Thursday, January 14, 2010

திருக்குறள்:188 (புறங்கூறுவாருக்கு நெருக்கம் ஒரு கேடா?...)

அதிகாரம்

: 19

புறங்கூறாமை

திருக்குறள் : 188

புறங்கூறுவாருக்கு நெருக்கம் ஒரு கேடா?

In English

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்,
என்னைக் கொல்; ஏதிலார்மாட்டு?

பொழிப்புரை :
தம்மை அணுகிச் சேர்ந்து நிற்பாரின் குற்றத்தையும் தூற்றும் வழக்கமுடையோர், என் செய்வாரோ அன்னியரிடத்து?

விரிவுரை :
தம்மைச் சார்ந்து இசைந்திருப்போரின் குற்றத்தைக் கூடத் தூற்றும் வழக்கமுடையோர், அண்மையற்ற அயலாரிடத்துக் காண்பவற்றை என்ன செய்வாரோ?

குற்றங்களை உரியவரிடம் மாத்திரம் சுட்டிக் காட்டித் திருத்திக் கொள்ளச் சொல்லுவது ஓர் உதவி, சில சமயங்களில் கடமையும் கூட. ஆனால் தமது நண்பர்கள், உறவுகள், குடும்ப அங்கத்தினர், பணி செய்வோர், அலுவலக சக ஊழியர் இவர்களின் குற்றத்தை பிறரிடம் தூற்றிக் கூறுவதே புறங்கூறுவது ஆகும்.

அதாவது நெருங்கியவர்களின் குறையைக் கூட நாளை அவர் என்ன எண்ணுவாரோ என்று எண்ணாது புறம் கூறும் பழக்கமுடையோர், சம்பந்தமில்லாதவரின் விடயம் கிடைத்து விட்டால் சும்மா இருப்பாரா? மெல்லுவதற்குப் புதிய விடயம் கிடைத்ததென்று புறங்கூறிக் கொண்டாடித் திளைப்பார் அன்றோ?

ஆயின் இஃது முழுவதுமே தவறு என்பது கூறாப் பொருள். செய்கின்ற தவறான புறங்கூறும் தூற்றலில் தமது நெருங்கியவரைக் கூட விடாத மனிதரின் பழக்கம் தான் எத்தனை கெட்டது என்பது பொருள். பழகிய கெட்ட பழங்கங்களை பிற்பாடு ஒழித்தல் என்பது மிகவும் சிரமமான செயல், ஆனால் முயற்சித்து நிறுத்த வேண்டும்.

ஒருவர் நெருங்கியவரைப் பற்றிப் புறங்கூறித் தூற்றியதைப் பிற்பாடு தெரியவருகின்ற போழ்து போகட்டும் அவர் எப்போதுமே அத்தகைய இயல்புடையவர் என்று சம்பந்தப்பட்டவர் ஒருவேளை விட்டுக் கொடுக்கலாம். ஆனால் அன்னியர் அவரைப் பற்றி இவர் தூற்றியதை அறிந்தால் சும்மா விடுவாரா? பகைதான் பன்மடங்கில் வளரும். ஆக இவர் இன்னாரென்று பாகுபாடு தெரியாமல் செய்யும் புறங்கூறும் பழக்கம் என்பது பல இன்னல்களுக்கு வழிவகுக்கும்.

மொத்தத்தில் யார் மீது புறங்கூறித் தூற்றினாலும் அஃது கெட்ட பழக்கமே.

குறிப்புரை :
நெருங்கியவரையே தூற்றும் வழக்குடையோர் அயலாரை என் செய்ய மாட்டாரோ?

அருஞ்சொற் பொருள் :
மரபு - நியதி, வழக்கு, இயல்பு
துன்னு - அணுகு, நாடி வா, மேற்கொள், கைக்கொள், செய், அடை, பெறு, கருது, மனத்தில்கொள், பொருந்து, இயைந்து சேர், அடர்ந்திரு, செறிந்திரு, தை
ஏதிலார் - பிறர், அன்னியர், பகைவர், பரத்தையர், அயலார்

ஒப்புரை :

திருமந்திரம்: 819
ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்
கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிக்கின்ற காலத்துப் பையகற் றீரே

திருமந்திரம்: 868
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவ நீச நிடமது தானே

திருமந்திரம்: 2385
கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப
அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்
வருசமயப் புற மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.

திருமந்திரம்: 2522
நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை
ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை
கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண்
மூடிக்கண் டேனுல கேழுங்கண் டேனே. 11

மாணிக்க வாசகர். திருவாசகம்.
8. திரு அம்மானை:
(திருவண்ணாமலையில் அருளியது -
தரவு கொச்சகக் கலிப்பா / ஆனந்தக் களிப்பு )

துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்
கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும்
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய். 183

ஔவையார். ஆத்திசூடி:
94. மேன்மக்கள் சொற்கேள்.
96. மொழிவ தறமொழி.

ஔவையார். கொன்றை வேந்தன்:
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

பட்டினத்தார். பொது:
வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்ற போது புகலுநெஞ்சே! இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே! 10

எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூட ரெல்லாம்
கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர், கருத்தில் வையார்
பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே. 30

***

In English:

Chapter : 19

Non-Slandering

Thirukkural : 188

Do slanderers care on dearness?
In Tamil

thunniyAr kuRRamum thURRum marabinAr,
ennaik kol; EthilArmAttu?

Meaning :
Those who have the habit of slandering even on the mistakes of their dear & close ones, what will they do with others?

Explanation :

Those who have the habit to disgrace and slander even the closest ones for their errors, what would they do when they see faults with others?

It is a help and sometimes even duty to point the mistakes to the concerned alone. But when one disgraces their own friends, relatives, family members, subordinates and colleagues for their mistakes with others, which is exactly the slandering.

It is that those who have the habit of slandering even the closest human beings without thinking what they would do once they come to know, when they get information about the distant and unrelated, will they keep quiet? Won't they celebrate as if they got the new substance to chew about?

But all that are totally wrong is the implied meaning here. In the offense of slandering how bad it is to not consider even the dear ones is the intended meaning here. It is too difficult to kill the learnt bad habits, but one must try it hard and should stop it.

Once when the intimate one comes to know about the disgrace and slander made on him by one, he or she may consider that as that the habit of the slanderer and may ignore for the sake of closeness. However, when the distant one comes to know about such disgrace on him by the same, will he or she keep quiet? Only enmity will grow in multitudes. Therefore the indiscriminate disgrace and slandering only will lead to unwanted troubles and afflictions.

Therefore the slandering is the bad habit regardless on anyone.


Message :
Those who have the habit of slandering the closest too, what won’t they do to others?

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...