Saturday, October 24, 2009

திருக்குறள்: 125 (செல்வரின் பணிதலே உற்ற சிறப்பு...)

அதிகாரம்

: 13

அடக்கமுடைமை

திருக்குறள் : 125

செல்வரின் பணிதலே உற்ற சிறப்பு...

In English

எல்லார்க்கும் நன்று ஆம், பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பொழிப்புரை :
எல்லாருக்கும் நல்லதே பணிதல்; அவர்களுக்குள்ளும் செல்வர்களுக்கே இஃது மிகச் சிறப்பாகும்.

விரிவுரை :
பணிதல் எனும் அடக்கம் எல்லாருக்கும் நல்லதே. அதிலும் இது செல்வந்தர்களிடம் இருக்குமானால் அவருக்கு அஃது மிகவும் மதிப்பானதாகும்.

அடக்கம் எனும் நற்பண்பின், நற்குணத்தின் அழகு, சிறப்பு இல்லாதவருக்கும் இருப்பினும், இருப்போரிடம் இருக்குமானால் அவருக்கே அஃது மிகவும் மதிப்பானதாகும், பொருத்தமானதாகும். வசதி வாய்ப்பு அதிகமுள்ளோருக்கு இருக்க வேண்டிய அடக்கத்தின் அவசியத்தினை, அவர்களுக்கே அடக்கம் மிகவும் பொருத்தமானது என்கின்றார் வள்ளுவர்.

அடக்கம் எல்லாருக்கும் அவசியமாயினும், செல்வர்களுக்கு மிகவும் அவசியமானது என்பது உட்பொருள்.

மனிதன் உயர, உயர, செல்வம் பெருகப் பெருக அடக்கத்தின் தேவை இன்னும் அதிகரித்து அத்தியாவசிய அவசியமாகின்றது என்பது ஈண்டு பெறத்தக்கது.

உயர்ந்தவர் பணிவது பணிதலில் உயர்வு.

குறிப்புரை :
மனிதருக்குச் செல்வம் கூடினால் அடக்கம் இன்னும் அத்தியாவசியமாகிறது.

அருஞ்சொற் பொருள் :
பணிதல் - பணிவன்புடன், அடக்கத்துடன் நடந்து கொள்ளுதல்
செல்வம் - பெருக்கம், செழிப்பு, மிகுதி, வளம்
தகைத்து - பொலிவுபெறும், அழகாகும், பொருத்தமாகும், மதிப்பாகும், உயர்வாகும், நலமாகும்.

ஒப்புரை :

திருமந்திரம்: 1445.
நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.

திருமந்திரம்: 1454.
இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவளரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை காணே.

திருமந்திரம்: 1466
யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே யுற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே.

திருமந்திரம்: 1471
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே.

திருமந்திரம்: 1499
உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்து பிரிக்கிலப் பான்மையு னாமே.

திருமந்திரம்: 1526
நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகிய தொன்றறி யாத வொருவன்
அணுகும் உலகெங்கு மாவியு மாமே.

திருமந்திரம்: 1563.
தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி யாமே.

திருமந்திரம்: 1573
பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்
சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற்
சித்தம் இறையே சிவகுரு வாமே.

திருமந்திரம்: 1580.
சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.

திருமந்திரம்: 2080
உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நிலவாணி ஐந்தினுள் தேருற நிற்கும்
சிலவாணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை அறிவதே.

திருமந்திரம்: 2081
தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்
ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழி
கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே.

திருமந்திரம்: 2082
உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
49. திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல் :
சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே
அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே
ஆசைஎலாம் அடியாரடியோய் எனும் அத்தனை யாகாதே
செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே
எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே
ஈற்றி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப் பெறிலே. 642

பட்டினத்தார்:
அஞ்சக் கரமெனுங் கோடாலி கொண்டிந்த ஐம்புலனாம்
வஞ்சப் புலக்கட்டை வேர் அறவெட்டி வளங்கள் செய்து
விஞ்சத் திருத்திச் சதாசிவம் என்கின்ற வித்தையிட்டுப்
புஞ்சக் களை பறித்தேன் வளர்த்தேன் சிவ போகத்தையே! (46)

சிவவாக்கியர்:
மட்டுலாவு தந்துழாய் அலங்கலாய் புனல்கழல்
விட்டுவீழில் தாகபோக விண்ணில் நண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக்
கட்டிவீடி லாதுவைத்த காதலின்பம் ஆகுமே. (258)

ஔவையார். ஆத்திச்சூடி:
66. நன்மை கடைப்பிடி.

