Showing posts with label விடல். Show all posts
Showing posts with label விடல். Show all posts

Sunday, February 7, 2010

திருக்குறள்: 203 (தலையாய அறிவு பழி வாங்காமையே...)

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

திருக்குறள் : 203

தலையாய அறிவு பழி வாங்காமையே...

In English

அறிவினுள் எல்லாம் தலை என்ப, தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

பொழிப்புரை :
அறிவினுள் எல்லாம் தலையானது என்பது, [தமக்குத்] தீயவை செய்வார்க்கும் [தாம் தீமை] செய்யாது இருந்து விடல்.

விரிவுரை :
பெற்ற அறிவினுள் எல்லாம் தலையாயது என்பது, தமக்குத் தீயவை செய்வாருக்கும் கூட தாம் தீமை செய்யாது இருந்து விடுதலே.

தமக்குத் தீயவை செய்தவரைப் பழி வாங்கினால் ஆறறிவு படைத்த மனிதருக்கு அதில் அறிவின் சிறப்பு என்பது ஏதுமில்லை.

தீமை செய்யாது இருத்தலே நன்மக்களுக்கான நன்னெறி என்று இதுகாறும் முன்னர் குறள்களில் கண்டோம். அதிலும் தமக்குத் தீமை பயத்தவருக்கும் கூட பதிலுக்குத் தீமை செய்யாது விட்டு விடுதல் என்பது நன்னெறி மாத்திரமல்ல, சிறந்த அறிவின் வெளிப்பாடு என்கிறார் இக்குறளில். அதாவது தீமைகளை ஒருவருக்கொருவர் செய்து கொண்டு தொடருவதைக் காட்டிலும் அதை தாம் முதலில் நிறுத்துவதால் தொடரும் பெரும் தீங்குகளைத் தடுக்கும் செயல்பாடு அஃது என்கின்றார். ஆம், அதற்கு தீமை செய்யாமை என்னும் நன்னெறியோடு தீர்க்க தரிசனமும், பொறுமையும், மன்னிக்கும் குணமும், விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையும் அதிகம் தேவை அல்லவா? அறிவின் முதிர்ச்சி அல்லது உச்சம் என்பது தொடரும் தீமைகளைத் தீமை செய்யாதே தடுக்கும் கெட்டிக் காரத்தனமே அல்லவா?

இன்னல் விளைவிப்போரைத் தீர்த்துக் கட்டுவதால் தீமையை ஒழிக்கவே முடியாது. ஏனென்றால் மனிதம் என்பதும் மனங்களால், உறவுகளால், மனிதர்களால் ஆனது. பழிக்குப் பழி வாங்கும் குணம் என்பது பக்குவப் படாத மனிதனின், ஐந்தறிவு படைத்த மிருகத்தின் குணம். ஆதலின் பக்குவப் படாத உறவுகளால், மனிதர்களால் துன்பங்கள் தொடரவே செய்யும். எனவே தீமைகளை நிறுத்தச் சிறந்த வழி என்பது அது தோன்றும் மனிதர்களை, மனங்களைத் திருத்துவதே. மானிடரைத் திருத்துவதற்கு அன்பும், அவர் தமக்குத் தீமை செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் பொறுமையும், தொலை நோக்குப் பார்வையின் பால் தற்காலிகமாக வெற்றியை விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும், மனித நேயமும், மனிதர்களைத் திருத்த முடியும் எனும் அசையாத நம்பிக்கையும், விலை மதிப்பற்ற உயிர்களைப் போற்றும் குணமும், உலகை உய்விக்கும் உயர்ந்த நோக்கமும், சுய கட்டுப்பாடும் தேவை. இவற்றிற்கெல்லாம் அடிப்படையில் அத்தகைய நன்னெறிகளைக் கடைப்பிடிக்க, நல்லவை கெட்டவை அறிந்து தெளிந்து ஒழுக, ஒருவருக்கு நல் அறிவின் முதிர்ச்சியே தேவை.

தீயவை செய்யாத, தீமைகள் அற்ற நல் எண்ணங்களுக்கு, நல் மனத்திற்கு வெற்றிகள் எப்போதும் நிச்சயம்.

ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தைக் காட்டு என்று ஏசுபிரான் கூறுவதற்கு முன்பே வள்ளுவர் அதையும் தாண்டிய பார்வையில், தீமை இழைத்தவனையும் மன்னித்து தீமை இழைக்காதிருக்கும் அறிவே சிறந்த அறிவு மற்றும் தலையாயது என்று இங்கே கூறி இருக்கின்றார். பின்னர் இதே கருத்தின் நீட்சியாய், மேம்பட்ட நிலையை இன்னும் அழகாக

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்” (குறள்: 314)

என்று இன்னா செய்யாமை என்னும் அதிகாரத்தில் பின்னர் கூறுவார்.

