Showing posts with label பிறன். Show all posts
Showing posts with label பிறன். Show all posts

Tuesday, January 12, 2010

திருக்குறள்:186 (பழிப்பவன் பழிக்கப் படுவான்...)

அதிகாரம்

: 19

புறங்கூறாமை

திருக்குறள் : 186

பழிப்பவன் பழிக்கப் படுவான்...

In English

பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும்.

பொழிப்புரை :
பிறன் பழியைப் புறம் கூறுகின்றவன், தன் பழிகள் அனைத்துள்ளும் அவற்றின் யோக்கியதை அறிந்து [மற்றோரால் புறங்] கூறப்படும்.

விரிவுரை :
பிறன் பழியைப் புறங் கூறித் திரிபவனிற்கு, அவன் தன் பழிகள் அனைத்துள்ளும் அவற்றின் யோக்கியதை வகை அறிந்து மற்றவர்களால் புறம் கூறப்படும்.

கெடுவான் கேடு நினைப்பான் தனக்கே வரும் பெரும் கேடு என்பது இதைத்தான். முறபகல் செயின் பிற்பகல் விளையும். அதாவது பிறரின் பழியை இகழ்ந்து, ஏளனப்படுத்திப் புறம் பேசித் திரிபவனை, அவனின் தவறுகளுள், பழிகளை ஆராய்ந்து அதில் கொடுமையானவற்றை, மிகவும் கேவலமானவற்றை மற்றையப் பிறரால் புறம் கூறப்பட்டு, எள்ளி நகையாடப் படுவான்.

அடுத்தவனிற்கு அவமானத்தை அள்ளி வழங்கும் சிறுமதியோர், அவர்தம் குற்றங்களாலேயே பிறரால் எள்ளி நகையாடப் பட்டு அவமானப் படுவர். தான் பிறருக்கு எதை வழங்குகின்றோமோ அதை உலகம் மறக்காமல் பன்மடங்கில் திருப்பிக் கொடுத்து விடும். எதை விதைக்கிறோமோ அதுவே விளையும். இதுவே இயற்கையின் சுழற்சித் தத்துவம்.

பிறரைச் சிறப்பித்தால், பாராட்டினால் நாமும் மற்றவர்களால் நன்றாகச் சிறப்பிக்கப் படுவோம், பாராட்டப் படுவோம். பிறரை ஏளனப் படுத்தித் தூற்றித் துன்புறுத்தின் அதைவிடப் பெரிய அவமானமும், துன்பமும் மற்றோரால் நமக்குக் காத்திருக்கும்; அஃது வெகுவிரைவில் தம்மைத் தாக்கும் என்பதைப் புறம் கூறுவோர் உணர்ந்து அப் பழக்கத்தை ஒழித்தல் வேண்டும்.

இதையேதான் நல்லதையே நினையுங்கள், நல்லதையே பேசுங்கள், யாரையும் அவமதிக்காதீர் என்ற நல் அறிவுரைகளாக, நல்லற வழிமுறைகளாகச் சொல்லுவதும் உண்டு.

புறம் பேசுவோர் நாளை நமது குறைகளையும் மற்றோர் பேசுவாரே என்கின்ற உண்மை உறைத்தால் அவ்வாறு பேச விளையார் என்பதே இக்குறள் கூறும் கருத்து. தான் யோக்கியவானாக இருப்பவன் பிறர் மீது கல் எரியட்டும் என்று ஏசுபிரான் சொல்வதைப் போல், நம் குற்றத்தை நாமே அறியாது, நமது யோக்கியதை நாமே உணராது பிறரைப் பற்றிப் பேசுவதற்கு நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

குறிப்புரை :
மற்றோன் பழியைப் புறங்கூறுபவன் அவனது பழிகளின் யோக்கியத்தால் பிறரால் புறம் கூறப்படுவான்.