ஔவையார். கொன்றைவேந்தன்:
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்

ஔவையார். மூதுரை:
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16

***

In English:

Chapter : 13

Self-Control

Thirukkural : 125

Riches humility...the more appropriate...




In Tamil

ellArkkum nanRu Am, paNithal; avaruLLum
selvarkkE selvam thakaiththu.

Meaning :
The humility is good for all; among all it is more appropriate for the riches.

Explanation :
The humbleness or the self-control is good for all. However that is more appropriate for the riches as that would give more value to them.

Though the excellence and grace of the self-control and the beauty of the humbleness appear with the poor too, if it really remain with the riches it has more value, aptness and more enchanting grace. Through this imbibed meaning, Valluvar actually means the importance of the self-control and humbleness more necessary to the riches and wealthier than the poor for obvious reasons.

Though self-control and humbleness is necessary to everyone, it is more important to the riches is the implicit meaning.

When a man grows more and more, when his wealth increases more and more, the necessity of the self-control also increases and hence it becomes a mandatory and indispensable quality and trait is the meaning to comprehend herewith.

Elevated’s humbleness is greatness in humility.

Message :
When the wealth increases for one, humility, the self-control becomes more essential.

***

Friday, October 23, 2009

திருக்குறள்: 124 (மிக உயரிய மாறா அடக்கம்...)

அதிகாரம்

: 13

அடக்கமுடைமை

திருக்குறள் : 124

மிக உயரிய மாறா அடக்கம்...

In English

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

பொழிப்புரை :
[தனது உயரிய] நிலையிலும் மாறாது அடக்கம் உடையவனது [மனத்] தோற்றம் மலையினும் மிகப் பெரியது.

விரிவுரை :
உயர்ந்துவிட்ட நிலையின் போழ்தும் குணம் குன்றாது, வார்த்தை மாறாது, புகழ் தாழாது, தீ நெறி வழுவாது, யாரையும் ஏவாது எந்த நிலையிலும் அடக்கத்துடன் வாழுபவனின் மனத் தோற்றமானது மலையினும் சாலப் பெரியது.

நிலை மாறாத நன்னெறியாளரின் அடக்கமானது சாலச் சிறந்ததாய்க் கொள்ளக் காரணம், அஃது உண்மையானது, போலித் தன்மை அற்றது, அழியாத மலையினும் உறுதியில் உயர்வானது. வாழ்வில் வசதி வந்த பிறகு ஆணவத்துடனும், அதற்கு முன்னர் அடக்கத்துடனும் நடந்து கொள்பவர் அற்பமானவர்கள், நிலையற்றவர்கள். எந்த நிலையிலும் அடக்கத்துடன் திகழுவோரின் மனத் தோற்றத்திற்கு, உயர்விற்கு முன்னர் மலை சிறியது. மலையினைக் காட்டிலும் அவ்வளவு உயரியது, விசாலமானது, உறுதியானது அத்தகைய பண்பாளரின் மனம் என்பது பொருள்.

அடக்கம் என்பதைச் சீராக என்னிலையிலும் மாறாத குணமாகக் கொள்ளுதல் வேண்டும் என்பது உட்கருத்து.

குறிப்புரை :
மாறா அடக்கம் மலையினும் பெரியது.

அருஞ்சொற் பொருள் :
திரியாது - தவறாது, கெடாது, வழுவாது, வேறுபடாது, மாறுபடாது, அலையாது.
தோற்றம் - காட்சி, மனப்பதிவு, புகழ், இயல்பு, தன்மை.

ஒப்புரை :

திருமந்திரம்: 1304.
பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே.

திருமந்திரம்: 1311.
ஏதும் பலமாம் இயந்திரா சன்அடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச்செம்பிற் சட்கோணம் தானிட்டே.

திருமந்திரம்: 1326.
நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே.

திருமந்திரம்: 1327.
அடைந்திடும் பொன்வௌfளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.

திருமந்திரம்: 1377.
மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை
அணிபவள் அன்றி அருளில்லை யாகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகிப்
பணிபவர்க்கு அன்றோ பரிகதி யாமே.

திருமந்திரம்: 1397
கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
தாபத்துச் சத்தி தயங்கி வருதலால்
ஆபத்துக் கைகள் அடைந்தனநாலைந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூலமே.

திருமந்திரம்: 1440.
சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.

திருமந்திரம்: 1441.
நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்
தானென்று நானென்ற தத்துவ நல்கலால்
தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே.

திருமந்திரம்: 1442
சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.

திருமந்திரம்: 2059
ஊற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினை
பற்றறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித்
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே.

