Wednesday, January 27, 2010

திருக்குறள்:197 (சான்றோர் பயனில சொல்லாமை நன்று...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 197

சான்றோர் பயனில சொல்லாமை நன்று...

In English

நயன் இல சொல்லினும் சொல்லுக! சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று.

பொழிப்புரை :
நன்மை இலாதவற்றைச் சொல்லினும் சொல்லுக; சான்றோர், பயன் இலாதவற்றைச் சொல்லாமை நன்று.

விரிவுரை :
சான்றோர் எனும் நல்லறத்தார் நன்மை இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம் ஆனால் பயன் இல்லாதவற்றைச் சொல்லாமல் இருத்தலே நல்லது.

ஒருவர் பயனற்றவற்றைப் பேசினால் எல்லோராலும் இகழப்படுவார்; அவரது பெருமையும் மேன்மையும் கெடும்; மேலும் பயனற்ற பேச்சைப் பாராட்டினால் மேலோர், கீழோர் எனும் எத்தகுதியும் பார்க்காது அவர் பயன் அற்றுப் போய் விடுவார் என்பதை இதுகாறும் சென்ற குறள்களில் வள்ளுவர் கூறியிருப்பதால், பயனற்றவற்றைப் பேசும் சான்றோர் சான்றோராகத் தொடர முடியாது என்பது மிகவும் தெளிவு. பிறகு ஏன் சான்றோர் நலம் அற்றதைப் பேசினாலும் பேசட்டும்; பயன் அற்றதை மட்டும் பேசாது இருக்கட்டும் என்கிறார் என்றால் நல்லவை, அல்லாதவை என்பனவற்றை விளக்க சான்றோர் நன்மை அற்றவற்றைக் கூடப் பேச நேரலாம். ஆனால் அத்தகைய தருணத்திலும் பயன் அல்லாதவற்றை உதாரணத்திற்குக் கூடச் சொல்லுதல் தவறு என்பது உட்கருத்து.

அதாவது தவறிக் கூடப் பிழை செய்ய மாட்டாதவர் சான்றோர் என்பது முன்னரே வகுத்தாயிற்று. இங்கே அவர்களை அறநெறி முறையினின்று தவறுவதற்கு அனுமதியோ சலுகையோ வள்ளுவர் கொடுக்க வில்லை. மாறாக பிற உயிர்களின் நன்மைக்காகவே மேலே சொன்னதைப் போன்ற ஒரு தேவை ஏற்படின் சான்றோர் நலம் தராததைக் கூடப் பேசலாம் என்கின்றார். அதாவது கல்விக்கோ, வழக்கிற்கோ, உயிரைக் காப்பாற்றவோ அது போன்ற ஏதோ ஒரு நலன் கருதி, நலமற்றதைக் கூடப் பேசலமாமாம். ஆனால் பயன் அற்றதை மாத்திரம் எந்தப் பயன் கருதியும் பேசலாகாது என்பது கருத்து.

நேர்மறை எண்ணங்களோடு திகழ வேண்டிய அற வழி உலகில் அமங்கலமானதைக் கூடப் பேச வேண்டி இருப்பின் பேசலாம் ஆனால் ஒரு போதும் அர்த்தமற்றதை அல்ல என்பது பொருள். சான்றோர்களின் அமங்கல வார்த்தைகளால், கோபத்தின் உச்சியில் சொன்ன அறம் எனும் வார்த்தைகளால், சாபங்களால், வாக்குகள் பலித்ததாய் புராணங்களும், வரலாறுகளும் பேசுகின்றன. அவர்கள் அபத்தங்களைப் பேசியதாய்க் காண்பது அரிது.

எனவே சான்றோர்கள் கருத்தற்ற, அர்த்தமற்ற, பொருளற்ற, பொருத்தமற்ற வார்த்தைப் பிதற்றல்களை ஒரு போதும் உதிர்ப்பதில்லை. அவ்வாறான நேரத்தைப் பாழடிக்கும் வீண் பேச்சை அவர்கள் உரைக்கவும் கூடாது என்று கூறுவதன் வாயிலாக ஒவ்வொருவரும் சான்றோராகத் திகழ வேண்டும் என்பதே இக் குறளின் நோக்கம்.

குறிப்புரை :
சான்றோர் நன்மை அற்றவற்றைத் தேவை கருதிச் சொன்னால் கூடப் பரவாயில்லை; பயன் அற்றவற்றை மட்டும் சொல்லாமல் இருத்தலே நலம்.

அருஞ்சொற் பொருள் :
நயன் - கனிவு, இனிமை, அன்பு, பரிவு, பண்பு, நலம், நாகரீகம், அருள், சிறப்பு, நன்மை, பக்தி, நற்பயன், கொள்கை, நியதி, உள்ளீடு, பசை, உறவு, வழிமுறை

ஒப்புரை :

திருமந்திரம்: 392
பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு
அயஓளி யாயிருந் தங்கே படைக்கும்
பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே

திருமந்திரம்: 396
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே

திருமந்திரம்: 460
கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே

திருவாசகம். மாணிக்கவாசகர்.
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்)

சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
கண் இனை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை
மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத்
தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலி இத்தனிய னேற்கே. 30

ஔவையார். ஆத்திசூடி:
65. நன்மை கடைப்பிடி.

ஔவையார். நல்வழி:
பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு. 35

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 197

Good for wise is to speak not useless...




In Tamil

nayan ila sollinum solluka! sAnROr
payan ila sollAmai nanRu.

Meaning :
Let the wise speak even the not good but not the useless words for the good.

Explanation :

Let the wise of good virtues may even speak of non good but not the useless words for their own good.

When one speaks senseless will be disgraced by all; one's eminence and excellence get destroyed; and also when one appreciates the absurd regardless of one's status one will go as human chaff and will become absolute waste is what so far Valluavar explained in the previous Kurals of this chapter. Therefore one wise by talking useless cannot continue any more as the wise is very clear. Then why does he says that let wise speak even the not good but not the meaningless is only consideration that wise may speak the good or non-good for the sake of explanations. But even in such situations the wise should never speak the useless even for example is the implied meaning here.

It is already defined that the wise should never go wrong even by mistake. So Valluvar is not giving any exemptions to them here to overrule the virtues or bend it. On the other hand only when the above explained like situations warrant or necessitates for the benefit of other coexistences, the wise may speak of non good says Valluvar. That is when the education, court case or to save a life or such as necessary event of a good cause one may even speak of non good. But one should never speak senseless for whatever be the sake is the meaning.

Still to make it clear, in the word of good virtues where only the positive thinking is suppose to prevail, one may speak even the non auspicious if necessitates but not the senseless is the exact meaning. The inauspicious words, anger utterances, imprecation, curse by the wise, sages, and great eminent people have even became true says the epics and histories. But it is very rare to find any senseless speech by them.

Therefore the wise and scholars never utter meaningless, senseless, useless, inappropriate words or prattles.
Thus emphasizing it clear that such time wasting speech should not be uttered by wise, this Kural intends everyone to follow the same to become wise.


Message :
The wise may even speak the not good when may necessary but not the useless words is for own good.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...