|
| |
| |
பொழிப்புரை : | |
அடக்கம் அறியப்பட்டு சிறப்பை நல்கும் - அறிவால் அறிந்துணர்ந்து செயலாற்றுதலின் அடக்கம் [உடையப்] பெறின். | |
| |
விரிவுரை : | |
அறிவால் அறிந்துணர்ந்து அடக்கத்துடன் செயலாற்றின் அவ்வடக்கம் அனைவராலும் அறியப்பட்டு சிறப்பை நல்கும். அடக்கம், பணிவு போலியானதாக, நடிப்பாக இருத்தல் கூடாது. அதை அறிவாலும், செயலாலும் உண்மையாய் மேற்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு அதன் பயனை உணர்ந்து செயப்படும் செயல்களில், காரியங்களில் அடக்கத்துடன் நடந்து கொண்டால், அவை நன்மக்களால் அறிந்துணரப்பட்டு சிறப்பை, மேன்மையைக் கொடுக்கும். அடக்கத்தைப் பயின்று, உணர்ந்து, பயன்படுத்துதல் வேண்டும் என்பது உட்கருத்து. அவ்வாறு செய்யப்படும் அடக்கம் வீணாகிப் போகிவிடாது. அவை நல்லோரால் நிச்சயம் அறியப்பட்டு, அதற்குரிய சிறப்பைத் தவறாது பெற்றுத் தரும். உளத்தால் அல்லாத அடக்கம் நடிப்பு, போலியானவை என்று உணரப்பட்டு அவை நன்மை பயக்காது என்பதும் பொதிய வைத்த பொருள். அறியாமையால் திகழும் அடக்கம் தாழ்வு மனப்பான்மையாலும் கூட இருக்கலாம் என்பதால் அதில் மேன்மை பெறுவது என்பது சந்தேகத்திற்குரியதே. | |
| |
குறிப்புரை : | |
அறிவாலும், செயலாலும் பேணப்படும் அடக்கம் சீரிய சிறப்பை நிச்சயம் நல்கும். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
செறிவு - அடக்கம், நெருக்கம், அடர்த்தி, உள்ளீடு, வரம்பு மீறாமை, திட்பம், மிகுதி, இணை (Union), கூட்டம், சுருக்கம் சீர்மை - பெருமை, சிறப்பு, புகழ், இசை, கனம், அளவோடு இருத்தல், மிதமான தன்மை, நன்னடை, நற்பண்பு ஆற்றின் - சாதித்தால், நிகழ்த்தினால், செய்தால், நிறைவேற்றினால் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 1151. தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச் செடியார் வினைகெடச் சேர்வரை என்றென் அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே. திருமந்திரம்: 1192. சடங்கது செய்து தவம்புரி வார்கள் கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில் தொடர்ந்தெழு சோதி துளைவழி ஏறி அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே. திருமந்திரம்: 1224. ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி ஆகிய ஐம்பத்துடனே அடங்கிடும் ஆகும் பராபரை யோடுஅப் பரையவள் ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே. திருமந்திரம்: 1225. தானிகழ fமோகினி சார்வண யோகினி போன மயமுடை யார்அடி போற்றுவர் ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவம் தானாம் பரசிவம் மேலது தானே. திருமந்திரம்: 1231. அதுஇது என்றுஅவ மேகழி யாதே மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப் பதிமது மேவிப் பணியவல் லார்க்கு விதிவழி தன்னையும் வென்றிட லாமே. திருமந்திரம்: 1240. நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப் பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும் குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும் அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே. திருமந்திரம்: 1241. ஆம்அயன்மால் அரன் ஈசன்மா லாங்கதி ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத் தேமயன் ஆளும் தெனாதென என்றிடும் மாமய மானது வந்தெய்த லாமே. திருமந்திரம்: 1242. வந்தடி போற்றுவர் வானவர் தானவர் இந்து முதலாக எண்டிசை யோர்களும் கொந்தணி யுங்குழ லாள்ஒரு கோனையும் வந்தனை செய்யும் வழிநவில் வீரே. திருமந்திரம்: 1247. தொடங்கி உலகினில் சோதி மணாளன் அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை ஒடுங்கி உமையொடும் ஓருரு வாமே. திருமந்திரம்: 2019 அறிவாய் அறியாமை நீங்கி யவனே பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன் அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன் செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே. திருமந்திரம்: 2021 சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார் அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார் தவமான செய்து தலைப்பறி கின்றார் நவமான தத்துவம் நாடாகி லாரே. திருமந்திரம்: 2023 ஆக மதத்தன ஐந்து களிறுள ஆக மதத்தறி யோடுஅணை கின்றில பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின் யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே. திருமந்திரம்: 2032 கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம் அடக்க லுறும் அவன்தானே அமரன் விடக்கிண்டு இன்புற மேவுறு சிந்தை நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே. மாணிக்கவாசகர். திருவாசகம்: 16. திருப்பொன்னூசல் - அருட் சுத்தி உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான் அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல் என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப் பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335 பட்டினத்தார்: பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கை யரைத் தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச் சேய்போல் இருப்பர்கண் டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே! (35) சிவவாக்கியர்: விண்ணின்று மின்னெழுந்து மின்னொடுங்கும் ஆறுபோல் என்னுள் நின்றும் எண்ணும் ஈசன் என்னகத்து இருக்கையால் கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறிவிலாமையால் என்னுள் நின்ற என்னையும் யானதறிந்தது இல்லையே. (256) ஔவையார். ஆத்திச்சூடி: 62. தேசத்தோடு ஒட்டி வாழ். ஔவையார். கொன்றைவேந்தன்: 19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் ஔவையார். மூதுரை: மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம் உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகி விடும். 12 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Self-restrain when comprehended and adopted with the wisdom will be understood by all and yield glory. | |
| |
Explanation : | |
When one maintains the self-control with the complete comprehension of wisdom, it will be learnt by everyone and gain glory. | |
| |
Message : | |
Self-control adopted by sense and deed will certainly yield distinguished glory. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...