Saturday, January 30, 2010

திருக்குறள்:200 (சொல்லாதீர் பயன் இல்லாதவற்றை...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 200

சொல்லாதீர் பயன் இல்லாதவற்றை...

In English

சொல்லுக, சொல்லின் பயன் உடைய! சொல்லற்க
சொல்லில் பயன் இலாச் சொல்!

பொழிப்புரை :
சொல்லுக சொற்களில் பயன் உடையவற்றை. சொல்லாதீர் சொற்களில் பயன் இல்லாதவற்றை.

விரிவுரை :
சொற்களில் பயன் உள்ளவற்றை மாத்திரம் சொல்லுக; பயன் இல்லாதவற்றைச் சொல்லாதீர்.

சொன்னால் அர்த்தமுள்ளவற்றை, பொருள் கொண்டவற்றை, பயன் தருவனவற்றை மாத்திரம் சொல்லுங்கள். மற்றவற்றைத் தவிர்த்து விடுங்கள் என்கின்றார்.

சொற்களில் பயன் உள்ளவற்றை மாத்திரம் சொல்லுக என்றாலேயே பயன் இல்லாதவற்றைச் சொல்லாதீர் எனவும் அஃது பொருள் தரும் தானே. பிறகு அதையும் ஏன் வள்ளுவர் மீண்டும் சொல்ல வேண்டும்?
அஃது பயனில சொல்லாமையைச் சாதாரணமாக வலியுறுத்துவதற்காக மட்டும் அன்று. சொல்லத் தேவை ஏற்பட்டுச் சொன்னால் பயன் உள்ளவற்றை மாத்திரம் சொல்லுக. பயன் இல்லாதவற்றை எப்போதும் சொல்லாதீர் என்பது உண்மையான பொருள்.

நடை முறை வாழ்வில் எப்போதும் மவுனம் காப்பது இயல்பானது அன்று. எனவே பேச வேண்டிய தருணங்களில் பேசுவோம். ஆனல் பயன் உடையனவற்றை மாத்திரம் எண்ணுவோம்; மொழியின் எழுத்தால் ஒலியால் பேசுவோமாக.

குறிப்புரை :
பயன் உடையவற்றைச் சொல்லுக. பயன் அற்றவற்றைச் சொல்லாதீர்.

அருஞ்சொற் பொருள் :
சொல் - கூறு, மொழி, வாயோசையால் வெளிப்படுத்து, தெரிவி, குறிப்பிடு, விவரி, பரிந்துரை, கேள், விளக்கு, பதிலிறு, திருப்பிக்கூறு, ஏவு, கற்றுக் கொடு, வார்த்தை, ஒலித் தொகுதி, பேச்சு, கூற்று, வாக்கு, பழமொழி, புகழ்ச்சி, பாராட்டு, மந்திரம், அறிவுரை, கட்டளை

ஒப்புரை :

திருமந்திரம்: 1152
மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசைப் பாவை யைப் போகத் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தானே.

திருமந்திரம்: 1204
எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவம் இன்றி கருத்துறும் வாறே.

திருமந்திரம்: 1251
பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி
நற்றாள் இறைவனே நற்பயனே என்பர்
கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.

திருவாசகம். மாணிக்கவாசகர்.
6. நீத்தல் விண்ணப்பம்
(திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை)

செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில் மொழியாரில் பல்நாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால்
உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே
வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே. 109

அடர்புலனால் நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் நல்லாரவர்தம்
விடர்விட லேனை விடுதிகண்டாய் விரிந் தேயெரியுஞ்
சுடரனை யாய் சுடு காட்டரசே தொழும் பர்க்கமுதே
தொடர்வரி யாம் தமியேன் தனி நீக்குந் தனித்துணையே. 142

ஔவையார். ஆத்திசூடி:
89. மிகைபடச் சொல்லேல்.

பட்டினத்தார். பொது: 33
உரைக்கைக்கு நல்ல திருவெழுத்து ஐந்துண்டு உரைப்படியே,
செருக்கித் தரிக்க திருநீறு முண்டு; தெருக்குப்பையில்
தரிக்கக் கரித்துணி ஆடையும் உண்டு எந்தச் சாதியிலும்
இரக்கத் துணிந்து கொண்டேன்; குறை ஏதும் எனக்கில்லையே!

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 200

Never speak the useless...
In Tamil

solluka, sollin payan udaiya! sollaRka
sollil payan ilAch chol!

Meaning :
Speak only the useful words; never speak the useless words.

Explanation :

Speak only the useful words when necessary. Speak not the useless forever.

When speaking, speak only the meaningful, sensible and useful words. Avoid the rest says Valluvar.

When it is said that speak only the useful words in the first half of the Kural it also automatically means that do not speak the useless without telling. Is it not? Then why Valluvar should explicitly repeat it in the next half of the Kural? It is not just or the usual way to insist the point of not talking useless but only to make it more unambiguous. Only when necessary speak on but only the useful ones. And never speak the useless, is the explicit meaning here.

It is very difficult to maintain the silence at all juncture of practical life. Therefore let us speak only at the situation where it is necessary and inevitable to talk. But let us think only the useful and speak it through letters and sound of the languages.


Message :
Speak useful and never the useless words.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...