அருஞ்சொற் பொருள் :
உள்ளும் - உள்ளும் புறமும், அனைத்தும்

ஒப்புரை :

திருமந்திரம்: 463
ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே

திருமந்திரம்: 575
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே

திருமந்திரம்: 2520
ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்
பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன்
கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புனைபுக ழானே. 9

மாணிக்க வாசகர். திருவாசகம்.
8. திரு அம்மானை:
(திருவண்ணாமலையில் அருளியது -
தரவு கொச்சகக் கலிப்பா / ஆனந்தக் களிப்பு )

பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலுங் காண்டற் கரியாற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். 176

ஔவையார். ஆத்திசூடி:
74. நொய்ய வுரையேல்.
78. பிழைபடச் சொல்லேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்

பட்டினத்தார். திருத் தில்லை:
ஓடாமல் பாழுக்கு உழையாமல் ஓரம் உரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர் கூட்டம் விடாமல்வெங் கோபம் நெஞ்சில்
நாடாமல் நன்மை வழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வம் தருவாய்! சிதம்பர தேசிகனே! 4

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னும் இந்த
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால்பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்ய வேண்டுமன்றே அறி வாரில்லையே! 7

ஊட்டுவிப் பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றேடொன்றை
மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை
காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி
ஆட்டுவிப் பானும் ஒருவன் உண் டேதில்லை அம்பலத்தே 11

***

In English:

Chapter : 19

Non-Slandering

Thirukkural : 186

Slanderer will be slandered...




In Tamil

piRan pazhi kURuvAn than pazhiyuLLum
thiRan therinthu kURappadum.

Meaning :
That who slanders others for their sins, will get slandered by another for his highest befitting sins.

Explanation :

That who slanders on others for their sins, gets slandered by somebody else with his worst befitting sins.

This is what known as that who thinks of ill on others gets the ill. Whatever one does on the forenoon gets reaction in the afternoon. It is that the one who mocks and slanders the sins of others gets slandered and mocked by another for his worst wicked and mean mistakes.

Those mean minded who dishonor and disrespect others, gets mocked and disgraced by their own mistakes. Whatever one offers to another gets duly returned in multitudes by others to them without fail in this world. Whatever we sow only reap. This is the nature's law of cycle.

If we appreciate and honor others we will also get appreciated and honored by many. One should know that when we dishonor and slander others, greater disgrace and affliction in multitudes will await us; that will affect us very soon, hence should eliminate the habit of slandering.

This is the same thing in other words been always advised by the elders to think and speak the good and never disrespect anyone etc.

Those who realize the fact that their own mistakes will be slandered in the future by others, will not attempt to slander is the intended message by this Kural here. Like the Jesus saying that who is sinless let him throw the stone, without knowing our own mistakes, without aware of our own sins, do we have any moral rights to slander on anyone?


Message :
That who slanders another for his sins will get slandered by others for his sins in appropriations.

***

Sunday, November 22, 2009

திருக்குறள்:148 (பேராண்மை எனும் ஒழுக்கம்...)

அதிகாரம்

: 15

பிறனில் விழையாமை

திருக்குறள் : 148

பேராண்மை எனும் ஒழுக்கம்...

In English

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை, சான்றோர்க்கு
அறன் ஒன்றோ? ஆன்ற ஒழுக்கு.

பொழிப்புரை :
பிறன் மனையாளை [தவறாக] நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு சிறப்பு மட்டுமோ? [அதுவே அவரது] ஆழ்ந்த ஒழுக்கம்.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
பிறன் மனையாளைத் தவறிய கண்ணோடு நோக்காத பெரிய ஆண்மை, சான்றோருக்கு சிறப்பு மட்டுமா? அதுவே அவரது ஆழ்ந்த ஒழுக்கம்.

ஆண்மை என்பது வலிமையாகக் கருதப்படும் ஆணின் தன்மை. அஃது உடல் வலிமையை, வீரத்தைக் குறிப்பது. ஆயின் பிறன் மனையாளை விரும்பாத மன வலிமை என்பது பேராண்மையாம். எளியவரிடத்துக் காட்டும் வலிமையைக் காட்டிலும், வலியவரிடத்துக் காட்டும் வீரமே பெருமை போலும், எளிதாக மயங்கித் தவறி விடக் கூடிய பெண் மோகத்தினின்றும் அதை மன அடக்கத்தால் வெல்லுவதே சிறப்பு அல்லவா? எனவே அஃது பேராண்மை எனப்பட்டது.

