Tuesday, August 11, 2009

கெட்டிக்காரப் பிள்ளைகள்... (திருக்குறள்: 68)


அதிகாரம்

: 7

மக்கட் பேறு

திருக்குறள்

: 68
Chapter : 7

Children

Thirukkural

: 68


தம்மின், தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம், இனிது.

பொழிப்புரை :
தம்மைவிடத் தம் மக்களை அறிவு உடைமை கொள்ளச் செய்தல், பரந்த உலகின் கண் நிறைந்த உயிர்களுக்கு எல்லாம் இனியதாகும்.

விரிவுரை :
தம்மைக் காட்டிலும் தாம் பெற்ற மக்களை அறிவுடையோராய் ஆக்குதல், இந்தப் பரந்த உலகின் கண் நிறைந்த உயிர்கள் அனைத்திற்கும் இனியதாகும்.

அதாவது தம்மைக் காட்டிலும் அறிவுடைய பிள்ளைகளால் வரும் நன்மை, இன்பம் தமக்கு மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் இன்பம் தருவதாகும்.

மேலும் இன்னொரு விதத்தில், தம் மக்களை அறிவுடையோராய் ஆக்குதல் மனிதர்களுக்கு மாத்திரம் அல்ல இந்தப் பரந்த உலகில் நிறைந்திருக்கும் அனைத்து உயிர்களுக்குமே பொருந்தும் என்பதாகும். முன்னோரைக் காட்டிலும் இளவல்கள் அறிவில் முதிர்ச்சி பெறுவது பெரும்பாலும் மனிதர்களில் இயற்கையே. இன்றையக் குழந்தைகள் பெற்றோரைக் காட்டிலும் பல விடயங்களில், உதாரணத்திற்கு கணினி, ஏனைய மொழிகளில் சிறந்து விளங்குவது கண் கூடு.

ஆயின் வள்ளுவர் இங்கே கூறுவது இஃது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்பது மட்டுமல்ல அது அவற்றிற்கு இன்பம் தரும் செயல் என்கின்றார். கல்வி கேள்விகளில் சிறந்த மக்கள் இற்றைக்கு தம் பெற்றோருக்கு அவர்கள் வசித்த வீட்டைக் காட்டிலும் நல்ல வீடுகளையும், வாகன, வைத்திய வசதிகளையும் தருவதே நல்ல உதாரணம். 'மூத்தது மோழை, இளையது காளை’ என்பார்கள். அதாவது இளவல்கள் அறிவிற் சிறந்து, இன்னும் திறத்துடன், சுறு சுறுப்புடன், ஊக்கத்துடன் முன்னோக்கிச் செல்வார்கள், செல்கிறார்கள் என்பதே நடப்பில் காணக் கூடியது.

எனவே தம்மைவிடத் தம் மக்களை அறிவில் சிறந்து விளங்குமாறு செய்வித்தலே நாட்டின் சமுதாய மேம்பாட்டிற்கும் நல்லது. இதையே கண்ணதாசன், ’என்னைப் பார்த்து எனை வெல்லவும்’ என்று பாடி இருப்பார். அதாவது பெற்றோர்களுக்கு தம் குழந்தைகள் வெற்றி பெறுதலை ஊக்குவிக்க, தங்களைக் காட்டிலும் வெல்ல வழி வகுக்க வேண்டும். குழந்தைகளிடம் பொறாமை கொள்ளக் கூடாது.

தந்தை அறிவிற் சிறந்த சான்றோனாக இருந்தாலும் அவர் தம் மக்களும் சான்றோராய் இன்னும் அறிவிற் சிறந்தோராய் விளங்குதலே காலத்தின் கட்டாயம். தங்களை மீறிப் பிள்ளைகள் வளர வேண்டும் என்று பெற்றோர் விரும்ப வேண்டும் என்பதே இக்குறளின் உட் கருத்து. அது எல்லா உயிர்களுக்கும் பொருந்துவதும் அது இன்பம் தான் பயக்கும் என்பதும் மேற் கோள்கள்.

சைவத்தில் முருகனிடம் சிவன் “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தைக் கேட்டுக் கொள்வதாய் ஒரு படலம். இக் கருத்தைக் காட்டும் இடமே சுவாமி மலை. இதன் தாத்பரியம் தம் மக்களை தங்களைக் காட்டிலும் வெற்றிபெறச் செய்து ஊக்குவித்தலே. மேலும் தம் குழந்தையிடம் கவனித்துக் கேட்பது மட்டுமல்ல, கற்பதையே காட்டும் அற்புத உதாரணம். விளையாட்டுக்களில் பெற்றோர் தம் மக்களிடம் தோற்று அவர்கள் வெற்றி பெறுவது போல் ஒரு தோற்றத்தைக் காட்டி அவர்களை ஊக்குவிக்கச் செய்தல் நலன் கருதி மட்டுமல்ல எவ்வளவு இன்பமானது என்பதை அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும்.

