|
| |
| |
பொழிப்புரை : | |
ஒருவரின் புறத்தே மறைந்து பழி பேசிப் பிறகு அவர்தம் முன்னர் இனியவன் போல் பொய்த்து நடித்து உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்து போதல் நல் அறம் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும். | |
| |
விரிவுரை : | |
பிறரை வஞ்சித்துப் புறம் பேசி அவர் முகத்துக்கு எதிரில் உத்தமர் போல் பொய்யாக நடித்து உயிர் வாழ்வதைக் காட்டிலும் சாதல் நல் அறம் கூறும் ஆக்கத்தைத் தரும். புறம் பேசுதல் என்னும் மா பெரும் குற்றத்தைச் செய்து பொய் பேசிப் போலி வாழ்க்கை வாழ்ந்து தீதின் மேல் தீதாய், தீமைகளைத் தொடர்ந்து வாழ்ந்து பிறகு வருந்துவதைக் காட்டிலும் செத்துப் போதல் நல்லதாம். ஏனென்றால் அஃது தீமையை அதாவது பாவத்தைத் தொடராமல் நிறுத்துவதோடு, அப்படி நிறுத்திய புண்ணியத்திற்கே அறம் தருகின்ற ஆக்கமாகிய மோட்சத்தை அதாவது வீடு பேற்றை அல்லது மறுமையை நல்கி விடுமாம். ஆக ஒருவர் தாம் செத்தாவது தமது புறம் பேசும் தீய பழக்கத்தை, வழுவிய ஒழுக்கத்தை நிறுத்துதல் வேண்டும் என்பது பொருள். எனவே வஞ்சித்துப் புறம்பேசிப் பொய்த்து நடித்து வாழும் வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையா? உண்மைக்கும் மனசாட்சிக்கும் புறம்பாய் வாழுவதைக் காட்டிலும் அவ்விதமானோர் செத்து ஒழிவது நல்லது. நல்லறமவாது தழைத்துச் செழிக்கும் என்றும் இக்குறளிற்குப் பொருள் கொள்ளலாம். ஆதலினால் புறம் பேசும் தீய ஒழுக்கம் வாழும் வாழ்க்கைக்கு உகந்ததல்ல என்பது ஈண்டு பெறப்பட வேண்டிய உட்பொருள். | |
| |
குறிப்புரை : | |
இட்டுக் கட்டிப் புறம் பேசி பொய்த்து வாழ்வதைக் காட்டிலும் சாவது நல் அறமாகும். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
பொய்த்து - உண்மையற்று, நேர்மையற்று, ஏமாற்றி, போலியாக சாதல் - இறத்தல், செத்துப் போதல், மரணித்தல். | |
| |
ஒப்புரை : | |
| |
மாணிக்க வாசகர். திருவாசகம். 9. ஆனந்த பரவரசம் (கலிநிலைத்துறை) : மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையானே தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மாநகர் குறுகப் போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே. 89 புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தான் சேர்ந்தாரே. 90 திருமந்திரம்: 167 காக்கை கவாலென் கண்டார் பழிக்கிலென் பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே. திருமந்திரம்: 208 கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில் ஆழ நடுவர் அளப்புறு வார்களைத் தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில் பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. திருமந்திரம்: 2517 நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும் வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுவந்து ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே. 6 ஔவையார். ஆத்திசூடி: 32. கடிவது மற. 45. சித்திரம் பேசேல். ஔவையார். கொன்றை வேந்தன்: 24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு 25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை (பழிச்சொல்) பட்டினத்தார். திரு ஏகம்ப மாலை: வாதுக்குச் சண்டைக்குப் போவார்; வருவார்; வழக்குரைப்பார்; தீதுக்கு உதவியும் செய்திடுவார், தினந் தேடிஒன்றும் மாதுக் களித்து மயங்கிடு வார்விதி மாளுமட்டும்; ஏதுக் கிவர்பிறந்தார்? இறைவா! கச்சி ஏகம்பனே! 18 ஓயாமல் பொய்சொல்வர்; நல்லோரை நிதிப்பர்; உற்றுபெற்ற தாயாரைவைவர்; சதி ஆயிரஞ் செய்வர்; சாத்திரங்கள் ஆயார்; பிறர்க்குப காரஞ்செய் யார்; தமை அண்டினர்க்கொன்று ஈயார் இருந்தென்ன போயென்ன? காண் கச்சி எகம்பனே! 19 சிவவாக்கியர்: 56 உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர் பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்திலீர் செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருத்திடில் சுற்றமாக உம்முளே சோதிஎன்றும் வாழுமே. | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Instead of living a life slandering behind, lying in front and pretending as sweet self to one and all, dying is worth as it might yield the stated results of good virtues. | |
| |
Explanation : | |
Than living a life of deceiving others through slandering at back and then pretending like a noble smiling in front of them, death is better as it may yield the defined results of the good virtues. | |
| |
Message : | |
Death is a good virtue to life than living with traits of slandering others. | |
| |
*** |
3 comments:
குறலுக்கு விளக்க எழுத்து ரொம்ப சிரிதாக உள்ளது.
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி மலர்.
Font பெரிதாகத் தெரிய வேண்டுமென்றால், Ctrl key ஐ அழுத்திக் கொண்டு, உங்கள் மௌசில் மத்தியில் உள்ள சக்கரத்தை மேல் அல்லது கீழ் நோக்கித் திருப்பித் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளவும்.
அல்லது Ctrl keyஐ அழுத்திக் கொண்டு + அல்லது - கீயை அழுத்தித் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளவும்.
நன்றி.
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...