Thursday, January 21, 2010

திருக்குறள்:191 (பயனிலாது பேசுவோன் பழிக்கப்படுவான்...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 191

பயனிலாது பேசுவோன் பழிக்கப்படுவான்...

In English

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

பொழிப்புரை :
பலரும் வெறுக்கப் பயன் இலாதவற்றைச் சொல்லுபவன், எல்லாராலும் இகழப் படும் [நிலை பெறுவான்].

விரிவுரை :
பலரும் வெறுக்கப் பயன் இல்லாதவற்றைச் சொல்லுபவன் எல்லோராலும் இகழப் படுவான்.

இது ஒருவரை மாத்திரமன்று பலரையும் ஒரு சேரப் பயன் இல்லாதவற்றைச் சொல்லி நேரத்தை வீணடிப்போரை நேரடியாகக் குறித்தது. அதாவது மேடைகளில் பேசுவோர் மற்றும் காட்சிப் படுத்தலைத் தொழிலாகவும், வேலையாகவும் செய்வோர், நேரத்தை வீணடித்து அர்த்தம் அற்றவற்றைப் பிதற்றுவதைச் சாடுவதாயிற்று. அத்தகையோரைப் பார்வையாளர்கள், ஆர்வலர்கள், இடைப்பட்டோர் என அனைவரும் அவர் செய்த வெறுப்பிற்கு நிந்தனை செய்து இகழ்வர் என்பது பொருள்.

தமிழ்ச் சூழலில் மேடைகளில் கொல்லப் படும் நேரம் அளவிடற்கரியது. தனிமனிதப் புகழ்ச்சி, அடை மொழி அலங்காரங்களைச் சொல்லி முடிக்கவே அரை மணி நேரமும், மலர் மாலை இடுவதும், சோடா குடிப்பதும், பந்தா காட்டுவதும், குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வருவதையும், துவக்குவதையும், காக்க வைப்பதையுமே தனக்கான பெருமையாக எண்ணுவதும், அடுக்கு மொழியையும், சவடால்களையும் பேசி அரசியல் என்பதும் கீழ்த்தரமான கலாச்சாரங்கள். பிறகு யாருக்கும் பயன் இருக்கிறதோ இல்லையோ என்று கிஞ்சிற்றும் கருதாது சுய இலாபத்திற்கும், சுய தம்பட்டத்திற்கும் பேசுவது. அதற்கு மேலும் பேசும் ஒவ்வொருவரும் “நான் கடைசியாக ஒன்றே ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்” என்று அடுத்த அரை மணி இதையே மீண்டும் மீண்டும் பேசிப் பிதற்றிக் கொல்லுவதும் கொடுமையே. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மற்றவரின் நேரத்தைப் பொன்னாக எண்ணும் ஒழுக்கம் இல்லாமையே. அடுத்த காரணம் அத்தகையோரைக் கண்டிக்காது, அவரது பேத்தல்களையும் ரசித்துக் கொண்டு இருக்கும் மூடர்களே ஆகும். இத்தகைய போக்கு வள்ளுவர் காலத்திலும் இருந்திருந்தாலும், அன்றையச் சமூகம் அவ்வாறு பேசுவோரை நிந்தித்து, தண்டித்து அனுப்பி வைத்திருப்பார்கள் போலும். அவை காசுக்குக் கூட்டம் சேர்க்காத காலம்; உளறுபவரை ஊர் கூடித் துரத்திய காலம், அவ்வாறு பேசுவோரை ஒதுக்கி நேரத்தை மதித்த பொற்காலம். அவையே என்றைக்கும் நல் ஒழுக்கம் மிகுந்த கலாச்சாரம்.

இக் குறளின் கருத்து பலர் கூடிய வேளைகளில் மாத்திரம் அன்றித் தனிமனித உரையாடல்களிலும் பொருந்தும். நேரம், காலம் தெரியாது கழுத்தறுத்து, தேவை இல்லாதவற்றை, பொருளற்றவற்றை, வெறுக்கத்தக்கவற்றைப் பேசுபவோரை அல்லது உளறுவோரை எல்லாரும் இகழ்ந்து ஒதுக்கி விடுவர்.

