Saturday, January 23, 2010

திருக்குறள்:193 (பயனிலா விரிவுரை அறிவிலியின் அடையாளம்...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 193

பயனிலா விரிவுரை அறிவிலியின் அடையாளம்...

In English

நயன் இலன் என்பது சொல்லும் - பயன் இல
பாரித்து உரைக்கும் உரை.

பொழிப்புரை :
நன்மை இலாதவன் என்பதைச் சொல்லும், பயன் இலாதவற்றை விவரித்து உரைக்கும் உரை.

விரிவுரை :
ஒருவன் பயன் இல்லாதவற்றை விரிவாகப் பேசி உரைக்கும் உரை, அவன் நலமேதும் இலாதவன் என்பதையே சொல்லும்.

ஒருவன் உதவாக்கரை, அறிவிலி என்பதையே அவன் விலாவரியாக விவரித்துப் பேசும் பயனிலாச் சொல் காட்டிக் கொடுக்கும்.

பயனிலாதவற்றைப் பேசுவதே வீணன் என்பதைக் காட்டும். சோம்பேறித் தனத்தை வளர்க்கும் விவரித்துப் பேசும் பயனிலாச் சொல்லால், அறிவற்ற பேச்சால், பேசுபவன் உதவாக்கரையான் என்பது எல்லோருக்கும் சொல்லாமலே விளங்கும். அதிலும் அதை மிகவும் விரிவாக, நீட்டி முழக்கிப் பேசுபவன் என்பவன் நிச்சயம் நேரத்தின் அருமை அறியாத மூடனே. அதை ரசித்துப் பேசக் கூடியவன் என்றால் நல் ஒழுக்கம் இல்லாத மற்றும் நேர்மை நலங்கள் அற்றவன் என்பது மட்டுமன்றி கேட்போரின் கவனத்தைத் திசை திருப்பிக் குற்றத்தை இழைக்கும் கொடியவனாகவும் கூட அவன் இருத்தல் கூடும்.

நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல், பயனிலாதவற்றை விரிவாகப் பேசுபவன் நல்லவன் அல்லன் என்பதையே அவனது பேச்சுப் பிறருக்கு அறிவுறுத்தும். அரை குறைக் குடங்களே அலைக்கழிக்கும்.

மனதையும், நாக்கையும் கட்டுப் படுத்தும் திறன் அற்றவர்களே, பேச்சைக் குறைக்கும் வலிமையற்றவர்களே பயனற்றவற்றைப் பேசுவதும், ஆராய்வதும், வாதமும் விதண்டாவாதம் செய்வதும், பயனற்றவற்றை மற்றவருக்கும் பரப்பி குதூகலிப்பதும், நேரத்தின் அருமை தெரியாது பாழடிக்கும் காரியத்தைச் செய்வார்கள். கெட்ட எண்ணங்கள் கொண்டவர்களே பிறரின் நேரத்தை வீணடிக்கும் வித்தையைச் செய்வார்கள்.

இறுக்கமான உதடுகள் அடக்கத்தின் அடையாளம் மாத்திரம் அல்ல; அவையே உள உறுதியின், வலிமையின் வெளிப்பாடு. அதனால் தான் “மோனம் என்பது ஞான வரம்பு” அதாவது உச்சத்தின் குறியீடு என்றார்கள். மேதைகளும், அறிஞர்களும் குறைந்த அளவே பேசுவதின் சூட்சுமமும் இதுதான் என்பது சிந்தித்தால் விளங்கும். நிறை குடங்கள் தழும்புவதில்லை. அவர்கள் தேவையற்றதைப் பேசுவதோ, வாதிப்பதோ, விளக்குவதோ இல்லை. அவர்களுக்கு நேரத்தின் அருமை தெரியும். பயனுள்ளதற்கு மாத்திரமே அவர்கள் தங்கள் நேரத்தைச் செலவு செய்வார்கள்.

குறிப்புரை :
பயன் இலாதவற்றை விவரித்துப் பேசும் உரை ஒருவனின் அறிவின்மையையும் நலமற்ற தன்மையையுமே வெளிக் காட்டும்.

அருஞ்சொற் பொருள் :
நயன் - கனிவு, இனிமை, அன்பு, பரிவு, பண்பு, நலம், நாகரீகம், அருள், சிறப்பு, நன்மை, பக்தி, நற்பயன், கொள்கை, நியதி, உள்ளீடு, பசை, உறவு, வழிமுறை,
பாரித்து - பருத்து, மிகுதியாகு, பரவு, தோன்று, ஆயத்தப்படு, காத்து, ஒழுகி, பேணி, வளர்த்து, நிறைத்து, விரும்பி, விவரித்து

ஒப்புரை :

திருமந்திரம்: 107
பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமககு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே.

திருமந்திரம்: 129
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.

திருமந்திரம்: 132
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

திருவாசகம். மாணிக்கவாசகர்.
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)

உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும்
தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே. 7

ஔவையார். ஆத்திசூடி:
51. சையெனத் திரியேல்.

ஔவையார். மூதுரை:
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். 27

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 193

Elaborated useless speech is the mark of fool...




In Tamil

nayan ilan enpathu sollum - payan ila
pAriththu uraikkum urai.

Meaning :
The elaborated useless speech only speaks of no good man.

Explanation :

One's explanatory and detailed useless speech only says that one is not of goodness.

The detailed talk of vain words by one exhibit only that one is useless and ignorant.

Talking vain words by themselves will tell one is useless. However the enhanced and explanatory talk of those useless, senseless and slothful words by one will make it more clearly with no apprehensions to everyone that he is utter useless. Such of talking those useless to the core must be certainly the stupid of not knowing the value of time. When one talks so enthusiastically the useless things then one must be ruthless criminal with no any good virtues and only may trying to divert the audience for making or to cover up already made some offensive crime.

Like the frog gets ruined itself through its own voice, by talking the useless in elaboration one's own talk makes more obvious to all that one is utter useless. Empty vessels make more noise.

Only those who are inefficient to control their mind and tongue, and those who are weak to reduce their talk will engage in talking and analyzing the useless words and enjoy in arguing, contending, chatting, spreading the useless to others and without knowing the value of the precious time will kill it. Only those with bad intentions also kill others time.

Tight lips are the symbol not only of the self control but also the strength of mind and heart. That is why the saying goes as that of “The silence is the height of wisdom". "Speech is human; silence is divine"; "Speech is silver but silence is golden". One can now easily understand that this is the secret behind the greats and geniuses for talking very less. They never speak, argue or explain the vain. They know value of the precious time. They will spend their time only for the useful things.


Message :
One’s expanded useless talk only exhibits the ignorance and the state of no goodness of one.

***

2 comments:

sriganeshh said...

hi
your explanations are so good. These days i really miss kural and its profound & deep meanings, offerings for one's life..
One of my tamil teacher at vellore, wrote replica of thirukkural containing 2000 couplets but dont know the present status of that text and his condition also. The text name is Amara Neethi and his name is pulavar amaran.
Thanks and may the god bless you with everything..
sri

Uthamaputhra Purushotham said...

Hi Srignaeshh

Welcome and thanks for your comment.

I remember a kind of Kural with equivalent amount or so from Singapore, but I dont remember both the authors name and the title of the Kural. It should have been within the past ten years.

What you have given here is a good information. Let me see if I get any of them to augment our discussion on Thirukkural.

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...