Showing posts with label தீயவை. Show all posts
Showing posts with label தீயவை. Show all posts

Monday, February 15, 2010

திருக்குறள்: 208 (விடாதே தொடரும் தீவினைக் கெடுதல்...)

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

திருக்குறள் : 208

விடாதே தொடரும் தீவினைக் கெடுதல்...

In English

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்தற்று.

பொழிப்புரை :
தீயவை செய்தாருக்கான கெடுதல், தன் காலடிக் கீழ் மறையாது தங்கித் தொடரும் நிழலைப் போன்றது.

விரிவுரை :
தீயவற்றைச் செய்தவருக்கான கெடுதல் என்பது அவர்தம் காலடியின் கீழ் அழியாது தொடரும் நிழலைப் போன்றது.

ஒளியிருக்கும் வரையில் நிழலும் தோன்றும். அதைப் போன்றே வாழ்வு இருக்கும் வரையிலும் செய்த தீவினைப் பாவம் அழியாதே தொடர்ந்து வருமாம்.

மனிதருக்கு வாழ்க்கை முழுவதும் காசில்லாமல் இயற்கையாகவே இலவசமாகக் கூடவே வருவது நிழலும், கவலையும் தான். அவை சில நேரங்களில் மறைந்தாலும் மீண்டும் ஒளியில் இருளாகத் தோன்றத்தானே செய்கின்றன.

உன்னை விட்டுப் போகமாட்டேன் எனக் காலுக்கடியில் அடம்பிடித்துச் சுற்றிக் கொண்டு நிற்கும் நிழலைப் போல, கர்மா எனும் பாவ வினைகள் வாழ்வைச் சுற்றிக் கொண்டு வெளிச்சம் பெறும் போதெல்லாம் கூடவே அவ்வப்போது இருளாய் வெளிப்பட்டு இடராய், நினைவாய், எதிர் வினையாற்றும் துயராய்த் துன்பமாய் தோன்றி நிற்கும். இவை ஒருவர் மரிக்கின்ற வரையிலும் பூரணமாய் ஒரு போதும் மறைவதே இல்லை.

ஆதலின் ஒருவர் தீவினையைச் செய்யாதே ஒழுகி நடந்தால் இவ்விதமான தொடர் இடர் வாராது என்பது இக்குறளின் மறை பொருள்.

முன் செய்த வினைகள் நம்மைத் தொடருவதை நாம் ஒன்றும் செய்ய இயலாது. ஏனென்றால் அவை ஏற்கனவே செய்துவிட்ட நிகழ்ந்து முடிந்த, இனித் திருத்த முடியாத நிகழ்வுகள். ஆனால் நடக்கும் நிகழ்வுகளை நாம் சரிவரச் செய்யலாமே. எனவே பிற்பாடு பாதகம் தாரா வகையில் தீவினைகளை அகற்றி நல்ல வினைகளை மேற் கொண்டு வாழுதலே அறிவுடைமை.

எனவே எப்போதும் நல்லவற்றையே எண்ணுவோம்; நல்லவற்றையே செய்வோமாக.

குறிப்புரை :
தீவினையால் வரும் கெடுதல் என்பது அடங்காது வரும் அவர் தம் நிழலைப் போன்றே ஒருவரை எப்போதும் தொடர்ந்து பற்றி நிற்கும்.

அருஞ்சொற் பொருள் :
வீயாது - அழியாது, நீங்காது, இறக்காது, மாறாது, ஓயாது, ஒழியாது
அடி - பாதம், மூலம், அடிப்பீடம், காலடி
உறை - தங்கு, தேங்கு

ஒப்புரை :

திருமந்திரம்: 751
ஓவிய மான வுணர்வை அறிமின்கள்
பாவிக ளித்தின் பயனறி வாரில்லை
தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே

திருமந்திரம்: 752
தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்று மகிழ்ந்துடல் ஒத்திடுங்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே

திருமந்திரம்: 753
பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குட னாதித்த னாறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே

திருவாசகம்:
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)

1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)
தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே. 9

பட்டினத்தார். பொது: 33
ஏதப்பட்டாய் இனி மேற்படும் பாட்டைஇ தென்றறிந்து
போதப்பட்டாயில்லை நல்லோரிடம் சென்று; புல் லறிவால்
வாதைப்பட்டாய்; மட மானார் கலவி மயக்கத்திலே
பேதப்பட்டாய்; நெஞ்சமே! உனைப்போல் இல்லை பித்தருமே!

