|
|
அன்புடையீர், குறள் அமுதம் மென் புத்தகத்தை தரவிறக்கம் செய்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். இன்னும் பயன் படுத்திக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். ஒரே ஒருவர் மாத்திரமே மென்புத்தகத்திற்குக் கமெண்ட் செய்திருந்தார். அதுவும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனையோர் இந்த முறை மென்புத்தகத்தைப் புதுப்பித்துக் கொண்டபிறகாவது கமெண்ட் செய்தால், நீங்கள் இதைப் படிக்கின்றீர்கள் என்பதை நான் உறுதி செய்து கொள்வேன். பாராட்டுதல் என்பது அன்புச் சமாச்சாரமே. நன்றாக இருக்கிறது, இல்லை தவறு இருக்கிறது என்று ஏதாவது சொன்னால்தானே இந்த முயற்சிகள் சென்றடைகின்றன என்று விளங்கும். யார் கண்டார், அமைதிக்குப் பிறகு புயல்கள் வருமோ? திரு. நாகேஷ் ராவ் என்பவர் அருமையான சில கேள்விகளை ஆர்குட் தமிழ் குழுமத்தில் கேட்டு இருந்தார். அதை இங்கே போஸ்ட் செய்ய முயற்சிக்கிறேன். இத்தகைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல எனது நேரத்தை எடுத்துக் கொண்டாலும், அவை பக்கங்களில் உயிர் இருக்கிறது என்பதை உணர்த்துவதால் உற்சாகமளிக்கிறது. எனவே நீங்களும் கேள்விகளும் கேட்கலாம், பதில்களையும் பதியலாம். நானும் உங்களில் ஒருவனாய் ரசிப்பேன். நன்றி. உத்தம புத்திரா. |
சில கேள்வி பதில்கள்: 1. மென்புத்தகத்தை எவ்வாறு புதுப்பித்துக் கொள்வது? இலவச மென்புத்தகங்கள் என்னும் இணைப்பைச் சுட்டி தேவையானதைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். முதலில் தரவிறக்கம் செய்த போது செய்த செயல்பாடுகளை இப்போதும் செய்து கொள்ளுங்கள். அடிப்படையில் உங்களின் கணினியில் இருக்கும் பழைய சுவடி, இப்புதிய கோப்பால் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 2.முதன் முதலில் தரவிறக்கம் செய்வது எப்படி? முதன் முறை தரவிறக்கம் செய்தால் .zip சுட்டியைத் தரவிறக்கம் செய்து, unzip செய்து பயன் படுத்தவும். இம்முறையில் மென்புத்தகத்தின் அகலம், உயரம் போன்றவை ஏற்கனவே நான் அமைத்துள்ளபடி உங்களுக்குக் கிட்டலாம். எனவே இந்தச் சுட்டியைத் தரவிறக்கம் செய்வதையே நான் பரிந்துரைப்பேன். 3. KuralAmutham.chm சுட்டியைத் தரவிறக்கம் செய்து கொள்வது எப்படி? இச் சுட்டியைத் தரவிறக்கம் செய்தால், கீழ்க்கண்ட முறைகளை மேலும் கையாள வேண்டும். முதலில் தரவிறக்கம் செய்த பிறகு இக்கோப்பைச் தேர்ந்தெடுத்துக் கொண்டு, வலது மவுஸ் பொத்தானை ஒத்தி, file Properties குச் செல்லவும்.General tab பகுதிக்குச் சென்று Unblock பொத்தானை ஒத்தவும். பிறகு Apply மற்றும் Ok பொத்தான்களை ஒத்தி வெளியேறவும். இவ்வாறு செய்யாவிடின் இவ்விதமாக தரவிறக்கம் செய்யப்பட்ட மென்புத்தகம் பொருளடக்கத்தைக் காண்பிக்காது. எனவே மென்புத்தகத்தில் Unblock அவசியம் செய்து கொள்ளவும். 4. எப்படிக் கமெண்ட் செய்வது? குறள் அமுதம் இணையப் பக்கத்தில் உள்ள கமெண்ட் பாக்ஸைப் பயன் படுத்தி, உங்கள் எண்ணங்களை, பின்னூட்டங்களைப் பதியவும். தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டிலும் இங்குப் பதியலாம். 5. ”குறள் அமுதம் பக்கத்தில்” ஒரு குறளை எப்படித் தேடுவது? ’Search' எனும் பாக்ஸில் உங்களுக்குத் தேவையான குறளின் ஏதாவது ஒரு வார்த்தை அல்லது குறளின் எண்ணை உள்ளீடு செய்து, ‘Search' பொத்தானை ஒத்தவும். பெரும்பாலும் உங்களின் தேடலுக்கான அட்டவணை அல்லது வாய்ப்புக்கள் ஒன்று மட்டும் இருந்தால் நீங்கள் கேட்ட தகவலுக்கான குறளமுதம் பக்கம் காண்பிக்கப்படும். |
|
*** |
In English: (About KuralAmutham eBook)
Dear Friends I extend my thanks to all who have downloaded the "KuralAmutham" eBook. I am sure you are using it still. Only one person had commented for eBook. It was very useful comment for everyone. Others if you comment at least after downloading the updates, I will be sure that you are reading the same. Appreciation is all matter of Love. I can understand that it reaches you only through your comments as good or bad. Who knows if this is the silence before a storm? Mr.Nagesh Rao had commented and made few interesting questions in Orkut Tamil community. I will try to post the same here for other's sake. Though it takes time to answer such questions, it encourages me due to liveliness in the pages. Therefore you can also register your questions and even answers for others. I will cherish everything like one among you. Thanks UthamaPuthra. |
|
Few Questions and Answers: |
|
1. How to update your KuralAmutham eBook? |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...