|
| |
| |
பொழிப்புரை : | |
[அவரின்] பெருமை மேன்மையுடன் நீங்கும், பயன் இல்லாத சொற்களைத் தண்மை உடையவர் சொன்னால். | |
| |
விரிவுரை : | |
பயனிலாத சொல்லை கருணை உள்ளவர் சொன்னால், அவரது புகழ் அதன் தனித் தன்மையோடு நீங்கிவிடும். இயல்பாகவே இனிமையும், கனிவும், கருணையும் உடையவர் தவறி அர்தமற்றவற்றை, பிதற்றலை, உபயோகமற்றவற்றைப் பேசுவாரே ஆனால் அவரின் பெருமை, மேன்மை யாவும் அவற்றின் சிறப்புக்களோடு அவரை வீட்டு நீங்கிவிடும். பயனிலாத சொல்லால் ஒருவரின் இயல்புத் தன்மையையே இழக்க நேரும் என்பது உட்பொருள். மேலும் எவ்வளவு மேன்மை உடையவராயினும் பயன் இல்லாச் சொல் பேசுவார் ஆயின் தனது புகழையும், சிறப்பையும் இழக்க நேரும் என்பதும் நேரடிப் பொருள். ஆக எவ்வளவோ காலத்தில் சேர்த்த புகழை, மேன்மையை பயன் இலாச் சொல் என்னும் அர்த்தமற்ற பேச்சினால் உடனடியாக இழக்க வேண்டிவரும். அதனால் அவமரியாதையை, இழுக்கை ஒருவர் அடைய நேரும் என்றால் பயன் இலாச் சொல்லால் ஏற்படும் பாதகத்தின் அளவை நன்கு புரிந்து கொள்ளலாம். எனவே பயனிலாச் சொல்லைச் சொல்வதில் மேலோர், கீழோர் எனும் பாகு பாடே இன்றி அவரவர் தகுதிகளிலிருந்து தள்ளப்பட்டு அவமானத்தையும், இழுக்கையையும், துன்பத்தையும், வருத்தத்தையும் அடைவர் என்பது திண்ணம். | |
| |
குறிப்புரை : | |
கருணையும் தண்மையும் கொண்டவரேனும் பயனிலாத சொற்களைச் சொன்னால் அவரது பெருமையும் அதற்கான மேன்மையும் அவரை விட்டு நீங்கிவிடும். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
சீர்மை - பெருமை, புகழ், நற்பண்பு சிறப்பு - மேன்மை, தனித்தன்மை, உயர்வு, செல்வம், கௌரவம் நீர்மை - குளிர்ச்சி, இயல்பு, இயற்கை, இன்சொல், நட்பு, கருணை, தண்மை | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 294 துணையது வாய்வரும் தூயநற் சோதி துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம் துணையது வாய்வரும் தூயநற் கந்தம் துணையது வாய்வரும் தூயநற் கல்வியே. திருமந்திரம்: 300 பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள் உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர் கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர் பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே. திருமந்திரம்: 302 மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின் அயன்பணி கேட்பது அரன்பணி யாலே சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர் பயன்பணி கேட்பது பற்றது வாமே. திருவாசகம். மாணிக்கவாசகர். 5. திருச்சதகம் (திருப்பெருந்துறையில் அருளியது) 2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா) வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24 ஔவையார். ஆத்திசூடி: 53. சோம்பித் திரியேல். ஔவையார். நல்வழி: சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம் இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும். 15 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Their eminence with excellence will leave them even for those kind men who speak of senseless words. | |
| |
Explanation : | |
When the kind men speak of useless vain words, their reputation with it's eminence will go away. | |
| |
Message : | |
The reputation and excellence leave even the gentle and kind men when they speak senseless words. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...