Showing posts with label சொலின். Show all posts
Showing posts with label சொலின். Show all posts

Tuesday, January 26, 2010

திருக்குறள்:195 (சீர்மை நீக்கும் பயனிலாச் சொல்...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 195

சீர்மை நீக்கும் பயனிலாச் சொல்...

In English

சீர்மை சிறப்பொடு நீங்கும் - பயன் இல
நீர்மை உடையார் சொலின்.

பொழிப்புரை :
[அவரின்] பெருமை மேன்மையுடன் நீங்கும், பயன் இல்லாத சொற்களைத் தண்மை உடையவர் சொன்னால்.

விரிவுரை :
பயனிலாத சொல்லை கருணை உள்ளவர் சொன்னால், அவரது புகழ் அதன் தனித் தன்மையோடு நீங்கிவிடும்.

இயல்பாகவே இனிமையும், கனிவும், கருணையும் உடையவர் தவறி அர்தமற்றவற்றை, பிதற்றலை, உபயோகமற்றவற்றைப் பேசுவாரே ஆனால் அவரின் பெருமை, மேன்மை யாவும் அவற்றின் சிறப்புக்களோடு அவரை வீட்டு நீங்கிவிடும். பயனிலாத சொல்லால் ஒருவரின் இயல்புத் தன்மையையே இழக்க நேரும் என்பது உட்பொருள்.

மேலும் எவ்வளவு மேன்மை உடையவராயினும் பயன் இல்லாச் சொல் பேசுவார் ஆயின் தனது புகழையும், சிறப்பையும் இழக்க நேரும் என்பதும் நேரடிப் பொருள்.

ஆக எவ்வளவோ காலத்தில் சேர்த்த புகழை, மேன்மையை பயன் இலாச் சொல் என்னும் அர்த்தமற்ற பேச்சினால் உடனடியாக இழக்க வேண்டிவரும். அதனால் அவமரியாதையை, இழுக்கை ஒருவர் அடைய நேரும் என்றால் பயன் இலாச் சொல்லால் ஏற்படும் பாதகத்தின் அளவை நன்கு புரிந்து கொள்ளலாம்.

எனவே பயனிலாச் சொல்லைச் சொல்வதில் மேலோர், கீழோர் எனும் பாகு பாடே இன்றி அவரவர் தகுதிகளிலிருந்து தள்ளப்பட்டு அவமானத்தையும், இழுக்கையையும், துன்பத்தையும், வருத்தத்தையும் அடைவர் என்பது திண்ணம்.

குறிப்புரை :
கருணையும் தண்மையும் கொண்டவரேனும் பயனிலாத சொற்களைச் சொன்னால் அவரது பெருமையும் அதற்கான மேன்மையும் அவரை விட்டு நீங்கிவிடும்.

அருஞ்சொற் பொருள் :
சீர்மை - பெருமை, புகழ், நற்பண்பு
சிறப்பு - மேன்மை, தனித்தன்மை, உயர்வு, செல்வம், கௌரவம்
நீர்மை - குளிர்ச்சி, இயல்பு, இயற்கை, இன்சொல், நட்பு, கருணை, தண்மை

ஒப்புரை :

திருமந்திரம்: 294
துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே.

திருமந்திரம்: 300
பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.

திருமந்திரம்: 302
மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்பது அரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.

திருவாசகம். மாணிக்கவாசகர்.
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா)

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24

ஔவையார். ஆத்திசூடி:
53. சோம்பித் திரியேல்.

ஔவையார். நல்வழி:
சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். 15

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 195

Vain words eliminates the reputation...




In Tamil

sIrmai siRappodu nIngkum - payan ila
nIrmai udaiyAr solin.

Meaning :
Their eminence with excellence will leave them even for those kind men who speak of senseless words.

Explanation :

When the kind men speak of useless vain words, their reputation with it's eminence will go away.

Those who are normally sweet, kind and gentle, when they speak senseless things or blabber even by mistake, their all eminence and excellence with their specialties will leave them instantly. The implied meaning is that by talking senseless words one has to lose one's natural state.

Also the direct meaning is that whomever it may be, however eminent they may be, when they speak the senseless and stupid words they got to lose their fame and excellence without fail.

Therefore one has to lose the fame, excellence and the good will earned through a very long period of time over a stupid talk of non sense. One can understand the severity and the impact of the senseless words by its definite offerings of defames and disgraces.

Therefore it is sure that by speaking the senseless words one has to certainly befall from their current stand and regardless of high or low status and will definitely earn only disgrace, defame, degrading and afflictions there upon.


Message :
The reputation and excellence leave even the gentle and kind men when they speak senseless words.

***

Saturday, September 12, 2009

திருக்குறள்: 96 (இனியசொல்லால் நல்வினை பெருகும்...)

அதிகாரம்

: 10

இனியவை கூறல்

திருக்குறள்

: 96
Chapter : 10

Amiability

Thirukkural

: 96


அல்லவை தேய அறம் பெருகும்-நல்லவை
நாடி, இனிய சொலின்.