ஆக மனிதர்கள் பெற்ற அறிவிலேயே தலையாயது என்பது தமக்குத் தீமை செய்தவருக்கும் கூட தீமை செய்யாது இருக்கும் மனக் கட்டுப்பாடே.

குறிப்புரை :
தலையாய அறிவென்பது தமக்குத் தீயவை செய்தவருக்கும் கூடத் தீமை செய்யாது இருத்தலே.

அருஞ்சொற் பொருள் :
செறு - அடக்கு, தணிவி, தடு, சின, வெறு, வருத்து, வெல், அழி, கொல், மாறு, பிறழ், தூர்

ஒப்புரை :

திருமந்திரம்: 222
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே.

திருமந்திரம்: 258
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக் கேடில் புகழோன்
விளைக்கும் தவமறம் மேற்றுணை யாமே.

திருமந்திரம்: 265
வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும்
மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு
வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.

திருவாசகம்:
1. சிவபுராணம் :

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

பட்டினாத்தார். திருவொற்றியூர்: 2
சுடப்படு வார் அறி யார், புரம் மூண்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில் தென்ஒற்றி யூரன் தெருப்பரப்பில்
நடப்பர் பொற்பதம் நந்தலை மேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மன மே விதி ஏட்டைக் கிழிப்பதுவே!

ஔவையார். ஆத்திசூடி:
38. கெடுப்ப தொழி.

ஔவையார். கொன்றை வேந்தன்:
52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி

ஔவையார். மூதுரை:
தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

ஔவையார். நல்வழி:
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். 5

***

In English:

Chapter : 21

Fear for Evil Deeds

Thirukkural : 203

The Higher most wisdom is not to revenge...




In Tamil

aRivinuL ellAm thalai enpa, thIya
seRuvArkkum seyyA vidal.

Meaning :
The foremost among the wisdom is not to do evil things but to only ignore even those who do evil deeds to the self.

Explanation :

The principal among the wisdom obtained is the one that which ignores the evil doings even if done to the self by others and not doing any evil things.

If one retaliates to the evil doers to the self, there is nothing great or special in it for the human beings having six senses.

Evil deeds must not be executed as the good principle and virtue for the good human beings is what we have been told so far by the previous Kurals of this chapter. Not only non-executing the evil deeds are good in general but also ignoring to retaliate it even if it is made on self by others is great and that is the highest of wisdoms one can exhibit says Valluvar here. In fact what he means through that is, instead of continuing the evil doings to each other, stopping it by the self first is the great effort to stop the bigger afflictions which otherwise would continue forever and never ending. Yes, for such a kind of action along with the good virtue of not performing evil deeds, the necessaries more are only the foresight, forbearance, forgiveness and the magnanimity to give. Is it not? The height or the maturity of the wisdom is nothing but the intelligence to stop the continuing evil afflictions by not doing any evil act. Is it not?

One can never stop the evil doing by terminating the evil doer. It is because humanity is made of emotions, relations and human beings. Revenge is the characteristic of immature mind of human beings and of five sensed animals. Therefore by the inconsistent and immature people and relations, the evil doings and afflictions only will continue and never stop. Therefore the best way to stop the evils is to stop at its starting point of human beings and by correcting the hearts. Nurturing, rectifying and correcting of human beings require greater love and compassion, forbearance to bear up with any harm they inflict on the self, and the right attitude to give up the temporal victory to them aiming at the greater foresights, respect to the human rights, and the likeness to human beings, doubtless complete faith in human beings that they can be nurtured, the character to appreciate the invaluable life of living things, the noble aims to upkeep the world and above all the self control. For all these, fundamentally to adopt such good principles, and to analyze the good and bad and to take the right and best practice one requires the basically the maturity of one's own wisdom alone.

For the hearts and the mind which does not hold the ill ideas and does no evil doings, prosperity and success will always be certain.

Before the saying "If you are slapped on one cheek, turn the other too.” by Jesus Christ, Valluvar had given this Kural with exceeding view and clarity by saying to ignore even the evil done to you by others and not doing the evil deed to them is as the primary and greatness of wisdoms. Later in extension of the same idea in a better sense and in beauty he would continue in the Chapter "Not hurting others" as follows:

`
`innA seythArai oRuththal avar nANa
nannayam seythu vidal''
(Kural: 314)

Therefore for the human beings the chief among the wisdom is only the self-control not to do any evil deeds even when others do the ill to the self.


Message :
The primary wisdom is nothing but not doing evil things even to those who do evil deeds to the self.

***

Saturday, December 5, 2009

திருக்குறள்:158 (செருக்கை அறுக்கும் பொறுமை...)

