|
| |
பொழிப்புரை : | |
[சுவை மிகுந்த] அமிழ்தத்தைக் காட்டிலும் மிகவும் இனிதே, தம் மக்கள் சிறு கையால் அளாவிய கூழ். | |
| |
விரிவுரை : | |
பெற்றோருக்கு இனிமையுடைய அமிழ்தத்தினும் மிகவும் இனிதானது அவர்தம் மக்கள் சிறு கையால் அளாவப்பெற்ற கூழ். குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது, குழந்தையும் அந்த உணவைத் தன் பிஞ்சுக் கைகளால் தொட்டு அள்ளி பெற்றோருக்கு ஊட்ட முயலும். இயற்கை அழகு. அப்போது அந்த உணவு எளிய கூழாக இருந்தாலும் கூட பெற்றோருக்கு அமிழ்தத்தைக் காட்டிலும் சுவையானது. தம் குழந்தைகளுக்கு ஊட்டி, உண்டு அனுபவித்துப் பார்த்தால் தான் இந்த அருமை, அன்பின் வெளிப்பாடு புரியும். இக்குறளில் கவிதை அழகு மட்டுமல்ல வாழ்வின் இன்பங்களை எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த ரசிப்புத்தன்மையும் வெளிப்படுகிறது. எனவே இதில் வியக்கத்தக்கது வள்ளுவர் எவ்வளவு பெரிய ரசிகர் என்பதும் தான். வாழ்க்கை இன்னும் பிடிபடாதவர்களுக்கு குழந்தைகள் உணவில் கையை அளாவினால் அசூசை ஏற்படும். அது அறியாமை. பிஞ்சுக் குழந்தையின் உண்மையான அன்பின் வெளிப்பாடே அவ்விதம் உணவைத் தொட்டு ஊட்ட முயல்வதும், அளைவதும், விளையாடுவதும். எதையும் பிரதி பலனாய் எதிர் பார்க்காத குழந்தையின் அன்பும், சிரிப்பும் தெய்வத்திற்குச் சமமானது. கொஞ்சியும், கெஞ்சியும் மகிழக் குழந்தைகள் இயற்கை தரும் சொர்க்கமே. இது பொதுவாகவே எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்தும். ஆயின் அதுவும் இதெல்லாம் பெற்றோருக்கு அவர்தம் சொந்தக் குழந்தை என்றால் அந்த மகிழ்ச்சிக்கு அளவேதும் உண்டோ? குழந்தைகள் மென்மையான அன்புப் பொக்கிஷங்கள். அன்பு, கருணை, பரிவு என்பவை மட்டுமே குழந்தைகளிடம் செல்லுபடி ஆகும். நீங்கள் எதைக் காட்டுகின்றீர்களோ அதையே குழந்தைகள் திரும்பத் தரும், செய்யும். எனவே குழந்தைகளிடம் முரட்டுத்தனத்தையோ, அலுப்போ, சலிப்போ, கோபமோ காட்டுவது முட்டாள்தனமானது; அவை எதிர்வினைகளையே உருவாக்கும். குழந்தைகள் பூவினும் மென்மையானவர்கள். அன்பு எனும் சிறகால் மட்டுமே வருடுங்கள். அனைத்தையும் சாதிக்கலாம். வாழ்க்கையைக் குழந்தைகளைப் பார்த்து ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எத்தனை இன்பமானது என்று விளங்கும். புத்திளம் கருத்துக்களும், இன்னதென்று சொல்ல முடியாத பிரச்சினைகளுக்கும் விடிவுகள் கூட குழந்தைகளுடன் விளையாடும் பொழுதும், பேசும்போதும் பல சமயங்களில் கிட்டும். குழந்தைகள் மிக மிக சுவாரஸ்யமானவர்கள். உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏன் பல சமயங்களில் வாழ்விற்கு அர்த்தத்தையும் தருபவர்கள் அவர்களே. மனித மூளை வயதுக்கேற்ப வளரும்போது, பழக்கம் எனும் வழக்கத்தில் பெரும்பாலும் அடிமையாகிவிடுகின்றது. எனவே பெற்றோர் அதாவது பெரியவர்களுக்கு சிந்தனை பல சமயங்களில் அந்தப் பழக்கமான வழிமுறைக்கே சிந்திக்கும். ஆனால் குழந்தைகளின் எண்ணங்கள் இன்னும் அனுபவப் படாததால் பல சமயங்களில் புதிய வழிகளைக் கொண்டிருக்கும். அதற்குக் காரணங்கள் இயற்கையான வளர்ச்சியில் அறியாததை அறிந்து கொள்ள இருக்கும் ஆவலும், துடிப்பும் எனப் பல. எனவே இதை உணர்ந்து குழந்தைகளின் பழக்க வளக்கங்களயும், அவர்களின் செயல்பாடு, எண்ணங்களை ஊன்றிப் பார்த்தால் பல சமயங்களில் அற்புதமான புதுமைகளும், ஆச்சரியங்களும், விடைகளும் கிட்டும். உங்களின் பிரச்சினையைக் குழந்தையிடம் சொல்லி ஆலோசனை கேட்கச் சொல்வதாய் இதை அர்த்தம் செய்து கொள்ளாமல், எங்கெல்லாம் விடயங்கள் பயனுள்ளவையாக இருக்கும் எனும் தேடல் மனத்துடன் இதை நோக்கினால் நான் சொல்ல வருவது விளங்கும். | |
| |
குறிப்புரை : | |
பெற்றோருக்கு அவர்தம் குழந்தைகளே இன்பத்தின் ஊற்றுக்கள். | |
அருஞ்சொற் பொருள் : | |
அளாவுதல் - குழைத்துவிடுதல் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 431 உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை உள்ளம்விட் டோ ரடி .(1).நீங்கா ஒருவனை .(2).உள்ளமுந் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருவறி யாதே .(1).நீங்கா தொருவனை .(2).உள்ளமும் அவனும் உறவா யிருந்தும் திருமந்திரம்: 432 இன்பப் பிறவி படைத்த இறைவனுந் துன்பஞ்செய் பாசத் துயருள் .(1).அடைத்தனன் என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை முன்பிற் கொளுவி முடிகுவ தாமே .(1).அடைந்தனன் திருமந்திரம்: 433 இறையவன் மாதவன் இன்பம் படைத்த மறையவன் மூவரும் வந்துடன் கூடி இறையவன் செய்த இரும்பொறி யாக்கை மறையவன் வைத்த .(1).