|
| |
| |
பொழிப்புரை : | |
வேண்டற்க, பிறன் பொருளை வேட்கையால் பெறும் ஆக்கத்தை; அவ் விளைவையின் பயன் மாட்சிமைக்கு அரிதானது ஆகையினால். | |
| |
விரிவுரை : | |
பிறன் பொருளைக் கவர்ந்து பெறும் வளத்தால் வரும் பயனில் மகிமை என்பது இருக்காது என்பதால் அதை வேண்டாது இருக்கவும். பிறன் பொருளை அபகரிப்பதாலேயே மாட்சிமை என்பது கிடையாது. இதில் அதன் விளைவால் கிட்டும் பயனில் எப்படி மகிமை கிட்டும்? திருடிச் சேர்த்தவையால் நன்மையோ, பெருமையோ, அமைதியோ ஏதும் வருவதில்லை. அஃது பிறருக்குத் துன்பம் விளைவிப்பதோடு, சேர்ந்தாரையும் இகழ்ச்சிக்கே இட்டுச் செல்லும். எனவே அதன் விளைவால் மதிப்போ, மேன்மையோ, புகழோ ஏதும் வாராது. மாறாக இகழ்ச்சியும், அவமதிப்பும், மரியாதைக் குறைவும் தான் உண்டாகும். வருகின்ற வழி நல் வழி அன்றேல் வந்தவை தங்குவதும் இல்லை. தங்கினாலும் அவை நன்மை விளைவிப்பதும் இல்லை. நன்மை தருவது போல் தோன்றினாலும் அவை நீண்ட நாள் தாங்குவதில்லை. வெளிப்படையான இன்பத்தையோ, அமைதியையோ, கௌரவத்தையோ, நிம்மதியையோ அவை ஒரு போதும் வழங்குவதுமில்லை. பிறன் பொருளை வேட்கை கொண்டு அபகரித்தல் என்பது வெற்றியுமல்ல. அஃது வீரச் செயலும் அல்ல. ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும் சமூகம் பாராட்டும் செயலும் அல்ல. அத்தகைய பொருள் ஈட்டம் வாழ்வை வளப்படுத்துவதும் இல்லை. நல்ல காரியத்திற்குப் பயன் படுவதுமில்லை. ஆதலினால் பிறன் பொருளை விரும்பி வளம் பெற நினைத்தல் பேதைமை. அத்தகைய தீய வழியினை வேண்டாமையே நன்று. | |
| |
குறிப்புரை : | |
பிறன் பொருளை அபகரித்துப் பெறும் மகிமை அற்ற வளத்தை வேண்டாமையே நன்று. | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
மாண்டல் - மாட்சிமைப் பட்டது, மகிமைப் பட்டது | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 1462 விரும்பிநின் றேசெயில் மேய்த்தவ ராகும் விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும் விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும் விரும்பிநின் றேசெயில் விண்ணவ னாகுமே. திருமந்திரம்: 1535 அண்ணலை நாடிய ஆறு சமயமும் விண்ணவ ராக மிகவும் விரும்பியே முண்ணின் றழியு முயன்றில ராதலான் மண்ணின் றொழியும் வகையறி யார்களே. திருமந்திரம்: 2258 கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும் உரிய கழுனை முதல்எட்டும் சூக்கத்து அரிய கனாத்துலம் அந்தன வாமே. மாணிக்கவாசகர். திருவாசகம்: 20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 376 புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும் அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 377 ஔவையார். கொன்றை வேந்தன்: 24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு 25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை (பழிச்சொல்) 31. சூதும் வாதும் வேதனை செய்யும் ஔவையார். நல்வழி: நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள். 38 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Desire not the gain of covetousness since there is no glory through its usage. | |
| |
Explanation : | |
Desire not the earnings of the covetousness since its utilization does not have any glory. | |
| |
Message : | |
Desiring not the glory through the wealth of coveting others is only good. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...