அதிகாரம்

: 16

பொறையுடைமை

திருக்குறள் : 158

செருக்கை அறுக்கும் பொறுமை...

In English

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம்
தகுதியான் வென்று விடல்.

பொழிப்புரை :
செருக்கினால் மிகையானவற்றைச் செய்தவரைத் தாம், தமது பொறுமையால் வென்று விடல் [வேண்டும்].

விரிவுரை :
செருக்கினால் தம்மிடம் மிகை காட்டியவரை தாம் தமது பொறுமையால் வென்று காட்ட வேண்டும்.

செருக்கினால் வீரம் பேசுவோரை, தீங்கிழைப்போரைத் தமது பொறுமையெனும் பண்பினால் வென்று விடல் வேண்டும். அவரிடம் பதிலுக்குச் சூளுரைப்பதோ, எதிர் வாதம் செய்வதோ, தீங்கு செய்வதோ சரியான முறை அன்று.

செருக்கெனும் இறுமாப்பு தானாகவே கொண்டுள்ளவரைக் கீழே தள்ளிவிடும். செருக்கினால் மேன்மையும், மிகை மினுக்கும், திமிரும் காட்டியவர்கள், காலச் சுழற்சியில் சீரழிந்து, சிறுமைப்பட்டுக் காணாமல் போவதே கண் கூடு. செருக்கும், தலைக்கனமும், அகம்பாவமும், ஆணவமும், திமிரும் தம்மைத் தாமே அழித்துக் கொள்ளும் வல்லமை கொண்டவை. எனவே அவற்றைக் கொண்ட ஒருவரைத் தண்டிக்க வேண்டிய அவசியமே இல்லை. மேலும் தம்மிடம் காட்டிய செருக்கிற்குப் பதிலாக ஒருவர் செருக்குக் கொள்ளுவது மடமை.

எனவே பொறுமை எனும் பண்பே பிறரின் செருக்கைத் தணிக்கவல்ல மாமருந்து.

குறிப்புரை :
பொறுமை எனும் பண்பால் செருக்குள்ளவரை வெல்க.

அருஞ்சொற் பொருள் :
மிகுதி - இறுமாப்பு, செருக்கு, அதிகம்
மிக்க - மிகையான, அதிகமான, மிகுந்த
தகுதி - நடுநிலைமை, நேர்மை, பொறுமை

ஒப்புரை :

திருமந்திரம்: 420.
அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணுகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே

திருமந்திரம்: 434.
காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயலணை யாரே

திருமந்திரம்: 1584.
திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா தருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடிலோர ஒண்ணாதே. 12

திருமந்திரம்: 1585.
பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாஞ் சிவோகமெ சேர்தலான்
முத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை
சத்தி யருள்தரில் தானெளி தாமே. 13

திருமந்திரம்: 1586
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்எய்த வைத்த முதல்வனை எம்மிறை
தன்எய்துங் காலத்துத் தானே வெளிப்படு
மன்னெய்த வைத்த மனமது தானே. 14

மாணிக்கவாசகர். திருவாசகம்:
23. செத்திலாப் பத்து :

அறுக்கிலேன் உடல்துணிபடத்தீப்புக்
கார்கிலேன் திருவருள் வகையறியேன்
பொறுக்கிலேன்உடல் போக்கிடங் காணேன்
போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
இறக்கிலேன் உனைப்பிரிந்தினிதிருக்க
எனசெய்கேன்இது செய்க என்றருளாய்
சிறக்கணே புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 403

ஔவையார். ஆத்திசூடி:
99. வாதுமுற் கூறேல்.
103. ஊருடன் கூடிவாழ்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
62. பீரம் பேணில் பாரம் தாங்கும்

ஔவையார். நல்வழி:
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. 7

***

In English:

Chapter : 16

Forbearance

Thirukkural : 158

Hauteur killing Patience...




In Tamil

mikuthiyAn mikkavai seythAraith thAm tham
thakuthiyAn venRu vidal.

Meaning :
Those who exhibit you excesses of haughtiness must be won through your humble forbearance.

Explanation :
Win those who show haughtiness in excesses on self through the self forbearance.

Those who exult in haughtiness or who indulge in arrogance on one, must be won through the trait and practice of forbearance. Retaliating them with argument, challenge or ill doing is improper.

The haughtiness by itself will drop down those who possess it. Those who have exhibited greatness, shine and arrogance due to haughtiness have gone to astray, insignificant and disappeared over a period of time through natural cycle. The haughtiness, arrogance, pride, head weight, insolence and such have the quality of spoiling themselves at the end. Therefore one need not punish those who possess such characteristics. Also retaliating them with same arrogance is nothing but utter foolishness.

Therefore the forbearance is the trait and great medicine to heal other's haughtiness.

Message :
By the virtue of Patience win those with hauteur.

***