Thursday, January 7, 2010

திருக்குறள். அதிகாரம்:19. புறங்கூறாமை - முகவுரை

அதிகாரம்

: 19

புறங்கூறாமை

முகவுரை

Chapter : 19

Non-Slandering

Preface

ஒருவரது முதுகிற்குப் பின்னால் அவரைப் பற்றிப் பிறரிடம் தவறாகப் பேசாமை. அதாவது அவ்விடத்தில் இல்லாத ஒருவரைப் பற்றிப் பழி கூறாமை.

ஒருவரைப் பற்றிப் பிறரிடம் அவரில்லாத சமயத்தில் புறஞ்சொல்லுதல், குறை கூறுதல், சாடுதல், சாடை மூட்டுதல், அவமதித்தல், பழி செய்தல், இகழுதல், பகையை வளர்த்தல், வம்பு மொழி பேசுதல், கதை கட்டுதல், கிசுகிசுத்தல், வத்தி வைத்தல், வதந்தி பரப்புதல், வம்பளத்தல், அவதூறு செய்தல், கோளுரைத்தல், பொல்லாங்கு செய்தல், நிந்தித்தல், ஓரம் சொல்லுதல், வஞ்சித்தல், வழுச் சொற்களால் அர்ச்சித்தல், தூற்றுதல், இளக்காரம் செய்தல், ஏளனம் செய்தல், சூதும் பொய்யும் கலந்து உருவகப் படுத்துதல், தாழ்ச்சி செய்தல், கேலி பேசுதல், அவரின் பழக்க வழக்கங்களைக் கிண்டல் செய்தல், எள்ளி நகையாடுதல் அனைத்தும் தீய ஒழுக்கங்களாகும்.

பிறரைப் பற்றிப் பேசும் கேவலமான பேச்சுக்கள் அவ்விடத்தே இல்லாத அவர்களின் குணத்தைக் காட்டுவதல்ல. மாறாக பேசுபவரின் முகத்தைத்தான் அஃது தோலுரித்துக் காட்டும். உண்மையில் மற்றவரைப் பற்றிப் பேசும் அத்தகைய இழிச் சொற்களும், எண்ணங்களும் ஒருவகை மனப் பிறழ்வே. அவை ஆழ்மனத்தே கிடக்கும் ஆற்றாமையின் வெளிப்பாடே. எனவே அவை ஒருவர் மனத்தே தோன்றும் பொறாமை போன்றும் இன்னொரு வகை அழுக்கே. ஆழ் மனத்தே பதிக்கப்பட்ட எண்ணங்கள் நேர் மறை, எதிர் மறை எனும் பாகுபாடின்றி எண்ணியவருக்கே தனது பலனை வழங்கும் என்பதால் இத்தகைய தீய எண்ணத்தால், செயலால், புறங்கூறும் பண்பால் அழிந்து போவது தானே என்பதைப் புறங்கூறுவோர் உணர்ந்து அவ்வாறு பேசாது இருத்தல் வேண்டும்.

இன்றைய அரசியல் மேடைகளில் பிறரைப் பற்றிக் கூறும் சாடல்களே, பிறர் மறைந்தே இருந்தாலும் கூடச் சாடிப் பேசுகின்ற பண்பு, கதைகட்டும் போக்கு, நினைவுத் திறனால் சொல்லப்படுகின்ற அற்புதமென்றும், அப்படிப் பேசும் அவதூறுகளால் மக்களின் மனதில் தம்மைப் பற்றி நல்லெண்ணத்தையும் எதிராளியைப் பற்றி கெட்ட எண்ணத்தையும் விதைத்து விடலாம் எனும் அறிவின்மை நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. உண்மையில் அவதூறு பேசியவரின் ஒழுக்கந்தான் அங்கே மக்களிடம் கேள்விக் குறியாகின்றது. கட்டிய கதைகளும், கூறும் பொய்யுரைகளும் அவர்தம் வாழ்விலேயே நிகழுவதை உரைத்தோர் விரைவில் காண்பர் என்பதே உண்மை.