விலங்குகளில் கூட துள்ளித் திரியும் மான், ஆடு, குரங்கு, குதிரை, யானை, சிங்கம், புலி மற்றும் சிறுத்தைக் குட்டிகளையும் பாருங்கள். அவற்றைப் பெற்றவைகளுக்கு அவைத் துள்ளித் திரிவதைக் காணும்போது தெரியும் பெருமிதம் புரியும். தம்மைக் காட்டிலும் வேகமாகத் திரியும் தன் குட்டிகளைப் பார்த்து அவை பரவசம் கொள்ளும். பறவைகளுக்கும் இது பொருந்தும்.

மனிதர்களில் இறக்கும் வரையிலும் கூட ஒருவர் கற்றுக் கொண்டே இருப்பதும் உண்மையே. ஆயின் அதைக் காட்டிலும் தம் மக்களை அறிவுடையோராய் ஆக்குதல் இன்னும் இனிமையானது. எனவே தான் கற்கக் கூடாது என்பதல்ல பொருள்; அதைக் காட்டிலும் தம் மக்களை அறிவுடையோராக்குதல் முக்கியமானது என்பதாகும். பிள்ளைகளை அறிவில் சிறந்தோராக்குதல் கடன் மாத்திரமல்ல இன்பத்தைத் தரும் செயலும் அல்லவா?

குறிப்புரை :
தம்மைத் தாண்டித் தம் மக்கள் உயர்வடைவதே எல்லா உயிர்க்கும் இன்பம்.

அருஞ்சொற் பொருள் :
மா நிலம் - பெரிய, பரந்த உலகம்
மன் - மண்டுதல், பல்கிப் பெருகிய, நிறைந்த, கூடிய

ஒப்புரை :

திருமந்திரம்: 181
பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம்கடந்து அண்டம் ஊடறுத் தான்அடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே.

திருமந்திரம்: 242
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர் தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

திருமந்திரம்: 301
தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.

திருமந்திரம்: 305
விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.

திருமந்திரம்: 317
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே.

திருமந்திரம்: 319
ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வறி யாரே.

***

In English:

thammin, tham makkaL aRivudaimai mA nilathu
man uyirkku ellAm, inithu.

Meaning :
Exceeding one's own wisdom by their offspring rejoys all the livings of this wide world.

Explanation :
Offspring being the intelligent than them selves is the joy for the world's all livings.

It is to say that the benefits of the offspring’s better intelligence are not only for the self but also for all the other livings.

Also on the other hand, making the offspring as intelligent is not only applicable to human beings but also to the all other livings of this earth. In human kind it is natural that the offspring always shine better than the older ones. For example, it is more evident that all most all the kids today do better in computers, games and languages etc.

But what Thiruvalluvar says here is, it is not only common across livings, but it brings joy to them. All those who provided better shelter than they born to their parents, those who have provided better transportations to them, those who provide better medication to them are generally more knowledgeable and educated than their parents. There is saying that the younger ones are more vibrant than the elder ones. That is to say that the intelligent younger ones are more energetic, active and go-getters. That is what we see more apparently today.

Therefore it is also good and better for society that the younger ones to be made more wiser and knowledgeable. Kannadhasan, the great poet of Tamil, therefore says in one of his famous a movie song that ‘You should look and win over me’ is the saying to his kid by a successful father. Therefore the parents must also encourage their children to win over them by providing appropriate avenues. They should not become envy with their own kid's developments.

Though the father is a proven scholar or en expert, it is necessary that their kids also should do better themselves taking them as exemplary. Parents must love to make their children grow beyond themselves and they should wish for it is the message of this kural. That will render only happiness to every livings is the additional information.

In Saivam religion, there is an example that the Lord Siva hears the 'Om' pranava mantra from his child, the god Muruga (Karthikeya). The place history of 'Swamimalai' in Tamil Nadu depicts this event in the purana. The concept on this event is to portray the parent must encourage their own children to win and outsmart them selves. It is an excellent example, which also conveys to give attentive listening to the kids and also learning from them. While playing with the kids, the parents must intelligently give ways to the kids to win, so that they get confidence and motivated in life. Needless to say that it also brings the joy to the core.

Even the animals like deer, sheep, monkeys, horses, elephants, lions, tigers, cheetahs feel proud when their offspring jumps and plays around and grow. Just observe them. The parent animals are happy and play with their offspring and feel happy when they run faster than themselves. This is the same case with birds too.

For men it is true that one's education continues till the death time. However making the children educated and cultivating them to become more intelligent is more joyful than one's own education. It does not mean that to stop one's own education but to give more priority to his children to come up. It is not only his duty but won't it bring the happiness to all?

Message :
Every living thing rejoices the advancement of its offspring.

***

1 comments:

Anonymous said...

They are well-known for their trade executions at favorable prices, their customer service and
for their well-thought-out trading software platform.
Getting yourself carried away and being sucked in the emotion of the trade is the main cause
of failing at trading small cap and speculative stocks. If you
have the extra income to make a loan payment, save the money instead until you have enough to
start investing.

my blog: http://ww.wlijit.comwww.radabg.com/url/holky-brno.info/
Also see my web site - usatrailrunning.com

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...