அதிலும் பிறன் மனையாளைத் தவறி நோக்காத அத்தகைய பேராண்மை மிகச் சிறப்பானது அன்றோ? ஆம். அஃது சான்றோருக்கு சிறப்பென்பதைக் காட்டிலும் அதுவே அவரது ஆழ்ந்த ஒழுக்கமாகும். அதாவது சான்றோருக்குப் பிறன் மனையாளைத் தவறியும் எண்ணாதது சிறப்பென்பதைக் காட்டிலும் அதுவே அவரது அத்தியாவசியமான, ஆழ்ந்த ஒழுக்கம் என்பதே மறை பொருள்.

ஆழ்ந்த ஒழுக்கத்தில் நிற்போருக்குச் சிறப்பு என்பது தானாகவே நிகழும். ஒன்றை வெறும் புகழ்ச்சிக்காக ஒழுகுவதைக் காட்டிலும் உண்மையிலேயே ஆழ்ந்து ஒழுகுவது என்பதே சிறப்பு. அஃது உயர்ச்சியிலும், தாழ்ச்சியிலும் மாறாதது என்பது ஈண்டு பெறத் தக்கது.

எனவே சான்றோர் என்பவருக்கு ஆழ்ந்த ஒழுக்கம் என்பது பிறன் மனையாளை எண்ணாத பேராண்மைத் தனமே.

குறிப்புரை :
சான்றோரின் பிறன் மனையாளை எண்ணாது திகழும் ஆழ்ந்த ஒழுக்கமே அவரது பேராண்மை எனும் சிறப்பு.

அருஞ்சொற் பொருள் :
அறம் - ஒழுக்க நெறிமுறைகள், சிறப்பானது, பொருத்தமானது.
ஆன்ற - சிறந்த, மாட்சிமைப்பட்ட, ஆழ்ந்த

ஒப்புரை :

திருமந்திரம்: 2616
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே.

திருமந்திரம்: 2618
நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துந்தொழி லற்றுச் சுத்தம தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.

ஔவையார். மூதுரை:
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம். 7

பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை: 29
முட்டற்ற மஞ்சளை எண்ணெயிற் கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளை ஓலை விளக்கியிட்டுப்
பட்ட பகலில் வெளிமயக் கேசெய்யும் பாவையர்மேல்
இட்டத்தை நீதவிர்ப் பாய்! இறைவா! கச்சி ஏகம்பனே!

சிவவாக்கியர்: 288
வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால்,
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்,
நோக்கொணாத நோக்குவந்து நோக்கை எங்கள் நோக்குமே.

சிவவாக்கியர்: 336
ஆண்மைகூறும் மாந்தரே அருக்கினோடும் வீதியை
காண்மையாகக் காண்பிரே கசடறுக்க வல்லிரே
தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே.

***

In English:

Chapter : 15

Non-adultery

Thirukkural : 148

The propriety called manly excellence...




In Tamil

piRan manai nOkkAtha pEr ANmai, sAnROrkku
aRan onRO? AnRa ozhukku.

Meaning :
The manly excellence of not looking adulterously at other's wife is not only the honor for the wise but it is the eminent propriety to them.

These explanations contain newer and exclusive messages.

Explanation :
Is it just the honor for the wise to have manly excellence of not looking adulterously at other's mate? Not only that but it is also their eminent propriety.

The manliness is the strength and masculine property of men. That indicates the bodily strength, valor and courage. But the mental-strength of not looking at other's wife is what the nobility of manliness. It is like the greatness of the strength shown not against the weak but against the strong, than falling easily pray to the desires of sexual pleasures, controlling and winning it is great, is it not? Therefore it is considered as the manly excellence.

In that too not looking at other's mate with adulterous intentions is still great, is it not? Yes. Though it is the honor for the wise, it is actually their deep virtuousness and eminent propriety. The implicit meaning is that the characteristic of not looking at other's wife of the wise is not just an honor but it is their essential, deep rooted virtuousness.

For those who live with strong virtuousness all the honors will come automatically. Instead of practicing just for the acclaims, truly following in deep senses is really great and worth. That won't change due to highness or lowness is comprehensible.

Therefore the eminent virtuousness for the wise is the honor of not looking adulterously at other's wife.

Message :
The propriety of not adulterous look on other's wife by the wise is their significance of noble manliness.

***