Friday, September 4, 2009

திருக்குறள்: 88

அதிகாரம்

: 9

விருந்தோம்பல்

திருக்குறள்

: 88
Chapter : 9

Hospitality

Thirukkural

: 88


பரிந்து ஓம்பி, ”பற்று அற்றேம்” என்பர்-விருந்து ஓம்பி
வேள்வி தலைப்படாதார்.

பொழிப்புரை :
ஏங்கி வருத்தமுற்று ”ஒட்டு உறவு அற்றவர் ஆனோமே” என்பார், விருந்தினரைப் பேணும் நற் செயலைத் தலைப்படாதார்.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
விருந்தினரைப் பேணுதல் எனும் நற் செயலைச் செய்யாதவர், பிறகு ஏங்கி வருத்தமுற்று உணர்ந்து “ஒட்டு உறவு அற்றவர்களாய்ப் போனோமே” எனச் சொல்வர்.

விருந்தினரைப் பேணதாவருக்குத் தனிமைதான் மிஞ்சும். அவர்களுக்கு நல்லதற்குக் கெட்டதற்குக் கூட யாரும் சேரமாட்டார்கள். அப்போது அவர்கள் மிகவும் வருந்தி உணர்ந்துத் துன்புறுவதோடு “இப்படி யாருமற்றவர்களாக, ஒட்டு உறவு இன்றிப் போனோமே” என்று புலம்பித் திரிவர். புலம்பினால் மட்டும் யாரும் வந்துவிடப் போவதில்லை என்பதால் அனுபவித்தும் வருந்துவதைத் தொடருவர் என்கிறார் வள்ளுவர்.

ஆக, கூடி வாழும் வாழ்க்கைக்கு விருந்தோம்பல் என்பது மிக அவசியமானது என்பது இக்குறளால் கூறப்பட்டது.

குறிப்புரை :
விருந்தோம்பலைச் செய்யாதவர் ஆதரவற்றோராய்ப் புலம்பித் துன்புறுவர்.

அருஞ்சொற் பொருள் :
பரிந்து - ஏங்கி, வருந்தி, இரங்கி
பற்று - உறுதியாகப் பிடித்தல், உணர்தல், ஒட்டு

ஒப்புரை :

ஔவையார். கொன்றைவேந்தன்:
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். 6
குற்றம் பார்க்கிற் சுற்றம் இல்லை. 18
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல். 30
விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம். 83

ஔவையார். நல்வழி: 5
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
துஞ்ச்வதே மாந்தர் தொழில்.

***

In English: (Thirukkural: 88)

parinthu Ombi, "paRRu aRREm" enbar-virunthu Ombi
vELvi thalaippadAthAr.

Meaning :
They crave, long, suffer and lament "No relations to us” later those who never entertained and treated their guests.

These explanations contain newer and exclusive messages.

Explanation :

That who has never cared of any hospitalities to the Guests, will crave, suffer, realize and lament "No any relations to us”.

Who has never entertained the Guests will get only the loneliness. For his or her good or bad things or functions, no any Guests will gather. Hence they will crave, suffer and realize the need of their guests and will cry loud "oh we have no any relations or friends (affectionate) to us". Due to lamenting, however, no body is going to gather again for such. Therefore they will continue to suffer the loneliness says Valluvar.

Therefore the message said through this kural is that hospitality is very important to everyone in the societal life.


Message :
Those who never treat their Guests will regret, crave for supports and relations and suffer.

***

Wednesday, September 2, 2009

திருக்குறள்: 87

அதிகாரம்

: 9

விருந்தோம்பல்

திருக்குறள்

: 87
Chapter : 9

Hospitality

Thirukkural

: 87


இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை; விருந்தின்
துணைத் துணை-வேள்விப் பயன்.

முற்றிலும் மாறுபட்ட புதிய கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

பொழிப்புரை :
வருந்தத்தக்க நட்பு என்பது ஒன்று கிளைப்பது இல்லை; விருந்தின்கண் சேர்ந்து கூடி மகிழ்ந்த நற் செயலின் பயனால்.

விரிவுரை :
விருந்தினர்பால் சேர்ந்து கூடி மகிழும் இனிய நல் நிகழ்வின் பயனால், வருந்தத்தக்க அல்லது அஞ்சும்படியான நட்பு என்று ஒன்று கிளைப்பது இல்லை.

