Sunday, August 16, 2009

அதிகாரம்: 8. அன்புடைமை . முகவுரை.

அதிகாரம்

: 8

அன்புடைமை

முகவுரை

Chapter : 8

Love

Preface



அன்புடைமை என்பது அன்பைக் கொண்டவராக இருத்தல். இது இல்லறத்தார்க்கு மட்டுமன்றி அனைவருக்கும் பொருந்துவது.

அன்பு எனும் உள்ளுணர்வே அனைத்தையும் இணைக்கும் பாலம் ஆகும். அது கருணையாலும், கனிவாலும், ஆர்வத்தாலும், மனம் கொள்ளும் உணர்வும், அது கொடுக்கும் விரிந்து படர்ந்த இடமும், சலுகையும் இன்பமும், இன்னதென்று விளக்க முடியாத நல் எண்ணமுமாகும்.

அன்பு கொண்டு அணுகினால் எல்லாப் பிரச்சினைகளும் பிரச்சினைகளாகவே தோன்றாது. அன்பு எனும் கருணை கொண்டு பார்க்கும்போழ்து குற்றங்களையும் பொறுத்துக் கொள்ளும் மனமும் அவற்றிற்குத் தீர்வைக் காணும் அறிவும் மேலோங்குமே தவிர கோபம் எனும் குணம் வாராது. உண்மையில் அன்பு செய்வதும் அன்பு செய்யப்படுவதும் இன்பமானது. அன்பு எதையும் குணப்படுத்தும் குணம் கொண்டது.

வாழ்க்கையில் நாம் எதையும் கொண்டு வரவும் இல்லை; கொண்டு போவதும் இல்லை. ஆயின் மனிதர்கள் வாழும் காலத்தே சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் சார்ந்து, ஆறறிவு கொண்ட நாகரீகம் மிக்கவராய், பண்பாடு கலாச்சாரம் மிக்கவராய், ஒவ்வொருவரும் இன்னொருவரைப் புரிந்து, விட்டுக் கொடுத்துக் கூடி, சேர்ந்து மனிதராய் வாழ வேண்டி இருக்கின்றோம். மனித மனங்கள் வெவ்வேறாக இருக்கும் வரையிலும், மாறுபட்ட எண்ணங்கள் இருக்கின்ற வரையிலும் மனிதருக்குள் பேதங்கள் எழுவது இயற்கை. ஆயின் அன்பு எனும் மருந்து ஒன்றே அனைத்தையும் இணக்கமாக்கி, பேதங்களைக் களைந்து ஒன்றாக்கி, நல்லவை நோக்கிச் செலுத்தத் தக்க வல்லமை உடையது. ஒருவருக்குள் ஒருவரின் தாக்கத்தை ஏற்படுத்தும் திறனையும், பிறருக்காக வாழ வைக்கும் திறத்தையும் உண்டாக்கக் கூடியது அன்பு. வாழ்விற்கு அர்த்தத்தையும், உறவையும் தர வல்லது அன்பு ஒன்றே. அண்மையையும், நட்பையும், கருணையையும், கனிவையும், இனிமையையும், பொறுமையையும், வலிமையும், அர்ப்பணிப்பையும் தரவல்லது அன்பு. எண்ணங்களைச் சீர்மைப் படுத்தி வாழ்வை மேலும் எழில் பெறச் செய்வது அன்பு ஒன்றே.

அன்புள்ளோர் அனைவரும் உறவுகளே, நண்பர்களே. அன்புடையோர் அனைவருக்கும் இணக்கமும் இனிமையும் ஒருங்கே வரும். அவர்களுக்கு எளிதாய் நகைச்சுவை வரும், புன்னகை வரும். முக்கியமாய் நம்பிக்கை வரும். அல்லாதோருக்கே கோபமும், விகாரமும் வரும்.

அன்பினால் ஆகாதது ஒன்றில்லை என்கின்றனர். அன்பே தெய்வம், அன்பே சிவம் என்கின்றார் திருமூலர். ஏற்கனவே அதைத்தான் வள்ளுவரும் இந்த அத்தியாயத்தில் நிச்சயித்திருக்கின்றார்.


ஒப்புரை (Reference)

திருமந்திரம்: 270.
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.



In English:

Love is the kindness one should have. This is applicable not only for those who are in the order of domestic life but also for the other orders and everybody.

Love is the innermost emotion for anyone which bridges everything. Love is the state of mind; heart's emotion of kindness, affection, aspiration and provision of space, consideration, happiness, feeling and inexplicable good sense.

All problems no longer remain as problems when addressed with Love. When offenses are seen through Love and consideration, we don’t get the anger. Instead we get the patience in heart to bear with it and get only more ideas to resolve it. The truth is, it is nice and joy to love and to be loved. Love can cure anything.

We did not bring anything when we born and not going to carry anything when we die. But while living we depend on each other in this social life, to live as human beings, to behave as cultured and matured, to understand each other, to give space and to coexist. As long as human minds are different and there are variant ideas, human beings will have differences naturally. But Love is the only medicine which can make all of them to remove all their differences and make all of them to agree, and to go towards common good causes. Love can make impact of one to another; can make one to live for others. It is only thing which can give meaning and relations to the life. Love is the only thing which can give affection, closeness, friendship, happiness, patience, strength and dedication all at once. Again Love is the only emotion which can help to streamline the thinking and make the life more beautiful.

All those who shower Love are the relatives and friends. All those who have Love get same understanding and happiness together. And they get easily the humor, smile and importantly the confidence. Only those who have no Love will get anger and ugliness. .

There is nothing impossible for Love. Love is the God; Love is the Siva says Thirumoolar. Valluvar already confirmed the same here in this chapter.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...