Wednesday, January 27, 2010

திருக்குறள்:196 (அபத்தத்தைப் போற்றுவோர் மனிதரில் பதரே...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 196

அபத்தத்தைப் போற்றுவோர் மனிதரில் பதரே...

In English

பயன் இல சொல் பாராட்டுவானை மகன் எனல்;
மக்கட் பதடி எனல்!

பொழிப்புரை :
பயன் இலாத சொல்லைப் பாராட்டுபவனை மனிதன் என்பதைக் காட்டிலும் மக்களுள் பதர் எனலாம்.

விரிவுரை :
பயனற்ற சொற்களைப் பாராட்டுகின்றவனை மனிதன் என்பதைக் காட்டிலும் மக்களுள் பயனற்ற பதர் என்று கொள்ளலாம்.

பயனற்றவற்றைப் பேசுபவனைப் பற்றி இதுவரையில் கூறிவந்த வள்ளுவர், இப்போது அதைக் கேட்டுப் பாராட்டுவோனை, அவரை ஊக்குவித்து உரையாடும் அறிவிலியைப் பற்றி இங்கே பேசுகின்றார். அவன் மனிதனே அல்ல மனிதப் பதர் என்கின்றார்.

பதரும் உமியும் கால் நடைகளுக்கூட உணவாவதில்லை. அவை உரமாவதுமில்லை. எந்த வகையிலும் உபயோகம் ஆவதுமில்லை. அதைப்போலவே வாழும் மக்களுள் பதர் என்பது உபயோகமற்றது மாத்திரம் அல்ல உபத்திரமும் கொண்டது என்பது புரிந்து அவரை பொது மக்களும் பதரைப் போலவே தூற்றி ஒதுக்கி விடுவர் என்பது உட்பொருள்.

மனிதர்களுள் ஒருவனைப் புரிந்து கொள்ள ஏதுவாக வள்ளுவர் வகுத்த சூத்திரம் இஃது. ஆம் அத்தகையவாறு பயன் அற்றவற்றைப் பாராட்டுவதும், பேசுவதும் உதவாக்கரை மனிதர்களின் குணம். அவர்களால் மனிதருக்குத்தான் ஏதேனும் பயன் உண்டோ? அவரைப் பொருட் படுத்தினால் நாமும் நமது நேரத்தையும் வீணடிக்க நேரும் என்பதே உண்மை.

ஆதலின் பயனற்ற சொற்களைப் பேசுவோரைப் பாரட்டுவோரைப் பதராக எண்ணி ஒதுக்கி, தாம் அவரிடமிருந்து ஒதுங்கிக் கொள்வதே அறிவுடைமை.

குறிப்புரை :
பயனிலாத சொற்களைப் பாராட்டுவோரை மனிதர் என்பதைக் காட்டிலும் பதர் எனக் கொள்வதே பொருந்தும்.

அருஞ்சொற் பொருள் :
மகன் - சிறந்தவன், வீரன், கணவன், ஆண், ஒருவருடைய குழந்தை, மனிதன்
எனல் - என்று சொல்வது, என்பதைக் காட்டிலும்
மக்கட் - மனிதர்கள், ஒருவருடைய குழந்தைகள்
பதடி - தானியப் பதர், உமி, பயனற்ற பொருள்.

ஒப்புரை :

திருமந்திரம்: 317
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே.

திருமந்திரம்: 359
செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே

திருமந்திரம்: 383
இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே

திருவாசகம். மாணிக்கவாசகர்.
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)

3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்)
வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று
அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு
எண்ணம்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமாறு அறியாத எந்தாய் உன் தன்
வண்ணம்தான் அது காட்டி வடிவு காட்டி
மலர்க்கிழல்கள் அவைகாட்டி வழி அற்றேனைத்
திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்
எம்பெருமான் என் சொல்லிச் சிந்துக்கேனே. 29

ஔவையார். ஆத்திசூடி:
59. தூக்கி வினைசெய்.

ஔவையார். நல்வழி:
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல். 34

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 196

Absurd appreciator is human chaff...
In Tamil

payan ila col pArAttuvAnai makan enal;
makkat pathadi enal!

Meaning :
That who appreciates the absurd should be called as not a human being but the human chaff.

Explanation :

That who appreciates the absurd and vain words must be considered as human chaff and not as human beings.

Valluvar has mentioned about the speakers of senseless words so far but now he speaks here about the one who listens to it and appreciates, the encouraging and interacting fool. And so he recommends calling such one as not a human being but only as the human chaff.

The empty ear of grain or the chaff cannot be even useful as the food for animals. That cannot be used as manure either. It is in no way useful. Similarly those human chaffs are not only useless but also disturbance and obstacles. Hence the public will understand them and winnow them like chaff and reject them is the implicit meaning here.

This is the easiest formula or a clue by Valluvar to understand one among the human beings. In fact insane and stupid characters alone will appreciate the useless, senseless and absurd talkers. And by such is there any use to the man kind? If we heed and consider them then we will also be wasting only our precious time.

Therefore it is better to consider and reject such appreciators of absurd as human chaff and to keep them away must be the true wisdom for one.


Message :
It is befitting to consider those who appreciate the absurd as human chaff instead of human.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...