ஔவையார். ஆத்திசூடி:
72. நேர்பட வொழுகு.

ஔவையார். கொன்றை வேந்தன்:
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது (மாலுமி)

ஔவையார். நல்வழி:
ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு. 12

ஔவையார். நல்வழி:
ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல். 13

***

In English:

Chapter : 21

Fear for Evil Deeds

Thirukkural : 208

Unceasingly continuing sin of evil deed...




In Tamil

thIyavai seythAr keduthal nizhal thannai
vIyAthu adi uRainthaRRu.

Meaning :
The evil for the sinners is like their own shadow resting at their foot, stays and continues for ever.

Explanation :

The evil and affliction for those who have committed evil deeds is like their own shadow dwelling at their own foot, never leaves but persists forever.

The shadow will appear as long as the light lasts. Same way as long as the life lasts for one the sin of one's evil deed endures upon.

For the human beings that which continues them forever free of cost by the nature is their own shadows and worries. Though they disappear now and then always they continue to appear as dark in their day of lights.

It is like the shadow which compulsorily persists coiling at their foot without leaving, the sins and evil of their committed evil deeds coil their life and show up and stay in their bright days as interruption, thought, affliction, pain or suffering. This continues throughout their life forever and never disappears completely.

One will not get such interruptions in life only if they have not committed any evil deed prior is the implied meaning here in this Kural.

We cannot do anything in this life for the prior sins following and bogging us. It is because they are already committed deeds and events and cannot be altered ever again. However we have the option to do our current deeds and events properly. Is it not? Therefore we must act such that no aftermaths affect us, hence to live by avoiding the evil deeds and performing only the good deeds are the true wisdom in life.

Therefore let us always think only the good and do only the good.


Message :
The evil which comes for one for the evil deeds made is like one's shadow persists at one's own foot, remains and continues perpetually.

***

Friday, February 5, 2010

திருக்குறள்: 202 (தீயினும் அஞ்ச வேண்டிய தீயவை...)

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

திருக்குறள் : 202

தீயினும் அஞ்ச வேண்டிய தீயவை...

In English

தீயவை தீய பயத்தலால், தீயவை
தீயினும் அஞ்சப்படும்.

பொழிப்புரை :
தீதானவை தீய பயன்களைத் தருதலால், அத் தீதானவை தீயைக் காட்டிலும் அஞ்சப்படும்.

விரிவுரை :
தீதானவை தீயவற்றையே பயனாகத் தருவதால், அத் தீதானவை பாழ்படுத்தும் தீயைக் காட்டிலும் அதிகமாக அஞ்சப்படும்.

தீயவற்றை விளைவிப்பதாலேயே தீயவை தீதானவை என்று அடையாளப் படுத்தப்பட்டிருக்கும் போழ்து இதில் என்ன குழுப்பம்? அதாவது ஏதேனும் ஒரு தீதாவது நன்மையைத் தருமேயானால் அதற்கு அஞ்சத் தேவையில்லை என்பது பொருள். அன்றில் தீதானவை அஃது எண்ணமாயினும், செயலாகினும் அஞ்சப் பட வேண்டியதே.

