|
| |
பொழிப்புரை : | |
அன்பு அகத்தே இல்லாத உயிர் வாழ்க்கையானது, வல்லிய கற்பாறையின் மேல், வற்றிப்போன மரம் தளிர்க்க முயற்சித்தல் போலாகும். | |
விரிவுரை : | |
அன்பு எனும் ஈரம் அகத்தே இலாது வாழும் உயிர் வாழ்க்கையானது, நீர்மையற்ற வல்லிய கற்பாறையின் மேல், வறண்டு வற்றிப்போன மரம் தளிர்க்க முயற்சிப்பதைப் போலாகும். மிகவும் கடினம் என்பது பொருள். அன்பு எனும் நீர்மை, ஈரம், தண்மை ஒருவருக்கு அகத்தே இல்லாது போனால் வாழ்க்கை வறட்டுத்தன்மை கொண்டதாகத் தானே இருக்க முடியும். அவர்களால் குளிர்ச்சியாகவோ, மலர்ச்சியாகவோ, இனிமையாகவோ, சகஜமாகவோ பழக இயலாமல் வறட்டுத் தனத்தையும், முறட்டுத் தனத்தையும், வன் கொடுமையையும், எரிச்சலையும், வாட்டத்தையும் மட்டுமே காட்ட இயலும். அவர்களின் வாழ்க்கை இனிமையுறும் வாய்ப்பு முற்றிலும் இற்றுப் போய்விடவில்லை என்பது ஓர் ஆறுதலான விடயம். அதாவது கற்பாறை போன்று இருக்கும் அகத்து உள்ளே, ஈரம் சுரக்கும் அன்பை விதைத்தால் காலங்களும் மாறும், காயங்களும் மாறும். அரக்க குணம் அற்றுப் போய் வறட்சி நீங்கி வளர்ச்சி தோன்றும். வாழ்க்கை மலர்ச்சி காணும். எனவே அன்புடைமை என்பது அகத்தே தண்மை உடைமை என்பதே என்று அறிவோமாக. | |
| |
குறிப்புரை : | |
அன்பிலா வாழ்க்கை வறட்சியால் வளர இயலாது தத்தளிக்கும். | |
அருஞ்சொற் பொருள் : | |
வன்பாற் - வன்மையான பாறை, வல்லிய பாறை, வரண்ட பாறை நிலம், பாலைவனம் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 273 ஆர்வம் உடையவர் காண்பார் அரன்தன்னை ஈரம் உடையவர் காண்பார் இணையடி பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக் கோர நெறிகொடு கொங்குபுக் காரே. திருமந்திரம்: 275 தானொரு காலம் சயம்பு என் றேத்தினும் வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும் தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன் தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே. ஔவையார். மூதுரை: 17 | |
| |
*** |
In English: (Thirukkural: 78)
| |
| |
Meaning : | |
Living a life with no Love inside is like a withered tree trying to sprout on a rock. | |
| |
Explanation : | |
The Life without Love inside is like a sapless tree attempting to sprout on a rock soil. It is very hard to succeed is thus the meaning. | |
| |
Message : | |
The Loveless life suffers the growth with dryness. | |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...