பரிசறி யாதே புறம்: 188 படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கல்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைதாம் வாழு நாளே. நளவெண்பா. கலித்தொடர் பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற் றென்னுடைய ரேனு முடையோரே-இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ்செய்யவாய் மக்களையிங் கில்லா தவர். பொது: காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு. நாலாயிரத் திவ்விய பிரபந்தம். பெரியாழ்வார்: 216 ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது அங்கு ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் அடியுண்டு அழுதானால் இன்ரு முற்றும் நாலாயிரத் திவ்விய பிரபந்தம். பெரியாழ்வார்: 226 முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயி னோடு தயிரும் விழுங்கி கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல விம்மி விம்மி அழுகின்ற அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே. | |
| |
*** |
| |
| |
Meaning : | |
It is sweeter than the ambrosia, the food one's own children messed up. | |
| |
Explanation : | |
For parents it is sweeter than ambrosia the food one's own children messed up by their little hands. When the parents feed their kid, sometimes the kid will also take the food from the bowl and try to feed the feeder. It is natural beauty. By then that food will be sweeter than the ambrosia to the feeder though it may be a simplest one in actual. Only those who have experienced feeding their kids can understand and feel this fact. This Kural expresses the beauty and observation of the niceties of subtle things in life. We just wonder what a connoisseur Thiruvalluvar is. Immature in life only feel bad about kids feeding the messed up food to them. That is mere ignorance. It is the expression of pure love and gratitude by the innocent kid, which is the God's equivalent. Out of sheer love it plays, messes and feeds the food. It does not expect any thing in return for its love and the lovely smiles. Kids are truly the heavens offered by the nature to tease and amuse. It is applicable generally for all children. But remember if all this happens by their own kids is there any limit to the joy the parents get? Children are very soft and lovable treasures. Love, kind, affection and such only will work with them. They just imitate, reflect and return whatever you offer them. Therefore it would be stupidity to show them harshness, tiredness, bore and anger. It might result futile and anti . Children are softer than flowers. Tender them only with love and care. You can achieve everything with them. Learn the joy of life from children by observing them. You will understand how beautiful the life is. All new ideas, solutions for your inexplicable problems may occur may a time when you play and interact with the children. Children are really more interesting personalities. Adult's brain though grows over the years, also gets accustomed to its environment and becomes addicted to the regular ways. Therefore the parents, the adults, will generally tend to think in their own usual, accustomed ways for anything. But children's thinking on the other hand will be innovative, venturing newer ideas and avenues due to lack of experience. It is natural that the innocent brains, which are fresh, will have more interests and energy to seek it out and to know things. Therefore, having known this, if one keenly observes the children's behavior, their works and thinking will come across wonderful innovations, surprises and solutions from them. If you consider that this as not advice to tell all your problems with your children and get solutions but only to have the openness and the heart to seek and find every thing as positive opportunity and to utilize will understand what I mean here. | |
| |
Message : | |
Own children are the happiest things for the Parents. | |
*** |
1 comments:
Wow,, Good job..
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...