Tuesday, August 25, 2009

திருக்குறள்: 80

அதிகாரம்

: 8

அன்புடைமை

திருக்குறள்

: 80
Chapter : 8

Love

Thirukkural

: 80


அன்பின் வழியது உயிர்நிலை, அஃது இலார்க்கு,
என்பு தோல் போர்த்த, உடம்பு.

பொழிப்புரை :
அன்பின் வழியானது உயிர் இருத்தலின் நிலை; எனவே அன்பு இல்லாதவற்கு, உயிரில்லாதே வெறும் எலும்பையும், சதையையும் தோல் கொண்டு போர்த்தியதாகும் உடம்பு.

விரிவுரை :
அன்பு வழிச் செயலே உடலில் உயிர் இருக்கும் நிலை காட்டுவது. எனவே அன்பிலாதவற்கு உடம்பு வெறும் எலும்புக் கூட்டையும், சதையும் போர்தியது மட்டுமே; அஃது உயிரற்றதாகவே கருதப்படும்.

எனவே அன்பற்றவர்களை என்பு தோல் போர்த்திய நடைப்பிணங்கள் என்கின்றார் வள்ளுவர். ஆம் அன்பற்றோர் வாழ்ந்தும் வாழாதவரே.

அன்பற்ற வாழ்க்கைத் துணையை இறந்ததாகக் கருதப்பட வேண்டும் என்பதும் பொருள். பிணத்தை யாரும் தழுவுவதுமில்லை; பேணி இல்லறம் ஒழுகுவதுமில்லை.

அன்பிலாது வாழுவதால் அவரால் யாருக்கும் பயனும் இல்லை, அவரால் நற் செயல் எதுவும் நிகழுவதுமில்லை, ஏன் அவரால் அவருக்கே உதவியும் இல்லை. அவர் வளர்வதுமில்லை, ஒளிர்வதுமில்லை, கவர்வதுமில்லை, இன்புறுவதுமில்லை. அவர் வாழ்க்கைக்கு அர்த்தமும் இல்லை. எனவே அவர் வாழ்ந்த போதிலும் உயிரற்ற நடைப் பிணம் போன்றவரே.

ஆக அன்பு என்பதே உயிராயிற்று. முன்னர் சொல்லிய வண்ணம் அன்பும், உயிரும் சேர்ந்ததே ஒருவரின் ஆன்மா அல்லது மனம். எனவே மனம் அற்றோர் மரணித்தவரே.

அன்பெனும் உயிரால் ஆக்கப்பட்டுள்ள இந்த மனித வாழ்வை, அன்பிலாது அன்றில் அன்பைத் தவிர்த்து அன்றில் அன்பை அகற்றி வாழுதல் இயற்கைக்கு முரணானது என்று அறிவோமாக. அன்போடு திகழ்ந்து மானுடத்தை உயர்த்துவோமாக.

குறிப்புரை :
அன்பே உயிர். அஃதற்றோர் நடைப் பிணம்.

அருஞ்சொற் பொருள் :
உயிர்நிலை - உயிர் இருத்தலைக் காட்டும் நிலை. உயிர்துடிப்பு.
என்பு - எலும்பு

ஒப்புரை :

திருமந்திரம்: 274
என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே.

திருமந்திரம்: 278
நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று
நச்சியே அண்ணலை நாடுகி லாரே.


திருமந்திரம்: 371
எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில நாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே

ஔவையார். மூதுரை: 24
நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.

ஔவையார். கொன்றைவேந்தன். 42
தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்.

மாணிக்கவாசகர். திருவாசகம்: 5. திருச்சதகம்.
பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே நின்தன் வார்சுழற்கு அன்பு எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே. 10

மாணிக்கவாசகர். திருவாசகம்: 5. திருச்சதகம். 4. ஆத்மசுத்தி:
ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்புஉருகிப்
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர்
சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை இலி பிண நெஞ்சே
தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே? 35


***

In English: (Thirukkural: 80)

anpin vazhiyathu uyir nilai, aHthu ilArkku,
enpu thOl pOrththa, udambu.

Meaning :
Love's way denotes the living's state; without it are those of bones skin-clad.

Explanation :

The doings by Love’s way only reflect the state of Livelihood in one. Hence who don’t have that are those just bodies of bones skin-clad. Means no life considered in their body for the Loveless.
Therefore Thiruvalluvar calls that Loveless as the living corpse. Yes, Indeed the Loveless are just lifeless.

Also it means to consider the Life partner without the Love as the dead. No one embraces the dead one and no one loves or maintains the dead one.

Loveless, by having no love in them, are useless to anyone. They can’t do any good thing, and even they can’t be helpful for themselves. They can’t grow, can’t shine, can’t attract and can’t be happier. No meaning for their life. Therefore though they live, they are like corpse only.

Therefore Love is the Life, the living thing in it. As told before, Love and spirit becomes the Athma, the soul for one. Hence without the soul one must be dead only.

Let us understand that the spirit called the Love makes the human Life. Hence it is not natural for it to be without the Love or denying the Love. Therefore, Let us uphold the humanity by having the Love in our hearts.


Message :
Love is Life; That with no Love is a living corpse.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...