Showing posts with label பொருள். Show all posts
Showing posts with label பொருள். Show all posts

Saturday, January 30, 2010

திருக்குறள்:199 (விழித்திருப்போர் பொருளற்றதைப் பேசமாட்டார்...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 199

விழித்திருப்போர் பொருளற்றதைப் பேசமாட்டார்...

In English

பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - மருள் தீர்ந்த
மாசு அறு காட்சியவர்.

பொழிப்புரை :
பொருள் அற்ற சொற்களை மறந்தும் சொல்லார் - மயக்கம் தீர்ந்து மாசறத் தெளிந்தவர்.

விரிவுரை :
மயக்கம் தீர்ந்து மாசற்று அறிவுநிலை தெளிந்தவர்கள் பொருள் அற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.

குழப்பமற்று, குற்றமிலாத தூய சிந்தனைத் தெளிவு பெற்றவர்கள் சுய நினைவோடு விழிப்பு நிலையில் இருப்பார்கள். அவர்களால் மறந்தும் அர்த்தமற்ற சொல்லைச் சொல்ல முடியாது என்பதே உண்மை. விழித்திருக்கும் போது விழிப்பு நிலையிலும், ஆழ் நிலைத் தூக்கத்திலும் உணர்வுநிலை தூங்காது சுய நினைவோடு விளங்குவோருக்கு பயனற்றவற்றைத் தவிர்ப்பது என்பது ஆச்சரியம் அற்றது. அவர்களுக்கு அது இயற்கையாகவே அமையும்.

ஆதலின் இக்குறளின் உட்கருத்து சந்தேகம், மயக்கம், குழப்பம், குற்றம் அற்ற சிந்தனைச் செம்மல்களாக, விழிப்பு நிலையில் சுய நினைவோடு திகழ விரும்புவோர் மறந்தும் பொருள் அற்ற பிதற்றல்களை, அபத்தங்களைப் பேசுதல் கூடாது என்பதே.

அதற்கு பொருளற்றவற்றை மறந்தும் பேசுதல் கூடாது என்று மனிதர்களின் ஆழ்மனத்தில் பதித்துவிட்டால், இனி எல்லாச் சமயங்களிலும் தன்னியல்பாகவே அர்த்தமற்றதைப் பேச மாட்டார்கள் என்பது உளவியல் அறிஞர்கள் அறிவார்கள். அதைத்தான் இங்கே வள்ளுவர் வலியுறுத்திச் செய்கின்றார். அதாவது அவ்வாறு ஆழ்மனதில் பதிக்கப் பெற்றவர்கள் ஆழ்நிலைத் தியான மயக்கம் தீர்ந்து, மாசற்ற அறிவு நிலையில், தூய சிந்தனை பெற்றுத் தெளிந்தவர்கள் பொருள் அற்ற சொற்களை இனி மறந்தும் எப்போதும் சொல்லார். அவர்கள் அர்த்தமற்றவற்றைப் பேசக் கூடாது எனும் சுய நினைவோடு எப்போதும் விழிப்போடு திகழ்வார்கள்.

வள்ளுவர் மிகப்பெரிய உளவியல் அறிஞர் என்பதை விளக்கும் குறள்களில் இதுவும் ஒன்று.

ஞாபகத்தில் வையுங்கள் ‘பொருள் இல்லார்க்கு இவ் வையம் இல்லை’; அதாவது அர்த்தம் அற்றோருக்கு இந்த உலகம் இல்லை.

குறிப்புரை :
மயக்கம், கலக்கம், மாசு அற்றுச் சிந்தனை தெளிந்தவர்கள் பொருள் அற்ற சொல்லை மறந்தும் சொல்ல மாட்டார்கள்.

அருஞ்சொற் பொருள் :
பொச்சா - மற, இகழ்
மருள் - மயங்கு, மனம் கலங்கு, தடுமாறு, மிரளு, வெருவு, வியப்படை, ஒப்பாகு, ஆவேசம், வெறி,
மாசு - தூசி, அழுக்கு, அசுத்தம், தூய்மைக்கேடு, களங்கம், இருள், தீமை, குற்றம்

ஒப்புரை :

திருமந்திரம்: 694
காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது அக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்நூற் றொருபத்து மூன்றையங்
காலது .(1). வேண்டிக் கொண்டஇவ் வாறே

திருமந்திரம்: 698
ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே

திருமந்திரம்: 699
முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே

திருவாசகம். மாணிக்கவாசகர்.
6. நீத்தல் விண்ணப்பம்
(திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை)

கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106

ஔவையார். ஆத்திசூடி:
83. பேதைமை யகற்று.

