, அழிவு
விறல் - வெற்றி, வலிமை, சிறப்பியல்பு, உடலில் தோன்றும் உணர்வு வெளிப்பாடு
செருக்கு - எழுச்சி, கருவம், இறுமாப்பு, களிப்பு, துய், அனுபவி, துணிவு, மனத்திண்மை, உறுதி, மயக்கம், செல்வம்

ஒப்புரை :

திருமந்திரம்: 1844
பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே.

திருமந்திரம்: 1884
எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
கட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர்
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே.

திருமந்திரம்: 2052
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோர்
ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்
பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம் :

கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி
ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி?
ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. 266

மலையரையன் பொற்பாவை வாள்நுதலான் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளே தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. 267

தேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ?
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 268

ஔவையார். மூதுரை:
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

***

In English:

Chapter : 18

Non-Covetousness

Thirukkural : 180

Non-covetousness triumphs the victory...




In Tamil

iRal Inum, eNNAthu veHkin; viRal Inum,
vENdAmai ennum serukku.

Meaning :
Inconsiderate covetousness gives birth to ultimate destruction. But the strong non covetousness attitude will give birth to victory.

Explanation :

Without considering the consequences if one gains covetousness it would give birth to the ultimate destruction. At the same time the strong attitude of not wishing others properties will give birth to the victory.

The aim of the Life in this world is to be victorious and natural death at the end for the ultimate goal of liberation.

Those who greed for others properties and steal get subject to the affecter’s anger and enmity and thus could perhaps meet the anguish and even the death. The death even could happen through the stolen goods or by the deceived person or persons. The greater desire only gives greater loss. Hence the un-virtuous desire only can give the evil result.

At the same time, for those with strong attitude on non-covetousness and with no desires their commitment gets them the victory. Their good virtuousness shall believe only on good work. For their needs it will make them to work hard. Their lesser desires remove unnecessary diversions and help them to focus more on their important goals. Lesser goals, strong and focused mind and straightforward thinking certainly take them only to success and victory.
Therefore in life to achieve the success and victory and to get the natural death for the ultimate goal of liberation one should maintain only the non covetousness.


Message :
Covetousness will give destruction and non covetousness will give victory.

***