|
| |
பொழிப்புரை : | |
சென்று கொண்டிருக்கும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, வரவிருக்கும் விருந்தினரையும் பேண எதிர் பார்த்திருப்பவன், விண்ணவர் பேணக் காத்திருக்கும் நல் விருந்தாவான். | |
விரிவுரை : | |
வந்து தங்கிப் பிறகு சென்று கொண்டிருக்கும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, இனி வரவிருக்கும் விருந்தினரையும் பேணுவதற்கு எதிர் பார்த்திருப்பவன், விண்ணவர் விரும்பிப் பேணக் காத்திருக்கும் நல் விருந்தாவான். இம்மையில் விருந்தினரை எப்போதும் இன்முகத்தோடு பேணியவர்களை, விருந்தினர்க்காய் வாழ்க்கை நடத்தியவர்களை மறுமையில் விண்ணவர் வரவேற்று விருந்து படைப்பராம். புண்ணியச் செயல்கள் தக்க சமயத்தில் கௌரவிக்கப்படும் என்பதும் நல் வினைக் கணக்கில் விருந்தோம்பலும் இடம் பெறும் என்பதும் ஈண்டு பெறத் தக்கது. விருந்தினருக்காகவே வாழ்க்கையை அற்பணிப்பதா என்று கேட்டால், அதைக் காட்டிலும் இன்பம் தரும் செயல் வேறெதுவுமில்லை என்று உணர்பவர்களுக்கு, அத்தகைய உத்தம ஆத்மாக்களிற்கு, காலம் கண்டிப்பாக பதில் மரியாதை செய்தே தீரும் என்பதே வள்ளுவர் வாக்கும். | |
| |
குறிப்புரை : | |
இகத்தில் விருந்தினரை மகிழ்விப்போன் பரத்திலே மகிழ்வுக்குரிய விருந்தினனாக இருப்பான். | |
அருஞ்சொற் பொருள் : | |
வானத்தவர்க்கு - விண்ணவர்க்கு, தேவர்களுக்கு | |
| |
ஒப்புரை : | |
| |
ஔவையார். மூதுரை: 1 நன்றி ஒருவற்குச் செய்தக் காலந்நன்றி என்று தருங்கொ லெனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருத லால். மாணிக்கவாசகர். திருவாசகம். 50. ஆனந்தமாலை - சிவானுபவ விருப்பம் : என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன் உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன் பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா தென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தென் நோய்க்கு விருந்தாயே. 644 சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக் கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே. 645 | |
| |
*** |
In English: (Thirukkural: 86)
| |
| |
Meaning : | |
Who tends the going guest and awaits for the next, wll be a welcome guest at heavens. | |
| |
Explanation : | |
That who tends the Guests who visited and leaving and also looks forward to treat the next incoming new Guests, will be a good guest awaited by the heavenly hosts. | |
| |
Message : | |
That who treats the Guest happily on earth will be a happy guest at heavens. | |
| |
*** |
3 comments:
Let be pragmatic.That who treats the Guest happily on earth will be a happy guest at c/o Platform.
Good to talk about thirukural,but we need to take things from kural which is relevant in today's world .
Nakesh on Sep 2, 2009:
welcome guest at heavens
Which heaven ?
Nakesh:
I reserve my comments till completion of this chapter, because many of your valid questions would get answered by Valluvar himself.
You are most welcome to comment in the coming Kurals too.
- UthamaPuthra
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...