பலர் வெறுக்கப் பயன் அற்றவற்றைப் பேசுவதால் அவ்வமயம் மாத்திரம் நேரம் கெடுவதில்லை. அவை பிறகு நல் எண்ண ஓட்டங்களைக் கெடுத்தும், சிதறவைப்பதாலும் அழியும் நேரம் அளவிடற்கரியது. எனவேதான் அனைவரும் அத்தகையவாறு பேசும் பயன் இல சொல்பவரை இகழ்வதோடு அவரை முழுவதும் தமது வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி விடுவார்கள். பலரால் ஒதுக்கப் படுவதால் அத்தகையோர் பிறகு வாழ்வை இழந்து தனித்து வருந்தும் நிலை ஏற்படும்.

ஆதலின் பேசுவதை இனிமையாகவும், இணக்கமாகவும், சுருக்கமாகவும், பொருளுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் பேசினால் மாத்திரமே பேசுபவருக்கும் பயன் கிட்டும்.

குறிப்புரை :
பலரும் வெறுக்கப் பயனிலாதவற்றைப் பேசுவோர் எல்லோராலும் பழிக்கப் படுவார்கள்.

அருஞ்சொற் பொருள் :
முனி - சினம்கொள், வெறு
எள் - இடித்துரை, கண்டனம், நிந்தை, இகழ்

ஒப்புரை :

திருமந்திரம்: 53
இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.

திருமந்திரம்: 61
பரனாய் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.

திருமந்திரம்: 63
பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே.

திருவாசகம். மாணிக்கவாசகர்.
3. திருவண்டப் பகுதி :

சொல்பதம் கடந்த தொல்லோன்
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன்
விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115

ஔவையார். ஆத்திசூடி:
39. கேள்வி முயல்.

ஔவையார். மூதுரை:
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 191

Speaker of useless words gets despised...




In Tamil

pallAr muniyap payan ila solluvAn
ellArum eLLap padum.

Meaning :
That who speaks useless words, to everyone's disgust, will be despised by all.

Explanation :

To the disgust of many that who speaks useless words gets despised by all.

This not only meant for one but for many or for all that who speaks useless words and wastes the time. That is actually pointing and condemning of the stage speakers and also the show-business people who speak useless and absurd words and waste everyone's time. Such people will be condemned and despised by the viewers, audiences and affected ones is the meaning here.

The time killed in Tamil stages is immeasurable. Praising of the individuals with their titles alone takes more than half an hour per person. Then follows the garlanding, drinking sodas, show offs, and coming late to the events thinking that as their own prestige to come only after the fixed time, and start late and making others to wait for themselves, then talking on rhymes and the ostentatious and only tall talks as the politics, all such are the prevailing lowest standard of any culture. Also delivering the speech regardless of its usage to anyone but only to the self and to self-glorify one is again part of such culture. Furthermore, the worst thing among them is that each and every one on the stage talking with the climax statement as "I want to tell this only one thing as my concluding talk" and then continuing for another half hour repeating this as many times. Fundamental reason for all these nonsense is the attitudes of the talkers not valuing the time of others. Next reason would be that instead of condemning such stupid and idiotic talks some fools encircling and appreciating the speaker as good, thinking it as the fun. Though these kind of scenario also should have been there during Valluvar period, but by then society seem to have thrown them out condemning outright for their absurdity. Those are the periods the masses were gathered on their own and not brought or bought for the money; the blabbers and gibbers were thrown out by the society and such were isolated by the society to appreciate everyone’s time. Those are the good culture of good virtues forever.

Meaning of this Kural also suits not only to the public speaking but also to the individual conversations. Without knowing the time or appropriateness those who speak or blabber and bore with unnecessary, absurd and disgusting words, will be condemned and isolated by all.

The time is not only getting wasted during the useless and disgusting talks but also gets wasted in immeasurable amount aftermath through its inflicting damages on the thinking and the distraction created there upon. That is why all the wise not only condemn and despise such speakers of useless speech but also isolate them from their life and interactions. Those isolated talkers of such will suffer their rest of life without any interaction and business to do with others.

Therefore making the talk as short, sweet, harmonious, meaningful and useful only will benefit even the speaker himself.


Message :
Those who speak useless words, to the disgust of many, get despised by all.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...