|
| |
| |
பொழிப்புரை : | |
பயன் இலாதவற்றைப் பலர் முன்பு சொல்லுதல், நன்மை இலாதவற்றை நண்பர் பால் செய்தலினும், தீது. | |
| |
விரிவுரை : | |
பயன் இலாதவற்றைப் பலர் முன்பு சொல்லுதல் என்பது, நன்மை இலாத தீமைகளை நண்பர் பால் செய்தலைக் காட்டிலும் தீதானது. அதாவது நண்பருக்குச் செய்யும் கொடுமையைக் காட்டிலும் கொடுமையானது பிறர் முன்பு சொல்லும் பயன் இலாச் சொல் என்பது பொருள். நண்பருக்குக் கெடுதல் செய்வது என்பதே மாபெரும் கொடுமை. நல்லோர் யாராவது செய்வார்களா? அதைக் காட்டிலும் கொடியது பலர் முன்னர் பேசும் பயனிலாச் சொல் என்றால் எவ்வளவு வேதனையானது அஃது. நண்பர் கூடத் தனக்கு இழைத்த கொடுமையை நட்புக் கருதி பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பொது மக்கள் தமக்குச் செய்யப் படும் வன்சொல் கொடுமையைப் பொறுத்துக் கொள்வார்களா? பயனற்ற சொற்களையும் வீணடிக்கும் நேரத்தையும் நண்பர்களும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆக ஒருவர் பலர் முன்னும் சொல்லும் சொற்கள் தான் அவரை நல்லவரா, கெட்டவரா, இனிமையானவரா, அறுவையா என்பதைத் தீர்மானிக்கிறது. பயனற்ற சொற்களைப் பேசுவோர் அதால் தமது அறிவையல்ல அறிவின்மையையே காட்டிக் கொள்வர். மேலும் அஃது விளைவிக்கும் கொடுமையால் துன்பமும் படுவர். ஆதலின் நாவைக் கட்டுப் படுத்திப் பயன் உள்ளதை மட்டும் பேசுவதைப் பழக்கப் படுத்திக் கொள்வதே தேவையான அறிவுடைமை. | |
| |
குறிப்புரை : | |
நண்பருக்குக் கெடுதல் செய்வதைக் காட்டிலும் கேடானது பலர் முன்பு சொல்லும் பயன் அற்ற சொல். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
நயன் - கனிவு, இனிமை, அன்பு, பரிவு, பண்பு, நலம், நாகரீகம், அருள், சிறப்பு, நன்மை, பக்தி, நற்பயன், கொள்கை, நியதி, உள்ளீடு, பசை, உறவு, வழிமுறை, நட்டார் - நண்பர், உறவினர் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 85 யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. திருமந்திரம்: 88 அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே. திருமந்திரம்: 103 அளவில் இளமையும் அந்தமும் ஈறும் அளவியல் காலமும் நாலும் உணால் தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல் அளவில் பெருமை அரியயற் காமே. திருவாசகம். மாணிக்கவாசகர். 3. திருவண்டப் பகுதி : ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன் சொல்லுவது அறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு 165 ஔவையார். ஆத்திசூடி: 42. கோதாட் டொழி. (பாவத்தை) ஔவையார். மூதுரை: தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. 9 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Speaking useless words in front of many is worst than doing adverse deeds to one's own friends. | |
| |
Explanation : | |
Speaking useless things in front of many is worse than that of doing unkind deeds of afflictions to the friends. | |
| |
Message : | |
Talking non-sense in front of many is worst than doing afflictions to friends. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...