Showing posts with label ulagu. Show all posts
Showing posts with label ulagu. Show all posts

Saturday, August 1, 2009

திருக்குறள்: 58

அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்



:
58
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 58


பெற்றாற் பெறின் பெறுவர், பெண்டிர், பெருஞ் சிறப்புப்
புத் தேளிர் வாழும் உலகு.

பொழிப்புரை :
துணைவனைக் கணவனாகப் பெற்றவள் அவனுடன் கூடி முயங்கப் பெற்றால், பெற்றாலும் பெறுவர் பெண்டிர், பெருஞ் சிறப்பாகிய புத்துயிர் தரிக்கும், வாழும் உலகு.

மற்றவர்களிடம் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட விளக்கம் என்பதை அறியவும்.

விரிவுரை :
இல்லறத்தில் கணவனைப் பெற்றவள் அவனுடன் கூடி முயங்கப் பெற்றால் பெற்றாலும் பெறுவர் பெண்டிர், பெருஞ்சிறப்பாகிய புத்துயிர் தரிக்கும், கருவினில் உயிர்கள் வாழும் உலகு. அதாவது தாய்மை ஆகும் நிலை பெற்று, கருவுற்று, புத்துயிர் பெற்றுப் படைக்கும் பெருஞ் சிறப்புப் பெறுவர் என்பது பொருள்.

இல்லறப் பெண்ணிற்குத் தாய்மைப் பேறு பெறுவதே பெருஞ் சிறப்பு, எனவே அன்னிலைக்கான முன் நிலையாக கருவுற்றாலேயே அவர் புத்துயிரைத் தாங்கி அவை வாழும் உலகைப் பெற்றுப் பெருஞ் சிறப்புப் பெற்றுத் திகழுவர் என்பது பொருள்.

கருவுறுதல் என்பதே இல்லறம் இனிதே நடத்தி தாய்மைக்குத் தயாரானதாய் உலகம் அறியும் அடையாளம். அதுவே இல்லாளுக்குப் பெருஞ் சிறப்பைத் தரும் பெருமை. வாழையடி வாழையாய் குலம் தளைக்க, மனிதம் தொடரக் கிடைக்கும் பேறுதானே இல்லறத்தில் வாழ்க்கைத் துணைவி பெறும் முதல் முக்கியமான பேறு? அதைப் பெற்றுப் புத்துயிர் கொடுக்கும் பேறு பெண்மைக்கே பெருஞ் சிறப்புத்தானே?

அந்தப் பேற்றைப் பெற்ற பெண்டிர் அப்புத்தியிர் வாழும் உலகைத் தன்னுள் பெறும் பெருஞ்சிறப்புப் பெறுவர் என்பது இல்லாளுக்கு வாழ்க்கையில் வீடு பேறு பெறுவதைப் போன்றதே.

குறிப்புரை :
பெண் தாய்மைப் பேற்றிற்காகக் கருவுற்றாலேயே, தனக்குள் உயிர்கள் தரிக்கும் உலகம் பெற்று, இல்லறத்தில் பெருஞ் சிறப்புப் பெற்றுத் திகழுவர்.

அருஞ்சொற் பொருள் :
புத் தேளிர் - புத்துயிர் தளிர்க்கும், தரிக்கும், சிறக்கும், பிறக்கும்
தேளி - ஒரு மீன்வகை
தேளிர் எனப்படுவது கருவின் முதல்/ஆரம்ப நிலையாக இருக்கக் கூடும்.

ஒப்புரை :
திருமந்திரம்: 396
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே

திருமந்திரம்: 397
புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே

திருமந்திரம்: 416
அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே

திருமந்திரம்: 417
உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே

திருமந்திரம்: 418
உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் நிலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்
தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே

திருமந்திரம்: 420
அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணுகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே

திருமந்திரம்: 459
ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே

திருமந்திரம்: 463
ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே

திருமந்திரம்: 475
அருளல்ல தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே

திருமந்திரம்: 476
வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே

ஔவையார். கொன்றைவேந்தன்: 65
பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்

***


Sunday, June 28, 2009

திருக்குறள்: 27


அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 27



சுவை ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்கட்டே - உலகு.


பொழிப்புரை (Meaning) :

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து புலன் நுகர்வுகளால் அவற்றின் இயல்புக் கூறுபாட்டு வகைகளை ஆய்ந்து, அறிந்து, உணர்ந்து அதை அடக்கி ஆளத் தெரிந்தவனின் அறிவிற்கே மட்டுப்படும் உலகம்.


விரிவுரை (Explanation) :

ஐம்புலன் உணர்வுகளைக் கட்டுபடுத்தவும் அதன் வகைகளை அறிந்த யோகியர் போன்றும் துறவிகளுக்கே அவற்றை ஐம்பூதங்களுக்குத் தொடர்புப் படுத்தி அண்டத்தின் நிலையும், உலகின் நிலை விளங்குவதோடு கட்டுப்படுத்தவும் இயலும்.

உலகைக் கட்டுப்படுத்துவது என்பது அதன் ஐம்பூதங்களுக்குரிய இயல்புகளை மட்டுப்படுத்த அல்லது மாற்ற இயலும் என்பதாகும். அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி (ஆகாயம்) க்கும் ஐம்புலன் நுகர்சிக்கும் உள்ள இயற்கைத் தொடர்பினை உணர்ந்து கட்டுப்படுத்தத் தெரிந்த துறவிக்கு, பிண்டத்திலிருந்து அண்டத்தைக் கட்டுப்படுத்த இயலும் என்பதாகும். உதாரணத்திற்கு யோகிகளால் உஷ்ணத்தை உண்டாக்கவும், மழையை வருத்தவும் இயலும் என்பது அறிந்ததே. உண்மையில் யோகிகளுக்கான தலைமையாகிய இறையின் கட்டுப்பாட்டிலேதான் இறுதியில் இயற்கை இயங்குகின்றது என்பதும் மறை பொருள்.