திருமந்திரம்: 2060
எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம்
வலலார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச்
சொல்லா மலம்ஐந்து அடங்கிட்டு ஓங்கியே
செலலாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே.

திருமந்திரம்: 2061
ஈனப் பிறவியில் இட்டது மீட்டுட்டித்
தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே.

திருமந்திரம்: 2062
அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச்
சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
40. குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை
மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய
மிதக்குந் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக்
கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங்
கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 565

இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தே
நடக்குந் திருவடி என்தலைமேல் நட்டமையால்
கடக்குந் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை
அடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 566

பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத்
தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால்
ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 567

பட்டினத்தார்:
ஓங்கார மாய்நின்ற வத்துவி லேஒரு வித்துவந்து
பாங்காய் முளைத்த பயன் அறிந்தால் பதி னாலுலகும்
நீங்காமல் நீங்கி நிறையா நிறைந்து நிறையுருவாய்
ஆங்கார மானவர்க் கெட்டாக் கனிவந் தமர்ந்திடுமே. (41)

சிவவாக்கியர்:
அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்புருக்கும் ஒன்றுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே. (257)

ஔவையார். ஆத்திச்சூடி:
64. தொன்மை மறவேல்.

ஔவையார். கொன்றைவேந்தன்:
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை

ஔவையார். மூதுரை:
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14

***

In English:

Chapter : 13

Self-Control

Thirukkural : 124

The tallest Unchanged self-control...




In Tamil

nilaiyin thiriyAthu adangiyAn thORRam
malaiyinum mANap perithu.

Meaning :
The manifestation of one’s steadfast self-control regardless of the social status is much bigger than a mountain.

Explanation :
Even with high social status, without changing the good behavior, without failing in words, without fading the fame, without bad practices, without any intimidations when one maintains the steadfast self-control at all the time, then that person's manifestation is much bigger than a mountain.

The reason behind considering those unchanged good people as greater than mountain is their self-restrain is true, un-deceitful and stronger than an indestructible mountain. Behaving unruly and inappropriately due to change of social status , i.e. upraise or success or betterment in life but that one who have behaved properly with humbleness in earlier state of life, is cheap and shows the unstable character. For those who behave with self-restrain regardless of any state in life, let whatever be the power or wealth or health, then for their manifestation of their mind even the mountain becomes smaller. Their heart and mind is so taller, stronger, greater and stable than a mountain is the explicit meaning here.

Self-control must be a uniform trait for one at any stage or status of Life is the implicit meaning here.

Message :
The steadfast self-control is greater than a mountain.

***

Thursday, October 22, 2009

திருக்குறள்: 123 (அடக்கம் தரும் சீர்மை...)

அதிகாரம்

: 13

அடக்கமுடைமை

திருக்குறள் : 123

அடக்கம் தரும் சீர்மை...

In English

செறிவு அறிந்து சீர்மை பயக்கும்-அறிவு அறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

பொழிப்புரை :
அடக்கம் அறியப்பட்டு சிறப்பை நல்கும் - அறிவால் அறிந்துணர்ந்து செயலாற்றுதலின் அடக்கம் [உடையப்] பெறின்.

விரிவுரை :
அறிவால் அறிந்துணர்ந்து அடக்கத்துடன் செயலாற்றின் அவ்வடக்கம் அனைவராலும் அறியப்பட்டு சிறப்பை நல்கும்.

அடக்கம், பணிவு போலியானதாக, நடிப்பாக இருத்தல் கூடாது. அதை அறிவாலும், செயலாலும் உண்மையாய் மேற்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு அதன் பயனை உணர்ந்து செயப்படும் செயல்களில், காரியங்களில் அடக்கத்துடன் நடந்து கொண்டால், அவை நன்மக்களால் அறிந்துணரப்பட்டு சிறப்பை, மேன்மையைக் கொடுக்கும்.

அடக்கத்தைப் பயின்று, உணர்ந்து, பயன்படுத்துதல் வேண்டும் என்பது உட்கருத்து. அவ்வாறு செய்யப்படும் அடக்கம் வீணாகிப் போகிவிடாது. அவை நல்லோரால் நிச்சயம் அறியப்பட்டு, அதற்குரிய சிறப்பைத் தவறாது பெற்றுத் தரும்.

உளத்தால் அல்லாத அடக்கம் நடிப்பு, போலியானவை என்று உணரப்பட்டு அவை நன்மை பயக்காது என்பதும் பொதிய வைத்த பொருள். அறியாமையால் திகழும் அடக்கம் தாழ்வு மனப்பான்மையாலும் கூட இருக்கலாம் என்பதால் அதில் மேன்மை பெறுவது என்பது சந்தேகத்திற்குரியதே.