பட்டினத்தார். பொது: 22
என் செய லாவது யாதொன்றும் இல்லை; இனித் தெய்வமே!
உன் செய லேயென்று உணரப்பெற்றேன்; இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே.

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 199

Conscious man will not utter non sense...




In Tamil

poruL thIrntha poccAnthum sollAr - maruL thIrntha
mAsu aRu kAtchiyavar.

Meaning :
Those who are conscious and have clear vision will never utter meaningless words even by mistake.

Explanation :

Those who have clear vision with free from bewilderment and defects will not utter meaningless words even by mistake of forgetting.

People of clear mind and vision with no perplexity and faults stay more conscious. They cannot utter meaningless words even by mistake indeed. There is no wonder for the people who are always conscious either in awaken state or in deep sleep to avoid the useless. It is natural for them.

However, the implied meaning here in this Kural is that those who wish to be conscious with clear mental vision and free from doubts, bewilderment, perplexity and defects should not speak the meaningless words.

For that the psychologists say that if the statement 'Never speak meaningless words' is implanted in the sub-conscious mind for the people naturally they will not speak it. That is what exactly Valluvar is doing and emphasizing it here. Once again read the explanation for this Kural which makes it more empirical now. Those who have implanted in their subconscious mind when they are awaken from their deep sleep with consciousness and clear mental vision with no bewilderment or perplexity what so ever will never speak the meaningless even by mistake. They will stay always conscious not to speak the meaningless forever.

This Kural is one amongst many that proves Valluvar as great psychologist again.

Remember another Kural 'Porul Illaarku iv vaiyam illai' which also means that 'this world is not for those meaningless'.


Message :
Those who have clear mental vision free from bewilderment, perplexity and defects will never utter meaningless words even by mistake.

***

Friday, January 1, 2010

திருக்குறள்:178 (குன்றாமை வேண்டின் வேட்காமை நன்று...)

அதிகாரம்

: 18

வெஃகாமை

திருக்குறள் : 178

குன்றாமை வேண்டின் வேட்காமை நன்று...

In English

’அஃகாமை செல்வத்திற்கு யாது?’ எனின், வெஃகாமை
வேண்டும் பிறன் கைப் பொருள்.

பொழிப்புரை :
’வற்றாமை செல்வத்திற்கு எது?’ என்றால், வேட்காமை வேண்டும் பிறன் கைப் பொருள்.

விரிவுரை :
ஒருவனுடைய செல்வம் குன்றாமல் இருக்க வழி எது என்றால், அவன் பிறன் கைப் பொருளைக் கவர எண்ணாது இருத்தலே ஆகும்.

தீதை எண்ணினால் அல்லது தீதைச் செய்தால் இருப்பதும் அழிந்து போகும் என்பது கருத்து.

நாம் பிறருக்கு எதைச் செய்ய எண்ணுகின்றோமோ அதுவே நமக்கு நடக்கும். காரணம் நாம் எதை ஆழ்ந்து எண்ணுகின்றோமோ அது நமது ஆழ் மனத்தில் பதிந்து விடுகின்றது. தெரிந்தோ, தெரியாமலோ, பிறருக்கோ, தனக்கோ என்றெல்லம் பகுத்தறியாத ஆழ்மனம் நமது எண்ணத்தின் விருப்பத்தை மாத்திரம் பிடித்துக் கொண்டு விடுகின்றது. அதை வஞ்சகமே இல்லாது தனக்கே விளைவித்தும் விடுகின்றது.

இதைத்தான் ’கெடுவான் கேடு நினைப்பான் தனக்கே வரும் பெரும் கேடு’ என்றும் சொல்வார்கள்.

எப்போதும் நற் சிந்தனையோடு திகழ வேண்டும், ஆசையற்று இருத்தல் வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்திச் சொல்பவை இதற்காகத்தான்.

அதைப் போலவே பிறர் பால் செய்யும் தீமை, பின்விளைவைச் செய்யாது விட்டு விடுமா? பிறர்பால் முற் பகல் செயின், பிற் பகல் தமக்குத் தாமே வரும். எளியவனைக் கொள்ளை அடித்தால், வலியவனால் வஞ்சிக்கப் படுவாய். ஏமாற்றியவன் நிச்சயம் பெரும் ஏமாற்றத்தைச் சந்திப்பான். இதுதான் இயற்கை வாழ்வுச் சுழற்சி முறை.