விருந்தினர்களுடன் ஒன்று கூடி மகிழும் நல் நிகழ்ச்சி எப்போதும் நட்பை மேலும் வளர்க்கவே உதவும். அதனால் கெட்ட அல்லது வருந்தும்படியான நட்புக்கள் தோன்றுவதில்லை. அதுவே அவ்விருந்தின் பயன்.

விருந்தினர் கூடிய இனிய நல் நிகழ்ச்சியில், உண்டு, பேசி மகிழ்வதே அதன்பயன், அங்கே சண்டை சச்சரவிற்கு இடமில்லை, இடமளித்தல் கூடாது. மேலும் விருந்தினர் ஒருவருக்கொருவர் பழக் கிடைக்கும் வாய்ப்பு அத்தகைய சேர்ந்தொழுகும் நல் நிகழ்ச்சிகளில்தானே, அங்கே அச்சுறுத்தும் நட்பு உண்டாக வாய்ப்பில்லைதானே?

கெட்டவர்கள், பகைவர்கள் என்று நினைத்தவர்கள் கூட, இனிய நல் நிகழ்சிகளில் பங்கேற்பதால், விருந்துண்பதால் அச்சம் அகன்று, மன பேதங்கள அகற்றி நல் நண்பர்களாக மாற வாய்ப்பை உண்டாக்குகிறது என்பதும் இதில் மறைந்துள்ள நுணுக்கப் பொருள்.

இக்குறளுக்கான கருத்தில் நான் அனைவரிலிருந்தும் மாறு படுகின்றேன். அனைவரும் வேள்வி என்பதை யாகம் என்றே கொண்டுள்ளனர் என்பதை நோக்கவும். ஆனால் எந்த வேண்டுதலுக்காகவும் அந்த வேள்வி செய்யப்படவும் இல்லை. எனவே விருந்தோம்பலின் பயனை இவ்வளவு என்று அளவு படுத்த இயலாது என்றும் விருந்தினரின் தகுதியின், குணத்தின் அளவே அளவாம் எனும் பொருளில் இக்குறளை வள்ளுவர் செய்ததாய் நான் எண்ண வில்லை.

குறிப்புரை :
விருந்துணவால் அச்சுறுத்தும், வருத்தம்தரும் நட்புக் கிளைப்பதில்லை.

அருஞ்சொற் பொருள் :
இனை - வருந்து, அஞ்சு
துணை - கூட்டு, ஆதரவு, நட்பு, அளவு, ஒத்திரு, போன்றிரு, பிணைத்தல் (கட்டுதல்), வரை, சேர்க்கை, கிளையான, உதவியான
வேள்வி - யாகம், வழிபாடு, திருமணம், புண்ணியச் செயல், நற் செயல்

ஒப்புரை :

நாலடியார்: 38
உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி
யிறப்ப நிழர்பய்ந் தா அங்-கறப்பயனும்
தான்சிறி தாயினுந் தக்கர்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.

ஔவையார். கொன்றைவேந்தன்: 20
கெடுவது செய்யின் விடுவது கருமம்.

ஔவையார். ஆத்திச்சூடி:
இணக்கமறிந் திணங்கு. 19
கூடிப் பிரியேல். 37
புகழ்ந்தாரைப் போற்றிவாழ். 80

ஔவையார். நல்வழி: 29
மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.

ஔவையார். மூதுரை: 4
அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

ஔவையார். மூதுரை: 17
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.

***

In English: (Thirukkural: 87)

inaith thuNaiththu enbathu onRu illai; virunthin
thuNaith thuNai-vELvip payan.

These explanations contain completely newer and exclusive messages.

Meaning :
No any friendship to grief or afraid emerges when gathered for a feast with guests.

Explanation :

Because of the events of gathering and feasting with the Guests, no any friendship of grief or threat results or emerges.

Gathering and entertaining events with the Guests will always only help more to nurture the friendships and build them strong. Therefore bad or regrettable friendships never get born there. That is the use of such hospitality.

The happy occasions of gathering with Guests are meant for the joy of eating and talking only and certainly not for any quarrels with anyone. Also only through the gatherings and meetings Guests can understand each other and can get closer. Therefore there is no chance of getting any threatening friendships over there. Is it not?