பொழிப்புரை :
[நல்லன] அல்லாதவை தேய்ந்து மறைந்து அறம் எனும் நலம் பெருகும்; நல்லனவற்றை நாடி, இனிமை உடைய சொற்களைச் சொல்லின்.

விரிவுரை :
பிறருக்கு நன்மை தருபவற்றை நாடித் தெளிந்து, இனிமை உடைய சொற்களை ஒருவர் சொல்லின் அவருக்கு நல்லன அல்லாதவை குறைந்து மறைய, அறமாகிய நல்வினைப் பயன் பெருகும்.

இது ஒரு உளவியல் தத்துவம். பிறரிடம் பேசும் போழ்து அவருக்கு நன்மைதரும் விபரத்தை அறிந்து, அதை இனிய சொற்களால் ஏதுவாக எடுத்து இயம்பின், ஒருவருக்கு அவரது காரியம் நல்ல விதத்தில் நடந்தேறும், நன்மைகள் நடக்கும்.

ஒருவரின் நோக்கமறிந்து அவருக்கு நன்மைதரும் விடயத்தை, அன்பொழுக இனிய சொற்களால் சொல்லின், அவர் அதற்கிணங்கி பதிலிற்கு நன்மைகள்தான் செய்வார். இதுவே இனிய சொல்லாலும், குறிப்பறிந்து நன்மையை விளம்பிப் பேசுவதாலும் ஏற்படும் இணக்கத்தின் பயன்.

இணக்கத்திற்கு இலக்கணம் ஒருவருக்கு நன்மை தருவதை இனிய சொல்லில் எடுத்து இயம்புவதே. இதுவே மனித வாழ்வியலில் தொடர்புகளுக்கும், உரையாடலுக்குமான அடிப்படைப் பாடம்.

இது அரசியல், வியாபாரம், அலுவலகம், இல்லறம், சமூகம், இவ்வளவு ஏன் ஒருவருக்கு ஒருவரின் அன்றாட உரையாடல்களிலும் பயன்படுத்த உதவும் உத்தி. இதை அறமாகவே பயன்படுத்தினால் நல்லவை அல்லாதவை அதாவது கெட்டவை முற்றிலும் அழிந்துவிடும். எங்கும் இணக்கமான சூழ்நிலைகள் உருவாகி எல்லாம் இன்ப மயமாகவும், நல்லவையாகவும் நிகழும்.

எனவே எப்போதும் நல்லவற்றைச் சிந்தித்து அவற்றை இனிமையுற எடுத்து இயம்புவது நல்லறத்தை வளர்க்க வழிவகுக்கும் எனபது திண்ணம்.

குறிப்புரை :
பிறர்பால் நன்மை தரும் இனிய சொற்களைச் சொல்லின் ஒருவருக்கு நல் வினை பெருகும்.

அருஞ்சொற் பொருள் :
தேய - தேய்ந்து மறைய

ஒப்புரை :

திருமூலர். திருமந்திரம்:
கர்ப்பத்துக் கேவல மாயாள் .(1).கிளைகூட்ட
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே. 460
.(1). கிளைக்கூட்ட

பொற்பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொற்பாதத்து ஆணையே செம்புபொன் ஆயிடும்
பொற்பாதம் காணத் திருமேனி ஆயிடும்
பொற்பாத நன்னடம் சிந்தனை சொல்லுமே. 907

சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவார் நயத்துட னேவரும்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே. 908

மாணிக்கவாசகர். திருவாசகம்.
22. கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம் :

சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட்குன்றே
திருப்பெருந்துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய்
வந்துநின் இணையடி தந்தே. 396

ஔவையார். ஆத்திச்சூடி:
மொழிவது அறமொழி. 96

ஔவையார். கொன்றைவேந்த்ன்:
கூரம்ப்பாயினும் வீரியம் பேசேல். 19

***

In English: (Thirukkural: 96)

allavai thEya aRam perukum-nallavai
nATi, iniya solin.

Meaning :
Vice wanes and virtues grow when seek for the good and speak the sweet words.

Explanation :

When one seeks the goodness for others and speaks of sweet words to them, his vice will vanish and good virtues will grow.

This is a psychological concept. When speaking to somebody, try to know what would be good for him and explain that in pleasant words to him proactively. That would accomplish the work intended and good things will happen.

When one's intention is understood and the usefulness of it is explained in pleasant words proactively, he will heed to it and will do well in return. That is use of the pleasant words spoken for one's good sense in cohesion.

Formula for acceptance is pleasant speaking of goodness for one. This is the fundamental life lesson for human communication and relations.

This is the secret that works in politics, business, office, and domestic life, society, including the day-to-day communications with one another. When this is practiced as virtue all the vice and bad things will get destroyed. Everywhere cohesion and acceptable situations will arise with good things forever lasting happiness.


Message :
Seeking goodness and speaking sweet words to others will grow good deeds for one.

***