Sunday, August 16, 2009

திருக்குறள்: 71


அதிகாரம்

: 8

அன்புடைமை

திருக்குறள்

: 71
Chapter : 8

Love

Thirukkural

: 71


அன்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ்? ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும்.

பொழிப்புரை :
அன்பிற்கும் உண்டோ அடைக்கின்ற தாழ்? ஆர்வலரின் துன்பத்தில் துளிர்க்கும் சிறு கண்ணீரே உள்ளன்பை வெளிக்காட்டி விடும்.

விரிவுரை :
அன்பை மனத்தில் வைத்து அடைக்கின்ற தாழ்ப்பாள் ஏதும் உண்டோ? அஃது ஆர்வலருக்கு ஏதானும் துன்பம் நேர்ந்தால் அது கண்டு கண்ணீராய் வெளிக்காட்டி விடுமே.

உள்ளத்தின் உண்மையான அன்பை மறைக்க இயலாது. அவை அன்பரின் துன்பம் கண்டு துவண்டு காட்டிவிடும்.

அது இரக்கமா, கருணையா, பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக எண்ணி வருந்தும் இதய உணர்வு? அன்பின் மிகுதியால் அடக்க முடியாமல் கண்ணீராய்த் துளிர்த்து விடுகிறதே. அழுதால் ஒரு நிம்மதி. அழுதால் உன்னைப் பெறலாமே என்பார் இறைவனை நோக்கி அப்பர். இன்பமாகட்டும், துன்பமாகட்டும் கண்ணீர் வந்து விடுகிறதே. பிரிந்தோர் இணைந்தால், வெகு நாளைக்குப் பிறகு சந்தித்தால் மொழிக்கு முன்னர் கண்ணீர் தழும்பும் அன்றில் கண்கள் கலங்கும். ஏன்? அது மறைக்க முடியாத அன்பின் அடையாளம்.

குறிப்புரை :
அன்பு உள்ளம் துன்பத்தைச் சகியாது.

அருஞ்சொற் பொருள் :
புன் - துன்பம், துயரம், வறுமை, மெலிவு, தரித்திரம்
பூசல் - தகராறு, ஆரவாரம், வெளிப்படுத்துதல்

ஒப்புரை :

திருமந்திரம்: 272
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பெரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தஒண் ணாதே.

பட்டினத்தார்: (தாயார் தகனக்கிரியைப் பாடல்கள்)
வட்டிலிலுந் தொட்டிலிலும் மார்மேலுந் தோள்மேலுக்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்.

ஔவையார். கொன்றைவேந்தன். 41
துடியாப் பெண்டிர் மடியினில் நெருப்பு.

மாணிக்க வாசகர். திருவாசகம்: 3. திருவண்டப் பகுதி:
தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை
என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி
அறைகூவி ஆட்கொண்டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்
உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு 150

அலைகடல் திரையில் ஆர்த்து ஆர்த்து ஓங்கித்
தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்
கடைக்களிறு ஏற்றாத் தடம்பெரு மதத்தின் 155


***

<

In English: (Thirukkural: 71)

anpiRkum uNdO, adaikkum thAzh? Arvalar
pun kaNIr pUsal tharum.

Meaning :
Is there a latch to hide the Love? At lover's pain, emerging tiny tears shows it off.

Explanation :

Is there a latch in the heart to hide the Love? No, it shows it off as tiny tears on pain of the loved one.

One cannot hide the pure Love in the heart. That will show up naturally in the Lover’s distress.

Is it kindness or consolation to consider the pain of others as their own? Uncontrollable Love simply emerges as the tiny tears. Crying gives solace. You may get the God by weep says Appar, a Tamil saint. Let that be happiness or distress, tears come. Why the tears appear even before conversing when the separated unite or when meeting after a long time. That is all because of the nature of Love which cannot be hidden.


Message :
Heart cannot restrain lover's distress.

***

























0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...