அள்ளிக் கொடுக்கின்ற வள்ளல்கள் குறைப் படுவதுமில்லை அவர்களின் வளம் குன்றிப் போவதுமில்லை. அவர்கள் பால் வளம் நிறைவதற்குக் காரணம் கொடுக்கக் கொடுக்கக் குறையாது; மாறாகக் கூடும் என்பதே சூட்சுமம். தோண்டத் தோண்ட ஊறும் ஊற்றைப் போல எங்கே வழங்கும் மனது இருக்கிறதோ ஆங்கே வளமும் வந்து நிறைகின்றது.

மனதால், எண்ணத்தால், காயத்தால் நன் நெறி நிற்பவர்களுக்கு, நன்மையே நடக்கும். தீமை நெஞ்சினர் தீதையே பெறுவர்.

ஆதலால் தன் பொருள் குன்றாமை வேண்டுவோர் மறக்காமல் கடைப் பிடிக்க வேண்டியது பிறர் பொருளை வேட்காமையே.

குறிப்புரை :
தமது பொருள் வளம் குன்றாமை வேண்டின் செய்ய வேண்டியது பிறர் பொருள் விரும்பாமையே.

அருஞ்சொற் பொருள் :
அஃகு - சுருங்கு, குறை, வற்று
அஃகாமை - சுருங்காமை, குறையாமை, வற்றாமை

ஒப்புரை :

திருமந்திரம்: 1702
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே.

திருமந்திரம்: 1834
வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார்
அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே.

திருமந்திரம்: 2640
விருப்பொடு கூடி விகிர்த்னை நாடிப்
பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
32. பிரார்த்தனைப் பத்து :

அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன் வருவாய் என்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டும்மே. 487

வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை அருளால்
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல்
வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே. 488

மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணான் பங்கா உன்றன் கருணையினால்
பாவியேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்
தாவி யாக்கை யானென்தன் றியாது மின்றி அறுதலே. 489

ஔவையார். ஆத்திச் சூடி:
41. கொள்ளை விரும்பேல்.
48. சூது விரும்பேல்.
55. தானமது விரும்பு.
57. தீவினை யகற்று.
72. நேர்பட வொழுகு.
87. மனந்தடு மாறேல்.
102. உத்தம னாயிரு.

ஔவையார். கொன்றை வேந்தன்:
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
53. நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
63. புலையும் கொலையும் களவும் தவிர்
68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

***

In English:

Chapter : 18

Non-Covetousness

Thirukkural : 178

Covetous not for shrink not...




In Tamil

'aHkAmai selvattiRku yAthu?' enin, veHkAmai
vENdum piRan kaip poruL.

Meaning :
What protects one’s own wealth shrink means, he must not covetous on others goods.

Explanation :

How to protect one’s own wealth un-shrunk means that not covetously covering others goods.

Evil thought or evil doings only destroys one's own prosperity is the meaning.

Whatever we wish to do to others will happen to us. Reason is that whatever we keep thinking gets automatically registered in our subconscious mind. Without rationalizing the thoughts either for self or for others the subconscious mind just gets impressed only by the wishes. Later without any hindrance it executes but of course for the self.

This is what proverbially they say as 'keduVan kEdu ninaippAn; thanakkE varum perum kEdu', which means that who thinks the bad will get ruined; and that too with a bigger ruin for the self.

This is the same reason for all emphasizing to keep thinking the good and to omit the desires.

Similarly, will that evil deeds made to others keep quiet without making any consequences to the self? Again the proverb in Tamil "muRpahal seying piRpahal thAmE vaRum", which means whatever made in the forenoon, will have its consequences to the self in the afternoon. Therefore whatever done to others will be returned to the self in multitudes in very short time. If you cheat the lesser privileged, you will get cheated by the stronger sooner. Deceived will surely suffer through the bigger deceit. These are the natural law of cycles.

Those philanthropists who donate in abundance never complain nor go shrunk. The reason and secret behind their success of wealth is by donating the prosperities does not diminish but only grows. It is like the well which keeps secreting the water as long as it is drawn, where there is a giving heart it gets replenished with more wealth.

Those who stand through good virtues by heart, mind and the soul get only good things where as those with bad mind get only ill.

Therefore those who wish un-shrunk wealth should follow without fail is no covetousness on others properties.


Message :
All that who desire undiminished wealth should do is only not to covet on others wealth.

***