குறிப்புரை :
அறிவாலும், செயலாலும் பேணப்படும் அடக்கம் சீரிய சிறப்பை நிச்சயம் நல்கும்.

அருஞ்சொற் பொருள் :
செறிவு - அடக்கம், நெருக்கம், அடர்த்தி, உள்ளீடு, வரம்பு மீறாமை, திட்பம், மிகுதி, இணை (Union), கூட்டம், சுருக்கம்
சீர்மை - பெருமை, சிறப்பு, புகழ், இசை, கனம், அளவோடு இருத்தல், மிதமான தன்மை, நன்னடை, நற்பண்பு
ஆற்றின் - சாதித்தால், நிகழ்த்தினால், செய்தால், நிறைவேற்றினால்

ஒப்புரை :

திருமந்திரம்: 1151.
தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்
அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே.

திருமந்திரம்: 1192.
சடங்கது செய்து தவம்புரி வார்கள்
கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில்
தொடர்ந்தெழு சோதி துளைவழி ஏறி
அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே.

திருமந்திரம்: 1224.
ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி
ஆகிய ஐம்பத்துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடுஅப் பரையவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.

திருமந்திரம்: 1225.
தானிகழ fமோகினி சார்வண யோகினி
போன மயமுடை யார்அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவம்
தானாம் பரசிவம் மேலது தானே.

திருமந்திரம்: 1231.
அதுஇது என்றுஅவ மேகழி யாதே
மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்
பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
விதிவழி தன்னையும் வென்றிட லாமே.

திருமந்திரம்: 1240.
நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.

திருமந்திரம்: 1241.
ஆம்அயன்மால் அரன் ஈசன்மா லாங்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமயன் ஆளும் தெனாதென என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.

திருமந்திரம்: 1242.
வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களும்
கொந்தணி யுங்குழ லாள்ஒரு கோனையும்
வந்தனை செய்யும் வழிநவில் வீரே.

திருமந்திரம்: 1247.
தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்கி உமையொடும் ஓருரு வாமே.

திருமந்திரம்: 2019
அறிவாய் அறியாமை நீங்கி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன்
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்
செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.

திருமந்திரம்: 2021
சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார்
அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்
தவமான செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவம் நாடாகி லாரே.

திருமந்திரம்: 2023
ஆக மதத்தன ஐந்து களிறுள
ஆக மதத்தறி யோடுஅணை கின்றில
பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே.

திருமந்திரம்: 2032
கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம்
அடக்க லுறும் அவன்தானே அமரன்
விடக்கிண்டு இன்புற மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
16. திருப்பொன்னூசல் - அருட் சுத்தி
உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்
என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335

பட்டினத்தார்:
பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கை யரைத்
தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச்
சேய்போல் இருப்பர்கண் டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே! (35)

சிவவாக்கியர்:
விண்ணின்று மின்னெழுந்து மின்னொடுங்கும் ஆறுபோல்
என்னுள் நின்றும் எண்ணும் ஈசன் என்னகத்து இருக்கையால்
கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறிவிலாமையால்
என்னுள் நின்ற என்னையும் யானதறிந்தது இல்லையே. (256)

ஔவையார். ஆத்திச்சூடி:
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.

ஔவையார். கொன்றைவேந்தன்:
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்

ஔவையார். மூதுரை:
மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12

***

In English:

Chapter : 13

Self-Control

Thirukkural : 123

Glory giving self-control...




In Tamil

seRivu aRinthu sIrmai payakkum-aRivu aRinthu
ARRin adangap peRin.

Meaning :
Self-restrain when comprehended and adopted with the wisdom will be understood by all and yield glory.

Explanation :

When one maintains the self-control with the complete comprehension of wisdom, it will be learnt by everyone and gain glory.

Self-control, humility should not be a deceit or mere fake act. It should be realized truthfully through senses and deeds. When that is realized and applied in the actions and when that is adopted sincerely with self-restraint, it will be learnt by all and will give glory and excellence.

The imbibed meaning here is that learn the self-restrain sincerely, realize it and then apply it. Such self-restraint, the dedication, practiced never goes waste. That certainly gets noticed and learnt by the good and enriches with the glory as appropriate.

The self-restraint practiced without the heart will be known as mere act of deceit or as melodrama and therefore will not yield any good is also the metaphorical meaning contained herein. The self-control practiced without knowledge could also be due to inferiority complex and hence such one bringing glory or leading to excellence is definitely doubtful.


Message :
Self-control adopted by sense and deed will certainly yield distinguished glory.

***