பிண்டம் எனப்படும் மனிதனின் உடம்பும், அண்டமும் ஐம்பூதங்களாலேயே உருவாக்கப்பட்டது என்பதும், எனவே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனப்படும் ஐம்புலன் குணங்களுக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி (விசும்பு) ஆகிய ஐம்பூதங்களுக்கும் இயற்கையிலேயே தொடர்பு உண்டு என்பது சித்தர் சித்தாந்தம். அதாவது ஐம்புலன்களுக்கான ஐம்பொறிகளும் ஐம்பூதங்களின் கலவையால் ஏற்படுத்தப்பட்டவை என்பது சித்தர்களின், யோகிகளின் துணிபு. ஐம்புலன் குணங்கள் தன் மாத்திரைகள் எனவும், சைவ தத்துவங்கள் 96 எனவும், அதில் ஆன்ம தத்துவங்கள் 24 ம், அதனுடன் சேர்த்த மூலத்துடன் (பிரக்ருதி) தத்துவங்கள் 25 என்று சுருக்கியும் திருமூலர் குறித்துள்ளார். இவற்றின் விளக்கத்தை சித்தர் நெறிக் களஞ்சியம் எனும் பகுதியில் காணவும்.

இவ்வாறாக அத் தத்துவங்களையும், பிரபஞ்சத்தின் தத்துவங்கள் அனைத்தையும் வள்ளுவர் சுருக்கி ஐம்புலன் தன்மாத்திரைகளைக் கட்டுப்பட அறிந்தவர் உலகத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெறுவர் என்று சூட்சும சூத்திரத்தைக் கூறுகின்றார்.

ஆக ஐம்புலனைக் கட்டுப்படுத்த அறிந்தவனிற்கு உலகத்தோடு இசைந்து ஒழுகவும், தனக்குச் சாதகமாக ஐம்பூதங்களை இயக்கவும் தெரியும். எனவே உலகைக் கட்டுப்படுத்துவது என்பது, அதை நேரெதிராகச் சுழற்றக் கோருவது போன்ற வாதங்களை ஐம்புலன் அறிந்தவர் ஒழுகார் என்பதும் துணிபு.

அன்றில் எளிதாக, ஐம்புலன் தன்மாத்திரைகளின் வகை தெரிந்தோருக்கே அதாவது கட்டுப்படுத்தத் தெரிந்த பற்றற்ற துறவியருக்கே உலகையும் அறியவும் இசைந்து ஒழுகவும் தெரியும் என்றும் கொள்ளலாம்.


குறிப்புரை (Message) :

ஐம்புலனைக் கட்டுப்படுத்த அறிந்த யோகிகளாகிய துறந்தோருக்கு இவ் உலகம் வசப்படும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

கட்டே - கட்டுப்பாட்டிலே


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 135
சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடா஢ற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.

திருமந்திரம்: 136
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

திருமந்திரம்: 137
அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே.

திருமந்திரம்: 140
தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே.

திருமந்திரம்: 735
அண்டஞ்f சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ்f சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே

திருமந்திரம்: 736
பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில்
வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்
கண்டிச் சிக்குநற் காயமு மாமே

திருமந்திரம்: 1675
தானன்ற தன்மையுந் தானவ னாதலும்
ஏனைய வச்சிவ மான இயற்கையுந்
தானுறு சாதக முத்திரை சாத்தலு
மேனமும் நந்தி பதமுத்தி பெற்றதே.

திருமந்திரம்: 2589
செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்துங்
குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசரந் தானே.

திருமந்திரம்: 2671
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது
மண்ணு நீரனல் காலொடு வானுமாய்
விண்ணு மின்றி வெளியானோர் மேனியே.

***

Wednesday, June 24, 2009

திருக்குறள்: 23

அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 23


இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று, உலகு.


பொழிப்புரை (Meaning) :

இகம், பரம் எனும் இரண்டின் வாழ்வு வகை அறிந்து ஆராய்ந்து அறமாகிய துறவறத்தைப் பூண்டவர்களின் பெருமையே நிறைந்து விளங்குகின்றது இவ் உலகில்.


விரிவுரை (Explanation) :

பிறப்பு, வீடு என்னும் இரண்டினால் நல்லவை, கெட்டவை, இன்பம், துன்பம், மறம் அறம் என்ற வகைகளை, அவற்றின் கூறுபாட்டை ஆராய்ந்து அறிந்து, இப்பிறப்பில் துறவறத்தைப் பூண்டவர்களின் பெருமையே, இவ் உலகத்தில் உயர்ந்து நிறைந்து நிற்கின்றது.


குறிப்புரை (Message) :

அறிவின்பால் உணர்ந்து துறவறம் மேற்கொண்டவர்களே உலகின்பால் உயர்ந்த பெருமைக்கு உரியவர்கள்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

பிறங்குதல் - உயர்தல், பிரகாசித்தல், ஒலித்தல், நிறைதல்


ஒப்புரை (References) :


திருமந்திரம்: 143
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.

திருமந்திரம்: 1614
இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பதி காட்டும் அமரர் பிரானே.

திருமந்திரம்: 2338
எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறையருள் தானே.

ஒவையார். நல்வழி: 28
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.

***