தாம் ஒருவரைப் பற்றி அறிந்தவற்றைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதல் எனும் நல்லெண்ணம் காரணமாயின் நல்லவற்றையும், உண்மையை மட்டுமே பேசுவதாக இருத்தல் வேண்டும். அப்போது தான் பிறருக்கும், தமக்கும் நன்மை உண்டாகும். நம்மைப் படைத்த இறைவனே நம் வாழ்வில் குறுக்கிடாது இறுதி வரையில் காத்திருந்து தீர்ப்பு எழுத இருக்கின்ற போழ்து, சக மனிதரைப் பற்றி நாம் அறிந்த குறைந்த அளவு அறிவைக் கொண்டு முன் முடிவு கொள்வது அறிவுடைமையா? மேலும் தமது வழிக்கு, எண்ணத்திற்கு, விருப்பங்களுக்கு ஒன்றி வாராதவர் என்றால் அவரைப் பற்றிப் பிறரிடம் கதை கட்டி விடுதல் அறமாகுமா? அப்படிச் செய்வதால் கிட்டும் நன்மை போலியானது, தாற்காலிகமானது. கேட்டுக் கொண்டிருப்பவர் சொல்பவரின் முகத் தாட்சண்யத்திற்காகக் கேட்பார். ஆனால் சொன்னதை நம்புவார் என்பது எப்படி நிச்சயம்? கேட்டவர் பிறகு முன்னவர் சொன்னவை பொய் என அறியும்போது அவரது நம்பிக்கை சொல்பவர் மேல் மறு முறை எப்படி நிகழும் அல்லது தொடரும்?

வார்தைகளை அளந்து உண்மையை மட்டுமே பேசுதல் வேண்டும். பொய் உரைகளால் பெறும் வெற்றிகள் நிலைப்பதில்லை. பிறர் அறியாது நம்மிடம் மற்றவற்றைப் புறம் பேசினால் அவரது தவறைச் சுட்டிக் காட்டித் திருத்திக்கொள்ளச் சொல்லுதல் வேண்டும். எதையும் மறைக்காது சந்தேகங்களை நேரடியாகப் பேசிக் தீர்த்துக் கொள்ளுதல் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும் நல் வழி ஆகும். பிறரை மற்றவரிடம் நாம் மதித்தால் தான் நாமும் பிறரால் மதிக்கப் படுவோம். பிறருக்குச் செய்யும் தாழ்மை நம்மையே தரம் தாழ்த்திக் கொள்ளும் செய்கை ஆகும். மேலும் உண்மையில் புறங்கூறும் செய்கை எதிர் பார்க்கும் அன்னியோன்னியத்தைப் பிறரிடம் உண்டாக்காது மாறாக பேசுபவரின் நேர்மையற்ற தனத்தையே அஃது வெளிப்படுத்தும். உலகம் மனிதர்களை அவர்களின் வார்த்தைகளாலும், மாறாத செய்கைகளாலுமே கணக்கிடுகின்றது. பிறரைப் பற்றிச் சந்தேகம் தோன்றினால் அஃது தீரும் வரை மௌனத்தைக் கடைப் பிடித்தல் நலம். நமகுத் தெரியாதவற்றை, அறியாதவற்றைப் பற்றி இட்டுக் கட்டிப் பேசுதல் பல குற்றங்களுக்கு வழி வகுத்து விடும்.

அதைப் போலவே இறந்தோரைப் பற்றிப் பேசும்போது எப்போதும் அவரின் நல்லவற்றை நினைவு கொள்ளுதல் நல் ஒழுக்கம். இறந்தவரைப் பற்றி உண்மைக்குப் புறம்பான அவதூறுகள் உருவாக்கி வரலாற்றை மாற்றி எழுத முயலுதல் கடைந்தெடுத்த அயோக்கியத் தனமே ஆகும்.

ஆதலினால் புறங்கூறுவது என்பது மன அழுக்கு, அறமற்றது மற்றும் தீவினையைத் தூண்டும் குற்றமும் ஆகும். எனவே அஃது இல்லாது இருத்தலே நல்லொழுக்கமும் தூய்மையும் ஆகும். எனவே வள்ளுவர் புறங்கூறாமை எனும் இன் நல்லறத்தைப் பொருத்தம் கருதி அழுக்காறாமை, வேட்காமை அதிகாரங்களைத் தொடர்ந்து இங்கே பேசுகின்றார்.


அருஞ்சொற் பொருள் :


ஒப்புரை (Reference)

திருமந்திரம்: 13
மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

திருமந்திரம்: 14
கடந்துநினின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.

