|
| |
| |
பொழிப்புரை : | |
அறம் [இஃதென] அறிந்து பிறர் பொருளை வேட்காத அறிவு உடையாரைச் சேரும்; [அவர்தம்] திறம் அறிந்து ஆங்கே திருமகள். | |
| |
விரிவுரை : | |
அறம் ஈதென்று அறிந்து பிறர் பொருளை வேட்காத அறிவு உடையாரை அவர்தம் திறத்தை அறிந்து ஆங்கே திருமகள் சேர்வாள். பிறன் பொருளை வேட்காமை அறமென்றே அறிந்து நிற்பவர் பால், அவர் தம் தகுதிக்கேற்ப திருமகள் அவர்களைச் சென்றடைவாளாம். பிறன் பொருளை வேட்காதவவரைத் திருமகள் சார்ந்து பயன் தருவாள் என்றால் மிகவும் பொதுவானதாக ஆகி விடும். இதில் அத்தகையோருக்கும் அவரவர் நேர்மைத் தகுதிக்கேற்ப நிற்பாள் என்று கூறுவதே சிறப்பானது, கவனத்தில் கொள்ள வேண்டியது. அறம் ஈதென்ற தெளிவுற்ற மதியொடு, இதுவே கொள்கையென்ற திடமுற்ற மனதொடு, நேர்மைத் திறத்தொடு, தமது ஆற்றலால் செயல் ஆற்றுபவரைத்தானே வெற்றித் திருமகள் பற்றி நிற்பாள். கவனம் சிதைவுறாத மனமும், நல்லறம் செலுத்தும் சாலையுமே பயமற்ற செல்வத்தைக் கொடுக்கும். அதிருஷ்டமும், வெற்றியும் முன்வினையோ, பின்வினையோ எதாக இருந்தாலும் அவை நல்லெண்ணத்தால் மட்டுமே கை கூடும். வெற்றிக்கு உளவியலாளர்கள் கூறும் வழியும் இதுவே ஆகும். நல்லறத்தால் வரும் நல்லெண்ணமும், சிதறாத கொள்கைப் பிடிப்பும், இலக்கின் தெளிவும் வெற்றியைப் பெற்றுத் தரும். வெற்றிகள் இருக்குமிடமே திருமகள் இருக்குமிடம். முன்னேற விளைபவர் குறுக்குவழியால் பிறரின் திறமையைத் திருடி மேல் வர எண்ணினால் அவமானங்களையும், துன்பத்தையும் தான் இறுதியில் சந்திக்க வேண்டி இருக்கும். திசை மாறிய மனது இறுதி இலக்கை அடைவதும் இல்லை; தீய வழிகள் என்றைக்கும் சிறப்பை நல்குவதுமில்லை. திருமகள் சென்ற இடமெல்லாம் செல்வ வளத்தையும் நலத்தையும் அள்ளிக் கொடுக்கும் தெய்வம் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். எனவே பிறன் பொருள் வேட்காமை என்பது சென்ற குறளில் சொன்னது போல் செல்வத்தின் சுருங்காமை அதாவது வற்றாமையை மாத்திரம் அல்ல வளத்தையும் கொடுக்கும் என்பது இங்கே தெளிவு. | |
| |
குறிப்புரை : | |
பிறன் பொருள் வேட்கா நன்மக்கள் பால் அவர் தம் தகுதிக்கேற்ப திருமகள் சென்றடைவாள். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
திறம் - கூறு, வகை, இயல்பு, சார்பு, சுற்றம், வழிமுறை, திறமை, ஆற்றல், சக்தி, சிறப்பு, மேன்மை, நேர்மை, நல்லொழுக்கம், கற்பு. | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 1835 கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள் பழிப்படு வார்பல ரும்பழி வீழ வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே. திருமந்திரம்: 1843 காண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம் காணும் அளவும் கருத்தறி வாரில்லை பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு மாணிக்க மாலை மனம்புகுந் தானே. திருமந்திரம்: 2518 நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும் எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப் பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை விண்அறி வாளர் விரும்புகின் றாரே. மாணிக்கவாசகர். திருவாசகம்: 35. அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல் : புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516 வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன் இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம் திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517 வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 518 ஔவையார். மூதுரை: மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல உருவும் உயர் குலமும் எல்லாம் - திரு மடந்தை ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது அவளோடும் போம். 29 ஔவையார். நல்வழி: நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும் பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும் தரும் சிவந்த தாமரையாள் தான். 21 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
The Goddess of Luck reaches out appropriate to their uprightness to those wise who understood that as the righteous virtue and are free from covetousness. | |
| |
Explanation : | |
The Goddess of fortune joins appropriate to their just to those wise who learnt that as the virtue and stood free from the covetousness on others. | |
| |
Message : | |
Appropriate to their just the Goddess of Fortune joins them that who are free from covetousness. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...