The hidden message here is that those who were thought as bad people or foes too, by participating in the guest’s gatherings and feasts, there is a chance of removing their differences and fears and becoming good friends once again.

In this Kural basically I am differing from all the interpreters whom I have listed before. All of them have taken 'veLvi' in Tamil as the religious scarification or popularly known as 'yAgam'. But no yAgam is performed for any desires there. Therefore I do not consider that "to measure the use of Hospitality is not possible, it depends to the status or the quality of the Guest" or such meanings as that Valluvar would have portrayed of here.


Message :
No friendship of grief nor afraid comes out due to feast with guests.

***

Tuesday, September 1, 2009

திருக்குறள்: 86

அதிகாரம்

: 9

விருந்தோம்பல்

திருக்குறள்

: 86
Chapter : 9

Hospitality

Thirukkural

: 86


செல் விருந்து ஓம்பி, வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து, வானத்தவர்க்கு.

பொழிப்புரை :
சென்று கொண்டிருக்கும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, வரவிருக்கும் விருந்தினரையும் பேண எதிர் பார்த்திருப்பவன், விண்ணவர் பேணக் காத்திருக்கும் நல் விருந்தாவான்.

விரிவுரை :
வந்து தங்கிப் பிறகு சென்று கொண்டிருக்கும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, இனி வரவிருக்கும் விருந்தினரையும் பேணுவதற்கு எதிர் பார்த்திருப்பவன், விண்ணவர் விரும்பிப் பேணக் காத்திருக்கும் நல் விருந்தாவான்.

இம்மையில் விருந்தினரை எப்போதும் இன்முகத்தோடு பேணியவர்களை, விருந்தினர்க்காய் வாழ்க்கை நடத்தியவர்களை மறுமையில் விண்ணவர் வரவேற்று விருந்து படைப்பராம். புண்ணியச் செயல்கள் தக்க சமயத்தில் கௌரவிக்கப்படும் என்பதும் நல் வினைக் கணக்கில் விருந்தோம்பலும் இடம் பெறும் என்பதும் ஈண்டு பெறத் தக்கது.

விருந்தினருக்காகவே வாழ்க்கையை அற்பணிப்பதா என்று கேட்டால், அதைக் காட்டிலும் இன்பம் தரும் செயல் வேறெதுவுமில்லை என்று உணர்பவர்களுக்கு, அத்தகைய உத்தம ஆத்மாக்களிற்கு, காலம் கண்டிப்பாக பதில் மரியாதை செய்தே தீரும் என்பதே வள்ளுவர் வாக்கும்.

குறிப்புரை :
இகத்தில் விருந்தினரை மகிழ்விப்போன் பரத்திலே மகிழ்வுக்குரிய விருந்தினனாக இருப்பான்.

அருஞ்சொற் பொருள் :
வானத்தவர்க்கு - விண்ணவர்க்கு, தேவர்களுக்கு

ஒப்புரை :

ஔவையார். மூதுரை: 1
நன்றி ஒருவற்குச் செய்தக் காலந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருத லால்.

மாணிக்கவாசகர். திருவாசகம். 50. ஆனந்தமாலை - சிவானுபவ விருப்பம் :
என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா
தென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தென் நோய்க்கு விருந்தாயே. 644

சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக்
கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே. 645

***

In English: (Thirukkural: 86)

sel virunthu Ombi, varu virunthu pArththiruppAn
nal virunthu, vAnaththavarkku.

Meaning :
Who tends the going guest and awaits for the next, wll be a welcome guest at heavens.

Explanation :

That who tends the Guests who visited and leaving and also looks forward to treat the next incoming new Guests, will be a good guest awaited by the heavenly hosts.

It is said that, in this life those who treat their guests with compassion and Love, and those who live and dedicate their life for the sake of their guests, after their death will get treated by the Heavenly hosts as their great guests. It is understandable that all great virtuous deeds will be rewarded at the appropriate time and all the good hospitalities shown are counted as the meritorious deeds

When asked is it worth to dedicate the Life for the Guests, for those who realize that there is nothing more joyous than entertaining the Guests and for such great souls, time shall definitely reciprocate the courtesy with appropriate honor is the response by Valluvar.


Message :
That who treats the Guest happily on earth will be a happy guest at heavens.

***