திருமந்திரம்: 2512
பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனக் காண்குற மாட்டார்
நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே. 1

மாணிக்க வாசகர். திருவாசகம்.
6. அநுபோகசுத்தி (அறுசீர் ஆசிரிய விருத்தம்)

தேனைப் பாலைக் கன்னலின் தெளியை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன்
தானின் னடியேன் நீயென்னை ஆண்டா யென்றால் அடியேற்குத்
தானுஞ் சிரித்தே யருளலாந் தன்மை யாமென் தன்மையே. 62

தன்மை பிறரா லறியாத தலைவா பொல்லா நாயன
புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ
என்மை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழுந் திருமேனி எந்தா யெங்குப் புகுவேனே. 63

ஔவையார். ஆத்திசூடி:
27. வஞ்சகம் பேசேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு

ஔவையார். நல்வழி:
வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. 23

பட்டினத்தார்:
கோயில் திருஅகவல்: 1

ஒழிவருஞ் சிவபெரும் போக இன் பத்தை,
நிழலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி
எனதற நினைவற இருவினை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபரம் அற ஒரு ...40

முதல்வனை தில்லையுள் முனைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை
நெருப்பினில் அரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத்து ஒளிருஞ் சிவனை,
நினைமின் மனனே! நினைமின் மனனே! ...41

சிவபெரு மானைச் செம்பொனம்பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!

***


In English:

This is the virtue of not backbiting bad on others. It is about not damaging the reputation of another when he is not around.

Backbiting about someone with another when he is not around, slandering, complaining, blaming, defaming, denigrating, dishonoring, aspersing, besmirching, calumniating, growing enmity, smearing, vilifying, whispering, gossiping, rumoring, creating misunderstanding, creating tales, scolding, deceiving, propagating, charging, humiliating, lowering, mocking, ridiculing, joking about his habits etc all are bad virtues.

The blemish made on others who are not present at the scene will not reflect their character instead only shows the true face of the talker. In fact such slander, denigrations made and thinking on others are kind of mental disorder. It is the reflection of the inner minds incapability. Therefore it is also like jealous feeling dirtiness of inner emotions. The thoughts regardless of good or bad registered in the inner mind bring results only to the self. Therefore one should know that the slandering on others causes damage only to the self and thus should not engage in such acts.

In today’s political stage talks, it became a habit to slander on opponents, even though they are dead cooking stories against them, to talk against them as a culture, and appreciated widely as the great memory power and all are happening thinking idiotically that such slanders are going to create good names for self and bad names for the opponents among the public. In fact such stupid slanders only make the talker’s faithfulness really questionable. Cooked up tales and lies only happen in their own life later is the truth.

If it is the good thinking that to share with others the knowledge gained about someone then it must be only the truth and the goodness to be spoken. Then only it will create goodness for others and self. When the creator, the God himself keeps quiet till the end to judge on one, who are we to judge and give statements on co existent with a little knowledge gained about them? Is it wise? Also is it virtuous to create tales on those who do not go well with our ideas, interest or thinking? Such any benefits accrued though slanders are illusion and only temporary. The listener may hear the slanderers talk for name sake. But what is the guaranty that he is agreeing to that? When the listener comes to know that whatever told by the slander is untruth, will he have the same kind of faith and confidence anymore and even if so will it continue the same?

One should weigh his own words and speak. The victories won through lies does stay long. If someone is slandering to us through ignorance, we must correct him his mistake gently. It is better to talk to the appropriate directly face-to-face regarding any doubts so that it will be good way to remove unnecessary confusions. Only when we give regards and respects to others while talking with another, we will also be respected by others in return. And in fact, slander will not bring the intended closeness of the listeners instead only it will reveal only the true and partial face of the slanderer. World at large is considering each individual through their words and deeds alone. When you are not sure about something or someone it is better to keep silence at least it gets cleared. When we try to talk the unknown thing by cooking it paves way for all offenses to start up.

Similarly it is good virtue again only to talk good on the dead. It is very wrong and bad virtue to cook false stories on the dead people and trying to create and falsify the history.

Therefore slandering is in fact a mind's blemish; non virtuous and offense which creates all evil deeds. Hence it is good to maintain non slander as the good virtue and cleanliness. Therefore Valluvar also continues this 'Non slander' as the good virtue considering its appropriateness discusses after Un-enviousness and Non-covetousness more rightly.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...