Saturday, December 5, 2009

திருக்குறள்:158 (செருக்கை அறுக்கும் பொறுமை...)

அதிகாரம்

: 16

பொறையுடைமை

திருக்குறள் : 158

செருக்கை அறுக்கும் பொறுமை...

In English

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம்
தகுதியான் வென்று விடல்.

பொழிப்புரை :
செருக்கினால் மிகையானவற்றைச் செய்தவரைத் தாம், தமது பொறுமையால் வென்று விடல் [வேண்டும்].

விரிவுரை :
செருக்கினால் தம்மிடம் மிகை காட்டியவரை தாம் தமது பொறுமையால் வென்று காட்ட வேண்டும்.

செருக்கினால் வீரம் பேசுவோரை, தீங்கிழைப்போரைத் தமது பொறுமையெனும் பண்பினால் வென்று விடல் வேண்டும். அவரிடம் பதிலுக்குச் சூளுரைப்பதோ, எதிர் வாதம் செய்வதோ, தீங்கு செய்வதோ சரியான முறை அன்று.

செருக்கெனும் இறுமாப்பு தானாகவே கொண்டுள்ளவரைக் கீழே தள்ளிவிடும். செருக்கினால் மேன்மையும், மிகை மினுக்கும், திமிரும் காட்டியவர்கள், காலச் சுழற்சியில் சீரழிந்து, சிறுமைப்பட்டுக் காணாமல் போவதே கண் கூடு. செருக்கும், தலைக்கனமும், அகம்பாவமும், ஆணவமும், திமிரும் தம்மைத் தாமே அழித்துக் கொள்ளும் வல்லமை கொண்டவை. எனவே அவற்றைக் கொண்ட ஒருவரைத் தண்டிக்க வேண்டிய அவசியமே இல்லை. மேலும் தம்மிடம் காட்டிய செருக்கிற்குப் பதிலாக ஒருவர் செருக்குக் கொள்ளுவது மடமை.

எனவே பொறுமை எனும் பண்பே பிறரின் செருக்கைத் தணிக்கவல்ல மாமருந்து.

குறிப்புரை :
பொறுமை எனும் பண்பால் செருக்குள்ளவரை வெல்க.

அருஞ்சொற் பொருள் :
மிகுதி - இறுமாப்பு, செருக்கு, அதிகம்
மிக்க - மிகையான, அதிகமான, மிகுந்த
தகுதி - நடுநிலைமை, நேர்மை, பொறுமை

ஒப்புரை :

திருமந்திரம்: 420.
அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணுகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே

திருமந்திரம்: 434.
காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயலணை யாரே

திருமந்திரம்: 1584.
திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா தருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடிலோர ஒண்ணாதே. 12

திருமந்திரம்: 1585.
பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாஞ் சிவோகமெ சேர்தலான்
முத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை
சத்தி யருள்தரில் தானெளி தாமே. 13

திருமந்திரம்: 1586
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்எய்த வைத்த முதல்வனை எம்மிறை
தன்எய்துங் காலத்துத் தானே வெளிப்படு
மன்னெய்த வைத்த மனமது தானே. 14

மாணிக்கவாசகர். திருவாசகம்:
23. செத்திலாப் பத்து :

அறுக்கிலேன் உடல்துணிபடத்தீப்புக்
கார்கிலேன் திருவருள் வகையறியேன்
பொறுக்கிலேன்உடல் போக்கிடங் காணேன்
போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
இறக்கிலேன் உனைப்பிரிந்தினிதிருக்க
எனசெய்கேன்இது செய்க என்றருளாய்
சிறக்கணே புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 403

ஔவையார். ஆத்திசூடி:
99. வாதுமுற் கூறேல்.
103. ஊருடன் கூடிவாழ்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
62. பீரம் பேணில் பாரம் தாங்கும்

ஔவையார். நல்வழி:
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. 7

***

In English:

Chapter : 16

Forbearance

Thirukkural : 158

Hauteur killing Patience...




In Tamil

mikuthiyAn mikkavai seythAraith thAm tham
thakuthiyAn venRu vidal.

Meaning :
Those who exhibit you excesses of haughtiness must be won through your humble forbearance.

Explanation :
Win those who show haughtiness in excesses on self through the self forbearance.

Those who exult in haughtiness or who indulge in arrogance on one, must be won through the trait and practice of forbearance. Retaliating them with argument, challenge or ill doing is improper.

The haughtiness by itself will drop down those who possess it. Those who have exhibited greatness, shine and arrogance due to haughtiness have gone to astray, insignificant and disappeared over a period of time through natural cycle. The haughtiness, arrogance, pride, head weight, insolence and such have the quality of spoiling themselves at the end. Therefore one need not punish those who possess such characteristics. Also retaliating them with same arrogance is nothing but utter foolishness.

Therefore the forbearance is the trait and great medicine to heal other's haughtiness.

Message :
By the virtue of Patience win those with hauteur.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...