தீமை விளைவிப்பதில் தீயைக் காட்டிலும் தீவிரத் தன்மை கொண்டவை தீதான எண்ணம் எனக் கருதி அவற்றை அஞ்சி ஒதுக்க வேண்டுமாம். தீப்பற்றிக் கொள்ளக் கூட நேரம் ஆகலாம் ஆனால் தீதான எண்ணம் பற்றிக் கொள்ள கால இடைவெளியோ, அவகாசமோ ஒரு பொருட்டா? அஃது பற்றிக் கொண்டால் படருவதும், தொடருவதும், பாழாக்குவதும் தீயைக் காட்டிலும் வெகு விரைவில், மிகுதியான அளவில் நடந்தேறிவிடும். ஆதலின் தீயவற்றை எண்ணுதலே தவறு. தவறி எண்ணிவிட்டால் அவற்றைச் செயல் படுத்துவது அதனினும் தவறு. இத் தவறுகளின் விளைவுகளை மனக்கண்ணால் எண்ணி அஞ்சுதலும் அதைத் தவிர்த்தலுமே அறிவுடைய செயல்.

தீயினால் நன்மையும் உண்டு சயமங்களில் அத்தியாவசியமும் கூட. ஆனால் தீயவற்றால் நன்மை ஏதும் உண்டோ? அதால் தீதை மட்டுமே விளைவிக்க முடியும் எனும் பட்சத்தில் அதை அஞ்சி ஒதுக்கி விடுவது தானே நல் வாழ்விற்கான சரியான முறையாக இருக்க முடியும்?

குறிப்புரை :
தீயப் பயன்களை விளைவிக்கும் தீயவற்றைக் கண்டு, தீக்கு அஞ்சுவதைக் காட்டிலும் அஞ்சித் தவிர்க்க வேண்டும்.

அருஞ்சொற் பொருள் :
பயத்தல் - பயன் தருதல், விளைவித்தல், தருதல், பலன் தருதல்

ஒப்புரை :

திருமந்திரம்: 212
தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலு ம் ஆமே.

திருமந்திரம்: 213
அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.

திருமந்திரம்: 219
பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே.

திருவாசகம்:
1. சிவபுராணம் :

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

பட்டினத்தார். திருத்தில்லை: 14
உடுப்பானும் பாலன்னம் உண்பானும் உய்வித் தொருவர் தம்மைக்
கெடுப்பானும் ஏதென்று கேள்விசெய் வானும் கதியடங்கக்
கொடுப்பானும் தேகிஎன்று ஏற்பானும் ஏற்கக் கொடாமல் நின்று
தடுப்பானும் நீயல்லை யோ தில்லை ஆனந்தத் தாண்டவனே!

ஔவையார். ஆத்திசூடி:
35. கீழ்மை யகற்று.

ஔவையார். கொன்றை வேந்தன்:
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

ஔவையார். மூதுரை:
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8

ஔவையார். நல்வழி:
எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால் - கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4

***

In English:

Chapter : 21

Fear for Evil Deeds

Thirukkural : 202

The evils dreadful than fire...




In Tamil

thIyavai thIya payaththalAl, thIyavai
thIyinum anjsappadum.

Meaning :
Since the evilness only results in evils, such evilness must be dreaded more than the fire.

Explanation :

As the evils produce only evil results, such evils should be feared more than the ravaging fire.

Since they result only evil things they are termed as evils; then why is there confusion? Actually it means that if there is at least single goodness from an evil, one really need not fear for it, is the implied meaning here. Otherwise any evil whether it is a thought or a deed must only be feared.

One should avoid the evil thoughts considering that it can actually result in most devastating things than the fire. It may take a while for the fire to really capture. But, Will the time or the duration matter for the evil thought? If that captures one, spreading, continuing and damaging will happen at much faster rate and quicker than the real fire. Therefore thinking of the evil deed itself is wrong. Even if one mistakenly thought about it, executing it is worse than that. Only by thinking and considering the evil results it can cause in the mind and avoiding its execution is only the wisest act one can do.

There are good things through fire and hence it is necessary too at times. But is there any goodness by the evils? When it can result only evil things, fearing for it and only avoiding its execution is the right thing or good virtue to do one in life. Is it not?


Message :
By looking at the evils that produces evil results one should fear more than the fire and avoid doing it.

***