Saturday, October 24, 2009

திருக்குறள்: 125 (செல்வரின் பணிதலே உற்ற சிறப்பு...)

அதிகாரம்

: 13

அடக்கமுடைமை

திருக்குறள் : 125

செல்வரின் பணிதலே உற்ற சிறப்பு...

In English

எல்லார்க்கும் நன்று ஆம், பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பொழிப்புரை :
எல்லாருக்கும் நல்லதே பணிதல்; அவர்களுக்குள்ளும் செல்வர்களுக்கே இஃது மிகச் சிறப்பாகும்.

விரிவுரை :
பணிதல் எனும் அடக்கம் எல்லாருக்கும் நல்லதே. அதிலும் இது செல்வந்தர்களிடம் இருக்குமானால் அவருக்கு அஃது மிகவும் மதிப்பானதாகும்.

அடக்கம் எனும் நற்பண்பின், நற்குணத்தின் அழகு, சிறப்பு இல்லாதவருக்கும் இருப்பினும், இருப்போரிடம் இருக்குமானால் அவருக்கே அஃது மிகவும் மதிப்பானதாகும், பொருத்தமானதாகும். வசதி வாய்ப்பு அதிகமுள்ளோருக்கு இருக்க வேண்டிய அடக்கத்தின் அவசியத்தினை, அவர்களுக்கே அடக்கம் மிகவும் பொருத்தமானது என்கின்றார் வள்ளுவர்.

அடக்கம் எல்லாருக்கும் அவசியமாயினும், செல்வர்களுக்கு மிகவும் அவசியமானது என்பது உட்பொருள்.

மனிதன் உயர, உயர, செல்வம் பெருகப் பெருக அடக்கத்தின் தேவை இன்னும் அதிகரித்து அத்தியாவசிய அவசியமாகின்றது என்பது ஈண்டு பெறத்தக்கது.

உயர்ந்தவர் பணிவது பணிதலில் உயர்வு.

குறிப்புரை :
மனிதருக்குச் செல்வம் கூடினால் அடக்கம் இன்னும் அத்தியாவசியமாகிறது.

அருஞ்சொற் பொருள் :
பணிதல் - பணிவன்புடன், அடக்கத்துடன் நடந்து கொள்ளுதல்
செல்வம் - பெருக்கம், செழிப்பு, மிகுதி, வளம்
தகைத்து - பொலிவுபெறும், அழகாகும், பொருத்தமாகும், மதிப்பாகும், உயர்வாகும், நலமாகும்.

ஒப்புரை :

திருமந்திரம்: 1445.
நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.

திருமந்திரம்: 1454.
இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவளரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை காணே.

திருமந்திரம்: 1466
யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே யுற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே.

திருமந்திரம்: 1471
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே.

திருமந்திரம்: 1499
உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்து பிரிக்கிலப் பான்மையு னாமே.

திருமந்திரம்: 1526
நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகிய தொன்றறி யாத வொருவன்
அணுகும் உலகெங்கு மாவியு மாமே.

திருமந்திரம்: 1563.
தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி யாமே.

திருமந்திரம்: 1573
பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்
சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற்
சித்தம் இறையே சிவகுரு வாமே.

திருமந்திரம்: 1580.
சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.

திருமந்திரம்: 2080
உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நிலவாணி ஐந்தினுள் தேருற நிற்கும்
சிலவாணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை அறிவதே.

திருமந்திரம்: 2081
தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்
ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழி
கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே.

திருமந்திரம்: 2082
உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
49. திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல் :
சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே
அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே
ஆசைஎலாம் அடியாரடியோய் எனும் அத்தனை யாகாதே
செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே
எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே
ஈற்றி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப் பெறிலே. 642

பட்டினத்தார்:
அஞ்சக் கரமெனுங் கோடாலி கொண்டிந்த ஐம்புலனாம்
வஞ்சப் புலக்கட்டை வேர் அறவெட்டி வளங்கள் செய்து
விஞ்சத் திருத்திச் சதாசிவம் என்கின்ற வித்தையிட்டுப்
புஞ்சக் களை பறித்தேன் வளர்த்தேன் சிவ போகத்தையே! (46)

சிவவாக்கியர்:
மட்டுலாவு தந்துழாய் அலங்கலாய் புனல்கழல்
விட்டுவீழில் தாகபோக விண்ணில் நண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக்
கட்டிவீடி லாதுவைத்த காதலின்பம் ஆகுமே. (258)

ஔவையார். ஆத்திச்சூடி:
66. நன்மை கடைப்பிடி.

ஔவையார். கொன்றைவேந்தன்:
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்

ஔவையார். மூதுரை:
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16

***

In English:

Chapter : 13

Self-Control

Thirukkural : 125

Riches humility...the more appropriate...




In Tamil

ellArkkum nanRu Am, paNithal; avaruLLum
selvarkkE selvam thakaiththu.

Meaning :
The humility is good for all; among all it is more appropriate for the riches.

Explanation :
The humbleness or the self-control is good for all. However that is more appropriate for the riches as that would give more value to them.

Though the excellence and grace of the self-control and the beauty of the humbleness appear with the poor too, if it really remain with the riches it has more value, aptness and more enchanting grace. Through this imbibed meaning, Valluvar actually means the importance of the self-control and humbleness more necessary to the riches and wealthier than the poor for obvious reasons.

Though self-control and humbleness is necessary to everyone, it is more important to the riches is the implicit meaning.

When a man grows more and more, when his wealth increases more and more, the necessity of the self-control also increases and hence it becomes a mandatory and indispensable quality and trait is the meaning to comprehend herewith.

Elevated’s humbleness is greatness in humility.

Message :
When the wealth increases for one, humility, the self-control becomes more essential.

***

2 comments:

புலவன் புலிகேசி said...

முதல் தடவை உங்கள் வலைப்பூவிற்கு வந்துள்ளேன். திருக்குறளுக்காக ஒரு நல்ல முயற்சி. தொடர்கிறேன்.

Uthamaputhra Purushotham said...

உங்களின் வருகைக்கும், பதிவிற்கும், நம்பிக்கைக்கும் நன்றி நண்பர் புலவன் புலிகேசி அவர்களே.

நலனைத் தொடருவோம்.

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...